பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 163-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை- தாம்பரம் சிறப்பு ரயில்
மதுரை- தாம்பரம் இடையே இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கம். விடுமுறை காலை கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் மதுரை- தாம்பரம் இடையே இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Aug 27, 2024 21:20 ISTதமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள் அரசு பயணமாக அமெரிக்கா புறப்பட்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், “மாற்றம் ஒன்றுதான் மாறாதது... பொறுத்திருந்து பாருங்கள்” என்று கூறினார்.
-
Aug 27, 2024 21:11 ISTஅரசு பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் மு.க. ஸ்டாலின்
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள் அரசு பயணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா புறப்பட்டார்.
-
Aug 27, 2024 20:59 ISTசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய்ஷா தேர்வு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தலைவராக ஜெய்ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். “சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவேன்; கிரிக்கெட்டை உலகமயமாக்கல் உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற உறுதி பூண்டுள்ளேன்” என்று ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
-
Aug 27, 2024 20:52 ISTஅமெரிக்கா செல்லும் ஸ்டாலினை வழியனுப்பி வைத்த தொண்டர்கள்
அமெரிக்கா செல்லும் முதலைச்சர் மு.க.ஸ்டாலினின் பயணம் சிறக்க, அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.
-
Aug 27, 2024 20:13 ISTதமிழ்நாட்டிற்கு சம்ரா சிக்ஷா திட்டத்தில் விரைந்து நிதி வழங்க வேண்டும்; மோடிக்கு ஸ்டாலின் கடிதம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டிற்கு சம்ரா சிக்ஷா திட்டத்தில் நிதியை விரைந்து வழங்க வேண்டும்; முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டத்தின் கீழ் உரிய நேரத்தில் நிதியை விடுவிப்பது மிகவும் அவசியம்; நிதியை நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் நடவடிக்கை லட்சக் கணக்கான குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
-
Aug 27, 2024 20:00 ISTதமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் நாமக்கல், சேலம், தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, கோவை, நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Aug 27, 2024 19:24 ISTஐ.பி.எஸ் அதிகாரி குடும்பத்தினர் மீது இணைய ஆபாச தாக்குதல்; நடவடிக்கை எடுக்க கனிமொழி வலியுறுத்தல்
தி.மு.க எம்.பி கனிமொழி: “பெண்கள் எந்த துறையில் இருந்தாலும், எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அவர்கள் சார்ந்த ஆணைய இழிவு செய்யும் வண்ணம், அந்த பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்துவதும் அறுவெறுக்கத்தக்க முறையில் பிரசாரம் செய்வதும் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாத இழிசெயல். புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஐ.பி.எஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இணைய ஆபாசத் தாக்குதல் நடத்தி வரும் அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சக பெண்ணாகவும், சமூக அக்கறை உள்ள நபராகவும் வந்திதா பாண்டேவின் கரம்பற்றி எனது ஆதரவையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
-
Aug 27, 2024 18:42 ISTஒசூர் முதல் பெங்களூரு வரை மெட்ரோ ரயில் சேவை – அதிகாரிகள் ஆய்வு
ஒசூர் முதல் பெங்களூரு வரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் குழுவினர் மற்றும் ஆலோசகர்கள் நேரடியாக ஆய்வு செய்தனர். அத்திப்பள்ளி வழியாக ஒசூர் முதல் பொம்மசந்திரா வரை 23 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
Aug 27, 2024 18:23 ISTதொழில்நுட்ப பராமரிப்பு பணிகள்; பாஸ்போர்ட் இணையதளம் 3 நாட்களுக்கு இயங்காது - மத்திய அரசு
தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் 3 நாட்களுக்கு இயங்காது என மத்திய அரசு அறிவித்துள்ளது
-
Aug 27, 2024 18:04 ISTஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அமுதா, மணிவாசகனுக்கு கூடுதல் பொறுப்பு
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் அமுதாவுக்கு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நீர்வளத்துறை செயலாளர் மணிவாசகனுக்கு ஊழல் தடுப்பு ஆணையராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது
-
Aug 27, 2024 17:41 ISTசென்னையில் தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தீடீர் தீவிபத்து
சென்னை அடுத்த கேளம்பாக்கம் அருகே உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தீடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. உள்ளே சிக்கிக்கொண்ட 700 பணியாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
-
Aug 27, 2024 17:26 ISTமணல் கடத்தல் வழக்கு; இதுவரை எத்தனை பேருக்கு குண்டர் சட்டத்தின் கீழ் சிறை? ஐகோர்ட் கேள்வி
மணல் கடத்தல் வழக்குகளில் இதுவரை எத்தனை பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்? தமிழக அரசு அறிக்கை அளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
Aug 27, 2024 16:11 IST15 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து சேவை: கிராம மக்கள் கொண்டாட்டம்
தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே 15 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி மாணவர்கள் வசதிக்காக மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டதால் பொதுமக்கள் பட்டாசு வெடித்து வரவேற்பு! பேருந்தில் பயணித்த மாணவர்கள், பயணிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
-
Aug 27, 2024 15:43 ISTதேவநாதனை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனுக்கு 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 3ம் தேதி மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜர்படுத்த சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
-
Aug 27, 2024 15:40 ISTஇந்திய வங்களில் அதிக கடன் பெறும் நிறுவனம்: அதானி குழுமத்திற்கு முதலிடம்
இந்திய வங்கிகளிடம் இருந்து அதிக கடன் பெறும் நிறுவனங்களில் அதானி குழுமம் முதலிடத்தில் உள்ளது. அதிக வட்டி கொண்ட வெளிநாட்டு கடனை குறைக்கும் விதமாக அதானி குழுமம் இதனை மேற்கொண்டுள்ளதாக பொருளாதார நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். அதானி குழுமத்தின் ஒட்டுமொத்த கடன் மதிப்பு ரூ2.72 லட்சம் கோடி. இதில் 75,877 லட்சம் கோடியை நீண்ட கால கடன் அடிப்படையில் உள்நாட்டில் பெற்றுள்ள அந்நிறுவனம், 2022-23-ம் நிதியாண்டில் உள்நாட்டில், பெற்ற கடன் தொகை 59,250 கோடி என்று கூறப்படுகிறது.
-
Aug 27, 2024 15:36 ISTநமீதா விவகாரம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை
"மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த நடிகை நமிதா மற்றும் அவரது கணவர் ஆகியோரிடம் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. இஸ்கான் நபரிடம் இந்த கோயிலுக்கென்று சில பாரம்பரிய பழக்க வழக்கங்கள் இருக்கின்றன என்ற விபரம் மட்டுமே தெரிவிக்கப்பட்டது" என நமிதா விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
-
Aug 27, 2024 15:32 ISTமலையாள திரையுல நடிகர்கள் சங்க தலைவர் உட்பட அனைவரும் ராஜினாமா
மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், மலையாள திரைப்பட நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உட்பட நிர்வாகிகள் அணைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், தற்போது மலையாள சினிமா நடிகர்கள் சங்கம் கலைக்கப்பட்டுள்ளது.
-
Aug 27, 2024 14:54 ISTமத்திய வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 8 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது 116 இந்திய மீனவர்கள், 184 படகுகள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. "இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர்கள், படகுகளை விரைவாக விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Aug 27, 2024 14:28 IST'அது 100% சரியானது' - இ.பி.எஸ் குறித்த கருத்துக்கு அண்ணாமலை பேட்டி
“எடப்பாடி பழனிசாமி மீதான எனது கருத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன். அது 100% சரியானது” என்று சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
-
Aug 27, 2024 14:20 IST"வெள்ளை அறிக்கை தேவை" - அண்ணாமலை பேச்சு
"முதல்வர் ஸ்டாலின் துபாய், ஸ்பெயினுக்கு சென்றபோது ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை. ஆளுங்கட்சி செய்யும் தவறுகளை தொடர்ந்து கேள்வி கேட்பேன். எங்களது கருத்துக்கள் தொடர்ந்து அறிக்கை வாயிலாக வந்து கொண்டே இருக்கும்.
3 மாத உயர் படிப்புக்காக இன்றிரவு இங்கிலாந்து புறப்படுகிறேன். வெளிநாடு சென்றாலும், எனது இதயம் தமிழகத்தில் தான் இருக்கும்" என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
-
Aug 27, 2024 13:30 ISTமதுபானக் கொள்கை முறைகேடு - கவிதாவுக்கு ஜாமீன்
மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ) தொடர்ந்த வழக்குகளில் இருந்து பாரத ராஷ்டிர சமிதி எம்.எல்.சியும் தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சி.ஆர் மகளுமான கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியது.
-
Aug 27, 2024 12:52 ISTமுதல்வரை நியமிக்காமல் கல்லூரிகளை திறப்பது ஏன்?
முதல்வரை நியமனம் செய்ய இயலவில்லையெனில் மருத்துவக் கல்லூரிகளை திறப்பது ஏன்?
தென்மாவட்ட மருத்துவ கல்லூரிகளில் முதல்வரை நியமனம் செய்ய உத்தரவிட கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி கேள்வி
தமிழக சுகாதாரத்துறை செயலர் விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை செப்.3க்கு ஒத்திவைப்பு
-
Aug 27, 2024 12:49 ISTபூந்தமல்லியில் 10 டன் குட்கா பறிமுதல்
சென்னை, பூந்தமல்லி அருகே வாகன சோதனை போது கண்டெய்னரில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 10 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
கர்நாடகவில் இருந்து கடந்தி வந்த கண்டெய்னர் ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை
-
Aug 27, 2024 12:09 ISTநேரில் ஆஜராக விலக்கு கோரி இபிஎஸ் மனு
70 வயதான மூத்த குடிமகன் என்பதால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு
-
Aug 27, 2024 11:56 ISTஅண்ணாமலை மீது புகார்
எடப்பாடி பழனிசாமியை அவமதிக்கும் வகையில் பேசியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது, அதிமுக மருத்துவ அணி மாநில செயலாளர் டாக்டர் சரவணன் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு
-
Aug 27, 2024 11:23 ISTஃபார்முலா 4 வழக்கு: நாளை விசாரணை
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாத் தாக்கல் செய்த மனுவை நாளை விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்
-
Aug 27, 2024 11:23 ISTஇபிஎஸ் வழக்கு: செப்.19க்கு தள்ளிவைப்பு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்து, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
-
Aug 27, 2024 10:50 ISTஅவதூறு வழக்கு - ஈபிஎஸ் நேரில் ஆஜர்
திமுக எம்பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
-
Aug 27, 2024 10:30 ISTமுருகன் மாநாட்டில் எவ்விதமான அரசியலும் இல்லை: சேகர்பாபு
முருகன் மாநாட்டில் எவ்விதமான அரசியலும் இல்லை. இது வரலாற்றில் ஒரு மைல்கல். முருகன் மாநாட்டை புதிதாக கையில் எடுத்தது போல் சிலர் கூறுகின்றனர்.
சமய சார்பற்றதாக முருகன் மாநாடு விளங்கியது ஒரு சிலருக்கு வயிற்று எரிச்சலை உருவாக்கலாம்- அமைச்சர் சேகர்பாபு
-
Aug 27, 2024 10:26 ISTகிருஷ்ணகிரி - தனியார் பள்ளி இன்று திறப்பு
கிருஷ்ணகிரியில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சிக்கிய தனியார் பள்ளி 10 நாட்களுக்கு பிறகு இன்று திறப்பு
டிஎஸ்பி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
-
Aug 27, 2024 10:00 ISTஇந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, 3 படகுகளில் ஆயுதங்களுடன் வந்த இலங்கை கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி, படகின் எஞ்சின், ஜி.பி.எஸ்., வலை, பிடித்த மீன்களை ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனர்.
காயங்களுடன் மீனவர்கள் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
Aug 27, 2024 09:58 ISTஎடப்பாடி பழனிசாமி இன்று ஆஜர்
திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில், எடப்பாடி பழனிசாமி இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார்
சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜராக உள்ளதால் அதிமுக நிர்வாகிகள் வருகை. போலீசாரும் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
-
Aug 27, 2024 09:21 ISTபாலியல் வன்கொடுமை- மரண தண்டனைதான் ஒரே தீர்வு
பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனைதான் ஒரே தீர்வு. அரபு நாடுகளைப் போல சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்றும் இயக்குநர் அமீர் வலியுறுத்தல்
-
Aug 27, 2024 08:51 ISTரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிய நபர் மீட்பு
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில், ரயில் நிற்பதற்கு முன்பாக இறங்கிய ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான ஜெயச்சந்திரன் என்பவர் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கினார்
ரயில்வே போலீசாரும், பொதுமக்களும் காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்
-
Aug 27, 2024 08:40 ISTதமிழக மீனவர்கள் 8 பேர் கைது
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டனர்
மீனவர்கள் சென்ற விசைப்படகையும் பறிமுதல் செய்து, அனைவரையும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
-
Aug 27, 2024 08:04 ISTஇபிஎஸ் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்
தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு - இபிஎஸ் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்
திமுக எம்.பி தயாநிதி மாறன் தொடர்ந்த வதூறு வழக்கில் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
தொகுதி நிதியை தயாநிதி முறையாக பயன்படுத்தவில்லை என்று இ.பி.எஸ் பேசியதை எதிர்த்து வழக்கு
-
Aug 27, 2024 08:04 ISTஸ்டாலின் இன்று அமெரிக்கா பயணம்
அரசு முறை பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டிற்கு சர்வதேச முதலீடுகளை ஈர்க்க ஸ்டாலின் இன்று அமெரிக்கா பயணம். உலகின் பல முன்னணி தொழில் பிரநிதிகளை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாட உள்ளார்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.