Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆவின் பால் பாக்கெட்டில் கிறிஸ்துமஸ் வாழ்த்து
இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதால், தமிழக அரசு ஆவின் பால்பக்கெட்டில் கிறிஸ்துமஸ் வாழ்த்து பதித்து வெளியிட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் விழா
வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம். உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு.
இந்தியா முழுமைக்குமான பிரதமராக இருந்தவர் நேரு. ஒற்றை மொழி, ஒரே கலாச்சாரத்துக்கு எதிராக இருந்தவர். வகுப்புவாதம், தேசியவாதம் சேர்ந்திருக்க முடியாது என சொன்னவர் நேரு. நேருவின் வாரிசு பேசுவதை கோட்சேவின் வாரிசுகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என தமிழக காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் கோபண்ணா எழுதிய மாமனிதர் நேரு நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்
காந்தியடிகளை சுட்டுக்கொன்றது ஒரு இந்து என்ற உண்மையை உரக்க சொன்னவர் நேரு என ‘மாமனிதர் நேரு’ புத்தக வெளியீட்டு விழாவில் வி.சி.க தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்
கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது
கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் வார விடுமுறை நாள் என்பதால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகப்படியான வாகனங்கள் சென்னை திரும்பியுள்ளன. இதனால் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் புறவழிச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது
நடிகர் அஜித்தின் 'துணிவு' படத்தில் இருந்து 3வது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையில் 'கேங்ஸ்டா' பாடல் வெளியிடப்பட்டுள்ளது
தாய்மொழி எமது பிறப்புரிமை, பிரிமொழிகளைப் பயில்வதும் பயன்படுத்துவதும் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில்தான் நிகழும், 75 ஆண்டுகளாக இதுதான் தென்னிந்தியாவின் உரிமைக்குரல், வடகிழக்கும் இதையே பிரதிபலிக்கும், இந்தியை வளர்க்க, அதை பிறர் மேல் திணிப்பது அறிவீனம், திணிக்கப்படுபவை எதிர்க்கப்படும் என ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்
நாட்டில் 227 பேர் புதிதாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 3424 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அன்று பயங்கரவாதிகளின் புகழிடமாக திகழ்ந்த காஷ்மீர் இன்று சுற்றுலா தலைநகராக காணப்படுகிறது. அதற்கு நரேந்திர மோடியின் ஆட்சிதான் காரணம் என பாஜக தலைவர் தருண் சுக் கூறினார்.
மேலும், “அப்துல்லாக்களும், முஃப்திகளும், நேரு-காந்தி குடும்பமும் காஷ்மீரை கொள்ளையடித்தவர்கள்” என விமர்சித்தார்.
நேபாள நாட்டின் ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி, நாட்டின் புதிய பிரதமராக புஷ்ப கமல் தஹால் பிரசந்தாவை நியமித்தார்.
நொய்டாவில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3.80 கோடி மதிப்பிலான 60 ஆயிரம் லிட்டர் கள்ள சாராயம் நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டது.
ஹிமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர், பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு நிதிஷ் குமார் கூறுகையில், “வாஜ்பாய் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் அவரின் பேச்சை கூர்ந்து கவனித்துள்ளேன். அவரது அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது” என்றார்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திங்கள்கிழமை ஆந்திரா செல்கிறார். நந்த்யால் மாவட்டம் ஸ்ரீசைலம் செல்லும் அவர், சுற்றுலா துறையின் திட்டமான பிரசாத்-ஐ தொடங்கிவைக்கிறார்.
வடமாநிலங்களில் அடுத்துவரும் 3 அல்லது 4 நாள்களுக்கு மூடுபனி நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் 2024 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் இதுதான் என் கடைசி சட்டப்பேரவை தேர்தல் என தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
இன்று மாலை 7 மணிக்கு துணிவு படத்தின் கேங்க்டர் பாடல் வெளியாகிறது.
ஏற்கனவே துணிவு படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
ராகுல் காந்தியின் யாத்திரை ஹரியானாவிலிருந்து பதர்பூர் எல்லை வழியாக சனிக்கிழமை அதிகாலை டெல்லிக்குள் நுழைந்தது.
பாரத் ஜோடோ யாத்திரையில், டெல்லி லெக்கில் சனிக்கிழமை தனது தாயும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அவரிடமிருந்து தான் பெற்ற அன்பை நாட்டில் பரப்புவதாகக் கூறினார்.
जो मोहब्बत इनसे मिली है,वही देश से बांट रहा हूं। pic.twitter.com/y1EfLqxluU
— Rahul Gandhi (@RahulGandhi) December 24, 2022
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நடிகர் விஜயின் தந்தையும் திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஏழை மக்களுக்கு, உதவிகள் வழங்கினார்.
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியதாவது: “காங்கிரஸ் ஆட்சியின் போது இதே கருத்தைக் கூறும்போது, பா.ஜ.க எங்களை ராமர் எதிர்ப்பு என்று அழைத்தது. இப்போது இந்த ராம பக்தர், ராமர் பாலம் என்பதற்கு தங்களிடம் வலுவான ஆதாரம் (ராம சேது) இல்லை என்று பாராளுமன்றத்தில் கூறுகிறார். நாட்டு மக்களை தவறாக வழிநடத்தியதற்காக பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்று கூறினார்.
ஒமிக்ரான் பி.ஏ.5 வைரஸ் மாறுபாடான மிகவும் வேகமாக பரவி வரும் பி.எஃப்.7 வைரஸால் தொற்றுகள் வேகமாக அதிகரித்து வருவதாக சீனா அறிவித்துள்ள நிலையில், இந்த திட்டம் வந்துள்ளது. அரசாங்கத்தின் ரேடாரில் சீனாவின் முக்கிய போர்டிங் புள்ளிகளில் ஹாங்காங் உள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
சனிக்கிழமை முதல் விமான நிலையங்களுக்கு வரும் இரண்டு சதவீத சர்வதேச பயணிகளின் சீரற்ற சோதனையை மறுதொடக்கம் செய்த பிறகு, சீனாவில் இருந்து இந்தியாவிற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் போர்டிங் பாயின்ட்களில் கட்டாய பரிசோதனையை அறிமுகப்படுத்துவதன் மூலம் புதிய கோவிட் வகைகளை சரியான நேரத்தில் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஜப்பான், தென் கொரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்க் பரிசோதனை மேற்கொள்ள திட்டம்.
பராசக்தி திரைப்படம் வெளியாகி 70 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நடந்த விழாவில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன்: “தமிழ் சினிமாவில் சமூகம் சார்ந்த படங்களை இயக்க நினைக்கும் இயக்குனர்களுக்கு பராசக்தி தான் இன்ஸ்பிரேஷனாக இருக்கும். அரசியல் இல்லாத சமூக நீதி, மக்களுக்கு பலனைத் தராது என்ற அம்பேத்கரின் கூற்றுதான் பராசக்தி படத்தை பார்த்தபோது தோன்றியது” என்று கூறினார்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்வீட்: “ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய ஆளுமைமிக்க பேரரசி வீரமங்கை ராணி வேலுநாச்சியார் அவர்களின் நினைவு தினமான இன்று (டிசம்பர் 25) அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம்” என்று பதிவிட்டுள்ளார்.
ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய ஆளுமைமிக்க பேரரசி வீரமங்கை ராணி வேலுநாச்சியார் அவர்களின் நினைவு தினமான இன்று அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம். pic.twitter.com/M62xJuOEsQ
— K.Annamalai (@annamalai_k) December 25, 2022
கங்கை போன்ற நதிகளை தூய்மையாக வைத்திருப்பது நமது தலையாய கடமை. கங்கை அன்னையுடன் நம் கலாச்சாரம் பாரம்பரியம் மிகுந்த பிணைப்பை கொண்டுள்ளது என் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் சலபதி ராவ் மாரடைப்பால் இன்று மரணமடைந்தார். தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 1200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சலபதி ராவ்
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், திருத்தணி மற்றும் கள்ளக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெற்துள்ளது. இதனால் சாலைகளில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
புதுச்சேரியில் ஆழ்கடலில் கிறிஸ்துமஸ் தாத்தா போல வேடமிட்டு 5 நீச்சல் வீரர்கள் 60 அடி ஆழத்தில் நீந்திச் சென்றது பெரும் வைரலாக பரவி வருகிறது
தென் தமிழகம் மற்றும் டெல்டாவில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னையில் நேற்று இரவு நடைபெற்ற சிறப்பு வாகன தணிக்கையில் 281 வழக்குகள் பதிவு
மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 140 பேர் மீதும், உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 33 பேர் மீதும் வழக்குப்பதிவு – மாநகர போக்குவரத்து காவல்துறை தகவல்
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
சீர்காழி மற்றும் நெய்வேலி சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை
சாலைகளில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் சிரமம்
பழனிமலை கோயில் கும்பாபிஷேகம் – யாகசாலை அமைப்பதற்கான முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி அமைச்சர்கள் சேகர் பாபு, சக்கரபாணி உள்ளிட்டோர் பங்கேற்பு
கும்பாபிஷேகம் ஜனவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது .
2022-ம் ஆண்டு இந்தியாவுக்கு மிகவும் அற்புதமான ஆண்டு.
உலக பொருளாதாரத்தில் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளோம்
ஜி-20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது
இந்த ஆண்டின் இறுதி 'மன் கி பாத்' உரையில் பிரதமர் மோடி பேச்சு
போதைப் பொருள் விற்பனையால் தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
தமிழகத்தில் இருந்து போதைப் பொருட்கள் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக் கடத்தப்படுகிறது. கஞ்சா உள்பட பல போதைப் பொருட்கள் தமிழகத்தில தாராளமாக விற்கப்படுகின்றன – எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
கடலூர் : திட்டக்குடி அருகே வெங்கானூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சபரிமலைக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிய ஐயப்ப பக்தர்களின் வேன் திடீரென தீப்பற்றியது – அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமில்லை
கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. தமிழகத்தில் முகக்கவசம் அணிவது விலக்கிக்கொள்ளப்படவில்லை. பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்” சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், இலங்கையின் அநேக மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நாடு முழுவதும் அதீத காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை திருகோணமலைக்கு 110 கி.மீ தொலைவில் உள்ள தாழ்வு மண்டலம், இன்று நண்பகல் கடலோரப்பகுதிக்கு நகரும்
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாகையில் இருந்து 330 கி.மீ தொலைவில் உள்ளது; நகர்வு வேகம் மணிக்கு 12 கி.மீ.யில் இருந்து 8 ஆக குறைந்தது – வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய அறிக்கை
சமூகத்தில் நல்லிணக்கம், மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கட்டும்” கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வு குழுவின் இடைக்கால தலைவராக சாகித் அப்ரிடி நியமனம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், திருமுல்லைவாசல், பூம்புகார் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்ற முறை இப்பகுதியில் பெய்த அதிகனமழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மிதந்தன
நாகை, காரைக்கால் துறைமுகங்களில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு