Tamil Live News Updates: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளான இன்று, “தமிழ்நாட்டிற்கும் திராவிட முன்னேற்றக கழகத்திற்கும் வாழ்வை அர்பணித்திருக்கிறேன்; பிறந்தநாள் விழா என்ற பெயரில் ஆடம்பர விழாக்களை நடத்துவதை தவிர்க்க வேண்டும்”, என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.
சென்னை திரும்பினார் உதயநிதி
டெல்லிக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் சென்னை திரும்பினார். நேற்று பிரதமரை சந்தித்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தாகவும். விளையாட்டு தொடர்பாக பல கோரிக்கையை முன்வைத்ததாகவும் கூறினார்.
நீர் நிலவரம்
300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2894 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 831 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 500 மில்லியன் கன அடியாக உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், வாழ்த்து மடல்கள் – பூங்கொத்துகள் அனுப்பியும், சமூக வலைத்தளங்களிலும் என உள்ளன்போடு எனது 70-ஆவது பிறந்தநாளில் வாழ்த்திய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள், தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நெகிழ்ச்சிமிகு நன்றிகள்!”
வட இந்தியாவில் இருக்கும் கட்சிகள் உங்களிடம் சமூகநீதியைக் கற்றுக்கொள்ள வேண்டும். வேலையின்மை, பணமதிப்பு வீழ்ச்சி, என நம் நாடு பல பிரச்னைகளில் உள்ளது. நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவி வருகிறது என பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறினார்
இது எனது பிறந்தநாள் விழா பொதுக்கூட்ட மேடை அல்ல. இந்திய அரசியலுக்கான புதிய தொடக்க விழா. மகாபாரத்தில் சூதாட்டம் இருக்கிறது என்பதால் தடை செய்ய மறுக்கிறார்களா?. 2024 தேர்தலில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட, யார் ஆட்சி அமைக்க கூடாது என்பதே முக்கியம் என ஸ்டாலின் பேச்சு
2024 நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும். யார் தலைமை தாங்குவது என்பது முக்கியமில்லை, ஒன்றிணைந்து அரசியலமைப்பை காப்பாற்ற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுகூட்டத்தில் காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்
எல்லா மாநிலங்களும் மிசாவுக்கு தலை வணங்கியது, ஆனால் தமிழகம் தலை நிமிர்ந்து நின்றது. ஜனநாயகத்தை நீங்கள் காப்பாற்ற வேண்டும் என இந்தியா எதிர்பார்க்கிறது. இந்திய தலைவர்கள் ஒருநாள் கோபாலபுரம் வீட்டிற்கே வந்து இந்தியாவிற்கு தலைமை தாங்க வேண்டும் என்று கேட்கும் காலம் வரும். இந்தியாவில் இப்படி ஒரு மாநிலம் இல்லை என்ற நிலையை உருவாக்கி உள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்தியாவை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது. மொத்த இந்தியாவும் முதல்வர் ஸ்டாலினை எதிர்பார்க்கிறது என துரைமுருகன் பேச்சு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர், மக்களைத்தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள் தமிழகத்தின் சிறப்பான திட்டங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா பொதுகூட்டத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே உழைத்து வருகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வரவேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா பொதுகூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்பு
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜம்மு காஷ்மீர், முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா “மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து முன்னெடுப்பு செய்வது மகிழ்ச்சியளிக்கிறது” “முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக இருக்க கூடாது என கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள காவல்நிலைய சிசிடிவி-க்கள் ரூ.38 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது” “1,578 காவல் நிலையங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்க உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
திண்டுக்கல், அய்யலூர் பகுதியில் இருசக்கர வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் தனியார் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், பேருந்து நிறுத்தத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு
இந்தியா ஆஸ்திரேலிய அணிக்களுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவு ஆஸ்திரேலியா 4 விக்கெட்களை இழந்து 156 ரன்களை எடுத்து, இந்தியாவை விட 47 ரன்கள் முன்னிலையில் உள்ளது இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்
மதுரை சரவணா ஸ்டோர்ஸ் கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தீயை அணைக்கும் பணியில் 3 வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
“என்னுடைய 26 வருட திரையிசை பயணத்தை வாழ்த்தி நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி. உங்களுடைய நிபந்தனையற்ற அன்புக்கு நன்றி. உங்களது இந்த அன்புக்கு மரியாதை உள்ளவனாக இந்த வருடத்தில் நிறைய இசையை நிச்சயம் கொடுப்பேன்” என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ட்வீட் செய்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி லண்டனிலிருந்து தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ளார்.
வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என பெயர் எடுத்தோம், இன்று எங்கே போனது சகோதரத்துவம்?; தமிழ்நாட்டில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுவரும் வட மாநில தொழிலாளர்களை தாக்குவது மனிதநேயமற்ற செயல் என்று ஓட்டல்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தனது பெயரில் போலியாக இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கி, மோசடி செய்வதாக நடிகர் ரவி மரியா போலீஸிடம் புகார் அளித்துள்ளார்.
தனது பெயரில் சில மர்ம நபர்கள் போலியாக இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கி, அதன் மூலம் பலரிடம் பணம் கேட்பதாக நடிகர் ரவி மரியா போலீஸிடம் புகார் அளித்துள்ளார். யாரும் அதனை நம்பி பணத்தை அனுப்பிவிட வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.1,49,577 கோடி ஜி.எஸ்.டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரி வசூல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தைவிட 12% அதிகம் கிடைத்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
சிலிண்டர் விலைவாசி உயர்வு அடுப்பு எரிக்கும் பெண்களுக்கு வயிறு எரிய செய்திருக்கிறது. சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை தி.மு.க இதுவரை நிறைவேற்றவில்லை. ஏழைகள், நடுத்தர மக்களைப் பற்றி சிந்திக்காமல் செயல்படும் மத்திய மாநில அரசுகளுக்கு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களுக்கு ரூ.225 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதலுக்கான விலையை லிட்டருக்கு 7 ரூபாய் உயர்த்தி அறிவிக்காவிட்டால் வரும் 11ம் தேதி பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
டெல்லி துணை முதல்வர் சிசோடியா மற்றும் அமைச்சர் சத்யேந்தர் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் வினய்குமார் சக்சேனா, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளார். சிசோடியா வசம் இருந்த முக்கிய துறைகள் கைலாஷ் கலோட் மற்றும் ராஜ்குமார் ஆனந்த ஆகிய அமைச்சர்களுக்கு தற்காலிகமாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்டை, http://dge1.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக வரும் 3 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மாதம் 63.69 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
நடிகர் வடிவேலுக்கு போலி டாக்டர் பட்டம் கொடுத்த விவகாரத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இனி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் ஆடிட்டோரியத்தை தனியாருக்கு வாடகைக்கு விடுவதை நிறுத்த திட்டமிட்டுள்ளோம் என அண்ணா பல்கலைக்கழகம் துணை வேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார்.
மகிழ்ச்சியுடனும், நல்ல உடல்நலத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் – 70வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி வாழ்த்து
நோய் நொடியுமின்றி பல்லாண்டு மக்கள் பணியாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன் – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து
பார்டர் – கவாஸ்கர் தொடரின் 3வது டெஸ்ட் – இந்திய அணி முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்
அதிகபட்சமாக விராட் கோலி – 22, சுப்மன் கில் 21 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய பந்துவீச்சில் மாத்தியூ குனேமன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்
நாடாளுமன்ற தேர்தல் – 5 மாதத்திற்கு முன்புதான் எங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம்.
2026ல் தமிழகத்தில் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க வியூகம் வகுப்போம் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
70வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து
நீண்ட ஆயுளோடு, பொது வாழ்வில் இன்னும் பல ஆண்டுகள் அவரது பணி தொடர வேண்டுகிறேன் – அண்ணாமலை
இந்தியாவில் 1901ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிக வெப்பம் பதிவு.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கோடை காலம் முன்கூட்டியே தொடக்கம்.
இந்த மாதம் முதல் மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்பு – இந்திய வானிலை மையம் கணிப்பு
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு தடையை நீக்க வலியுறுத்தி அரசு தரப்பில் அவசர முறையீடு – இடைக்கால தடையை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு
சென்னை, விருகம்பாக்கத்தில் பிரபல கலர் லேப் உரிமையாளர் வீட்டில் கொள்ளை
ரூ.66 லட்சம் மதிப்புள்ள நகைகள், ரூ.13 லட்சம் ரொக்கம், 80 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை – மூன்று தனிப்படைகள் அமைப்பு
“ஆசிரியர்களின் நலனைக் காக்க புதிய திட்டம்“- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ரூ. 225 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு
அண்ணா பல்கலை. பெயரில் இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு உள்ளிட்டோருக்கு போலி டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்ட விவகாரம் – போலீசில் புகாரளிக்க அண்ணா பல்கலை. முடிவு
நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து மக்கள் சேவையாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன் – 70வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வாழ்த்து
முதல்வர்களில் முதன்மையானவராகவும், தமிழ்நாட்டை அடக்கியாளத் துடிப்பவர்களின் கனவைத் தகர்ப்பவராகவும் திகழும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீடுழி வாழ இந்தப் பிறந்தநாளில் வாழ்த்துகிறேன் – கமல்ஹாசன் வாழ்த்து
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தனது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேக் வெட்டி கொண்டாட்டம்
70வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து. நீண்ட ஆரோக்கியத்துடனும், நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகள் – பிரதமர் மோடி
70வது பிறந்தநாளான இன்று தன்னை சந்திக்க வரும் அனைவருக்கும் மஞ்சள் பையில் மரக்கன்று ஒன்றை வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
70வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மரியாதை
முயற்சி. முயற்சி.. முயற்சி… அதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி கருணாநிதி நினைவிடத்தில் மலர்களால் அலங்காரம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து. நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்தநாள் வாழ்த்துகள் என்று அவர் ட்வீட் செய்தார்.
வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு. சென்னையில் கேஸ் சிலிண்டர் விலை ரூ.1118.50 ஆக அதிகரிப்பு
புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 70வது பிறந்தநாள். சென்னையில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . மல்லிகார்ஜூன கார்கே, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன