பெட்ரோல் டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 229-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஜல்லிகட்டுக்கு அனுமதி மறுப்பு
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நாளை நடக்க இருந்த ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுப்பு அதிருப்தி அடைந்த விழா கமிட்டியினர், அரசு அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின், ஜனவரி 8-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
ஏரிகள் நீர் நிலவரம்
புழல் ஏரிக்கு நீர்வரத்து 315 கனஅடியாக உள்ளது; ஏரியில் இருந்து வினாடிக்கு 159 கனஅடி நீர் வெளியேற்றம் . சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 15 கனஅடியாக உள்ளது; ஏரியில் நீர்இருப்பு 831 மில்லியன் கனஅடியாக உள்ளது.
- 21:03 (IST) 06 Jan 2023வடக்கும் தெற்கும் இணைந்து பணிபுரிந்தால் நாடு சுபிக்ஷம் அடையும் - தமிழிசை
தியாகராஜர் ஆராதனை விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு: திருவையாறில் அப்பருக்கு கயிலை காட்சி தந்துள்ளார் சிவபெருமான்; தற்போது இணையதளம் மூலம் உள்ள வசதி அப்போதே இருந்துள்ளதை நம்ப வேண்டும். வடக்கும் தெற்கும் இணைந்து பணிபுரிந்தால் நாடு சுபிக்ஷம் அடையும். நப்பிக்கைதான் எல்லாம் என்று கூறினார்.
- 20:58 (IST) 06 Jan 2023நாளை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த செவிலியர்களுக்கு அழைப்பு
நாளை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த அரசு தரப்பில் செவிலியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. உடன்பாடு எட்டப்படவில்லை எனில் திங்கள்கிழமை கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படும் என்று செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.
- 19:42 (IST) 06 Jan 2023தமிழர்கள் அடையாளத்தை இழந்தால் வாழ்ந்தும் பயனில்லை - முதல்வர் ஸ்டாலின் பெச்சு
சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு: மொழி சிதைந்தால் இனம் சிதையும், இனம் சிதைந்தால் நம் பண்பாடு சிதையும், பண்பாடு சிதைந்தால் நம்முடைய அடையாளம் போய்விடும். அடையாளம் போய்விட்டால், தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியை நாம் இழந்துவிடுவோம். அந்த தகுதியை இழந்தால், வாழ்ந்தும் பயனில்லை” என்று கூறினார்.
- 19:35 (IST) 06 Jan 2023மாணவர்களுக்கு மின்னஞ்சல் கட்டாயம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
பொதுத்தேர்வு எழுத இருக்கும் 12ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
- 19:34 (IST) 06 Jan 2023விமான ஊழியியர்களுக்கு இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் எச்சரிக்கை
ஏர் இந்தியா விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவத்தை தொடர்ந்து, விமானத்தில் ஓழுங்கீனமாக நடந்துகொள்ளும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; நடவடிக்கை எடுக்க தவறினால் விமான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்; விமான ஊழியர்களுக்கு இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 19:30 (IST) 06 Jan 2023ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டு போட்டி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகளுடன்
2 பேருக்கு மட்டுமே அனுமதி
காளையர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்
காளை உரிமையாளர்களுக்கும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
- 19:00 (IST) 06 Jan 2023நீலகிரிக்கு இறைச்சி கொண்டு செல்ல தடை
ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் பரவல் எதிரொலி அச்சம் காரணமாக நீலகிரியில் இறைச்சி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- 18:52 (IST) 06 Jan 2023ஜெயலலிதா குறித்து சர்ச்சை பேச்சு.. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு ஓ.பி.எஸ் கண்டனம்
ஜெயலலிதா குறித்து சர்ச்சையாக பேசிய நிலையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு ஓ.பி.எஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாகவா ராயினும் நாகாக்க என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப அமைச்சர் நடந்து கொள்வது தான் அவரது பதவிக்கு அழகு.
அந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை அடையாளம் காட்டியதே அதிமுக தான்” எனத் தெரிவித்துள்ளார்.
- 18:32 (IST) 06 Jan 2023மதுவிற்பனை நேரத்தை குறைக்க ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் மது விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அதற்கு முன்னோட்டமாக உயர்நீதிமன்ற பரிந்துரைப்படி மதுவிற்பனை நேரத்தை ஆறு மணி நேரமாக குறைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
- 18:12 (IST) 06 Jan 2023ஆர்.என். ரவியா? ஆர்.எஸ்.எஸ். ரவியா? திருமாவளவன் எம்.பி. கேள்வி
ஆர்.என். ரவியா? ஆர்.எஸ்.எஸ் ரவியா என திருமாவளவன் எம்.பி. கேள்வியெழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில், “ தமிழகமா?தமிழ்நாடா? இது குதர்க்கவாதம். ஆர்.என்.ரவி என்பதைவிட ஆர்.எஸ்.எஸ்.ரவி என்பதே சரியாக இருக்கும். சனநாயகத்துக்கான ஆளுநர் என்பதைவிட சனாதனத்துக்கான ஆளிவர் என்பதே சரியாக இருக்கும்.அரசமைப்பு சட்டத்துக்கான பிரதிநிதி என்பதைவிட சங்பரிவார்களுக்கான அரசியல்வாதி என்பதே சரியாக இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.
- 18:05 (IST) 06 Jan 2023தமிழ்நாடு வாழ்க.. கமல்ஹாசன் ட்வீட்
தமிழ்நாடு வாழ்க என பல்வேறு மொழிகளில் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்வீட்டில், தழ்நாடு வாழ்க
ിഴ്നാട് വിജയിക്കട്ടെ
ిళనాడు వర్ధిల్లాలి
ಿಳುನಾಡಿಗೆ ಜಯವಾಗಲಿ
िलनाडु जयहो ।
Long live tamilnadu
Long live india” எனத் தெரிவித்துள்ளார்.
- 18:04 (IST) 06 Jan 2023தமிழ்நாடு வாழ்க.. கமல்ஹாசன் ட்வீட்
தமிழ்நாடு வாழ்க என பல்வேறு மொழிகளில் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்வீட்டில், தழ்நாடு வாழ்க
ിഴ്നാട് വിജയിക്കട്ടെ
ిళనాడు వర్ధిల్లాలి
ಿಳುನಾಡಿಗೆ ಜಯವಾಗಲಿ
िलनाडु जयहो ।
Long live tamilnadu
Long live india” எனத் தெரிவித்துள்ளார்.
- 17:35 (IST) 06 Jan 2023தமிழ்நாட்டில் விதிகளுக்கு உட்பட்டு குவாரிகளுக்கு அனுமதி
தமிழ்நாட்டில் விதிகளுக்கு உட்பட்டே குவாரிகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காப்பு காடுகள் உள்ள பகுதிகளில் கல் குவாரிகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ்சாட்டிய நிலையில் துரைமுருகன் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
- 17:15 (IST) 06 Jan 2023டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு
டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. கூட்டத்தில் ஆம் ஆத்மி பாஜக இடையே மோதல் ஏற்பட்டது.
- 16:59 (IST) 06 Jan 2023இதெல்லாம் சௌதி அரேபியாவில் குற்றம்.. என்ன செய்ய போகிறார் ரொனால்டோ!
சௌதி அரேபியா நாட்டுக்காக ரொனால்டொ கால்பந்து போட்டிகளில் விளையாட உள்ளார்.
இந்த நிலையில் அவரும் அவரது காதலியும் லிவிங் டுகெதராக வாழ்கின்றனர். இது அந்நாட்டு சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்.
எனினும் இந்த விவகாரத்தில் அவர் வெளிநாட்டவர் என்பதால் விலக்கு அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
- 16:51 (IST) 06 Jan 2023பொங்கல் பரிசுத் தொகுப்பில் அரசியல் தலையீடு இருக்காது.. அமைச்சர் சக்கரபாணி
பொங்கல் பரிசுத் தொகுப்பில் அரசியல் தலையீடு இருக்காது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
மேலும், “ஊட்டி, குன்னூர், நீலகிரி பகுதிகளுக்கு மதுரையில் இருந்து கரும்பு கொண்டு செல்லப்படும் என்றார்.
- 16:26 (IST) 06 Jan 2023நீட் விலக்கு தொடர்பாக கோரிக்கை.. மா.சு
நீட் விலக்கு தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சரிடம்
கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அப்போது, நீட் தொடர்பாக மத்திய அரசு கேட்ட
கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
- 16:13 (IST) 06 Jan 2023மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி
உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
இந்த நிலையில், ஒருதரப்பினர் பெட்ரோல் ஊற்றி
தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- 15:47 (IST) 06 Jan 2023ஆளுநர் ஆர்.என். ரவி அப்படி பேசியது ஏன்? மருத்துவர் தமிழிசை பதில்
தமிழ்நாடு, தனி நாடு என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. சில அரசியல்வாதிகள் தனி நாடு என்று
பேசி வருவதால், ஆளுநர் அப்படி பேசியுள்ளார் என தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் மருத்தவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
- 15:33 (IST) 06 Jan 2023புதுக்கோட்டையில் ஜன.8ஆம் தேதி ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி பகுதியில் ஜனவரி 8ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
- 15:23 (IST) 06 Jan 2023பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. அன்றே வழக்குப்பதிவு.. டிஜிபி சைலேந்திர பாபு
பெண் காவலருக்கு தொல்லை அளித்த நபர்கள் மீது அன்றே வழக்குப்பதிவு செய்யப்பட்டுவிட்டது என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.
- 14:40 (IST) 06 Jan 2023அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை ஜனவரி 10-ந் தேதிக்கு ஒத்தவைப்பு
அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதினம்றத்தில் இன்று நடைபெற்ற நிலையில், ஒபிஎஸ் தரப்பு வாதம் நிறைவடைந்ததை தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- 14:23 (IST) 06 Jan 2023எம்ஜிஆர் விதிகளை யாராலும் மாற்ற இயலாது - ஓபிஎஸ் தரப்பு
கட்சியின் தலைவர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்வு செய்யபட வேண்டும் என எம்ஜிஆர் விதிகளை உருவாகியுள்ளார். அதை யாராலும் மாற்ற இயலாது" - ஓபிஎஸ் தரப்பு வாதம் . மேலும் "தலைமை கழக நிர்வாகிகளுக்கு பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் இல்லை" என்றும் வாதம்
- 14:22 (IST) 06 Jan 2023எம்ஜிஆர் விதிகளை யாராலும் மாற்ற இயலாது - ஓபிஎஸ் தரப்பு
கட்சியின் தலைவர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்வு செய்யபட வேண்டும் என எம்ஜிஆர் விதிகளை உருவாகியுள்ளார். அதை யாராலும் மாற்ற இயலாது" - ஓபிஎஸ் தரப்பு வாதம் . மேலும் "தலைமை கழக நிர்வாகிகளுக்கு பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் இல்லை" என்றும் வாதம்
- 14:06 (IST) 06 Jan 2023ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி
ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். சுதாகர் எனது நீண்ட கால நண்பர்; நல்ல நண்பரை இழந்துவிட்டேன் என அஞ்சலிக்குப் பின் நடிகர் ரஜினி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
- 13:49 (IST) 06 Jan 2023ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. காளைகள் 3 வயதிற்கு மேல், 3 பற்கள் கட்டாயம் இருக்க வேண்டும், திமில் கட்டாயம், உடலில் காயங்கள் எதுவும் இல்லாத காளைகளுக்கு மட்டுமே அனுமதி என்று கூறப்பட்டுள்ளது.
- 13:48 (IST) 06 Jan 2023டெல்லி மேயர் தேர்தலில் கூச்சல் குழப்பம்
டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக கவுன்சிலர்கள் இடையே கூச்சல், குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், நியமன உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- 13:47 (IST) 06 Jan 2023அதிமுக பொதுக்குழு விவகாரம் : வைரமுத்து தரப்பு கடும் வாதம்
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி வைரமுத்து தரப்பு வாதம் செய்து வருகிறது. மேலும் தேர்தல் ஆணையத்துக்கு ஈபிஎஸ் எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டி வருகிறது.
- 13:43 (IST) 06 Jan 2023மெரினாவில் ஜல்லிக்கட்டு : மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் விருப்பம்
சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டு உள்ளோம்; விரைவில் அதற்கான இடம் அறிவிக்கப்படும். மெரினாவில் நடத்த வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என கட்சியினர் மத்தியில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
- 12:59 (IST) 06 Jan 2023உள்ளூர் விடுமுறை
தியாகராஜரின் 176வது ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு வரும் 11 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- 12:57 (IST) 06 Jan 2023அன்புமனி ராமதாஸ் நடைபயணம்
என்.எல்.சி-இல் 3வது சுரங்கம் அமைக்க 12 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து என்.எல்.சியால் பாதிக்கப்பட்ட பகுதியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அன்புமனி ராமதாஸ் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
- 12:16 (IST) 06 Jan 2023குழு அமைத்து உத்தரவு
மின்சாரத் தலைமை பொறியாளர்களின் பணியை ஆய்வு செய்ய தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக மேலாண் இயக்குனர் தலைமையில் குழு அமைத்து உத்தரவிடப்பட்டது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குநர் உள்ளிட்ட 4 பேர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்
- 12:16 (IST) 06 Jan 2023நேரில் ஆஜராகினர்
மதுரை மேலூரில் கடந்த 2011ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது வட்டாட்சியரை தாக்கிய வழக்கில், மு.க அழகிரி உள்பட 19 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகினர்
- 11:23 (IST) 06 Jan 2023மொழியை பற்றால் மட்டும் வளர்த்துவிட முடியாது
மொழியை பற்றால் மட்டும் வளர்த்துவிட முடியாது, அறிவால், உணர்வால் வளர்த்தாக வேண்டும்.
மொழி என்பது ஒரு இனத்தினுடைய உயிர், இலக்கியம் என்பது ஒரு இனத்தினுடைய இதயம், மொழியை காப்பாற்ற உயிரை கொடுத்த இனம்தான் நமது தமிழ் இனம் -சென்னை இலக்கியத் திருவிழாவில் மு.க.ஸ்டாலின் உரை
- 11:18 (IST) 06 Jan 2023தொடர் போராட்டம்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் பணி நிரந்தரம் செய்யக் கோரி ஒப்பந்த செவிலியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- 11:18 (IST) 06 Jan 2023ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி மறுப்பு
புதுக்கோட்டை, தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தடையை மீறி காளைகள் அவிழ்த்து விடப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
- 11:11 (IST) 06 Jan 2023திருவிழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறவுள்ள "சென்னை இலக்கியத் திருவிழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- 10:52 (IST) 06 Jan 2023சம்பவம் நடந்த அன்றே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
பெண் காவலரிடம் அத்துமீறிய விவகாரத்தில்,சம்பவம் நடந்த அன்றே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது - டிஜிபி சைலேந்திரபாபு
- 10:51 (IST) 06 Jan 2023சம்பவம் நடந்த அன்றே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
பெண் காவலரிடம் அத்துமீறிய விவகாரத்தில்,சம்பவம் நடந்த அன்றே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது - டிஜிபி சைலேந்திரபாபு
- 10:24 (IST) 06 Jan 2023திருவிழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறவுள்ள "சென்னை இலக்கியத் திருவிழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- 09:44 (IST) 06 Jan 20233 வது நாளாக வருமாமான வரித்துறை சோதனை
சென்னையில் உள்ள புரொவஷ்னல் கொரியல் அலுவலகத்தில் 3 வது நாளாக வருமாமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- 09:15 (IST) 06 Jan 2023ஜல்லிக்கட்டு திடீரென ஒத்திவைப்பு
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு திடீரென ஒத்திவைப்பு
- 08:27 (IST) 06 Jan 20234 மீனவர்கள் மாயம்
மண்டபம் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் சென்றவர்களில் 4 மீனவர்கள் மாயம். சக மீனவர்கள் தேடிச்சென்றும் கண்டுபிடிக்க முடியாததால், மீனவ கிராம மக்கள் அச்சம்
- 08:24 (IST) 06 Jan 2023புத்தக கண்காட்சி
சென்னையில் இன்று புத்தக கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின், துவக்கி வைக்கிறார்
- 08:23 (IST) 06 Jan 20233 வது நாளாக நடைபெறும் விசாரணை
அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் 3வது நாளாக இன்றும் தொடரும் என அறிவிப்பு . நேற்று ஓ.பி.எஸ் தரப்பு வாதம் நடைபெற்ற நிலையில், இன்று ஈ.பி.எஸ் தரப்பு வாதம் துவங்கும் என தகவல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.