/tamil-ie/media/media_files/uploads/2020/12/rajini-kamal-1.jpg)
Latest Tamil News : இன்று கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி உலகெங்கிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக மக்களை ஆலயங்களுக்கும் அனுமதிப்பதற்கு முன் அவர்களுக்கு முழுமையான கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. வாட்டிகன், இயேசு பிறந்த பெத்லேஹேமன், அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு பிரார்த்தனை மிகவும் எளிமையாக நடைபெற்றது. சில இடங்களில் விருந்து, கலை நிகழ்ச்சிகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
வேளாண் மசோதாவை எதிர்த்து டெல்லியில் 30 நாளாகத் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளின் பிரச்சனைகளை விவாதிக்கத் தயாராக உள்ளதாகவும் பேச்சுவார்த்தைக்கு வருமாறும் மத்திய அரசு விவசாய சங்கங்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறது. இதுவரை இரண்டு கடிதங்கள், ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தபோதிலும், முழுமையானது தீர்வு விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை. கடும் குளிரிலும் பனியிலும் போராடி வரும் விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படவேண்டும் என்பதே விருப்பமே தவிரத் திருத்தங்கள் அல்ல என விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு வறண்ட வானிலையே இருக்குமெனவும் மூன்று நாட்களுக்குப் பிறகு 28-ம் தேதி தென் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Live Blog
Today Tamil News : இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த நேரலையுடன் இணைந்திருங்கள்
நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க ரஜினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் கடம்பூர் ராஜு, “2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதால் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 3 வது முறையாக வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றி பெறும்” என்று கூறினார்.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நாங்கள் எம்.ஜி.ஆரை எப்போதும் மறக்கவில்லை என்று கூறினார். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
பழனி முருகன் கோயிலில் வரும் 28ஆம் தேதி முதல் மீண்டும் ரோப்கார் சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9.30 முதல் இரவு 7.30 மணி வரை ரோப் கார் இயக்கப்படும். இதில் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும். மக்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கின்றனர். மலிவான குடும்ப அரசியலை வெறுக்கின்றனர். நாடு முழுவதும் நடைபெறும் தேர்தல்களில் பாஜகவுக்கு மாபெரும் வெற்றி கிடைக்கும். காங்கிரஸ் படுதோல்வி அடையும்” என்று தெரிவித்துள்ளார்.
அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் இருந்த நடிகர் ரஜினிகாந்த, திடீரென இன்று ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரத்த அழுத்தத்தில் ஏற்பட்டுள்ள மாறுபாடு காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்த நிலையில் தடையை மீறி கூட்டம் நடந்து வருகிறது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும், பிரதமர் மோடியால் கூட மக்கள் கிராம சபை கூட்டத்தை தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 96-வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினர். மேலும், நாட்டை வளர்ச்சியின் உச்சத்திற்கு எடுத்துச் சென்றவர், வளமான இந்தியாவை அமைப்பதற்கான, வாஜ்பாயின் முயற்சிகள் என்றும் நினைவுகூரப்படும் என்றும் மோடி தெரிவித்தார்.
அனைவருக்கும் எனது உளம்கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் - ஓபிஎஸ்
அகிலம் முழுவதும் மனிதநேயம் செழித்து வளர, தன்னுயிரையே இவ்வுலகிற்கு அர்ப்பணித்த தேவகுமாரனாம் ஏசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாகக் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம்கனிந்த #கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/clpakdNLBz
— O Panneerselvam (@OfficeOfOPS) December 25, 2020
இயேசுவின் வழிமுறைகள் நியாயமான சமூகத்தை கட்டமைக்க வழிவகுக்கட்டும் - பிரதமர் மோடி
Merry Christmas!
The life and principles of Lord Christ gives strength to millions across the world.
May his path keep showing the way in building a just and inclusive society.
May everybody be happy and healthy.
— Narendra Modi (@narendramodi) December 25, 2020
கிறிஸ்துமஸ் பண்டிகை சமூகத்தில் அமைதி மற்றும் செழிப்பை அளிக்கும் என நம்புகிறேன் - ராம்நாத் கோவிந்த்
Merry Christmas to everyone! I hope this festival nurtures peace and prosperity, and helps strengthen harmony in society. Let us follow Christ's teachings of love, compassion, and charity, committing ourselves to the welfare of our society and nation.
— President of India (@rashtrapatibhvn) December 25, 2020
தேஜஸ் விரைவு வண்டிகளில் பயோ கழிப்பறை, தொலைக்காட்சி பெட்டிகள், இலவச இணைய வசதிகள் கொண்டது. சதாப்தி விரைவு வண்டிகளின் கட்டணத்தை விட, தேஜஸ் வண்டியின் கட்டணம் 20% முதல் 30% கூடுதலாக இருந்தது.
இந்நிலையில், பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் தேஜஸ் ரயில் சேவையை வரும் ஜனவரி 4ம் முதல் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்த செய்தி, தென் மாவட்ட மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights