Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி
13வது உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது; 74 நாடுகளை சேர்ந்த 350 வீராங்களைகள் 12 உடல் எடை பிரிவுகளில் போட்டியில் பங்கேற்கின்றனர்.
நீர் நிலவரம்
3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2623 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 831 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 500 மில்லியன் கன அடியாக உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நெஞ்சுவலி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிசென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி
காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நெஞ்சுவலி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிசென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி
திருவள்ளூர், நசரத்பேட்டை போக்குவரத்து துறை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை. லஞ்ச ஒழிப்பு போலீசாரை கண்டதும் ஊழியர்கள்கையில் இருந்த பணத்தை தூக்கி எறிந்தனர். கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து, ஆர்.டி.ஓ. இன்ஸ்பெக்டர் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், வெளி ஆட்களை பணியில் அமர்த்தி சோதனைச் சாவடி ஆய்வாளர் பணம் வசூல் செய்வதாக எழுந்த புகாரில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை, தலைமை செயலகத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலர் முருகானந்தம் ஆகியோர் முதல்வர் ஸ்டாலின் உடன் சந்திப்பு
நிதிநிலை அறிக்கையில் உள்ள அம்சங்கள் குறித்து ஆலோசனை
நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கை வரும் 20ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் சந்திப்பு
8 வழிச்சாலை திட்டம் குறித்து மாநிலங்களவையில் எம்.பி., அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சென்னை – சேலம் 8 வழிச் சாலை திட்டத்திற்கு மாநில அரசிடமிருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை என கூறியுள்ளார்.
WPL கிரிக்கெட் தொடர் – பெங்களூரு அணிக்கு 136 ரன்களை இலக்காக நிர்ணயித்தது உ.பி அணி முதலில் ஆடிய உ.பி அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் எடுத்தது
ஆஸ்திரேலியா உடனான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகல் ஷ்ரேயாஸ் ஐயருக்கான மாற்று வீரரை பிசிசிஐ விரைவில் அறிவிக்க வாய்ப்பு. இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திலிப் உறுதி
காரைக்கால் நகைக் கடையில் போலி நகை அடகு வைத்து மோசடி செய்த வழக்கில் 50 லட்ச ரூபாய்க்கு போலி நகைகளை தயாரித்து பல்வேறு இடங்களில் 15 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது. இது குறித்து ஆந்திர சொகுசு விடுதியில் கைது செய்யப்பட்ட எஸ்.ஐ.யின் காதலி புவனேஸ்வரி போலீசாரிடம் வாக்கு மூலம்
மகளிர் பிரிமீயர் லீக் இன்றைய ஆட்டத்தில் உத்தரப் பிரதேசம்- பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஸ்ரேயாஷ் ஐயர் விலகினார்.
காயம் காரணமாக அவர் விலகியுள்ளார். இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மார்ச் 17ஆம் தேதி தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஸ்ரேயாஷ் ஐயர் விலகினார்.
காயம் காரணமாக அவர் விலகியுள்ளார். இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மார்ச் 17ஆம் தேதி தொடங்குகிறது.
திருச்சி சிவா வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை பகுதியில் லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் சோதனை சாவடியில் இருந்து ஊழியர்கள் பணத்தை அள்ளி வெளியே வீசினர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாடு முழுவதும் மாடுகளுக்கு தோல் கழலை நோய், பருவகால மாறுபாடு காரணமாக பால் உற்பத்தி குறைந்துள்ளது; ஆவின் நிறுவனத்தில் மட்டும் பால் கொள்முதல் குறைந்துவிட்டதாக கூறுவது தவறானது; ஆவின் நிறுவனத்தில் பால் தட்டுப்பாடு விவகாரம் தொடர்பாக பால்வளத்துறை விளக்கம் அளித்துள்ளது.
100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு நடப்பதை மிக முக்கிய பிரச்னையாகப் பார்க்க வேண்டியுள்ளது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
100 நாள் வேலைத் திட்டத்தில் மோசடி செய்த ஊராட்சி ஒன்றியச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழகில் தென்காசி மாவட்ட ஆட்சியர், ஊராட்சி ஒன்றியச் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில் வெப்பம் சுட்டெரிக்க தொடங்கிவிட்ட நிலையில், வெப்ப அலை பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை தற்காத்து கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மதியம் 12 டூ மாலை 3 மணி வரை வெளியே செல்லாதீர்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று நடந்த 12ம் வகுப்பு ஆங்கில பாடத்தேர்வில் 49 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். முதல் நாள் தேர்வுக்கு வராத மாணவர்கள் இன்றைய தேர்வுக்கும் வரவில்லை என கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை நங்கநல்லூர், தில்லை கங்கா நகரில் உள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் வீட்டை முற்றுகையிட்டு, அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய பா.ஜ.க-வினர் 8 பேரை போலீஸ் கைது செய்தது
திருச்சி மோதல் சம்பவம் தொடர்பாக தி.மு.க நிர்வாகிகள் தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை, மாவட்ட துணை செயலாளர் முத்துச்செல்வம் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாக கூறி தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
வீட்டு கடன், தொழில் கடன் கட்ட கால அவகாசம் வழங்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. வங்கிகள் முதலாளிகளுக்கு சாதகமாக செயல்படுகிறது. தனியார் மற்றும் பெரு முதலாளிகளுக்கு சாதகமாக வங்கிகள் செயல்படுகிறது. சாதாரண பாமரனுக்கு ஒரு சட்டம் பெரும் முதலாளிகளுக்கு ஒரு சட்டம் என வங்கி விதிகளில் உள்ளதா” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஹிஜாவு நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது, 162 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. ரூ.41 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.4,414 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவத்தில் 54 பேர் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டுள்ளனர், என ஆருத்ரா, ஹிஜாவு மோசடியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள் விளக்கம் அளித்துள்ளார்
திருச்சி காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளரும், தி.மு.க பகுதிச் செயலாளருமான திருப்பதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்
காரைக்குடி அருகே டாஸ்மாக் கடையில் மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில், படுகாயம் அடைந்த ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
திருச்சி நீதிமன்ற காவல்நிலையத்தில் திமுக அமைச்சர், எம்.பி ஆதரவாளர்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில் அமைச்சர் நேரு, எம்.பி சிவா ஆதரவாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
ஆதிதிராவிடர் நத்தம் நிலத்தில் குடியிருந்த 5 பேர் தொடர்ந்த வழக்கு சென்னை, பூந்தமல்லியில் ஆதி திராவிடர் நத்தம் நிலத்தில் வசித்தவர்களை, மெட்ரோ ரயில் திட்டத்துக்காக காலி செய்யக்கூறி பிறப்பித்த தாசில்தாரின் உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது, உரிய இழப்பீட்டை வழங்கிய பின் நிலத்தை கையகப்படுத்திக் கொள்ளலாம் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது
கூட்டுறவு சங்கங்களின் விதிகளை மீறி, அண்டை மாநிலங்களுக்கு பால் விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் சுமார் 2 ஆயிரம் சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது
மாநில ஆளுநர்களை நியமிக்கும் முன்பாக சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களை கலந்தாலோசிப்பது ஒரு மரபாக வேண்டுமானால் பின்பற்றப்படலாம். இதற்காக அரசியல் சாசன சட்டம் பிரிவு 155ஐ திருத்தம் செய்ய அவசியம் இல்லை என மாநிலங்களவை எம்.பி., ஜான் பிரிட்டாஸ் கேட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது
வட மாநில தொழிலாளர்களை முறைப்படுத்த கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பாக பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி வழக்கில், மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது
ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், நாளை இரவு 10.50 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், சுகாதாரத்துறையினருடன் ஆலோசனை நடத்திய பின் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன் கூட்டியே தேர்வு நடத்தலாமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளில் அமளி காரணமாக மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அரசு செயலாளர்கள் மாதந்தோறும் குறைந்தபட்சம் 2 மாவட்டங்களுக்குச் சென்று கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நிலுவையில் உள்ள அனைத்துப் பணிகளையும், குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே முடிக்க வேண்டும்- தலைமைச் செயலகத்தில் மு.க.ஸ்டாலின் உரை
காரைக்குடி பெட்ரோல் பாட்டில் வீச்சில் உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கி மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மீனவர்களுக்கான ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
வைரஸ் காய்ச்சல் பரவும் நிலையில், தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் தற்போது இல்லை. பொதுமக்கள் பதட்டமடைய வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை பணிநீக்கம் செய்ய வேண்டும்
அநீதிக்கு எதிராக போராடிய மாணவிகளை பழிவாங்குவதா? – பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
பாதிக்கப்பட்ட மாணவிகளின் நன்நடத்தை சான்றிதழை திரும்பப் பெற்று புதிய சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் – ராமதாஸ்
பொதுத்தேர்வுகளை கருத்தில் கொண்டு கோவில் திருவிழாக்களின்போது ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
டெல்லி, நாடாளுமன்றம் வெளியே உள்ள சாலையில் 144 தடை உத்தரவு அமல்
அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பேரணியாக எதிர்க்கட்சிகள் செல்ல இருந்த நிலையில் 144 தடை
கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி அறிவழகன் கைது
இரு சக்கர வாகனம், மூன்றரை சவரன் நகைகள் பறிமுதல்
சிசிடிவி காட்சி மூலம் போலீசார் நடவடிக்கை
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு தேர்வு நடத்தி முடிக்க திட்டம்?
ஏப்ரல் 24 முதல் நடைபெறுவதாக இருந்த தேர்வு ஏப்ரல் 17-ம் தேதியே துவங்கும் என்று தகவல்
வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை முடிவு என தகவல்
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாம் ரூ. 5 கோடி செலவில் மேம்படுத்தப்படும்
யானை பாகன்களின் பயன்பாட்டிற்கு உகந்த வீடுகள் கட்ட ரூ. 9.10 கோடி நிதி உதவி வழங்கப்படும்
கோவை, சாடிவயலில் புதிய யானைகள் முகாம் ரூ.8 கோடி செலவில் அமைக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின்
ஆஸ்கர் வென்ற “தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படத்தில் நடித்த பொம்மன் – பெல்லி தம்பதிக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 82.30-ல் வர்த்தகம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது பகுதி – எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக
இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு
காலை 11 மணிக்கு அவை தொடங்கிய நிலையில் சில நிமிடங்களிலேயே ஒத்திவைப்பு
புதுச்சேரி மாநிலத்தில் ஆரம்ப பள்ளி முதல் 8-ம் வகுப்பு வரை 10 நாட்கள் விடுமுறை
வைரஸ் தொற்று நோய் பரவி வருவதால் 16ம் தேதி முதல் 26ம் தேதி வரை விடுமுறை
பேரவையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
தமிழக அரசின் முன்னுரிமை திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை. திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை. பல்வேறு துறைகளைச் சார்ந்த நடைமுறையில் உள்ள 68 திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு
திருச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் சிவா வீட்டின் மீது தாக்குதல். வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைப்பு
2023ம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசுக்கான பட்டியலில் பிரபல தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன். பெருமாள் முருகன் எழுதிய பூக்குழி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Pyre நாவல் இடம்பெற்றுள்ளது
அதானி குழும விவகாரத்தை விவாதிக்க கோரி காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம் . மக்களவை செயலருக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடிதம்