பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 164-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
பாராலிம்பிக் இன்று தொடக்கம்
17-வது பாராலிம்பிக் போட்டிகள் பாரிஸில் இன்று இரவு 11 மணிக்கு தொடங்க உள்ளன. வரும் செப்.8ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் 169 நாடுகளை சேர்ந்த 4400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Aug 28, 2024 22:50 ISTபாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு விளையாட்டு வீரரின் தைரியமும் உறுதியும் தேசத்தின் உத்வேகத்திற்கு ஆதாரமாக உள்ளது. ஒவ்வொருவரும் தங்களது வெற்றிக்காக வேரூன்றி உள்ளனர் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
-
Aug 28, 2024 21:57 ISTசென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பிரெஞ்சு கற்பிக்க திட்டம்
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, பிரெஞ்சு மொழி பயிற்றுவிக்கத் திட்டமிட்டு பிரான்ஸ் தூதரகத்துடன், சென்னை மாநகராட்சி புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
-
Aug 28, 2024 21:53 ISTவிநாயகர் சதுர்த்தி: சிலைகளை வைத்து வழிபடும் அமைப்பினருடன் சென்னை காவல்துறை கலந்தாய்வு கூட்டம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னையில் சிலைகளை வைத்து வழிபடும் பல்வேறு அமைப்பினருடன் சென்னை மாநகர காவல்துறை சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடு செய்வதற்கான அறிவுரைகள், வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டன.
-
Aug 28, 2024 21:26 ISTகொளத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
கொளத்தூரை தலைமையிடமாக் கொண்டு புதிய வருவாய் வட்டம் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அயனாவரம் வருவாய் வட்டத்தில் இருந்து கொளத்தூர் வருவாய் வட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. 6.24 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கொளத்தூர் வட்டத்தில் வட்டாட்சியர் உட்பட 36 பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
Aug 28, 2024 20:42 ISTகொல்கத்தா விவகாரம்; முன்னாள் டீன் சந்தீப் கோஷை சஸ்பெண்ட் செய்து இந்திய மருத்துவ சங்கம் உத்தரவு
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அரசு மருத்துவமனையின் முன்னாள் டீன் சந்தீப் கோஷை, இந்திய மருத்துவ சங்கம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது
-
Aug 28, 2024 20:12 ISTடெல்லி மாநகர பேருந்தில் பயணித்தார் ராகுல்காந்தி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி டெல்லி மாநகர பேருந்தில் பயணித்தார். சரோஜினி நகர் பேருந்து பணிமனையில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள், மார்ஷல்களிடம் குறைகளை கேட்டறிந்தார்
-
Aug 28, 2024 19:51 ISTதமிழகத்தில் இன்று முதல் செப்.3-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Aug 28, 2024 19:20 IST3 மாதங்களில் 40 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்; ரூ.7.26 கோடி அபராதம் விதிப்பு - காவல்துறை
தமிழகம் முழுவதும் கடந்த 3 மாதங்களில் 40 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே விற்பனை செய்யப்பட்டதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக 5,006 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 மாதங்களில் ரூ.7.26 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, 2,997 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது
-
Aug 28, 2024 18:42 ISTஆகஸ்ட் 31-ல் நியாயவிலை கடைகள் இயங்கும் என அறிவிப்பு
ஆகஸ்ட் 31-ல் நியாயவிலை கடைகள் இயங்கும் என்று உணவு பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாத பொருட்களை பெறாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலம்.
