Tamil News Today Updates: மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். பொது முடக்க தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. பிரதமரின் கிஷான் திட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களிடம் சிபிஐ விசாரணை. தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளார்.
திரையரங்குகளை திறப்பது குறித்து மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது. இதில் திரையரங்க உரிமையாளர் சங்கத்தினரும் பங்கேற்கிறார்கள். இருமொழிக் கொள்கையே தொடரும் என மத்திய அரசுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கடிதம் எழுதியுள்ளார். அதோடு, உயர் கல்வி மாணவர் சேர்க்கைக்கு, பொது நுழைவுத் தேர்வை ஏற்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த மத்திய அரசு ஊழியர்கள் மீது இந்தி திணிக்கப்படுவதாக ஜி.எஸ்.டி உதவி ஆணையர் புகார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
கொரோனா பொது முடக்கநிலையை மீறுவோருக்கான அபராத தொகையை வசூலிப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. வருவாய்த்துறையில் வருவாய் ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்களும், காவல்துறையில் உதவி ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்களும், பொதுசுகாதாரத்துறையில் சுகாதார ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்களும் அபராதத் தொகையை வசூலிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்தது.
கொவிட் தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில், தீவிர பரிசோதனை முயற்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒட்டு மொத்த பரிசோதனையில், இந்தியா இன்று 5 கோடியை கடந்துள்ளது.
கடந்த 2020 ஜனவரியில், புனேயில் உள்ள தேசிய வைராலஜி மையத்தில், ஒரே ஒரு பரிசோதனை மேற்கொண்டது முதல் இன்று 5,06,50,128 பிரசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது வரை இந்தியா மிக நீண்ட பாதையை கடந்து வந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 10,98,621 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் நாட்டின் பரிசோதனை திறன் அதிகரித்துள்ளது.
.@MoHFW_INDIA issues SOP for partial reopening of schools for students of 9th to 12th classes on a voluntary basis, for taking guidance from their teachers, in the context of #COVID19
Read here👉https://t.co/MYOqsW64dE pic.twitter.com/qNcOw6brS3
— PIB in Tamil Nadu 🇮🇳 (@pibchennai) September 8, 2020
பள்ளிகளை மீண்டும் படிப்படியாக திறப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது
செப்டம்பர் 21ம் தேதி முதல், நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களை மீண்டும் பணிக்கு அழைக்கலாம் என்றும் 9 முதல் 12 வகுப்பு மூத்த மாணவர்கள் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துகொள்ள வகுப்பறைகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் தனியார் மருத்துவமனைகளில் 43, அரசு மருத்துவமனைகளில் 44 பேர் என மொத்தம் 87 பேர் உயிரிழந்தனர். இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,012 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை நேரில் சந்தித்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்ததாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தனியார் பள்ளி மாணவர்களுக்கு இந்தி கற்கும் வாய்ப்பு இருக்கும்போது, அந்த வாய்ப்பை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏன் நிராகரிக்க வேண்டும்?
தமிழ் மொழி மிகவும் பழமையானது. தமிழ் மொழியை இன்னொரு மொழியாலோ, வேறு யாராலும் அழிக்க முடியாது!
தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமிpic.twitter.com/huF1g0Mprw
— புதிய தமிழகம் கட்சி (@PTpartyOfficial) September 8, 2020
தனியார் பள்ளி மாணவர்களுக்கு இந்தி கற்கும் வாய்ப்பு இருக்கும்போது, அந்த வாய்ப்பை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏன் நிராகரிக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி கேளிவி எழுப்பியுள்ளார்.
பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாணவர்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமாக தேர்வு எழுதலாம். செமஸ்டர் தேர்வுக்கு முன்பு பயிற்சி தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக அறிவித்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக முதல்வர் பழனிசாமி சந்தித்தார். ஊரடங்கு தளர்வளித்த நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் முதல்வர் பழனிசாமி எடுத்துரைப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்மைத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, கொரோனா வைரஸ் கால கட்டத்தில் கிசான் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. கிசான் திட்டத்தில் குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பயன்பெற முடியும். கள்ளக்குறிச்சி விழுப்புரம் கடலூர் வேலூர் மாவட்டங்களில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மார்ச் மாதம் வரை கிசான் திட்டத்தில் எந்த முறைகேடும் இல்லை. ஆகஸ்ட் மாதத்தில் திடீரென 6 லட்சம் பயணாளர்கள் சேர்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. திடீரென பயனாளர்களின் எண்ணிக்கை குறிப்பாக 13 மாவட்டங்களில் அதிகரித்துள்ளது. தருமபுரி சேலம் கிருஷ்ணகிரி செங்கல்பட்டு காஞ்சிபுரத்தில் முறைகேடு நடந்துள்ளது என்று கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “அரியர்ஸ் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிப்பது அரசின் முடிவு. இதில் எந்த குழப்பமும் இல்லை. அரியர்ஸ் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அரசாணை வெளியிட முடியவில்லை” என்று தெரிவித்தார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சந்தித்து பேச இருக்கிறார். தேசியக் கல்வி கொள்கை குறித்து ஆலோசிக்க நேற்று ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையில் ஆளுநர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. இதில், பிரதமர் மோடியும் இதில் கலந்து கொண்டு புதிய தேசியக் கல்வி கொள்கை குறித்து பேசினார். இந்த நிலையில் இன்று ஆளுநரை முதல்வர் எடப்பாடி சந்திக்கிறார்.
