பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
விளையாட்டு இன்று
இந்தியா, நியூசிலாந்து மோதும் 3வது ஒருநாள் போட்டி. இந்தூரில் இன்று மதியம் 1.30க்கு தொடங்குகிறது.
ஏரிகளின் நீர் நிலவரம்
புழல் ஏரிக்கு நீர்வரத்து 245 கனஅடியில் இருந்து 305 கனஅடியாக அதிகரிப்பு; ஏரியில் இருந்து159 கனஅடி நீர் வெளியேற்றம் . சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 15 கனஅடியாக உள்ளது; ஏரியில் நீர்இருப்பு 831 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை ஏரியில் நீர்இருப்பு 469 மில்லியன் கனஅடியாக உள்ளது.
வி.சி.க தலைவர் திருமாவளவன்: “குடியரசு தினத்தில் ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் பங்கேற்கப்போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் போக்கை கண்டித்து அவரது அழைப்பை புறக்கணிப்பதாக வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “சேது சமுத்திர திட்டத்தை, தி.மு.க கிடப்பில் போடப்பட்டுள்ளது. தீர்மானம் மட்டும் கொண்டு வந்தது. அதுவும் காணாமல் போய்விட்டது. பெயருக்காக தி.மு.க எதையாவது அறிவித்துவிட்டு அதை கிடப்பில் போட்டு விடும். தமிழ்நாடு சர்ச்சை ஏற்படுத்தி இப்பொழுது அதற்கு அமைதியாக இருக்கிறார்கள்.
நெல்லையில் வேலைவாய்ப்பு பெரிய பிரச்சனையாக உள்ளது. மத்திய அரசு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்கும் என தெரிவித்திருந்தது. பிரதமர் அந்தமானைச் சுற்றி இருக்கும் தீவுகளுக்கு, பரம்வீர் சக்ரா வீரர்களின் பெயரை சூட்டியுள்ளார். இதை தமிழக முதல்வர் பாராட்ட வேண்டும்.
ஆட்சிக்கு வந்து 20 மாதம் கூட ஆகவில்லை. தி.மு.க-வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. இந்த தேர்தல் விசித்திரமான தேர்தலாக மாறி வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலை தி.மு.க பயத்தோடு அணுகுகிறது. அங்குள்ள தி.மு.க மாவட்ட செயலாளரே அதிருப்தியில் தான் உள்ளார்.
ஈரோடு தேர்தல் களத்தில், முதலில் இருப்பவர்கள் தான் ஜெயிப்பார்கள் என்பதில்லை. மக்கள் மன்றத்தில், தி.மு.க மீது கோபம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க நடவடிக்கைகள் அவர்களது பயத்தை தான் காட்டுகிறது. இடைத்தேர்தலில் 80% ஆளும் கட்சி தான் ஜெயிப்பார்கள். இடைதேர்தலை பொறுத்தவரை பணத்தை கொட்டி ஆளும் கட்சியினர் வெல்வார்கள்.
ஈரோடு தேர்தல் போட்டியிட்டு பா.ஜ.க தங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. பாஜக கூட்டணியில் ஸ்ட்ராங்கான கட்சி அ.தி.மு.க. தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு இருக்கக் கூடாது. தி.மு.க-வின் வேட்பாளர் தோற்கடிக்கப்பட வேண்டும். 2024 தேர்தல் தான் பா.ஜ.க பலப்பரீட்சைக்கான தேர்தல்.
தி.மு.க தேர்தல் அறிக்கைபடி, 5 ஆண்டுகளில் 3 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று கூறியது. ஆனால், குருப் 4 தேர்வு முடிவுகளைக்கூட தி.மு.க-வால் இன்னும் வெளியிட முடியவில்லை. திருநெல்வேலியில் பா.ஜ.க பலமாக உள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026ல் இயங்கத் தொடங்கும்.
என்னதான் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தாலும் தமிழக அமைச்சர்கள் 20 மாதங்களாக சம்பாதித்த பணமெல்லாம் இடைத்தேர்தலில் வெளிவரத்தான் போகிறது. மருத்துவத் துறையில் முதல் மாநிலமாக செயல்படுவதாக தமிழக முதல்வர் தெரிவித்து வரும் நிலையில், எய்ம்ஸ் வந்தால் தான் மருத்துவம் சிறப்பாக இருக்கும் என தெரிவிப்பதெல்லாம் வேடிக்கையாக உள்ளது” என்று அண்ணாமலை கூறினார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி ஜனவரி 27ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அ.தி.மு.க இணையவே மோடி விரும்புகிறார் – ஓ.பி.எஸ் என்றே பிரதமர் மோடி விரும்புகிறார். எங்களை சந்திக்கும்போது பிரதமர் இதையே கூறுகிறார். அ.தி.மு.க இணையவே பிரதமர் மோடி விரும்புகிறார்.” என்று தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு தலைவராக மோகன் குமாரமங்கலம் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இதனை ட்விட்டரில் பகிர்ந்துள்ள மோகன் குமாரமங்கலம், “என்னை நியமித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஈ.வி.கே.ஸ் இளங்கோவன் மற்றும் பொதுச்செயலாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு நீதித்துறையைக் கைப்பற்ற விரும்புவதாக குற்றஞ்சாட்டிய டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மக்கள் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்று கூறினார்.
நீதிபதிகள் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்ற கொலிஜியம், மத்திய அரசு இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் இவ்வாறு கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள திமுக தலைமையகத்தில் வரும் 29ஆம் தேதி திமுக எம்.பி.-க்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது.
ஆஸ்கார் விருதின் சிறந்த பாடல் பிரிவில் இறுதி பட்டியலில் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் தேர்வாகி உள்ளது.
பெங்களூரில் நடைபெறவிருக்கும் ஏரோ இந்தியா கண்காட்சி, விண்வெளித் துறையில் நாட்டின் வளர்ந்து வரும் திறமையைக் காட்டுவது மட்டுமல்லாமல், வலுவான மற்றும் தன்னம்பிக்கையான “புதிய இந்தியாவின்” எழுச்சியையும் நிரூபிக்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
ராம்சரித்மனாஸ் குறித்த கருத்துகள் தொடர்பாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் ராம்சரித்மனாஸ் விவகாரம் சர்ச்சையாக வெடித்து வருகிறது. இது தலித்துகளை இழிவுப்படுத்துவதாக பாஜக கூறியுள்ளது.
ஒடிசாவில் நடைபெறும் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் – காலிறுதியில் ஸ்பெயின் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா முன்னேறியது.
மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், பறிமுதல் செய்யப்பட்டு, கர்நாடக அரசு கருவூலத்தில் உள்ள சேலைகள், செருப்புகள், பிற பொருட்களை ஏலம் விடக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞரை நியமித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க தலைமை செயலர் தலைமையிலான உயர் மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மேம்பாலத்தில் இருந்து 10 ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்ட அருண் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் எதற்காக அந்தப் பணத்தை வீசி சென்றார் என்பது குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அருண் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அருண் நிகழ்ச்சி மேலாண்மை நடத்திவருகிறார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வருகிற 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை மாவட்டம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் கல்வி நிறுவனங்கள் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றிற்கும் பொருந்தும்.
கடலூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் கீழே கிடந்த ஸ்ப்ரே-வை அடித்ததில் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமத்கிக்கப்பட்டுள்ள மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்தூரில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் எடுத்துள்ளது.
386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அடுத்து பேட்டிங் செய்ய உள்ளது.
ஆஸ்கார் விருதுகளுக்கான இறுதி நாமினேஷன் பட்டியல் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 7 மணிக்கு வெளியாகிறது.
இந்தப் பட்டியலில் ஆர்.ஆர்.ஆர். படமும் இடம் பெற்றுள்ளது. ஆர்ஆர்ஆர் படம் சிறந்த சண்டை காட்சி, சிறந்த படம் உள்ளிட்ட பிரிவுகளில் தேர்வாகலாம் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் மே மாதம் வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் ஓட்டுக்கு ₹6000 கொடுக்கவில்லை என்றால் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும், பெரும்பான்மை இல்லாவிட்டாலும், சிலரை வாங்கி ஆட்சி அமைத்துவிடலாம் எனவும் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீடிக்க தலைமைச்செயலாளர் தலைமையிலான உயர்மட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. 158 கி.மீ நிளம் மற்றும் 12 உயர்மட்ட ரயில் நிலையங்களுடன் பாதை அமைக்கப்பட உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வரும் 27ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்
குடியரசு தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், கோயில் மற்றும் கடற்கரை பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவிகளை கொண்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
டெல்லியில் பல பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நேபாளத்தை மையமாக கொண்டு ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகியுள்ளது
கிருஷ்ணகிரியில் காரில் மர்மமான முறையில் வழக்கறிஞர் சிவக்குமார் இறந்து கிடந்தார். பிரேத பரிசோதனை முடிந்த வழக்கறிஞர் சிவகுமார் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியல் செய்து வருகின்றனர்
சென்னை சவுக்கார்பேட்டையில் போலீசார் இருசக்கர வாகன தணிக்கையின் போது கணக்கில் காட்டாத ரூ.7.38 கோடி மதிப்பிலான 14 கிலோ தங்க நகைகளை கண்டுபிடித்துள்ளனர். நகைகள் எடுத்து வந்த இருவரும் மகாராஷ்டிராவில் நகைக்கடையில் பணிபுரிந்து வருவது தெரியவந்துள்ளது
சென்னையில் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளை தொடங்கிவைத்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரசு ஊழியருடன் செஸ் விளையாடினார்.
தெலங்கானாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநில தலைமை செயலகத்தின் திறப்பு விழாவில் கலந்துக் கொள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார்
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குள் அ.தி.மு.க ஒன்றிணையும். அ.தி.மு.க.,வை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது என சசிகலா தெரிவித்துள்ளார்
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றுக்கு இந்தியாவின் சானியா மிர்ஸா, ரோஹன் போபண்ணா ஜோடி முன்னேறியுள்ளது. காலிறுதி போட்டியில் டேவிட் – ஜெலீனா ஜோடி ஆடாததால் வாக் ஓவர் அடிப்படையில் தகுதி பெற்றுள்ளது
சர்ச்சை மருத்துவ கருத்துகள் குறித்து சித்த மருத்துவ ஷர்மிகாவிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. பிப்ரவரி 10-க்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க ஷர்மிகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பில் இருந்து வந்த புகார்கள் குறித்த விவரங்கள் ஷர்மிகாவிடம் வழங்கப்பட்டுள்ளது என சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை நடத்திய பின் சித்த மருத்துவ இயக்குனர் தெரிவித்துள்ளார்
நெட்ஃபிளிக்ஸ் சந்தாதாரர்கள் இனி நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பாஸ்வேர்டை பகிர முடியாது. பாஸ்வேர்டை பகிர்ந்தால் ஏப்ரல் மாதம் முதல் ரூ. 250 கட்டணம் செலுத்தும் நடைமுறையை நெட்ஃபிளிக்ஸ் அமல்படுத்த உள்ளதாக தகவல்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இளையராஜா வருகைப் பதிவு பூஜ்ஜியம்
13 நாட்கள் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நியமன எம்.பி இசையமைப்பாளர் இளையராஜாவின் வருகைப் பதிவு பூஜ்ஜியம் . பி.டி. உஷா 13 நாட்களும், வீரேந்திர ஹெக்டே 5 நாட்களும், விஜயேந்திர பிரசாத் 2 நாட்களும் கூட்டத் தொடரில் பங்கேற்றதாக தகவல்
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்ரவரி 3-ம் தேதி கூடுகிறது
மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது – சபாநாயகர் செல்வம்
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் : அரையிறுதிக்கு கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபாகினா முன்னேற்றம்
காலிறுதியில் லாத்வியா நாட்டு வீராங்கனை ஜெலீனாவை 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி
2022-23 ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி
போட்டிகளை தொடங்கி வைத்து, மாணவர்களுடன் இறகுப்பந்து விளையாடிய அமைச்சர் உதயநிதி
பழனி தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி இரண்டாம் கால யாக பூஜை
83 வேள்வி குண்டங்களில் 150 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜை
108 மூலிகைகள், நவதானியங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களை பயன்படுத்தி வேள்வி
வரும் 27ஆம் தேதி பழனி தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம் 27ஆம் தேதி வரை எட்டு கால யாக பூஜைகள் நடைபெறும் – இன்று மாலை 3ம் கால யாக பூஜை
சென்னை, அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரி அலுவலகத்தில் சித்த மருத்துவர் ஷர்மிகா விசாரணைக்காக ஆஜர் தவறான மருத்துவ ஆலோசனைகளை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஆஜர்
அரக்கோணம் ரயில் நிலையத்தில் கைக்குழந்தையுடன் லிஃப்டில் சிக்கிய சிறுவன்
தாய் டிக்கெட் எடுக்க சென்ற நிலையில், லிஃப்டில் சிக்கிக் கொண்ட 12 வயது சிறுவன்
சுமார் 10 நிமிடம் லிஃப்டில் சிக்கிதவித்த நிலையில், ரயில் நிலைய ஊழியர்கள் சிறுவனை மீட்டனர்
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தாமதமாவதை கண்டித்து போராட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் இணைந்து போராட்டம்
பழங்காநத்தம் பகுதியில் தொடர்முழக்க போராட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பங்கேற்பு
திண்டுக்கல், தாடிக்கொம்பு சாலையில் உள்ள வங்கியில் பட்டப் பகலில் ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சி
வங்கி ஊழியர்களில் ஒருவர் தப்பி வெளியே வந்து சத்தம் போட்டதால் உள்ளே நுழைந்து கொள்ளையனை பிடித்த பொதுமக்கள்
கொள்ளையனை சரமாரியாக தாக்கி போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்
விசாரணையில் திண்டுக்கல் பூச்சி நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த அணில் ரகுமான் என்பது தெரியவந்துள்ளது
வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியால், “துணிவு” திரைப்படம் பார்த்து கொள்ளையடிக்க முயற்சி என தகவல்
சுருக்கு மடி வலைகளை பயன்படுத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால அனுமதி
12 கடல் மைலுக்கு அப்பால் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கலாம்
திங்கள், வியாழன் என வாரத்தில் 2 நாட்கள் மட்டும் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி
மீன்வளத்துறையில் பதிவு செய்யப்பட்ட படகுகள் மட்டுமே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த வேண்டும்
சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்ற தமிழ்நாடு அரசின் ஆணைக்கு இடைக்கால தடை கோரிய வழக்கில் உத்தரவு
குடியரசு தினவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது; வரும் 25, 26-ம் தேதிகளில் சென்னையில் டிரோன், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிப்பு.
கைத்தறித்துறை அமைச்சர் காந்தியை செல்போனில் தொடர்பு கொண்டு ஒருமையில் பேசியதாக 2 பேர் கைது. சென்னையை சேர்ந்த 2 இளைஞர்களை கைது செய்த போலீசார், வேலூர் மத்திய சிறையில் அடைப்பு.
சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை முப்படை, தேசிய மாணவர் படை, காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை 2 ஆண்டுகளுக்கு பிறகு குடியரசு தின விழாவில் மீண்டும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி
ராணிப்பேட்டை, அரக்கோணம் அருகே ஏற்பட்ட கிரேன் விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம். பணப்பாக்கத்தை சேர்ந்த கிரேன் ஓட்டுநர் முருகன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
தென்காசி: கனமழை காரணமாக மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் குற்றாலத்தில் குளிக்க தடை விதிப்பு.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் ஜனவரி மாதத்தில், ரூ. 1.47 கோடி ரொக்கம், 465 கிராம் தங்கம், 890 கிராம் வெள்ளி காணிக்கையாக பெறப்பட்டுள்ளது – கோயில் நிர்வாகம்