-
Aug 28, 2024 18:40 ISTஐசிசி டெஸ்ட் தரவரிசை: டாப் 10-ல் 3 இந்தியர்கள்
ஐசிசி வெளியிட்டுள்ள சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பேட்டர்களுக்கான தரவரிசையில் டாப் 10ல் 3 இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர் ரோஹித் 6வது இடத்திலும் ஜெய்ஸ்வால் 7வது இடத்திலும் கோலி 8வது இடத்திலும் உள்ளனர் முதலிடத்தில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் உள்ளார்
-
Aug 28, 2024 18:39 ISTஅமைச்சர் தங்கம் தென்னரசு பதிவு
எரிசக்தித் துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அவற்றை செயல்படுத்துதல் தொடர்பாக, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற காணொலி வழி ஆய்வுக்கூட்டத்தை தலைமையேற்று நடத்தினேன். இந்த ஆய்வுக் கூட்டத்தில், நடப்பு நிதியாண்டில் முடிக்கப்பட வேண்டிய பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்வில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. ராஜேஷ் லக்காணி, தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக மேலாண்மை இயக்குநர் திரு. அணீஷ் சேகர் உள்ளிட்ட அனைத்து இயக்குநர்களும், தலைமைப் பொறியாளர்களும், துறைசார் அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர் என அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவிட்டுள்ளார்.
-
Aug 28, 2024 18:37 ISTத.வெ.க மாநாட்டிற்கு அனுமதி கோரி விழுப்புரம் ஆட்சியர், எஸ்.பி., அலுவலகத்தில் மனு
செப்டம்பர் 23ல் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை கிராமத்தில் மாநாடு நடத்த அனுமதி கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விழுப்புரம் ஆட்சியர், எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. வி.சாலை கிராமத்தில் மாவட்ட ஏ.எஸ்.பி மற்றும் டி.எஸ்.பி நேரில் ஆய்வு நடத்தினர். அனுமதி கோரி காலையில் மனு அளித்த நிலையில், மாலையில் காவல் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
-
Aug 28, 2024 18:21 ISTமலையாள சினிமா பாலியல் துன்புறுத்தல் விவகாரம்; புகாரளித்தால் விசாரணை - மகளிர் ஆணையம்
கேரளாவில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் புகார் அளித்தால் விசாரிக்கப்படும் என தேசிய மகளிர் ஆணையம் அறிவித்துள்ளது. பாலியல் துன்புறுத்தல் விவகாரம் குறித்து, தங்களிடமும் புகார் அளிக்கலாம் என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது
-
Aug 28, 2024 17:17 ISTகஞ்சா போதை பாதிப்பிலிருந்து, மீண்ட 10 பேருக்கு சமுதாய கல்லூரியில் சீட்
புதுச்சேரி: மிஷன் இளமை திட்டத்தின் கீழ் கஞ்சா போதை பாதிப்பிலிருந்து, மீண்ட 10 பேருக்கு சமுதாய கல்லூரியில் சீட் வழங்கப்பட்டது. இனி மேல் குற்றச்செயல், தவறான பழக்கத்தில் இருந்து விடுபடுங்கள். நீங்கள் எதிர்காலத்தில் சிறப்பாக அமைய உதவுவோம் என காவல்துறை நம்பிக்கை!
-
Aug 28, 2024 17:16 ISTதிமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு ₹908 கோடி அபராதம்
சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாக தொடரப்பட்ட வழங்கில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு ₹908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
-
Aug 28, 2024 17:14 ISTகோரமண்டல் நிறுவனம் விளக்கம்
அம்மோனியா உற்பத்தியை தொடங்கவில்லை என விளக்கம் அளித்துள்ள கோரமண்டல் நிறுவனம், பாஸ்போரிக் அமிலம் மற்றும் சல்பியூரிக் அமில ஆலைகளின் செயல்பாடுகள் மட்டுமே தொடங்கியுள்ளது. சென்னை எண்ணூர் ஆலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்கியுள்ள கோரமண்டல் நிறுவனம் பாதுகாப்பு நெறிமுறைகள், ஒழுங்குமுறை அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன் ஆலையின் செயல்பாடு தொடங்கி உள்ளது. நிறுவனத்தின் பெயரை உள்ளடக்கிய ஒரு சில அறிக்கைகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் பொய்யானவை என கூறியுள்ளது.
-
Aug 28, 2024 17:11 ISTசெந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 57வது முறையாக நீட்டிப்பு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 57வது முறையாக செப்டம்பர் 3ம் தேதி வரை நீட்டித்து நீடித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். சிட்டி யூனியன் வங்கியின் கரூர் கிளையின் தலைமை மேலாளராக பணியாற்றிய ஹரிஷ்குமார் ஆஜராகாததால், இன்று குறுக்கு விசாரணை இல்லை என கூறப்பட்டுள்ளது.
-
Aug 28, 2024 14:24 ISTஹஜ் கமிட்டி உறுப்பினராக எம்.எல்.ஏ. ஹசன் மெளலானா தேர்வு
அகில இந்திய ஹஜ் கமிட்டி உறுப்பினர் தேர்தலில் தென் இந்தியாவிற்கான பிரதிநிதியாக, தேசிய ஹஜ் கமிட்டி உறுப்பினராக வேளச்சேரி எம்.எல்.ஏ. ஹசன் மெளலானா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
Aug 28, 2024 14:23 ISTமத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தமிழ்நாடு அரசு சாதித்தது என்ன? சீமான் கேள்வி
“மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தமிழ்நாடு அரசு சாதித்தது என்ன?, ஐயா ஸ்டாலின், தனக்கு உடம்புக்கு முடியாவிட்டால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு செல்வாரா? பின் எதை வளர்ச்சி என்கின்றீர்கள்?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்வைத்துள்ளார்.
-
Aug 28, 2024 14:17 ISTஆவின் தொழிலாளர் உயிரிழப்பு - அமைச்சர் விளக்கம்
கடந்த வாரம் ஆவின் தொழிற்சாலையில் நடந்த விபத்தில் பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், "கன்வேயர் பெல்ட் பிரச்சனையால் விபத்து நடந்துள்ளது. இனி மனிதர்களை ஈடுபடுத்தாமல், கன்வேயர் ஆட்டோமேட்டிக் முறை பின்பற்றப்படும். இதனால் வேலைவாய்ப்பு குறைய வாய்ப்பில்லை" அவர் விளக்கமளித்துள்ளார்.
-
Aug 28, 2024 14:14 ISTமின் கட்டண உயர்வு: அரசு பரிசீலனை - முதல்வர் என்.ரங்கசாமி தகவல்
“மின் கட்டண உயர்வு, மக்களுக்கு அதிக சுமை ஏற்படாதவாறு பரிசீலனை செய்யப்படும். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து ஆய்வு செய்துள்ளோம், குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் தொழில் முனைவோர் மாநாடு நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று புதுச்சேரியில் அம்மாநில முதலமைச்சர் என்.ரங்கசாமி தெரிவித்தார்.
-
Aug 28, 2024 14:13 ISTகொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை: தமிழ்நாடு மருத்துவதுறை அதிகாரிகள் ஆலோசனை
கொல்கத்தா பெண் மருத்துவர் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட விவகாரம் எதிரொலியாக மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு மருத்துவதுறை அதிகாரிகள் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.
அப்போது, மருத்துவமனைகள் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பார்வையாளர்கள் வருவதற்கு அனுமதி சீட்டு கொடுக்க வேண்டும். பார்வையாளர்கள் நேரத்தை கடுமையாக கடைபிடிக்க வேண்டும். இரவு நேரத்தில் பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியாற்றும் சுற்றுப்புறத்தை வெளிச்சம் நிறைந்த பகுதியாக வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.
-
Aug 28, 2024 14:11 ISTபால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், “ஆவின் பால் கொள்முதல் 38 லட்சம் லிட்டராக பெருகியுள்ளது. வரலாற்றில் இதுவே முதல் முறை, நாளொன்றுக்கு 38 லட்சம் இதுவரை இல்லாத அளவுக்கான உச்சம். மேலும் உற்பத்தியை பெருக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். ஆவினில் பெரிய முன்னேற்றத்தைக் காட்டியுள்ளோம், பாலின் உற்பத்தி, கொள்முதல், பால் பொருட்கள் மற்றும் பாலின் விற்பனை உள்ளிட்டவை பெருகியுள்ளது;
அனைத்து பண்டிகைகளுக்கும் ஏற்ப பிரத்யேக பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறோம். ஆவின் நெய்யை சாசே பாக்கெட்டுகளில் விற்பனை செய்துவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். ஆவின் பொருட்களை விற்க வற்புறுத்த வேண்டிய அவசியமில்லை. 100% விருப்பத்தின் பெயரில் தான் விற்பனை செய்துவருகிறோம், ஆவின் பொருட்களை யாரையும் வற்புறுத்தி வாங்க வைப்பதில்லை” என்று கூறினார்.
-
Aug 28, 2024 14:10 ISTகோர்ட் உத்தரவு
சென்னையில் சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் சென்னை மாநகராட்சி, மாநகர போக்குவரத்து காவல்துறை ஆகியோர் 4 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாலையோர நடைபாதைகளை ஆக்கிரமிப்பவர்களுக்கு உடந்தையாக இருக்கும் போக்குவரத்து காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
Aug 28, 2024 14:06 ISTரயில்வேக்கு ரூ .1,001 அனுப்பும் போராட்டம் - செல்வப்பெருந்தகை அறிவிப்பு
ரயில்வே சார்பில் தமிழகத்திற்கு ரூ. 1000 மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து தமிழகத்தை புறக்கணிக்கும் ரயில்வேக்கு ரூ .1,001 அனுப்பும் போராட்டம் தொடரும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
-
Aug 28, 2024 13:57 ISTஅமைச்சர் பொன்முடி பேச்சு!
"சூரியனையும், சந்திரனையும் கும்பிட்ட காலம் போயிடுச்சு. இன்னும் கொஞ்ச ஆண்டுகளில் நம்ம பேரன், பேத்திகள் சந்திரனில் போய் குடியேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை" என்று சென்னை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில், தேசிய விண்வெளி தின விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய பின் உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.
-
Aug 28, 2024 13:17 ISTபி.எம்.எல்.ஏ வழக்குகளில் ஜாமின் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு - உச்ச நீதிமன்றம் பரபரப்பு
பி.எம்.எல்.ஏ வழக்குகளில் ஜாமின் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு - உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஜார்காண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுடன் சேர்ந்து பணமோசடி செய்ததாக அமலாக்கத்துறையால் கைதான பிரேம் பிரகாஷ் என்பருக்கு ஜாமின் வழங்கி தீர்ப்பு
-
Aug 28, 2024 13:15 ISTமின் கட்டண உயர்வு, மக்களுக்கு அதிக சுமை ஏற்படாதவாறு பரிசீலனை செய்யப்படும்: முதலமைச்சர் என்.ரங்கசாமி பேட்டி
மின் கட்டண உயர்வு, மக்களுக்கு அதிக சுமை ஏற்படாதவாறு பரிசீலனை செய்யப்படும்; மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து ஆய்வு செய்துள்ளோம், குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; புதுச்சேரியில் தொழில் முனைவோர் மாநாடு நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்” - புதுச்சேரியில் அம்மாநில முதலமைச்சர் என்.ரங்கசாமி பேட்டி
-
Aug 28, 2024 13:07 ISTநாளை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது .வேளாங்கண்ணி பேராலய திருவிழா
நாளை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது .வேளாங்கண்ணி பேராலய திருவிழா, விழாவை காண குவிந்து வரும் பக்தர்கள் .பாதுகாப்பு பணியில் 2,500க்கு மேற்பட்ட போலீசார் வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கம்.
-
Aug 28, 2024 12:48 ISTபா.ஜ.க பிரமுகரின் கார் மீது துப்பாக்கிச்சூடு
மேற்கு வங்கத்தில் பாஜக பிரமுகர் பிரியாங்கு பாண்டே கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு.
-
Aug 28, 2024 12:47 ISTவிஜய்யின் மாநாட்டிற்கு அனுமதி கேட்டு மனு
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு அனுமதி கோரி விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு தவெக முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள நிலையில், அனுமதி, பாதுகாப்பு கோரி மனு.
-
Aug 28, 2024 12:45 ISTகிருஷ்ணகிரி சம்பவம் : உயர்நீதிமன்றம் கேள்வி
கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு ``பள்ளிக்கல்வித்துறை அனுமதியின்றி எப்படி முகாம் நடத்த முடியும்; பள்ளி மீது எடுத்த நடவடிக்கை என்ன?- ஐகோர்ட் கேள்வி
-
Aug 28, 2024 12:36 ISTவிஜய்யின் மாநாட்டிற்கு அனுமதி கேட்டு மனு
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு அனுமதி கோரி விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு தவெக முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள நிலையில், அனுமதி, பாதுகாப்பு கோரி மனு
-
Aug 28, 2024 12:06 ISTதீயணைப்புப்படை காவலர் பணியிடங்களுக்காக சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் இரண்டாவது நாளாக இன்றும் உடற்தகுதித்தேர்வு
தமிழ்நாடு காவல்துறையில் 2ம் நிலை காவலர், தீயணைப்புப்படை காவலர் பணியிடங்களுக்காக சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் இரண்டாவது நாளாக இன்றும் உடற்தகுதித்தேர்வு நடந்து வருகிறது
-
Aug 28, 2024 11:58 ISTஅரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 150 புதிய பேருந்துகள் : தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
விரைவு போக்குவரத்து கழகத்திற்காக 150 புதிய பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பல்லவன் பேருந்து இல்லத்தில் இருந்து புதிய பேருந்துகளின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதற்காக விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 90 கோடி 52 லட்சம் ரூபாய் செலவில் 150 BS 6 ரக பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.
-
Aug 28, 2024 11:27 ISTகார் விபத்து : நடிகை ரேகா நாயர் விளக்கம்
சென்னையில் நடிகை ரேகா நாயரின் கார் மோதி சாலையோரம் படுத்திருந்த நபர் உயிரிழந்த விவகாரம் காரை தான் ஓட்டி செல்லவில்லை என நடிகை ரேகா நாயர் விளக்கம்
-
Aug 28, 2024 11:15 ISTகார் பந்தய வழக்கு : நாளை விசாரணை
ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடை கோரிய வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
Aug 28, 2024 11:14 ISTநிதியை விடுவிப்பதற்கு பதில், தேசிய கல்வி கொள்கையை ஏற்க மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது: அமைச்சர் அன்பில் மகேஷ்
நிதியை விடுவிப்பதற்கு பதில், தேசிய கல்வி கொள்கையை ஏற்க மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது. அனைவருக்கும் கல்வி திட்டத்தில், மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடியை விடுவிக்கவில்லை. மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது. மத்திய அரசு நிதி வழங்காததால் ஏற்பட்டுள்ள நிதிச்சுமையை சமாளிக்க முதல்வர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆசிரியர்கள் சம்பளம் பாதிக்காத வகையில் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்
-
Aug 28, 2024 10:47 ISTவிக்கிரவாண்டியில் த.வெ.க மாநாடு?
த.வெ.க. மாநாடு: அனுமதி கேட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. அலுவலகங்களில் இன்று கடிதம் வழங்கப்பட உள்ளதாக தகவல்
செப்டம்பர் 22-ம் தேதி விக்கிரவாண்டியில் த.வெ.க.வின் முதல் மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டு உள்ளதாக தகவல்.
