பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று முதல் ரம்ஜான் நோன்பு
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று சம்ஜான் நோன்பு தொடங்குகிறது. பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
நீர் நிலவரம்
புழல் ஏரிக்கு நீர்வரத்து 202 கனஅடியாக உயர்வு ; நீர்இருப்பு 2532 மில்லியன் கனஅடியாக உள்ளது. சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 10 கனஅடியாக உள்ளது; நீர்இருப்பு 829 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 500 மில்லியன் கனஅடியாக உள்ளது.
ராகுல் காந்தியின் பதவி பறிப்பு, தேர்தல் ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டுவதற்கான ஒத்திகை. எதிர்க்கட்சிகள் ஓரணியில் உறுதியோடு திரண்டு பாஜக அரசை எதிர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்
ஒரு சிலிண்டருக்கு ரூ200 மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உஜ்வாலா திட்டத்தில் ஆண்டிற்கு 12 சிலிண்டர் பெறுவோருக்கு மானியம் வழங்கப்படும்
ஜனவரி 1 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் உயர்மட்டத் தலைவர்கள் தங்களது எதிர்கால வியூகத்தை வகுப்பதற்காக மாலையில் குவிந்தனர். இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கார்கே, சோனியா காந்தி தவிர, காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் பிரியங்கா காந்தி வத்ரா, கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், ராஜீவ் சுக்லா, தாரிக் அன்வர், மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா, அம்பிகா சோனி, முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், பவன்குமார் பன்சால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்ட நிலையில், இதற்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் குரலுக்காக என்ன விலை கொடுத்தாலும் தொடர்ந்து போராடுவேன் என்று ராகுல் காந்தி கூறியதை அடுத்து இது நடந்துள்ளது.
ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்ட நிலையில், இதற்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் குரலுக்காக என்ன விலை கொடுத்தாலும் தொடர்ந்து போராடுவேன் என்று ராகுல் காந்தி கூறியதை அடுத்து இது நடந்துள்ளது.
சிவகங்கை, காரைக்குடி அருகே தனியார் அரிசி ஆலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். ஆலையின் மேலே இருந்த சேமிப்பு கிடங்கு பகுதி, கீழே இருந்த 2 பேர் மீது விழுந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது
மகளிர் ப்ரீமியர் லீக் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ்-க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ், பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சியிடம் பேசிய ஜி.கே. வாசன், “சட்டம் தன் கடமையை செய்துள்ளது என்று நான் கருதுகிறேன்” என்றார்.
தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) அதிகபட்சமாக ஈரோட்டில்101.84 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி உள்ளது.
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அன்று மக்களவையில் பேச விடாமல் தடுத்தார்கள், இன்று மக்களவை பதவியை பறித்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, நீங்கள் ஏன் நேரு பெயரை பயன்படுத்துவதில்லை என்பதன் மூலம் மோடி பண்டிட்களை அவமதித்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் ட்ரெய்லர் காட்சிகள் மார்ச் 29ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
“ராகுல் காந்தி மீதான நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல்; இந்த பாசிச நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடாளுமன்ற உறுப்பினருக்குக் கூட கருத்துச் சொல்லும் ஜனநாயக உரிமை இங்கு கிடையாது என்று மிரட்டும் தொனியில் இந்த நடவடிக்கை இருக்கிறது” – முதல்வர் மு.க.ஸ்டாலின்
“எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க பாஜக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
எத்தனையோ தலைவர்கள், விமர்சகர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். எல்லா விதத்திலும் அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அதில் புதிய யுக்தியாக, இன்று ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கை.
மேல்முறையீடு செய்வதற்கு கூட அவகாசம் அளிக்காமல் இருப்பதற்கான காரணம், மக்களின் ஆதரவை ராகுல் காந்தியின் மேல் பெறுக விடாமல் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கை ஆகும்” – கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு
“சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்களை கைது செய்ய தமிழக அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரதமரைக் குறித்து பேசியதற்காக நடவடிக்கை எடுக்கப்படவில்லை, ஒரு சமூகத்தை இழிவு செய்ததற்காக இந்த நடவடிக்கை அரசால் எடுக்கப்பட்டுள்ளது”, என்றார் பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்
“2 பேரை கைது செய்து விசாரித்த போது போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
மணிப்பூரில் இருந்து ரயில் மூலமாக போதைப்பொருள் கடத்தி கொண்டுவரப்பட்டுள்ளது”, என்று சென்னை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.
“தேர்தல் பேச்சு தொடர்பாக பாஜகவினர் தொடர்ந்த அவதூறு வழக்கில், காங்கிரஸின் ராகுல் காந்தி அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறையென தீர்ப்பு வந்ததும்,அவரை MP பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்துள்ள ஒன்றிய பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பாசிஸ்ட்டுகளை அச்சமூட்டியுள்ளது”, என்று தனது டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் மாலை 5 மணிக்கு, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை.
ராகுல் காந்தி விவகாரத்தில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைக்களைப் பற்றி ஆலோசனை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரது மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து அவரை தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வயநாடு தொகுதி எம்.பி. பதவி ராகுல்காந்தியிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித்தின் தந்தை மறைந்த நிலையில், அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் நடிகர் விஜய். அவர் விஜய் மக்கள் இயக்க மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காரில் அஜித் வீட்டிற்கு சென்றார்.
பிரபல பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜனின் நூற்றாண்டு விழாவை ஒட்டி மந்தைவெளி மேற்குவட்ட சாலைக்கு அவரது பெயரை சூட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின். மேலும் காணொலி மூலம் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதத்தை ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்தது.
ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் பேரணி நடந்து வருகிறது. இதில் திமுக எம்.பிக்கள் ஆ.ராசா, கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.
“தமிழகத்தின் மின்தேவையை பெருமளவு பூர்த்தி செய்வது என்.எல்.சி. அடுத்த 5 ஆண்டுக்கு தேவையான மின் உற்பத்திக்கு நில எடுப்பு அவசியம். அனைத்து கட்சிகளும் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும்.” என்று சட்ட பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
கோவை, திருப்பூர், தேனி திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அனைத்து மகளிருக்கும் மகளிர் உரிமைத்தொகை என அறிவித்து விட்டு தற்போது தகுதிவாய்ந்தவர்களுக்கு என சொல்கிறீர்கள். மக்கள் உங்களை நம்புவார்களா?- அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி கேள்வி
நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடந்த 11ம் தேதி கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை, கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை விடுவிப்பு- இலங்கை நீதிமன்றம் உத்தரவு
வேங்கைவயல் தொடர்பான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்; சென்னை உயர்நீதிமன்றத்தை நாட மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுரை
பெசன்ட்நகர் மின்மயானத்தில் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியன் உடல் தகனம் செய்யப்பட்டது.
தீர்மானம் கொண்டு வரும்போது ஒவ்வொருவருக்கும் பேச உரிமை உள்ளது; மக்கள் சார்ந்த பிரச்னை என்பதால் சட்டப்பேரவையில் ஓபிஎஸ் பேசியது எந்த தவறும் இல்லை. அதிமுகவின் இரண்டு அணிகளையும் ஒன்றிணைத்து தலைமை ஏற்பேன்- திருவெண்காடு சுவேதாரணேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த பின் சசிகலா பேட்டி
பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்கள் ஆப்சென்ட் குறித்து தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி காரணமாக மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை, பெசன்ட் நகர் மின்மயானத்தில், இன்னும் சற்று நேரத்தில் அஜித்குமாரின் தந்தை உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
அஜித்குமாரின் தந்தை உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் மிர்ச்சி சிவா, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
கிராமப்புறங்களில் இருந்து நகரப்பகுதிக்கு குடிநீர் வழங்கும் திட்டம் ரூ.500 கோடி செலவில் விரைவில் தொடங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
உலக வங்கி தலைவர் பதவிக்கு அமெரிக்கா பரிந்துரைத்துள்ள அஜய் பங்காவிற்கு கொரோனா உறுதி. டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஜய் பங்காவிற்கு கொரோனா உறுதி. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ஆகியோரை சந்திக்க இருந்த நிலையில் கொரோனா
நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைந்தார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு எதிர்க்கட்சி தலைவர் இ.பி. எஸ் இரங்கல்
நடிகர் அஜித்குமாரின் தந்தை உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் அஜித்குமார் மற்றும் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
நாங்குநேரி – மேபப்பாளையம் இடையேயான பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று நாகர்கோவில் – கோவை இடையேயான விரைவு ரயில் சேவையும்; நாளை கோவை- நாகர்கோவில் இடையேயான ரயில் சேவையும் ரத்து.
மக்களின் செல்வாக்கை பெற்று, ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு பாஜக வளர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். பாஜவுக்கும், எனக்கும் தனிப்பட்ட கட்சி தலைவர்கள் மீது மோதல் இல்லை. கட்சியை வலுப்படுத்த நினைக்கும் போது சில மனஸ்தாபங்கள் வருவது வழக்கம்தான். கட்சிக்குள் நிறைய கருத்துவேறுபாடுகள் உள்ளன. அண்ணாமலை பேட்டி.
எங்கள் தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்வு ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க விரும்புகிறோம் . எங்கள் இழப்பையும் புரிந்து கொண்டு இறுதிச்சடங்கை தனிப்பட்ட முறையில் செய்ய ஒத்துழைக்க வேண்டிக்கொள்கிறோம். தந்தையின் இறுதிச்சடங்கு குறித்து ரசிகர்களுக்கு நடிகர் அஜித்குமார் வேண்டுகோள்
நடிகர் அஜித்தின் தந்தை உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி
ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக அரக்கோணம் அதிமுக எம்.எல்.ஏ ரவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக திருவல்லிக்கேணி காவல்துறை விசாரணை
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இன்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சட்டத்துறை மூலம் இன்று ஆளூநர் ஒப்புதலுக்கு அனுப்பபடுகிறது.
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் காலமானார். பெசன்ட் நகர் மின்மயானத்தில் இன்று காலை 10 மணிக்கு உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்குகள். சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று உத்தரவுக்காக பட்டியலிடப்படவில்லை . இன்று தீர்ப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் பட்டியலில் இடம்பெறவில்லை. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்த பிறகு தீர்ப்பளிக்க வாய்ப்பு
பிரதமர் மோடி இன்று, தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு செல்கிறார் . ஆயிரத்து 780 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
பிரபல பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான Accenture 19,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க முடிவு.