Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
2ம் இடத்தில் டெல்லி அணி
மகளிர் ப்ரிமீயர் லீக் தொடரில், குஜராத் அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது . டெல்லி அணி, புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.
நீர் நிலவரம்
புழல் ஏரியில் நீர்இருப்பு 2680 மில்லியன் கனஅடியாக உள்ளது; ஏரியில் இருந்து 159 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 20 கனஅடியாக உள்ளது; நீர்இருப்பு 831 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 500 மில்லியன் கனஅடியாக உள்ளது; ஏரிக்கு நீர்வரத்து 15 கனஅடியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
தமிழகத்தில் கோயில் திருவிழாக்களில் நடத்தப்படும் குறவன் – குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் மார்ச் 10-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
WPL கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு 160 ரன்களை இலக்காக உ.பி. வாரியர்ஸ் அணி நிர்ணயித்தது. முதலில் ஆடிய உ.பி. வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது
ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்
புதுச்சேரி, காரைக்காலில் நகைக்கடையில் 12 சவரன் போலி தங்க நகையை விற்க முயன்ற விவகாரத்தில் தலைமறைவாக உள்ள உதவி ஆய்வாளரின் காதலி புவனேஸ்வரியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகை, புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்களையும் இரு படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்
ஒன்றிய பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்கவுள்ள நிலையில், குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கருடன் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே சந்தித்து பேசினார்
பிரதமர் மோடி பயணத்தின்போது நடந்த பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என கேள்வி எழுப்பி பஞ்சாப் அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது
தாம்பரம் இரும்புலியூரில் நடைபெற்ற தனியார் கூட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் புறப்பட்டதால், பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாமல் திணறி வருகிறது.
சமையல் எரிவாயு விலையை குறைக்க கோரி சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இளைஞர்கள் தங்களது தலைகளில் விறகு கட்டைகளை சுமந்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று வங்க தேசம் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
3 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
கடந்தாண்டு நடைபெற்ற உலக கோப்பை டி20 தொடரில் இங்கிலாந்து சாம்பியன் என்பது நினைவு கூரத்தக்கது.
இசையமைச்சர் ஹாரிஸ் ஜெயராஜின் ட்விட்டர் கணக்கு இன்று முடக்கப்பட்டது. இன்று ட்விட்டர் சரியான நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் அதனை தெரிவித்துள்ளது.
அந்த ட்வீட்டில் தனது கணக்கு 2 நாள்கள் முடக்கப்பட்டு இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4ஆவது டெஸ்ட் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வருகிறது.
இந்தப் போட்டியில், 4வது நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலிய அணி 88 ரன்கள் பின்னடைவில் உள்ளது. முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 571 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தன்பாலின திருமணத்துக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், “நாட்டில் உள்ள திருமணச் சட்டங்களை, பல்வேறு மதச் சமூகங்களின் பழக்கவழக்கங்கள் தொடர்பான தனிப்பட்ட சட்டங்கள்/குறியீடு செய்யப்பட்ட சட்டங்களால் நிர்வகிக்கப்படும்.
தன்பாலின திருமணங்கள் சமூக விழுமியங்களுக்கு முழுமையான அழிவை ஏற்படுத்தும்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது
உத்தரப் பிரதேச மாநிலத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள பூர்வாஞ்சல் விரைவு சாலையில் கார் லாரி மீது மோதியதில் 5 பேர் பலியானார்கள்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு கிராமங்கள், நகரங்களின் வளர்ச்சியில் பாஜக கவனம் செலுத்துகிறது.
கர்நாடகாவின் இரட்டை என்ஜின் அரசு மக்களுக்காக உழைத்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கல்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு சென்ற அரசு பேருந்தும் டிப்பர் லாரியும் ஒன்றுக்கொன்று மோதியதில் 30க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கோவையில் ஆளுநர் ரவிக்கு கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். காரல் மார்க்ஸ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆளுநர் ரவியை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் பேருந்தில் பயணிக்கும்போது அவதூறு பேசி நேரலை செய்ததாக ராஜேஸ்வர் என்பவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி: “மோடிக்கும், பாஜகவுக்கும் குழி தோண்டுவதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது; ஆனால், பெங்களூரு – மைசூரு நெடுஞ்சாலை அமைப்பதில் நான் தீவிரமாக இருந்தேன்; நான் எளிய மக்களின் வாழ்க்கையை உயர்த்திக் கொண்டிருக்கிறேன்; எளிய மக்களுக்கான பணத்தை காங்கிரஸ் கொள்ளையடித்துக் கொண்டிருந்தது” என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் சென்னையில் 2 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும்; 138 ஓட்டுநர்கள் இல்லாத தானியங்கி ரயில்கள் இயக்கப்பட உள்ளன என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ரயில் சேவைகளை அதிகரிக்க திட்மிட்டுள்ளதாக தகவல்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 23 வருவாய்த் துறையினரை அதிரடியாக மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார்.
வட்ட வழங்கல் அலுவலர், தலைமை உதவியாளர், கனிமவளத் துறை அலுவலர் உள்பட 23 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்கக் கோரி திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நோட்டிஸ்!
போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரம் தொடர்பாக வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 50 பேருக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கியது விசாரணையில் கண்டுபிடிப்பு/வங்கிக் கணக்குகளின் பணபரிவர்த்தனைகளை ஆய்வு செய்யும் சென்னை போலீசார்.
4 பிரபலங்களுக்கு இலவசமாக டாக்டர் பட்டம் வழங்கிவிட்டு, மீதமுள்ளவர்களுக்கு பணம் வாங்கிக் கொண்டு டாக்டர் பட்டம் வழங்கி மோசடி * வசூல் செய்த பணத்தில், பாதியை நிகழ்ச்சிக்காகவும், மீதி பணத்தில் உல்லாசமாகவும் இருந்தது கண்டுபிடிப்பு
அமமுக தலைமை நிலைய செயலாளரும், திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.கே உமாதேவன் மற்றும் அமமுக செய்தி தொடர்பாளரும், மாநில இளைஞரணி செயலாளராக இருந்த கோமல் ஆர்.கே அன்பரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தார்!
கர்நாடகாவில் திட்டப்பணிகளை தொடங்கிவைக்க வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
மாண்டியாவில் வழிநெடுகிலும் நின்று மலர்களை தூவி வரவேற்ற பாஜகவினர்
ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார்
ஆந்திர மாநிலம் புத்தூர் அருகே லாரி – கார் மோதி பயங்கர விபத்து
சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
சென்னையில் இருந்து காரில் திருப்பதி சென்ற போது சோகம்
தேர்வில் நன்கு தெரிந்த விடைகளை முதலில் எழுத வேண்டும். அனைத்துத் தேர்வுகளையும் அச்சமின்றி மாணவர்கள் எழுத வேண்டும் – பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுரை
நகைக்கடை வியாபாரியிடம் போலீஸ் போல் நடித்து ரூ.2.5 கோடி பணம், ஒன்றரை கிலோ தங்கம் வழிப்பறி
சென்னையில் இருந்து பேருந்தில் காரைக்குடி சென்ற நகை வியாபாரியிடம் நூதன முறையில் கொள்ளை
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவிப்பு
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலின் தேர் திருவிழாவை முன்னிட்டு அறிவிப்பு
12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும்
மதுரை விமான நிலையம் சம்பவம் தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு. விமான நிலைய பேருந்தில் பழனிசாமியை தரைக்குறைவாக பேசி வீடியோ பதிவிட்ட ராஜேஸ்வரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் பழனிசாமி மீது வழக்கு.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கூடுதல் பிரிவுகளில் வழக்குப்பதிவு. ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது வட மாநிலத்தவர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதால், இந்திய தண்டனை சட்டம் 153(B)(c), 505(1)(c),506(1) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு.
அதிமுகவிற்கு புதிதாக 2 நிர்வாகிகளை நியமித்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தலைவர், வர்த்தக அணி இணைச்செயலாளர் ஆகிய பொறுப்புகளுக்கு நியமித்துள்ளதாக அறிவிப்பு,.
திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் அருகே காரை ஏற்றியதில் மூன்று பேர் உயிரிழப்பு . சாலை ஓரம் தூங்கி கொண்டிருந்த 3 யாசகம் எடுப்பவர்கள் உயிரிழப்பு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு. வடமாநிலத்தவர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசிய புகாரில் நடவடிக்கை.
தேர்வை நினைத்து பயம் வேண்டாம். எந்த கேள்வியாக இருந்தாலும் நீங்கள் படித்த புத்தகத்திலிருந்துதான் வரப்போகிறது. இதனால் உறுதியாக கையாளுங்கள். உங்களுக்கு தேவை தன்நம்பிக்கையும் மன உறுதியும்தான் . அது இருந்தாலே நீங்கள் பாதி வெற்றிபெற்றுவிட்டீர்கள். தேர்வு உங்களை பரிசோதிக்க நடத்தப்படுவதில்லை. உங்களை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லத்தான் நடத்தப்படுகிறது. முதல்வராக மட்டும் இல்லை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வாழ்த்துகிறேன். All the best – முதல்வர் ஸ்டாலின்
தூத்துக்குடி: வழக்கறிஞர் முத்துக்குமார் கொலையில் முக்கிய குற்றவாளியான ஜெயப்பிரகாஷை போலீசார் கைது செய்யு முயலும் போது, காவல்துறையினரை தாக்கிவிட்டு ஜெயப்பிரகாஷ் தப்ப ஓட முயற்சி. போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஜெயபிரகாஷ் காலில் காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதி.
ராமேஸ்வரம்: இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்த16 மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை. அவர்டகளிடம் இருந்து 2 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்திற்கு பிரதமர் மோடி இன்று பயணம். ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் வரும் 13ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில், தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு. தேர்வு மையங்களில் மின்தடை ஏற்படுவதை தவிர்க்க உரிய முன்னேற்பாடுகள் செய்யப்படும் எனவும் மின்வாரியம் அறிவிப்பு
கடலூர்; நெய்வேலி வடக்குத்து பகுதியில் தீப்பிடித்து எரிந்த காவல் துறை வாகனம் . தீயணைப்புத் துறையினரால் தீ அணைக்கப்பட்ட நிலையில் வாகனத்தின் முன் பகுதி முழுமையாக எரிந்து சேதம். தீப்பிடித்த காரணம் குறித்து போலீசார் விசாரணை