உக்ரைன் குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக ரஷ்ய அதிபர் புதின் மற்றும் ரஷ்ய குழந்தைகள் உரிமை ஆணையரை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் மழை
சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் லேசான சாரல் மழை அண்ணாசாலை, எழும்பூர், தேனாம்பேட்டை, வள்ளுவர்கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மழை.
விளையாட்டில் இன்று
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி. மும்பையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடக்கம் . முதல் ஒருநாள் போட்டிக்கு மட்டும் ஹர்திக் பாண்டியா கேப்டன் . ஆஸ்திரேலியா. அணிக்கு கம்மின்ஸ்க்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
செங்களம் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை பேசிய நடிகை வாணிபோஜன் நான் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது..? இந்த எண்ணம் எனக்குள் ஓடிக்கொண்டே இருக்கும்” என கூறியுள்ளார்
பிஎம் மித்ரா திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க விருதுநகரை தேர்வு செய்ததற்காக நன்றி. இதன் மூலம் தமிழ்நாட்டில் ஜவுளித்துறை வளர்ச்சி அடையும். என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆஸி. எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி 189 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 39.5 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்து அபார வெற்றி
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இரு ராணுவ வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ மேஜர் ஜெயந்த்-ன் குடும்பத்திற்கு ₹20 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவு
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் வரும் மார்ச் 19-ந் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சிக்காக மே 19-ந் தேதி ஒரு நாள் மட்டும் சென்னை மெட்ரோ ரயில்சேவை இரவு 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்“ “ஜனநாயக முறையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெற உள்ளது” “தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்”- ஜெயக்குமார்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் தேர்தலில் போட்டியிட நாளை முதல் நாளை மறுநாள் 3 மணி வரை வேட்புமனு தாக்கல். 27ஆம் தேதி காலை 9 மணி முதல் வாக்கு எண்ணிக்கை – அதிமுக தலைமை நிர்வாகம் அறிவிப்பு
திருச்சி சிவா – அமைச்சர் கே.என். நேரு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அமைச்சர் கே.என். நேரு: தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட தவறால், நடக்க கூடாதது நடந்து விட்டது. நானும், சிவாவும் மனம் விட்டு பேசினோம். முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி சிவாவை நேரில் சந்தித்துள்ளேன். திருச்சி சிவாவை சமாதானப்படுத்திவிட்டு வருமாறு முதல்வர் என்னை அறிவுறுத்தினார் என்று கூறினார்.
திருச்சி சிவா: “இருவரும் தத்தமது மனதில் உள்ள கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம்;
நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்; நேரு ஆற்றுகிற பணியினை என்னால் ஆற்ற முடியாது. நாடாளுமன்றத்தில் நான் ஆற்றுகிறப் பணிகளை அவரால் ஆற்ற முடியாது. ஆனால், இருவரும் இயக்கத்தின் வளர்ச்சிக்காகவே அவரவர் தளத்தில் பணியாற்றுகிறோம் என்று கூறினார்.
திருச்சி சிவா – அமைச்சர் கே.என். நேரு இருவரின் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம்
ஏற்பட்ட நிலையில், எம்.பி. திருச்சி சிவாவின் இல்லத்திற்கு சென்று அமைச்சர் கே.என். நேரு சந்தித்தார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடந்தது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அதிகப்படியான நிதிவைப்பு அல்லது கடன் வளர்ச்சியானது வங்கிக்கட்டமைப்புக்கு நல்லது அல்ல என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் இடியுடன் கூடிய லேசான மழை தொடர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கேலரியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். புதிய கேலரிக்கு கலைஞர் மு. கருணாநிதி பெயரை சூட்டினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி, சி.எஸ்.கே. உரிமையாளர் ஸ்ரீனிவாசன், கேப்டன் தோனி, பிராவோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் 50,000 மாணவர்கள் பங்கேற்காத விவகாரம் தொடர்பாக பள்ளி மேலாண்மை குழுக்கூட்டம் வரும் 24-ம் தேதி கூடுகிறது. மார்ச் 24 மற்றும் ஏப்ரல் 10, 24-ம் தேதிகளில் சிறப்பு மேலாண்மைக்குழு கூட்டம் நடத்த பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கில் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக் கோரிக்கை வக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேங்கைவயல் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றினால் மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
டெல்லி கலால் கொள்கை வழக்கில் மணீஷ் சிசோடியாவின் அமலாக்கத் துறை இயக்குனரகக் (இ.டி) காவலை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வில் பங்கேற்காத சுமார் 50,000 மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அம்மாணவர்கள் குறித்த விவரங்களை கண்டறிந்து பெற்றோர்களை சந்தித்து துணை தேர்வில் கலந்து கொள்ள வைப்பதற்கான ஆலோசனை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், ஜெயமங்கலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் ஜெயந்த் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடக, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேஷ் மற்றும் உத்தர பிரதேஷில் ரூ.4,445 கோடிக்கு 'PM MITRA ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காக்கள்' அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
தனியார் நிறுவனங்கள் போராட்டத்தை பயன்படுத்தி பால் கொள்முதல் செய்ய போடப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் தொய்வின்றி நடைபெற்றது என்று ஆவின் நிறுவனம் தனக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்திற்கு பதிலளித்துள்ளது.
தமிழ்நாட்டில் காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
திமுக எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு இருக்காது என்று சசிகலா கூறியிருக்கிறார்.
சென்னை, ஆலந்தூர், ஆதம்பாக்கம் பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியது. மழைநீரில் அப்பகுதியில் உள்ள வாகனங்கள் மிதந்து வருகின்றன
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 4 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று, ஓபிஎஸ் தாயார் மறைவிற்கு ஆறுதல் தெரிவித்தார். அவருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் சென்று ஆறுதல் தெரிவித்தார்
தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
கோவை வெள்ளியங்காடு பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றி திரியும் காட்டுயானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
யானையின் நடு நாக்கில் வெட்டு காயம் ஏற்பட நாட்டு வெடி காரணமா? அல்லது சண்டையின் போது தந்தம் கிழித்து யானைக்கு காயம் ஏற்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் அதானி குழும முறைகேட்டை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்
டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார்
பள்ளிகளுக்கு குறைந்தபட்ச வருகை இருந்தால்தான் தேர்வு எழுத முடியும் என்ற நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆண்டிற்கு மூன்று நாட்கள் வருகை தந்தாலும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும். இரண்டு அல்லது மூன்று நாட்கள் பள்ளிக்கு வந்தாலே தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்குகிறோம். மாணவர்களை தேர்வு எழுத வைக்க முயற்சிக்கிறோம். என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 2வது அமர்வில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக இரு அவைகளும் வரும் திங்கள் காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது
அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே காவலர்கள் பிரச்சினைக்கு குரல் கொடுத்தவர் கருணாநிதி. கருணாநிதியின் தொலைநோக்கு திட்டத்தால் இன்று 34000 பெண் காவலர்கள் பணியாற்றுகின்றனர். முதல்வர் என்ற முறையில் எனக்கான பாதுகாப்பு படையில் பெண் காவலர்கள் உள்ளனர் என தமிழ்நாடு மகளிர் காவலர் பொன் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்
பெண்கள் மீதான பார்வையை ஆண்கள் மாற்றிக்கொள்ள ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளேன். பெண்களின் தியாகத்தை மதிக்க வேண்டும் என நான் உத்தரவிட்டுள்ளேன். பெண்கள் கம்பீரமாக அமர்ந்திருப்பதை பார்க்க பெரியார், அண்ணா, கருணாநிதி இல்லையே என மகளிர் காவலர் பொன்விழாவில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரியில் ட்ரோன்கள் பறக்க போலீசார் தடை விதித்துள்ளனர்
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து, இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓரிரு நாட்களில் விடுதலையான 12 மீனவர்களும் சொந்த ஊர் திரும்புவார்கள் என கூறப்படுகிறது
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.43,600க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ.5,450க்கு விற்பனை
திருவண்ணாமலையில் இரு வேறு இடத்தில் நடந்த சாலை விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு. வெறையூரில் அரசு பேருந்தும், இரு சக்கர வாகனம் மோதியதில் 3 பேர் பலி . திருவண்ணாமலை – செங்கம் சாலையில் சரக்கு லாரி, கார் மோதிய விபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு
அருணாசலபிரதேசத்தில் ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து . ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி ஜெயந்த் தமிழகத்தை சேர்ந்தவர் . மேஜர் ஜெயந்தின் உடல் இன்று மாலை சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறது
தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் . ஈரோடு, ராயபாளையத்தில் சாலையில் மாடுகளை நிறுத்தியும், பாலை ஊற்றியும் போராட்டம்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்கள். தமிழ்நாடு உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
தமிழகத்தில் 19ம் தேதிவரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு . மின்னல் ஏற்படும்போது திறந்த வெளியில் நிற்க வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை