பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 165-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
போக்குவரத்து மாற்றம்
சென்னை பெசண்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய பெருவிழா காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளது சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Aug 30, 2024 01:57 ISTவார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் சொந்த ஊர் செல்ல வசதியாக சென்னையில் இருந்து ஆகஸ்ட் 30 மற்றும் ஆகஸ்ட் 31-ம் தேதிகளில் 865 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுவரை பேருந்துகளில், வெளியூருக்கு செல்ல 14,790 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
-
Aug 29, 2024 23:21 ISTதிருப்பதி கோயிலில் லட்டு விநியோகத்தில் மாற்றம் - தேவஸ்தானம் நிர்வாகம் அறிவிப்பு
திருப்பதி கோயிலில் லட்டு விநியோகத்தில் சிறிய மாற்றத்தை தேவஸ்தான நிர்வாகம் செய்துள்ளது. சாமி தரிசனத்திற்கு பிறகு டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு லட்டு தயாரிப்பு, தேவை அடிப்படையில் லட்டு விற்பனை செய்யப்படும்; சாமி தரிசனம் செய்யாமல் லட்டு வாங்க மட்டுமே வருபவர்கள் ஆதார் அட்டையை சமர்ப்பித்து 2 லட்டுகளை வாங்கிச் செல்லலாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
Aug 29, 2024 21:30 ISTஅமெரிக்காவில் உடற்பயிற்சியுடன் நாளை தொடங்கிய ஸ்டாலின்
அரசு பயணமாக அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கே உடற்பயிற்சியுடன் இந்த நாளை தொடங்கியுள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
-
Aug 29, 2024 21:11 ISTநடிகர் விமல் வாங்கிய ரூ.3.6 கோடி கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க ஐகோர்ட் உத்தரவு
மன்னர் வகையறா படத்தை தயாரிப்பதற்காக பெற்ற ரூ.3.6 கோடியை 18% வட்டியுடன் திருப்பிக் கொடுக்க நடிகர் விமலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது A3V தயாரிப்பு நிறுவனம் மூலம் தான் தயாரித்த ‘மன்னர் வகையறா’ படத்துக்காக கோபி என்பவரிடம் ரூ.5 கோடி கடன் வாங்கியுள்ளார். இதில், 3.6 கோடியைக் குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பிச் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்தபோதும் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
-
Aug 29, 2024 21:04 ISTஆதரவற்ற பெண்கள் தொழில் தொடங்க உதவித்தொகை - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்களில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள 200 பேருக்கு சுயதொழில் தொடங்க ரூ.50,000 வீதம் ரூ. 1 கோடி மானியம் வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
-
Aug 29, 2024 20:30 ISTஇந்தியாவில் மீண்டும் போலியோ பாதிப்பு கவலை தருகிறது - காங்கிரஸ்
நாட்டில் 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் போலியோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது கவலை தருகிறது. மேகாலயாவில் 2 வயது குழந்தைக்கு போலியோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. போலியோ மருந்து தருவதில் மோடி அரசு தீவிர காட்டவில்லை என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
-
Aug 29, 2024 20:24 ISTஉதயநிதி துணை முதல்வராவதை வெகு விரைவில் எதிர்பாருங்கள் - அமைச்சர் மூர்த்தி
தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் மகன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பேசப்பட்டு வரும் நிலையில், உதயநிதி துணை முதல்வராவதை வெகு விரைவில் எதிர்பாருங்கள் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
-
Aug 29, 2024 19:33 ISTஅண்ணாமலை மீது அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு சார்பில் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி ஆவடி காவல் ஆணையரகத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்களை இழிவாக பேசி அதன் மூலம் விளம்பரம் தேடும் அண்ணாமலையை வன்மையாக கண்டிக்கிறோம். எடப்பாடி பழனிசாமியை பற்றி சட்டத்திற்கு புறம்பான, கடுமையான வார்த்தைகளால் பேசுவதற்கு அவருக்கு என்ன உரிமை உள்ளது? என்று அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு செயலாளர் டி. அறிவரசன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். -
Aug 29, 2024 18:52 ISTவேளாங்கண்ணியில் கொடியேற்றம்
வேளாங்கண்ணி பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
Aug 29, 2024 18:37 ISTபொன் மாணிக்கவேல் வழக்கு; சி.பி.ஐ விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
பொன் மாணிக்கவேல் மீது சி.பி.ஐ பதிந்துள்ள வழக்கு ஜாமின் வழங்கக் கூடியதா?, ஜாமினில் விடுவிக்க முடியாததா? என சி.பி.ஐ தரப்பில் விளக்கம் அளிக்க, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது
-
Aug 29, 2024 18:17 ISTமாஞ்சோலை தேயிலை தோட்ட வழக்கு; வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றம்
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவிடக் கோரி வழக்கை, வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது
-
Aug 29, 2024 18:14 IST`விடுதலை பாகம் 2' வெளியாகும் தேதி அறிவிப்பு
`விடுதலை பாகம் 2' டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது
-
Aug 29, 2024 17:38 ISTநடிகர் முகேஷை கைது செய்ய தடை
பாலியல் புகாரில் சிக்கியுள்ள நடிகர் முகேஷை வரும் 3 ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
Aug 29, 2024 17:16 ISTஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்!
ரத்து செய்யப்பட்ட விமானப் பயணிகளுக்கு இழப்பீடு வழங்காத ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது
-
Aug 29, 2024 16:53 ISTபெசன்ட் நகர் - போக்குவரத்து நெரிசல்
பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தின் 52 வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதனால், மெரினா காமராஜர் சாலை, பட்டினப்பாக்கம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
-
Aug 29, 2024 16:40 ISTஅம்பானியை முந்திய அதானி!
இந்திய பெரும் பணக்காரர்களில் முகேஷ் அம்பானியை விஞ்சி கவுதம் அதானி முதலிடத்தைப் பிடித்தார். ஹுருன் இந்தியா என்ற அமைப்பு வெளியிட்டுள்ள பெரும் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் அதானி.
முதலிடத்தில் உள்ள அதானி மற்றும் குடும்பத்தினரின் சொத்துமதிப்பு ரூ.11,61,800 கோடியாக உள்ளது. 2-வது இடத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.10,14,700 கோடியாக உள்ளது.
-
Aug 29, 2024 16:24 ISTசீமான் மீது வழக்குப்பதிவு - எஸ்.சி, எஸ்.டி ஆணையம் உத்தரவு
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய மாநில எஸ்சி, எஸ்டி ஆணையம் போலீசுக்கு பரிந்துரைத்துள்ளது. குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை வசை சொல்லாக பயன்படுத்தியதற்காக சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை. புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க ஆவடி காவல் ஆணையரகத்துக்கு எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது
-
Aug 29, 2024 16:22 IST"தமிழ் திரையுலகில் பாலியல் புகார் வரவில்லை" - அமைச்சர் சாமிநாதன்
கேரள திரையுலகைப் போல தமிழ் திரையுலகில் பாலியல் தொடர்பான புகார்கள் ஏதும் பெறப்படவில்லை என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். பாலியல் புகார்கள் வரும்பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூர் மாவட்டத்திற்கு 7 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. வாகனத்தில் கால்நடை மருத்துவர், உதவியாளர், ஓட்டுநர் பணியில் இருப்பர் என்று கூறியுள்ளார்
-
Aug 29, 2024 16:10 ISTவேளாங்கண்ணி மாதா கோயிலில் மாலை கொடியேற்றம்
நாகை, வேளாங்கண்ணி மாதா கோயிலில் இன்று மாலை கொடியேற்றம் நடைபெற உள்ளது. இதனையடுத்து, அங்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். மொட்டை அடித்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்து வருகிறார்கள்.
-
Aug 29, 2024 15:54 ISTநாய்களுக்கு கருத்தடை - ரூ.10 கோடி ஒதுக்கீடு
மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற சென்னை மாமன்ற கூட்டத்தில், ஆண்டுதோறும் 50 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டத்திற்கு, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Aug 29, 2024 15:02 ISTசீமான் மீது வழக்குப்பதிவு: மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் உத்தரவு
குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை வசைச் சொல்லாக பயன்படுத்திய வழக்கில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்திற்கு மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் உத்தரவு
-
Aug 29, 2024 14:29 IST8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
குமரி, நெல்லை, தேனி, தென்காசி, திருப்பூர், திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
-
Aug 29, 2024 13:55 ISTஃபார்முலா 4 கார் பந்தயம்: தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
இதனால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தல்.
-
Aug 29, 2024 13:54 ISTதமிழகத்தில் 4ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 4ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
- சென்னை வானிலை ஆய்வு மையம்
-
Aug 29, 2024 13:19 ISTபொங்கலுக்கு வேஷ்டி, சேலை: ரூ.100 கோடி ஒதுக்கீடு
பொங்கல் பண்டிகைக்கு வேஷ்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு
1.77 கோடி சேலைகள், 1.77 கோடி வேஷ்டிகள் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை
வேஷ்டி, சேலைகள் பயனாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய விரல் ரேகைப் பதிவை கட்டாயமாக்க வேண்டும்..
-
Aug 29, 2024 13:18 ISTதிரையுலகில் பாலியல் தொல்லை - விஷால் பேட்டி
ஹேமா கமிட்டி போல் தமிழகத்திலும் அமைக்கப்படும். பாலியல் தொல்லை கொடுப்பவர்களை செருப்பால் அடிக்க வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையை அனுபவிக்க வேண்டும். பாலியல் தொல்லை குற்றச்செயல்களை நாங்கள் தடுக்க முடியாது - நாங்கள் காவல்துறை அல்ல
பாலியல் தொல்லை குறித்து சங்கத்தில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம்
- நடிகர் விஷால்
-
Aug 29, 2024 12:25 ISTநாகர்கோவில் - தாம்பரம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் நீட்டிப்பு
தாம்பரம் - நாகர்கோவில், நாகர்கோவில் - தாம்பரம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் மேலும் நீட்டிப்பு
-
Aug 29, 2024 12:24 ISTநாகை வேளாங்கண்ணி தேவாலய பெருவிழா கொடியேற்ற: அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
உலகப் புகழ் பெற்ற நாகை வேளாங்கண்ணி தேவாலய பெருவிழா கொடியேற்றம் இன்று மாலை நடக்க உள்ள நிலையில், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
-
Aug 29, 2024 12:23 ISTமதுரை எய்ம்ஸ் எப்போது அறிவிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்? - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
மதுரை எய்ம்ஸ் எப்போது அறிவிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்? - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி கட்டுமான பணிகள் எப்போது தொடங்கி, எப்போது முடியும் என்பதை ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வ அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவு எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க பொதுநல வழக்கு தொடரப்பட்டது
-
Aug 29, 2024 11:54 ISTஒரே நாளில் ஒரே இடத்தில் அடுத்தடுத்து விபத்து
நாமக்கல் மாவட்டம் உஞ்சனை பகுதியில் ஒரே இடத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்துகள் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் ஒரே நாளில் அடுத்தடுத்து விபத்து சாலையை கடக்க முயன்ற போது ஏற்பட்ட விபத்துகள்... வேகத்தடை அமைத்து சாலையில் தடுப்புகள் வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.
-
Aug 29, 2024 11:25 ISTநெடுஞ்சாலைத்துறை மறுசீரமைப்பு : அரசாணை
நெடுஞ்சாலைத்துறையில் உள்ள தற்காலிகப் பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழு அமைப்பு தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை உத்தரவு தமிழகத்தில் உள்ள 9,479 பாலங்களை ஆய்வு செய்து அதன் உறுதித் தன்மையை கண்டறிந்து பழுதுகள் நீக்க . பாலங்கள் சிறப்பு ஆய்வு அலகு அமைப்பு.
-
Aug 29, 2024 11:23 ISTரயில்வே போலீசார் கொடூர தாக்குதல்
சிறுவனின் தந்தையை திருட்டு வழக்கில் தேடி வருவதாக கூறி காவல் நிலையத்தில் பட்டியலின சிறுவன், பாட்டி மீது மத்திய பிரதேச மாநிலம் கட்னி என்ற பகுதியில் அதிர்ச்சி சம்பவம் வீடியோவை வைரலாக்கி வரும் காங்., ஆம் ஆத்மி கட்சியினர் கடந்த அக்டோபரில் நடந்த சம்பவம், சிறுவனின் தந்தை பெரிய திருடன் என ரயில்வே போலீஸ் விளக்கம்.
-
Aug 29, 2024 11:21 ISTஓய்வு பெற்ற டிஜிபி நியமனம்: அ.தி.மு.க வழக்கு
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் தலைவராக சுனில்குமார் செயல்பட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எந்த அடிப்படையில் சுனில் குமார் நியமிக்கப்பட்டார் என விளக்கம் கேட்க வேண்டும் - மனு.
-
Aug 29, 2024 10:55 ISTதிருச்சி சேலம் ஈரோடு தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
தமிழ்நாட்டில் திருச்சி, சேலம், ஈரோடு என பல இடங்களில் தனியார் பள்ளிக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.
திருச்சி ராம்ஜி நகர் தி இந்தியன் பப்ளிக் பள்ளிக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து ராம்ஜி நகர், தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டலை அடுத்து அந்தப் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதேபோல், சேலம் கோரிமேடு அருகே உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளிக்கும் மர்மநபர் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஈரோட்டில் உள்ள தி இந்தியன் பப்ளிக் பள்ளிக்கும் விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. -
Aug 29, 2024 10:55 ISTகூரியர் டெலிவரி இளைஞர் சடலமாக மீட்பு
சென்னை போரூர் ஏரியில் உடல் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு
அம்பத்தூரில் காணாமல் போனவர் போரூர் ஏரியில் சடலமாக மீட்பு என தகவல்
அம்பத்தூரில் காணாமல் போன கூரியர் டெலிவரி செய்யும் இளைஞர் பாண்டியன் சடலமாக மீட்பு என தகவல்
கடன் தொல்லையால் பாண்டியன் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்
-
Aug 29, 2024 10:45 ISTபள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருச்சியில் திண்டுக்கல் சாலையில் கே.கள்ளிப்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
ஈரோடு சேனாதிபாளையம் பகுதியில் உள்ள இன்டர்நேஷனல் பள்ளிக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்
குழந்தைகளை அழைத்து செல்லுமாறு பெற்றோர்களுக்கு போன் செய்து அழைப்பு - போலீஸ் விசாரணை
-
Aug 29, 2024 10:30 ISTதிமுக எம்.எல்.ஏ. வீட்டின் முன் தீக்குளிப்பு
மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. தளபதியின் வீட்டின் முன் தீக்குளித்த திமுக நிர்வாகி
90 சதவீத தீக்காயங்களுடன், உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதி
மூலக்கரை பகுதியில் உள்ள தளபதி வீட்டின் முன், மானகிரி பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி கணேசன் தீக்குளிப்பு
எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கோஷமிட்டபடியே மானகிரி கணேசன் தீக்குளித்ததாக தகவல். தீக்குளிப்பு சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
-
Aug 29, 2024 10:29 ISTஏகனாபுரம் கிராம மக்கள் மீது வழக்குப் பதிவு
நிலம் எடுப்பு அறிவிப்பிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் மீது வழக்குப்பதிவு
போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து 765 நாட்களாக போராடி வரும் கிராம மக்கள்
ஏகனாபுரத்தில் நில எடுப்பு அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டதால், எதிர்ப்பு தெரிவித்து நேற்று சாலை மறியல்
-
Aug 29, 2024 09:58 ISTசுரேஷ் கோபி புகார் - பத்திரிகையாளர்கள் மீது வழக்குப்பதிவு
தன்னை காரில் ஏற விடாமல் பத்திரிகையாளர்கள் தடுத்ததாக சுரேஷ் கோபி அளித்த புகாரில் வழக்குப்பதிவு. தனது பாதுகாவலர் விஷ்ணு ராஜையும் பத்திரிகையாளர்கள் தள்ளிவிட்டதாகவும் சுரேஷ் கோபி புகார்.பத்திரிகையாளர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு. மலையாள திரையுலக பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டபோது சுரேஷ் கோபி கோபமடைந்தார்.
-
Aug 29, 2024 09:45 ISTஅதிமுக பிரமுகர் மர்ம மரணம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அதிமுக பிரமுகர் மர்மமான முறையில் உயிரிழப்பு
நேற்று இரவு நடை பயிற்சிக்கு சென்றபோது மர்மமான முறையில் உயிரிழந்ததாக தகவல்
சேலம், பாப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த ரவி என்ற அதிமுக பிரமுகர், நேற்று இரவு வீட்டில் இருந்து சென்று விட்டு, மீண்டும் திரும்பவில்லை
இன்று காலை மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் அதிர்ச்சி
-
Aug 29, 2024 08:59 ISTமலையாள நடிகர் ஜெயசூர்யா மீது 2-வது பாலியல் வழக்கு
மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது பாலியல் வழக்கு.
சிறப்பு விசாரணை குழுவிடம் நடிகை அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து எர்ணாகுளம் ஆலுசா பகுதியில் உள்ள நடிகையின் வீட்டில் நேற்று விசாரணை நடைபெற்றது.
கழிவறையில் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக நடிகை அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜெயசூர்யா மீது வழக்கு
நடிகர் ஜெயசூர்யா மீது இரண்டாவது பாலியல் வழக்கு இதுவாகும். ஏற்கனவே இயக்குனர் ரஞ்சித், நடிகர் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட 7 பேர் மீது பாலியல் வழக்கு பதிவாகி உள்ளது
-
Aug 29, 2024 08:58 IST8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், குமரி, நெல்லை, தேனி, தென்காசி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
Aug 29, 2024 08:57 ISTபி.எட் வினாத்தாள் லீக் - திரும்பப் பெறுவதாக அறிவிப்பு
இரண்டாம் ஆண்டு பி.எட் படிப்புக்கான 4வது செமஸ்டர் வினாத்தாள் லீக்கான விவகாரம்
வெளியான வினாத்தாளை திரும்ப பெறுவதாக உயர்கல்வித்துறை அறிவிப்பு
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை. நடத்தும் creating an inclusive school என்ற பாடத்துக்கான வினாத்தாள் லீக்கானது
இன்று காலை 10 மணிக்கு தேர்வு துவங்கும் முன்பாக இணையதளம் வாயிலாக புதிய வினாத்தாள் அனுப்பப்படும் எனவும் உயர் கல்வித் துறை அறிவிப்பு
கடந்த 27ம் தேதி தொடங்கிய பி.எட் படிப்புக்கான தேர்வுகள் வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது
-
Aug 29, 2024 08:50 ISTவேளாங்கண்ணி திருவிழா: இன்று மாலை கொடியேற்றம்
வேளாங்கண்ணி மாதா கோவில் பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடக்கம்.
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவில் பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர்
-
Aug 29, 2024 08:34 ISTஅமெரிக்கா சென்ற ஸ்டாலின் - உற்சாக வரவேற்பு
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ சென்றடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
அமெரிக்கா சென்றடைந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு
முதலீடுகளை ஈர்க்க சென்னையிலிருந்து துபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா சென்றுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.