மாநில அரசை மதிக்காமல் புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு கொண்டு வருகிறது. இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. தமிழக சட்டப்பேரவையை குறைந்தது 7 நாட்களாவது நடத்த வேண்டும் என திமுக சட்டப்பேரவை துணைத்தலைவர் துரைமுருகன் கூரியுள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், திரையரங்கு உரிமையாளர்கள் இடையே ஒப்பந்தம் அவசியம். ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் புதிய படங்களை வெளியிட முடியாத சூழலுக்கு தள்ளப்படுவோம். தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்துக்கு பல தயாரிப்பாளர்கள் இணைந்து கடிதம். qube/ufo-க்கான vff கட்டணத்தை தயாரிப்பாளர்கள் இனி செலுத்த முடியாது. திரையரங்கில் காட்டப்படும் விளம்பர வருமானத்தில் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு பங்கு கொடுக்க வேண்டும். ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மூலம் கிடைக்கும் தொகையில் தயாரிப்பாளர்களுக்கு பங்கு தரவேண்டும்
மத்திய ரிசர்வ் படை துணை கமாண்டண்ட் ஸ்ரீஜன், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை. பூந்தமல்லி அருகே உள்ள மத்திய ரிசர்வ் படை போலீஸ் அலுவலகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குடும்ப தகராறு காரணமாக, அலுவலகத்திலேயே ஸ்ரீஜன் தற்கொலை என தகவல்.
தமிழக அரசின் அரியர் தேர்வுகள் ரத்து அறிவிப்புக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏஐசிடிஇ எழுதிய கடிதம் வெளியானது. அரியர் தேர்வு ரத்தை ஏற்க முடியாது என ஏஐசிடிஇ கடிதம் எழுதியதாக கூறியிருந்தார் அண்ணா பல்கலை.யின் துணைவேந்தர் சூரப்பா
தொடர்ந்து பேசிய செய்தித் தொடர்பாளர் கர்னல் ஜாங், ”சீன ராணுவத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்திய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. எனவே நிலமையை கட்டுக்குள் கொண்டு வர நாங்கள் பதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது” என்றார். எனினும், எந்த மாதிரியான பதில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி எந்த தகவலையும் வெளியிடவில்லை.
இந்திய துருப்புக்கள் சீன சூழ்ச்சிகளை முறியடித்து, தென்கரையில் பாங்கோங் த்சோ மற்றும் ரெசாங் லா அருகே ரெச்சின் லா ஆகிய இடங்களை ஆக்கிரமித்த சில நாட்களுக்குப் பிறகு, ஏரியின் தென் கரை திங்கள்கிழமை இரவு மீண்டும் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இது குறித்து பி.எல்.ஏ வெஸ்டர்ன் தியேட்டர் கட்டளையின் செய்தித் தொடர்பாளர் கர்னல் ஜாங் ஷுய்லி ஒரு அறிக்கையில், இந்திய இராணுவம் “எல்லை மீறி சீன-இந்திய எல்லையின் மேற்குப் பகுதியான பாங்கோங் ஹுனானுக்குள் நுழைந்தது” என்றும் “இந்திய நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களை கடுமையாக மீறியுள்ளன, சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒப்பந்தங்கள், பிராந்திய பதட்டங்களை அதிகரித்து, தவறான புரிதல்களையும் தவறான தீர்ப்புகளையும் எளிதில் ஏற்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று, மருத்துவ கட்டமைப்புகள் குறித்து நிபுணர் குழுவினருடன் முதல்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார். தற்போது தளர்வுகளுடனான ஊரடங்கை அமல்படுத்தி ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், மருத்துவ கட்டமைப்பு மற்றும் கொரோனா தடுப்பு சிகிச்சை முறை முன்னேற்றம் குறித்து மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இன்று காலை 9.30 மணிக்கு முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்துகிறார்.இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப்பின், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights