கனமழை காரணமாக புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Petrol Diesel Price:
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63, டீசலின் விலை ரூ.94.24 ஆகவும் விற்கப்படுகிறது.
நீர் நிலவரம்
3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 3184 மில்லியன் கனஅடியாக உள்ளது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 831 மில்லியன் கனஅடியாக உள்ளது . 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை ஏரியில் நீர்இருப்பு 462 மில்லியன் கனஅடியாக உள்ளது.
‘தளபதி 67’ டைட்டில்
இன்று வெளியாகிறது ‘தளபதி 67’ டைட்டில். இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது ‘தளபதி 67’ டைட்டில். புரோமோவுடன் வெளியாகும் தலைப்புக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் தொடர்பான ஒப்புதலுக்கான சுற்றறிக்கையின் படிவம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை காலை 9 மணிக்கு வழங்கப்படுகிறது சென்னையில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் நாளை நேரில் பெற்றுக்கொள்ள ஈபிஎஸ் தரப்பு அறிவுறுத்தல். மற்ற மாவட்டங்களின் செயலாளர்கள் நாளை பெருந்துறையில் படிவங்களை பெற்றுக்கொள்கின்றனர்
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஈரோட்டில் நிர்வாகிகளுடன் இ.பி.எஸ் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்பு இ.பி.எஸ் தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தென்னரசு, தளவாய் சுந்தரம் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்பு
அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு நீதிமன்ற தீர்ப்பு குறித்து “எல்லாம் நன்மைக்கே” என ஓபிஎஸ் பதில் அளித்துள்ளார்.
தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளளனர். ராணிப்பேட்டை எஸ்.பி.யாக கிரண் ஷ்ருதி ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தீபா சத்யன் ஐபிஎஸ் மாற்றப்பட்டுள்ளார். கடலூர் எஸ்பியாக ராஜாராம் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பிரிவு எஸ்பியாக சக்தி கணேசன் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய எஸ்பியாக ரவளி பிரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துசாமி உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
தி.மு.க. வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து வேட்பாளரை நிறுத்தினால் அது நல்ல முடிவுதான்.
அதனை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஏற்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
எழும்பூர், கன்னியாகுமரி ரயில் நிலையங்கள் 3 ஆண்டுகளில் புதுப்பிக்கப்படும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “மத்திய பட்ஜெட்டில் ரூ.11313 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
அடுத்த 36 மாதங்களுக்குள் கன்னியாகுமரி, புதுச்சேரி, எழும்பூர் உள்ளிட்ட 9 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படும்” என்றார்.
பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்.6 தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்.1ஆம் தேதி நாட்டின் வரவு செலவு திட்ட நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று முதல் பிப்.6ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித் குமார் போர்ச்சுக்கலில் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தை ரிசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் அருண் விஜய்க்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரக அரசு கௌரவித்துள்ளது.
நடிகர் விஜய்யின் புதிய படமான லியோ அக்டோபர் 19ஆம் தேதி ரிலிஸாகிறது.
இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
லியோ படத் தலைப்பு, ரிலீஸ் தேதி வெளியானது விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான நிலையில் அதானி பங்குகள் ஆட்டம் கண்டுவருகின்றன.
இந்த நிலையில், அதானியின் உறவினர் சிரில் ஷ்ராஃப் செபி பெருநிறுவன குழுவில் உறுப்பினராக இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய் படத்துக்கு லியோ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து கமல்ஹாசனின் விக்ரம் பட ஸ்டைலில் படத்துக்கு டைட்டில் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
ஓபிஎஸ்-ன் பக்கம் தர்மம் உள்ளது என்ற வகையில் தீர்ப்பு அமைந்துள்ளது என்று ஓ.பி.எஸ் தரப்பு ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை ஆட்சியராக வளர்மதி, திருப்பத்தூர் ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் சி.வி.சண்முகம் பேட்டி: “நல்ல நோக்கத்திற்காக உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது. விரைவில் பொதுக்குழுவை கூட்டுவதற்கான அறிவிப்பை அவைத்தலைவர் தமிழ்மகன் உசைன் வெளியிடுவார்.” என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக கட்சியின் சின்னம் இதுவரை முடக்கப் படவில்லை. அதுகுறித்து எந்த பிரச்சனைகளும் எழுப்பப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியது.
பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என ஓ.பி.எஸ். தரப்பு வாதிட்டது.
தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க மறுக்கிறது. ஆனால், கடந்த முறை இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த போது, மாறுபட்ட நிலைப்பாட்டை தேர்தல் ஆணையம் எடுத்திருந்தது என்று இ.பி.எஸ். தரப்பு வாதிட்டது.
இரட்டை இலை சின்னத்துக்காக எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட முன்வந்தால், எங்கள் தரப்பு வேட்பாளரை திரும்பப் பெற தயார் என்று ஓ.பி.எஸ் தரப்பு தெரிவித்தது.
ஈரோடு இடைத்தேர்தலில் இருவருக்கும் உகந்த பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க அ.தி.மு.க பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
ஜூலை 11-ஆம் தேதி பொதுக்குழுவில்
நீக்கப்பட்டவர்களை, சேர்த்து பொதுக்குழு கூட்ட வேண்டும். அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கி காரசார வாதம் நடந்து வருகிறது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று நடப்போம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட அரசியல் கட்சியை போட்டியிட அனுமதிப்பதா? இல்லையா? என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமா? அ.தி.மு.க விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, தேர்தல் ஆணையம் தரப்பில், விரிவான ஆலோசனை நடத்தி 6-ம் தேதி பதில் அளிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சிவானந்தபுரம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் 12 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சத்துணவு முட்டை சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் என தகவல் வெளியாகி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா தொகுதி காங்கிரஸ் எம்.பி. பிரெனீத் கவுர், காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் என்று அக்கட்சியின் தேசியத் தலைமை அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். இ.பி.எஸ் அணி வேட்பு மனு தாக்கலை ஒத்திவைத்த நிலையில், ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் ஜோகிந்தர் சர்மா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பிபிசி ஆவணப்பட தடையை நீக்க கோரிய மனு மீது பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. படத்துக்கு விதிக்கப்பட்ட தடைக்கான அசல் உத்தரவை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'தமிழ்நாடு தன்னுரிமை கழகம்' என்ற புதிய கட்சியை தொடங்கினார் மூத்த அரசியல் தலைவரான பழ.கருப்பையா. சென்னை, ஒய்எம்சிஏ திடலில் வரும் ஞாயிறு அன்று தொண்டர்கள் மாநாடு கூட்டப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
” 2021ல் திமுக-வை தோற்கடிக்க கூட்டணிக்கு தயாராக இருந்தேன். திமுக-வை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்”. என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க முடிவு; எடப்பாடி பழனிசாமி தரப்பில் எம்.பி சி.வி.சண்முகம் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல் – ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில்முருகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் தரப்புக்கு தான் கிடைக்கும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தனித்தனியாக இல்லாமல் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்; பாஜகவின் நிலைப்பாடு வரும் 7ம் தேதி அறிவிக்கப்படும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்
அதிமுக-வில் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் திமுக-வை வீழ்த்த முடியும்.. அதிமுக-வில் அனைவரும் இணைவதற்கான நேரம் நெருங்கிவிட்டது – சசிகலா
அறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கையில் அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து கூட்டு நாடாளுமன்றக் குழு அல்லது தலைமை நீதிபதியால் நியமிக்கப்பட்ட குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை எழுப்பியதால், அவை நடவடிக்கைகள் தொடங்கிய சில நிமிடங்களில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
எதிர்கட்சிகளின் அமளி காரணமாக, நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை பிற்பகல் 2:30 மணி வரைக்கும், மக்களவை 2 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
அறிஞர் அண்ணாவின் 54வது நினைவுநாளை முன்னிட்டு, டெல்லியில் அண்ணா – கலைஞர் அறிவாலயத்திலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக எம்.பி., கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை, தலைமை செயலகத்தில் மருத்துவத்துறை சார்பில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தர பணி ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
தாம்பரம் மாநகராட்சியின் முதல் ஆணையராக அழகுமீனா ஐ.ஏ.ஏஸ் அதிகாரி நியமிக்கப்பட்டார், கோப்பில் கையெழுத்திட்டு பணியை தொடங்கினார்.
தமிழ்நாட்டில் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.43,520 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ.5,440-க்கு விற்பனையாகிறது.
எடப்பாடி பழனிசாமியை முதலில் சந்தித்த நிலையில், அடுத்ததாக ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை
இபிஎஸ் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசு வேட்புமனு தாக்கல் ஒத்திவைப்பு. இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த நிலையில், வரும் 7ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு அதிமுகவில் எந்த அணிக்கு ஆதரவு என பாஜக இதுவரை அறிவிக்காத நிலையில், சந்திப்பு நடந்துள்ளது
பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினத்தை முன்னிட்டு, நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி உள்ளிட்டோர் அஞ்சலி.
கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிப்பு
மழையின் காரணமாக நாகை மாவட்டத்தில் 1 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை- நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் அறிமுகமான தெருக்கூத்துக்கலைஞர் நெல்லை தங்கராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்