-
Aug 28, 2024 10:47 ISTதுணை கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணபிக்கலாம்
பி.இ., பி.டெக். பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணபிக்கலாம்;
“2024-25ம் கல்வி ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கு, பொது கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்களுக்கு 12ம் வகுப்பு பொது மற்றும் தொழிற்கல்வி பயின்று சிறப்பு துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் 2024 பொது கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாத மாணவர்கள் பதிவு செய்யலாம்”
- தொழில் நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு
https://tneaonline.org (அல்லது) https://dte.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக செப்டம்பர் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
-
Aug 28, 2024 10:43 ISTதங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்வு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,715க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53,720க்கும் விற்பனை
-
Aug 28, 2024 10:26 ISTமத்திய அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்
மத்திய அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்
மத்திய அரசின் கல்வி திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு தர வேண்டிய முதல் தவணை நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்
-
Aug 28, 2024 10:11 ISTமலையாள நடிகர் ஜெயசூர்யா மீது பாலியல் புகார்
பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது பாலியல் புகார்
கேரளா: கடந்த 2013ம் ஆண்டு தொடுபுழாவில் சினிமா படப்பிடிப்பின் போது நடிகர் ஜெயசூர்யா தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சிறப்பு விசாரணை குழுவினரிடம் நடிகை ஒருவர் புகார்;
ஹேமா கமிட்டியின் அறிக்கைக்கு பிறகு மலையாள நடிகர்கள் மீது எழுந்த பாலியல் புகார்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு
-
Aug 28, 2024 09:43 ISTநாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
“நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி''
நாளை மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
இது தொடர்ந்து மேற்கு, வட மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஒரிசா, வடக்கு ஆந்திரா கரையோரம் அதற்கு அடுத்த 2 நாள் நிலவக்கூடும்
-
Aug 28, 2024 09:42 ISTராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்
மீன்பிடி துறைமுகத்தில் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தம்
படகு மூழ்கி மாயமான மீனவர்களை மீட்டு தரவும் வலியுறுத்தல்
மீனவர்கள் வேலைநிறுத்தத்தால் நாளொன்றுக்கு ரூ.10 கோடிக்கும் மேல் வருவாய் இழப்பு
-
Aug 28, 2024 08:37 ISTஆட்டோ கவிழ்ந்து விபத்து - 3 பெண்கள் பலி
தென்காசி, சுரண்டை அருகே விவசாய பணிக்கு சென்ற லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்து 3 பெண்கள் உயிரிழந்த நிலையில் 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி
-
Aug 28, 2024 08:37 ISTபாலியல் புகார் - நடிகர் சித்திக் மீது வழக்கு
கேரளாவில் இளம் நடிகை புகாரின் பேரில் நடிகர் சித்திக் மீது வழக்கு பதிவு
பாலியல் பலாத்காரம் மற்றும் மிரட்டல் விடுத்ததாக திருவனந்தபுரம் மியூசியம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு
-
Aug 28, 2024 08:34 ISTஏகனாபுரம் கிராமத்தில் நிலம் கையகப்படுத்த அறிவிப்பு
ஏகனாபுரம் கிராமத்தில் நிலம் கையகப்படுத்த அறிவிப்பு
பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க, ஏகனாபுரம் கிராமத்தில் நிலம் எடுப்பு தொடர்பாக அறிவிப்பு
நில எடுப்பு அறிவிப்பு நாளிதழில் வந்திருப்பதை அறிந்து ஏகானபுரம் கிராம மக்கள் அதிர்ச்சி
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்டு வரும் ஏகனாபுரம் மக்கள்
நிலங்களை பார்வையிடுவதற்கும் அளவீடு செய்வதற்கும் அரசு அதிகாரிகளையும் அனுமதிக்காமல் இருந்தனர்
தொடர் போராட்டங்கள் நடந்தாலும் தற்போது ஏகனாபுரத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது
-
Aug 28, 2024 08:08 ISTபொன்.மாணிக்கவேல் முன்ஜாமின் மனு விசாரணை
முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் முன்ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு,
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.