Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
மொழிகள் ஆய்வகம்
மாணவர்களின் கற்றல் திறனுக்கேற்ப மொழிகளை AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் இயல்பாகக் கற்க, சரளமாக பேச, எழுத உதவும் ‘மொழிகள் ‘ ஆய்வகம். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் .
நீர் நிலவரம்
3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2607 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 831 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 500 மில்லியன் கன அடியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
2019ம் ஆண்டு புதுக்கோட்டை இழுப்பூரில் ரேஷன் கார்டு வழங்க ரூ.500 லஞ்சம் வாங்கிய புகாரில், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பச்சமுத்துவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட குற்றவியல் முதன்மை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது
WPL கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி. 148 ரன்கள் இலக்குடன் ஆடிய டெல்லி அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி
பால் உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் பால் தட்டுப்பாடு ஏற்படாது – பால்வளத்துறை அமைச்சர் நாசர்
பால் உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் பால் தட்டுப்பாடு ஏற்படாது – பால்வளத்துறை அமைச்சர் நாசர்
“வாய்ப்பு இருந்தால், காலத்தின் கட்டாயம் என்றால் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன்; விரைவில் சசிகலாவை சந்திப்பேன்” என மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
18 வயது கல்லூரி மாணவி அளித்த புகாரில், பாதிரியார் பெனிடிக் ஆண்டோ மீது போலீசார் வழக்குப்பதிவு தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்
தருமபுரி, பென்னாகரம் அருகே கட்டமடுவு கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்து மீட்கப்பட்ட குட்டியானை * குட்டி யானை வாகனம் மூலம் முதுமலை வன சரணாலயத்திற்கு அனுப்பி வைப்பு. யானையை பிரிய மனமில்லாமல் தேம்பி அழுத வன ஊழியர்
மகாராஷ்டிராவில் H3N2 வைரஸ் காய்ச்சலுக்கு 73 வயது முதியவர் உயிரிழப்பு. அவருக்கு நுரையீரல் தொற்று மற்றும் இதயத்தில் பிரச்சனை இருந்ததாகவும் தகவல்
குஜராத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு
ரயிலில் சிக்கி காலை இழந்த மாணவர் சிதம்பரம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சிக்கி காலை இழந்த மருத்துவக் கல்லூரி மாணவர்.
ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயற்சித்த போது மாணவருக்கு நேர்ந்த விபரீதம்.
துண்டான காலோடு, மாணவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ரயில்வே போலீசார்
இந்தியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து, இங்கிலாந்தும் டிக் டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் முதல்கட்டமாக அரசு அலுவலக ஸ்மார்ட்போன்களில் டிக் டாக் செயலி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசியில் புதிதாக கிரிக்கெட் மைதானம் ஒன்று அமைக்கப்பட உள்ளது.
இந்த கிரிக்கெட் மைதானம் ரூ.300 கோடி பொருட்செலவில் அமைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா லாக்டவுன் காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பட்ட இன்னல்கள், துன்ங்கள் குறித்து அனுபவ் சின்ஹா என்பவர் பீட் என்ற தலைப்பில் படம் ஒன்று இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் ட்ரைலர் வலையொளியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.
நடிகர் விமல் தனது மகன்கள், மகள், மனைவியுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் விலங்கு பார்ட் 2 விரைவில் தொடங்கப்படும்” என்றார்.
சென்னையில் காதலனுக்கு தரகர் வேலை பார்த்த கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது சக மாணவிகளிடம் பணத்தாசை காட்டி காதலனுடன் இணைந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக புகார் பதியப்பட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா; ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்து த.பெ.தி.க சாம்பல் அனுப்பும் போராட்டம்
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் ரவியை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் உயிரிழந்தவர்களின் சாம்பல் அனுப்பும் போராட்டம் கோவையில் நடைபெற்றது.
தருமபுரி, பென்னாகரம் அருகே கட்டமடுவு கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்து மீட்கப்பட்ட குட்டியானை வாகனம் மூலம் முதுமலை வன சரணாலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது வன ஊழியர் ஒருவர் குட்டியானையை பிரிய மனமில்லாமல் தேம்பி அழுதார்.
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 2 பைலட்களும் உயிரிழப்பு; சடலங்களின் சிதிலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.
டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய ராகுல் காந்தி, “ஆஸ்திரேலியாவில் ஸ்டேட் வங்கி தலைவர், அதானி மற்றும் அம்மாநில முதலமைச்சர் ஆகியோருக்கு இடையே என்ன பேச்சுவார்த்தை நடைபெற்றது; அந்த பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி ஏன் பங்கேற்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; தன் சொந்தக் கட்சிக்காரர்களையும் அமைச்சர்களையும் கட்டுப்படுத்த முடியாத கையறு நிலையில் முதல்வர் இருக்கிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
சிதம்பரம் அருகே அரசு கலைக் கல்லூரியில் மகளிர் தினத்தன்று நடந்த கலை நிகழ்ச்சிக்கு வந்த முன்னாள் மாணவர்கள், விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். இதனால், அனைவரையும் பேராசிரியர் மணியரசன் வெளியேற சொன்னதால் ஆத்திரம் அடைந்த முன்னாள் மாணவர்கள் கல்லூரிக்கு வெளியே பேராசிரியர் மணியரசனை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.
இந்திய ராணுவத்துக்கு ரூ.70,000 கோடி மதிப்பில் தளவாடங்கள் வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கடற்படைக்கு 60 யு.எச். ரக ஹெலிகாப்டர்களை HAL நிறுவனத்திடம் இருந்து ரூ.32,000 கோடியில் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி, “என் தரப்பு விளக்கத்தை நாடாளுமன்றத்தில் அளிக்க அனுமதி தருமாறு சபாநாயகரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளேன். 4 அமைச்சர்கள் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி வருவதால், நாளைய தினம் எனக்கு பேச வாய்ப்பு கிடைக்கலாம்.” என்று கூறியுள்ளார்.
முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டம் நடைபெறும் என பால் உற்பத்தியாளர் நல சங்கம் அறிவித்துள்ளது. இப்போராட்டத்தால், ஆவின் நிறுவனத்திற்கு நாள் ஒன்றுக்கு 5லட்சம் லிட்டர் வரை, பால் கொள்முதலில் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
“இந்திய பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசை வெல்வதற்கு தகுதியானவர். அமைதிக்கான நோபல் பரிசுக்கான மிகப்பெரிய போட்டியாளராக பிரதமர் மோடி இருக்கிறார். பிரதமர் மோடியின் கொள்கைகளால் இந்தியா பணக்கார நாடாக மாறி வருகிறது.” என்று நோபல் பரிசுக்குழுவின் துணைதலைவர் ஆஷ்லே டோஜே கருத்து தெரிவித்துள்ளார்.
நாமக்கல் அடுத்த பொட்டிரெட்டிப்பட்டியில் வட்டிக்கு பணம் வாங்கி திரும்ப தரவில்லை எனக் கூறி, செங்கல் சூளை தொழிலாளியை பாஜக நிர்வாகி தாக்கியுள்ளார்.
செங்கல் சூளை தொழிலாளியை தாக்கிய பாஜக நிர்வாகி ஜெயபிரதாப், அவரது தந்தை மதுபாலன் உள்ளிட்ட மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 754 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதே அளவிலான பாதிப்பு கடந்தாண்டு (2022) நவம்பர் மாதத்தில் ஏற்பட்டிருந்தது குறிபிடத்தக்கது.
சென்னையில் சக மாணவிகளை ஆசை காட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.
12 ஆம் வகுப்பு படிக்கும் போதே பிரகாஷ் என்ற பாலியல் தரகரை காதலித்த மாணவி, அதன் பின் சென்னையில் பிரபல பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ளார். கல்லூரியில் படித்து கொண்டே சக தோழிகளுக்கு பணத்தாசை காட்டி பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார்.
இந்நிலையில், மாணவியை போலீசார் கைது செய்துள்ளனர். தப்பியோடிய அவரது காதலன் பிரகாஷை தேடி வருகிறார்கள்.
நேபாளம் – அரபு அமீரகம் இடையேயான உலகக்கோப்பை லீக் தொடர் போட்டி, நேபாள நகரம் கீர்த்திப்பூரில் 15 ஆம் தேதி நடைபெற்றது இப்போட்டியை காண 30 ஆயிரம் ரசிகர்களுக்கு மேல் குவிந்தனர். டிக்கெட் கிடைக்காமல் மைதானத்திற்கு வெளியே இருந்த ரசிகர்கள் மரங்களில் தொங்கியபடியும் பேருந்தின் மீது நின்றபடியும் போட்டியை கண்டு ரசித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாட்டின் சுங்க சாவடி வருவாய் 34 ஆயிரம் கோடியாக உள்ளது.
இதில் தமிழ்நாட்டில் இருந்து ரூ.2695 கோடி பெறப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சந்தவுசியில் உள்ள குளிர்பதன கிடங்கின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது இடிபாடுகளுக்குள் சுமார் 30 முதல் 35 தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது
எதிர்கட்சிகளின் கடும் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 4வது நாளாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது
இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் ஒன்று வியாழக்கிழமை அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டலா மலைகள் அருகே விழுந்து நொறுங்கியதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் பி.டி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. விமானிகளை தேடும் பணி தொடங்கியுள்ளது.
நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட சி.பி.சி.எல் எண்ணெய் குழாய் மே 31ம் தேதி முழுமையாக அகற்றப்படும் என நாகை மீன்வளத்துறை அலுவலகத்தில் மீனவர்கள், சி.பி.சி.எல் ஆலை நிர்வாகிகள், வருவாய்த்துறை இடையே நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது
ஜூன் 14ஆம் தேதி வரை 3 மாதங்களுக்கு ஆதார் அட்டை விபரங்களை இலவசமாக புதுப்பிக்கலாம். இணையதளத்தில் புதுப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது
இ.பிஎஸ் உருவப்பொம்மையை எரித்ததால் நீக்கப்பட்டவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதா? பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டக்கூடாது. பாஜகவின் செயல் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போலாகிறது என பாஜகவுக்கு ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்
கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான முகமது அசாருதீனுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என புழல் சிறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவலில் வைத்து விசாரித்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் அசாருதீனை தலைகீழாக தொங்க விட்டு தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
காரைக்கால், திருநள்ளாரில் உள்ள புகழ் பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. இன்று தொடங்கிய காணிக்கை எண்ணும் பணியில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள்
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடல் நலம் குறித்து விசாரித்தார்
சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடல் நலம் குறித்து விசாரித்தார்
தருமபுரியில் நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சமும், காயமடைந்தவருக்கு ரூ. 1 லட்சமும் நிதியுதவி வழங்கி மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை; ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியிலேயே தேர்வுகள் நடைபெறும்- அமைச்சர் அன்பில் மகேஸ்
சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.43400-க்கு விற்பனையாகிறது.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்காதது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
மெட்ரோ ரயில் பணியால் சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலை 20 மீட்டரில் இடமாற்றம் செய்யப்படுகிறது.
பாஜக மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்களின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பட்டாசு குடோன் வெடித்த வெடி விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
“அடுத்தவர்களின் பொருளுக்கு ஆசைப்படுவர்கள் வாழத் தகுதியில்லை”; “இப்படிக்கு கடவுளின் தோழன்” – அரக்கோணம் ரயில் நிலையத்தில் கிடந்த மர்ம பார்சலால் பரபரப்பு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.43,400க்கு விற்பனை . ஒரு கிராம் தங்கம் ரூ.5,425க்கு விற்பனை
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று முக்கிய ஆலோசனை. பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை . 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா என்பது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார்