Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ரஷ்ய அதிபரை சீன அதிபர் சந்திக்க உள்ளதாக தகவல்
சீன அதிபர் ஷி ஜின்பிங் ரஷ்ய அதிபர் புதினை அடுத்த வாரம் நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல், சமீபத்தில் 3 வது முறையாக, சீன அதிபராக ஜின்பிங் பதவி ஏற்றார்.இந்நிலையில் புதினுடனான இந்த சந்திப்பு ரஷ்யா, உகரைன் மீது தொடுத்துள்ள போரை நிறுத்துவதற்கான அமைதி நடவடிக்கைக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீர் நிலவரம்
புழல் ஏரியில் நீர்இருப்பு 2642 மில்லியன் கனஅடியாக உள்ளது; ஏரியில் இருந்து 159 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 20 கனஅடியாக உள்ளது; நீர்இருப்பு 831 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை – தேர்வாய் கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 500 மில்லியன் கனஅடியாக உள்ளது; ஏரிக்கு நீர்வரத்து 15 கனஅடியாக உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் டவுட்டன் ஜங்ஷன், பட்டினப்பாக்கம், நடேசன் பூங்கா, மீனாட்சி கல்லூரி, தபால் பெட்டி, செயிண்ட் ஜோசப் கல்லூரி உட்பட 6 ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி நிறுத்தம். 750 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இந்த ரயில் நிலையங்கள் இருப்பதால் மெட்ரோ ரயில் நிர்வாகம் இதனை நிறுத்த முடிவு
மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை குஜராத் அணிகள் மோதுகின்றன. இதில் முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. 163 ரன்கள் வெற்றி இலக்குடன் குஜராத் அணி களமிறங்க உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் 2400 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தை வரும் 27-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல். பல வசதிகளுடன் 5 தளங்கள் கட்டப்பட்டுள்ள இந்த புதிய முனையதால் கூடுதல் விமானங்கள் மற்றும் பயணிகளை கையாள முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில், இளைஞர் ஒருவர் இளம்பெண்ணுக்கு தாலி கட்டி அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவரும் நிலையில், அவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவில் இருந்து 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய போவதாக அறிவிப்பு * 5 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகளும் தற்போது நிரப்ப போவதில்லை எனவும் மெட்டா அறிவிப்பு. ஏற்கனவே 4 மாதங்களுக்கு முன் 11,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
இந்தியாவில் 149 சிறைகளில் நிர்ணயிக்கப்பட்டதைவிட 200% கூடுதலாக கைதிகள் உள்ளனர். சராசரியாக எல்லா சிறைகளிலும் 14% கைதிகள் கூடுதலாக உள்ளனர் என மக்களவையில் மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் எழுத்துபூர்வமாக பதில்
FARZI வெப் சீரிஸில் வரும் காட்சிகளை போன்று இளைஞர்கள் இருவர் காரில் இருந்த படியே சாலையில் பணத்தை வீசிச் சென்ற வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ரூபாய் நோட்டுகளை வீசிச் சென்ற இளைஞர்கள் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் குஜராத் மும்பை அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி தற்போது பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
கோவையில் வடமாநில குடிபெயர் தொழிலாளியை அடித்துக் கொன்ற சார்லஸ் என்பவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் வடமாநில குடிபெயர் தொழிலாளி கேசவ்-ஐ, சார்லஸ் தாக்கியுள்ளார். இந்த நிலையில் அவரை அப்படியே விட்டு அங்கிருந்து சார்லஸ் தப்பிச் சென்றுவிட்டார்.
நக்சல்கள் அதிகமுள்ள இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தன்பாலின தம்பதியர் தத்தெடுக்கும் குழந்தைகளும் தன்பாலினத்தவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
தன்பாலின தம்பதியர் தத்தெடுக்கும் குழந்தைகளும் தன்பாலினத்தவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
சக பயணிகளுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் ரீல்ஸ் வீடியோ எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி அறிவித்துள்ளது.
கேம்ஸ் 24*7 ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது; விசாரணை நோட்டீஸை எதிர்த்து கேம்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் பதிலளிக்கும் வரை நடவடிக்கை கூடாது; சி.பி.சி.ஐ.டி விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்த கேம்ஸ் நிறுவனத்தின் வழக்கு மார்ஸ் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து சி.பி.சி.ஐ.டி-க்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பட்டியலின பிரிவில் உள்ளவர்கள் இஸ்லாம், கிறிஸ்தவ மதத்தை தழுவினால் அவர்களை அதே பிரிவிலேயே வைக்க, அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய எந்த பரிந்துரையும் இல்லை; எனினும், இது தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உல்ள சிறைகளில் 5.54 லட்சம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளன; ஆனால், நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கை 4.25 லட்சம் கைதிகள் ஆகும்.
டிசம்பர் 2021 நிலவரப்படி, 1,410 கைதிகள் தண்டனைக் காலம் முடிந்தும் அபராதத் தொகை செலுத்த முடியாததால் சிறையில் உள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் ரயில் பயணியின் மீது சிறுநீர் கழித்த டிக்கட் பரிசோதகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மார்ச் 13-ம் தேதி கணவருடன் அமிர்தசரஸ் நோக்கி ரயிலில் பயணித்த பெண்ணின்
மீது சிறுநீர் கழித்த புகாரில் டிக்கட் பரிசோதகர் முன்னா குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் 4 மாதங்களில் 1,900 ஒமிக்ரான் துணை வகை மாறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டால் உடனே எச்சரிக்கை தரப்படுவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணியை 2019-ம் ஆண்டிலேயே நிறுத்திவிட்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இப்போது புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகளே போதுமானது என மதிப்பிடப்பட்டுள்ளது; புதிய ரூ.2,000 நோட்டுகளை அச்சிடும் திட்டம் தற்போது ஏதும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெரம்பலூர், திருமாந்துறை சுங்கச்சாவடியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளார். பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக அரசு விதித்த தடையை மீறி சென்றதால் ஹெச். ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.
அன்பு ஜோதி ஆசிரமத்தில் காணாமல் போன 15 நபர்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்துள்ளது
சென்னையில் தொழில் அதிபர் வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் 42 கிலோ வெள்ளி, 16 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் 26 ஆம் தேதியே நோட்டமிட்டு, 27 ஆம் தேதி சுவர் ஏறி குதித்து திருடியுள்ளனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரும் சட்ட மசோதா, மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மதுரை எம்.பி., வெங்கடேசன் எழுதிய கடிதத்திற்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பதில் அளித்துள்ளார்
இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் கோழிக்கோடு ஐ.ஐ.டி இணைந்து நடத்தும் 4 நாள் பயிற்சி வகுப்பில் பங்கேற்க ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது
ஆகமம் என்பது ஒரு குறிப்பிட்ட சாதிக்குத்தானா? ஆகமம் சமஸ்கிருதத்தில் மட்டும் உள்ளவையா? ஒரு குறிப்பிட்ட நீதிபதியிடமே குறிப்பிட்ட வழக்குகள் செல்வது ஏன்? என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்
தேர்தல் அல்லாத கால கட்டங்களில் அரசியல் கட்சிகள் நடத்தும் சாதி ரீதியான பேரணிகள், கூட்டங்களை தடை செய்ய எங்களுக்கு அதிகாரம் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கோவையில் உள்ள மத்திய அரசின் நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கான தேர்வு நடந்தது. இதில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்வு எழுத வந்தவர்களின் புகைப்படம், கைரேகை பதிவு செய்யப்பட்ட நிலையில் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் சிக்கினர்
சில கல்லூரிகளுக்கு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்ட, அண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று மாலைக்குள் வெளியிடப்படும். 20 கல்லூரிகள் மீது பல்கலை. நிர்வாகம் எடுத்த நடவடிக்கை, மாணவர்களை பாதிக்கக் கூடாது என்பதால் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை இரண்டாவது நாளாக முடங்கியது; மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
குழந்தைகள் பள்ளியில் சேராமல் இருக்கும் பட்டியலில் உத்தரபிரதேசம் முதலிடத்திலும், பீகார் மற்றும் குஜராத் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன; தமிழகத்தில் 20,352 குழந்தைகள் பள்ளியில் சேராமல் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் சுமார் 9.3 லட்சம் குழந்தைகள் பள்ளியில் சேராமல் உள்ளதாக மத்திய கல்வித்துறை இணையமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதிமுகவுடன் சுமுக உறவு வைத்துக் கொள்ள வேண்டும். அதிமுக தலைமை குறித்தோ, தொண்டர்கள் குறித்தோ யாரும் எந்தவித குறையும் கூறக் கூடாது. இதனை பாஜக தொண்டர்கள் கட்டாயம் பின்பற்றி நடக்க வேண்டும் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ராஜஸ்தானில் தலைமறைவாக இருந்த சிராஜீதின் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மழை, வெள்ள பாதிப்புகளை தடுக்கும் நடவடிக்கை குறித்து இறுதி ஆய்வறிக்கை
இறுதி ஆய்வறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தார், ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ்
சிறப்பாக பணியாற்றி அறிக்கை தயாரித்த குழுவுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
ஆஸ்கர் விருது பெற்ற The Elephant Whisperers திரைப்படத்தை மலைப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு திரையிட்டு காண்பிக்க வேண்டும்.
இதன் மூலம் குழந்தைகளுக்கு இயற்கை குறித்த விழிப்புணர்வும், யானைகளின் அமைதியான மதிநுட்பமும் தெரியவரும்.
மாநிலங்களவையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை
பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவது போல் போலியான வீடியோ வெளியிட்ட விவகாரம்
டெல்லி பாஜக பிரமுகருக்கு முன் ஜாமின் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு
தமிழ்நாடு இயற்கை வேளாண்மைக் கொள்கை 2023-ஐ வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இயற்கை வேளாண்மை கொள்கை வடிவமைப்பு
நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் இயற்கை வேளாண்மை கொள்கை வடிவமைப்பு
நீலகிரியைச் சேர்ந்த பெல்லி அம்மாவுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 'The Elephant Whisperers' ஆவணப் படம் ஆஸ்கர் விருது பெற்றதற்காக வாழ்த்து
ஆஸ்கர் விருது பெற்ற 2 படங்களை சேர்ந்தவர்களும் தென்னிந்தியர்கள் என்பது பெருமையான விஷயம்
இந்தியா இந்த விருதை பெற்றிருப்பதற்கான புகழை மத்திய அரசு எடுத்துக் கொள்ளக் கூடாது – காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
ஆஸ்கர் விருது வென்ற தமிழக தம்பதி பற்றிய 'The Elephant Whisperer' ஆவணப்படத்திற்கும், 'நாட்டு நாட்டு' பாடளுக்கும் மாநிலங்களவையில் பாராட்டு
இந்த விருதுகள் இந்தியாவின் திரைப்படத்துறையை சர்வதேச மயமாக்கும் என மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் பாராட்டு
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வேங்கைவயல் கிராம மக்கள் போராட்டம்
குடிநீர் தொட்டியில் கழிவுநீர் கலந்த விவகாரத்தில், குற்றவாளிகளை கைது செய்ய கோரி முற்றுகை குடிநீர் தொட்டியை உடைக்க முயன்றவர்களை கைது செய்யவில்லை எனவும் கண்டனம்
விழுப்புரம், அன்பு ஜோதி ஆசிரம வழக்கு – தேசிய குழந்தைகள் நல ஆணையர் மற்றும் குழுவினர் ஆசிரமத்தில் ஆய்வு
ஆய்வில் மாவட்ட ஆட்சியர் பழனி, வருவாய் துறை, காவல் துறை அதிகாரிகள், சிபிசிஐடி காவல்துறையினர் பங்கேற்பு
ராகுல் காந்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் முழக்கம்
அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு அமைக்க கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம்
மக்களவையில் அமளி மதியம் 2 மணி வரை கூட்டம்
ஒத்திவைப்பு
ஆன்லைன் சூதாட்ட விவகாரம் தொடர்பாக மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நோட்டீஸ். அவையின் வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் 44 பேர் உயிரிழந்ததாக தகவல்
தமிழ்நாடு முழுவதும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது; சுமார் 7.88 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுத உள்ளனர்.
அரியலூர் மருத்துவக் கல்லூரில் கட்டப்பட்டுள்ள புதிய அரங்குக்கு அனிதா பெயர் சூட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
புதுச்சேரியில் 4வது நாளாக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறவுள்ளது
உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் அரசு பெண்கள் விடுதியின், கழிவறையில் இருந்த 8 அடி நீள சாரை பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர்.
திருவாரூர் : திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு