Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Latest Updates
இந்த அரசுக்கு மனசாட்சி இல்லையா? ஜோதிமணி
பால் மீது 5% ஜிஎஸ்டி விதித்தால் எப்படி குழந்தைகளுக்கு பால் கொடுக்க முடியும்? பென்சிலுக்கு கூட வரி போடும் இந்த அரசுக்கு மனசாட்சி இல்லையா? பிறந்தது முதல் இறந்தது வரை வரி போடும் அரசு, பிரதமர் மோடியின் அரசாக மட்டுமே இருக்கும் என மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பேசினார்.
இந்தியா வேகமாக வளர்கிறது
கொரோனா உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளை கடந்தும் உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளது. பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளது. பொருளாதார மந்த நிலையோ, தேக்க நிலையோ ஏற்படும் என்ற கேள்விக்கு இடமில்லை என மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
டி20 கிரிக்கெட்.. மே. இந்திய தீவுகள் அணி வெற்றி
இந்தியா- மே. இந்திய தீவுகள் இடையேயான, 2வது டி20 கிரிக்கெட் போட்டியில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 19.4 ஓவர்கள் முடிவில் 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து ஆடிய மே. இந்திய தீவுகள் அணி 19.2 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 22:19 (IST) 02 Aug 2022காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்
காமன்வெல்த் போட்டியின் ஆடவர் டேபில் டென்னிஸின் இறுதிப்போட்டியில் சிங்கப்பூர் அணியை எதிர்கொண்ட இந்தியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றது.
- 20:55 (IST) 02 Aug 2022செஸ் ஒலிம்பியாட் : பிரக்ஞானந்தா தோல்வி
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 5வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் சாண்டோஸ் லடாசாவுடன் மோதிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா தோல்வியை சந்தித்துள்ளார்.
- 20:54 (IST) 02 Aug 2022விசாரணை கைதி மரண வழக்கு : 6 காவல்துறையினரின் ஜாமின் மனுக்கள் மீண்டும் தள்ளுபடி
சென்னை, தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் மரணமடைந்த வழக்கில் கைதான 6 காவல்துறையினரின் ஜாமின் மனுக்கள் 2வது முறையாக தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 19:48 (IST) 02 Aug 2022கனமழை முன்னெச்சரிக்கை : நீலகிரி மாவட்டத்திற்கு நாளை விடுமுறை
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கையாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார்.
- 19:44 (IST) 02 Aug 2022காமன்வெல்த் போட்டி : இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்
காமன்வெல்த் போட்டியில் லான் பவுல்ஸ் விளையாட்டில் இறுதிப்போட்டியில் தென்ஆப்பிரிக்க அணியுடன் மோதிய இந்திய மகளிர் அணி 17க்கு 10 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபாரம் வெற்றி பெற்றது. இதன் மூலம் லான் பவுல் விளையாட்டில் இந்தியா முதன்முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
- 18:43 (IST) 02 Aug 2022மேட்டூர் அணையிலிருந்து 95 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்
மேட்டூர் அணையில் இருந்து 95 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. ஆகையால், அணையின் நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1,00,000 லட்சம் கன அடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 18:28 (IST) 02 Aug 2022தமிழ்நாடு வீராங்கனை தனலட்சுமிக்கு 3 ஆண்டுகள் விளையாட தடை
ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு காமன்வெல்த் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட தமிழ்நாடு வீராங்கனை தனலட்சுமிக்கு 3 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையிடம் தனது தவறை ஒப்புக்கொண்டதால் தண்டனை காலம் 4 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
- 18:27 (IST) 02 Aug 2022மேக்னஸ் கார்ல்சன் வெற்றி
செஸ் ஒலிம்பியாட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் நார்வே அணியின் நட்சத்திர வீரர் மாக்னஸ் கார்ல்சன், ஜாம்பியா வீரர் கில்லனை 26வது நகர்வில் தோல்வியடையச் செய்தார்.
- 18:22 (IST) 02 Aug 2022எஸ்.பி வேலுமணிக்கு எதிரான வழக்கு விசாரணை; அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
எஸ்.பி வேலுமணி மீதான மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 17:57 (IST) 02 Aug 2022ஜூலை11ல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு; வியாழக்கிழமை விசாரணை
ஜூலை11ல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை உயர் நீதிமன்றமே 2 வாரங்களில் விசாரித்து முடிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டு இருந்தது. உட்கட்சி தேர்தலை எதிர்த்து ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி தொடர்ந்த வழக்குகள் ஆகஸ்ட் 16ஆம் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
- 17:29 (IST) 02 Aug 2022ஆகஸ்ட் 5ம் தேதி முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு
ஆகஸ்ட் 5ம் தேதி முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும். 2 லட்சம் இடங்களுக்கு 4 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என கல்லூரி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்
- 17:01 (IST) 02 Aug 2022கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம்; 173 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் கலவரம் தொடர்பாக கைதான 173 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
- 16:42 (IST) 02 Aug 2022பெட்ரோல் மீதான வரி ரூ.4.95 குறைக்கப்பட்டுள்ளது – பி.டி.ஆர் பதில்
பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைப்பதற்கு முன்பே தமிழக அரசு குறைத்துள்ளது. பெட்ரோல் மீதான வரி ரூ5 குறைக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி அளித்த நிலையில் ரூ.4.95 குறைக்கப்பட்டுள்ளது என மாநில அரசு குறைக்கவில்லை என்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்
- 16:18 (IST) 02 Aug 2022நடிகை சித்ரா மரண வழக்கு – கணவர் ஹேம்நாத் மனு தள்ளுபடி
நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரிய ஹேம்நாத் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளதால் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என தெரிவித்துள்ளது.
- 16:03 (IST) 02 Aug 2022சென்னை ஐ.ஐ.டி.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - உணவக ஊழியர் கைது
சென்னை ஐ.ஐ.டி.,யில் மாணவி சைக்கிளில் சென்றபோது பாலியல் தொல்லை அளித்த புகாரில் உணவக ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் நடைபெற்ற போலீசார் விசாரணையில் ஜூஸ் கடை நடத்தி வரும் சந்தன்குமார் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது
- 15:46 (IST) 02 Aug 2022டெல்லியில் குரங்கம்மை பாதிப்பு 3 ஆக உயர்வு; நைஜீரியா நாட்டை சேர்ந்தவருக்கு தொற்று உறுதி
நைஜீரியா நாட்டை சேர்ந்தவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, டெல்லியில் குரங்கம்மை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
- 15:29 (IST) 02 Aug 2022ஆவின் பால் பாக்கெட் அளவு குறைபாடு - நடவடிக்கை
ஆவின் பால் பாக்கெட்டுகளில் அளவு குறைபாடு இருந்தால் மாற்று பால் பாக்கெட்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நுகர்வோர் தங்களின் குறைகளை 1800-425-3300 அல்லது aavincomplaints@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- 15:29 (IST) 02 Aug 2022மீனவர்கள் குமரி கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்!
தமிழகத்தில் ஆகஸ்ட் 5ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10 இடங்களில் கனமழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
மீனவர்கள் குமரி கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 15:29 (IST) 02 Aug 2022வேலை வாய்ப்பின்மை தான் அதிகமாக நிலவுகிறது- திருச்சி சிவா பேச்சு
வாக்குறுதி கொடுத்தது போல ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்தீர்களா? ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் தருவோம் என கூறினீர்கள். ஆனால் இன்று வேலை வாய்ப்பின்மை தான் அதிகமாக நிலவுகிறது என மாநிலங்கவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா பேசியுள்ளார்
- 15:16 (IST) 02 Aug 2022மீனவர்கள் குமரி கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்!
தமிழகத்தில் ஆகஸ்ட் 5ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10 இடங்களில் கனமழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
மீனவர்கள் குமரி கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 15:12 (IST) 02 Aug 2022ஆவின் பால் பாக்கெட் அளவு குறைபாடு - நடவடிக்கை
ஆவின் பால் பாக்கெட்டுகளில் அளவு குறைபாடு இருந்தால் மாற்று பால் பாக்கெட்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நுகர்வோர் தங்களின் குறைகளை 1800-425-3300 அல்லது aavincomplaints@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- 14:40 (IST) 02 Aug 2022நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத்துறை சோதனை
டெல்லி மற்றும் மும்பையில் பல்வேறு இடங்களில் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
- 13:38 (IST) 02 Aug 20224 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 13:14 (IST) 02 Aug 2022புதிய விமான நிலையம்
தமிழகத்தின் வளர்ச்சிக்கு படிக்கட்டாகும் பரந்தூரில் அமைய உள்ள 2வது புதிய பன்னாட்டு விமான நிலையம்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை. தமிழகத்தின் வளர்ச்சியை உலக நாடுகளுடன் ஒப்பிடும் வகையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது - முதல்வர்
- 13:13 (IST) 02 Aug 2022தயாரிப்பாளர் தியாகராஜன் அலுவலகத்தில் சோதனை
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை. ஏற்கனவே அன்புச்செழியன், கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது .
- 13:12 (IST) 02 Aug 2022சிற்றுண்டித் திட்டம் இன்று ஆலோசனை
அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை . சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக இன்று மாலை ஆலோசனை
- 13:11 (IST) 02 Aug 2022கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு
கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த 30 வயது நபருக்கு குரங்கம்மை பாதிப்பு . கேரளாவில் இதுவரை குரங்கம்மையால் 5 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது - மாநில சுகாதாரத்துறை
- 12:36 (IST) 02 Aug 2022எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு: பதில் மனுதாக்கல்
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான பொதுப்பணித்துறை டெண்டர் முறைகேடு வழக்கு . உச்சநீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் மனு தாக்கல்
- 12:35 (IST) 02 Aug 2022தமிழகத்தில் தான் அதிக தொழில் காப்பகங்கள் இயங்கி வருகின்றன - ஸ்டாலின்
தமிழகத்தில் தான் அதிக தொழில் காப்பகங்கள் இயங்கி வருகின்றன . தொழில் முனைவோர் தயாரிப்புகளை சந்தைப்படுத்த ஸ்டார்ட் அப் தமிழ்நாடு அமைப்பு உருவாக்கம் - முதல்வர்
- 12:34 (IST) 02 Aug 2022148 ரயில்கள் ரத்து
நாடு முழுவதும் தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக 148 ரயில்கள் ரத்து . மேலும் 39 ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே தகவல்
- 12:05 (IST) 02 Aug 2022பாபர் மசூதி வழக்கு; உத்தரவு
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு . சிபிஐ மற்றும் உத்தரபிரதேச அரசு பதிலளிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு
- 11:54 (IST) 02 Aug 2022எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது- முதல்வர்
நான் முதல்வன் திட்டத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது .புத்தொழில் நிறுவனங்கள் தொடர்பான கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
- 11:25 (IST) 02 Aug 2022இபிஎஸ் வழக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஊழலில் தனக்கு தொடர்பு இருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு கூற தடை கோரி முன்னாள் முதலமைச்சர் இபிஎஸ் வழக்கு. தடை விதிக்க மறுத்து, அறப்போர் இயக்கம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 11க்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
- 11:01 (IST) 02 Aug 2022எஸ்.ஆர்.பிரபு அலுவலகத்தில் ஐ.டி.ரெய்டு
சென்னை தி.நகரில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
- 10:26 (IST) 02 Aug 202210 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
கேரளாவில் 10 மாவட்டங்களில் ரெட் அலர்ட் மற்றும் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- 09:43 (IST) 02 Aug 2022குமரியில் கடலுக்கு சென்ற மீனவர்கள் திரும்பாததால் அச்சம்
கன்னியாகுமரியில், குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 15 விசைப்படகுகளில் நேற்று மீன்பிடிக்க சென்ற 200 மீனவர்கள் கரை திரும்பாததால் அங்கு அச்சம் நிலவுகிறது.
- 09:19 (IST) 02 Aug 2022அன்புச்செழியன் வீட்டில் ஐ.டி. ரெய்டு
திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியனுக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.
- 08:56 (IST) 02 Aug 2022அன்புச்செழியன் வீட்டில் ஐ.டி. ரெய்டு
திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியனுக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.
- 08:22 (IST) 02 Aug 2022அல் கொய்தா தலைவர் கொலை
ஆப்கானிஸ்தானில், அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹ்ரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி செய்தார்
- 08:22 (IST) 02 Aug 2022மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 46,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- 08:21 (IST) 02 Aug 20226 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 08:21 (IST) 02 Aug 2022நெல்லைக்கு ரெட் அலர்ட்
நெல்லை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டு அறை எண்களை அறிவித்தது. 1070 மற்றும் 0462-501012 ஆகிய எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
- 08:21 (IST) 02 Aug 2022டெல்லியில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு
டெல்லியில் வசிக்கும் நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நாடு முழுவதும் இதுவரை 6 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- 08:20 (IST) 02 Aug 2022குமரிக்கு ரெட் அலர்ட்.. பள்ளிகளுக்கு விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 4ம் தேதி வரை அதி கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், மறு அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக குமரியில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வால்பாறையிலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
- 08:20 (IST) 02 Aug 2022கேரளாவுக்கு ரெட் அலர்ட்
கேரளாவில் 7 மாவட்டங்களில் ரெட் அலர்ட் மற்றும் 2 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- 08:20 (IST) 02 Aug 2022ராணுவ ஹெலிகாப்டர் மாயம்
பலுசிஸ்தானில் வெள்ள மீட்பு பணிக்காக, மூத்த அதிகாரிகளை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் மாயமான நிலையில், மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.