Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடரும் நில்நடுக்கம் மக்கள் அச்சம்
தெற்கு துருக்கி மற்றும் சிரியாவில் எல்லையில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு செய்யப்பட்டது. தொடர் நிலநடுக்கங்களால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு
பிரேசிலின் தென்கிழக்கில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் காயமடந்துள்ளனர்.
மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் சிவசேனா பெயர், சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கி தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில், இன்று அக்கட்சியின் கூட்டத்தில் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்
திருவாரூரில் உள்ள கமலாலயம், கடல் போலத் தோற்றமளிக்கும்… ஆனாலும் அது குளம்தான்.. அங்கு அமர்ந்து மகிழ்ந்தபோது, குளத்தின் அலைகளில் என் சிறு வயது நினைவுகள்… நெஞ்சத்தில் என்றும் நினைவலைகளாக முத்தமிழறிஞர்…! என முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
ஆசிய மேம்பாட்டு வங்கி தலைவர் மசத்சுகு அசகாவா, டெல்லியில் பிரதமர் மோடி உடன் சந்தித்து பேசியுள்ளார். இதில் இந்தியாவின் வேகமான உள்கட்டமைப்பு, பசுமை வளர்ச்சிக்கு உதவும் நோக்கம் குறித்து விவாதித்ததாக அவர் கூறியுள்ளார்
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு பெற்றார். துபாய் ஓபனுடன் சானியாவின் 20 ஆண்டு கால டென்னிஸ் பயணம் முடிவுக்கு வந்தது
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தில் பிரிட்டன் நடிகர் டேனியல் கால்டாகிரோன் நடிக்கிறார் – படக்குழு அறிவிப்பு
ஒபிஎஸ் அணியில் ஈரோடு மாவட்ட செயலாளராக இருந்த முருகானந்தம், எம்ஜிஆர் மன்ற செயலாளராக நியமனம் – நாளை முருகானந்தம் கட்சியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியான நிலையில், ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆளுநர்களாக நியமிப்பது குறித்த கேள்விக்கு கோவையில் பதில் அளித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை தமிழ்நாட்டு மக்களால் எங்களது திறமைகளை மோடி மற்றும் அமித்ஷா அளவுக்கு அடையாளம் காண இயலவில்லை என கூறியுள்ளார்.
ஓ.பி.எஸ். அணி ஈரோடு மாவட்ட செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் அந்த அணியில் இருந்து விலகுகின்றனர் கட்சிக்கு தொடர்பில்லாத நபரை வேட்பாளராக அறிவித்து, அவரையும் திரும்பப் பெற்றதால் அதிருப்தி என தகவல்; செலவிட்ட தொகையை தர மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மரக்கன்றுகளை எடுத்துச் செல்ல, தனியார் நர்சரிகள் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவதை தடை செய்து அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் சுற்றுச்சூழல் பூங்காவுடன் கூடிய உயிர்ப்பன்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மையம் உருவாக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டு உள்ளது.
டெல்லியில் சமூக விதிகள் ஒழுங்காக பின்பற்றப்படுவது இல்லை. இதனால் நான் டெல்லிக்கு செல்வதை அசௌகரியமாக உணருகிறேன்” என்று இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி தெரிவித்தார்.
தொடர்ந்து, தனிப்பட்ட சொத்தை விட பொதுசொத்தை சிறப்பாக பாதுகாக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.
திமுகவின் 18 மாத ஆட்சிக் காலத்தில் மதுரையில் கருணாநிதி நூலகமும், கிண்டியில் மருததுவமனையும் கட்டப்பட்டு விரைவில் திறப்பு விழா காண உள்ளது.
என்னைப் பார்த்து செங்கல் திருடி வந்ததாக ஒருவர் கூறுகிறார். அவருக்கு வெட்கம் இல்லையா? என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி அண்ணாமலையை பார்த்து கேள்வியெழுப்பி உள்ளார்.
ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் குர்திஷ் பாட்ஷா மற்றும் அஷ்ரப் உசேன் ஆகிய இருவர் ஆவார்கள்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
சென்னை காவல்துறையில் 10 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த 544 காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் பதக்கத்தை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார்! பதக்கம் பெறும் காவலர்களுக்கு மாத ஊதியத்தில் கூடுதலாக ₹400 வழங்கப்படும் என அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி, இந்து சமய அறநிலையத்துறையுடன் இணைந்து ஐந்தவ சேவா சங்க மாநாடு நடக்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
நாகர்கோயிலில் இன்று நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. முன்னதாக இந்து சமய மாநாட்டுக்கு தடை விதித்த மாநில அரசை கண்டித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.
புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக எம்.எல்.ஏ.வின் தற்கொலை சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா வெளியேறி உள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் உக்ரைன் பயணத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரஷிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 18.82 புள்ளிகள் அல்லது 0.03% சரிந்து 60,672.72 ஆகவும், நிஃப்டி 50 17.90 புள்ளிகள் அல்லது 0.10% குறைந்து 17,826.70 ஆக வீழ்ச்சி கண்டது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் ஆட்டம் கண்டது.
தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு: “தமிழ்நாடு அரசின் சமீபத்திய எலக்ட்ரிக் வாகன கொள்கை, முதலீட்டாளர்களை நன்றாக ஈர்த்துள்ளது. இந்த துறையில் ரூ.50,000 கோடி முதலீடு மற்றும் ரூ.1.50 லட்சம் வேலைவாய்ப்பை இலக்காக வைத்துள்ளோம். கிருஷ்ணகிரியில் ரூ.7,614 கோடி முதலீட்டில் ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை மைக்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.” என்று கூறினார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் ட்வீட்: “அம்மா இன்னும் உங்களை தேடிக்கொண்டிருக்கிறேன்; உங்களைப் பெருமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அனைத்து செயல்களையும் செய்கிறேன். நான் எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் அனைத்தும் உங்களிடம் தொடங்கி உங்களிடமே முடிகிறது” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
ரஷ்ய அதிபர் புதின்: “மீண்டும் சொல்கிறோம்; போரைத் தொடங்கியது அவர்கள்தான்,நாங்கள் போரை நிறுத்தவே பலத்தைப் பிரயோகித்தோம். உக்ரைனுடனான பிரச்னையை அமைதியான வழியில் தீர்க்க எல்லா வகையிலும் நாங்கள் முயல்கிறோம். மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பகடைக்காயாக உக்ரைன் நாடைப் பயன்படுத்துகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கில் கூடுதல் ஆதாரம் கிடைத்துள்ளது; ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்று சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. அருண் பாலகோபாலன் தெரிவித்துள்ளார்.
ஓடும் ரயிலில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்பட்டது குறித்து ரயில்வே ஏ.டி.ஜி.பி. வனிதா பேட்டி: “சமூக வலைதளங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிடைத்த தகவல்களை பார்த்து ஆத்திரமடைந்து வடமாநிலத்தவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். பொது இடங்களில் தனிப்பட்ட, மொழிவாரியான, அரசியல் ரீதியான கருத்துக்களை சொல்லக் கூடாது. சம்பந்தப்பட்ட வீடியோவை ஷேர் செய்தவர்களுக்கு சம்மன் கொடுத்து விசாரணை நடத்தினோம். இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். சம்பவம் குறித்து தகவல் அளித்தவர்களுக்கு நிச்சயம் சன்மானம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி: “75 ஆண்டுகளுக்குப் பிறகும் பலர் இந்தியாவில் ஏழைகளாக உள்ளதற்கு மேற்கத்திய கோட்பாடுகளை பின்பற்றியதே காரணம். பரிணாம வளர்ச்சிக்கு சார்லஸ் டார்வினையும் ஜனநாயகத்திற்கு ஆப்ரஹாம் லிங்கனை உதாரணமாகக் காட்டுவது மேற்கத்திய அடிப்படை மனநிலை; பல பிரச்னைகளைத் தீர்க்கத் தெரியாமல் உலக நாடுகள் உள்ளன. ஆனால், இந்தியாவிடம் தீர்வு உள்ளது. 25 ஆண்டுகளில் உலகின் பெரும் வளர்ந்த நாடாக இந்தியா இருக்கும்” என்று பேசினார்.
மாறி மாறி தெரிவித்த குற்றச்சாட்டுகள் சர்ச்சையானதைத் தொடர்ந்து, ரோகிணி ஐ.ஏ.எஸ் மற்றும் ரூபா ஐ.பி.எஸ் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசைப்படகையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது
நாகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தரமற்ற சாலை அமைத்த விவகாரத்தில் இளநிலை பொறியாளர்கள் மற்றும் ஒரு உதவி பொறியாளர் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாகை மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்
ராமநாதபுரம், தேவிபட்டினம் கடலில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. கடலுக்குள் அழைத்துச் சென்ற படகோட்டி மற்றும் படகு உரிமையாளரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
நெல்லை அகஸ்தியர்புரம் பகுதியில் வெள்ளை மந்தி குரங்குகள் அட்டகாசம் செய்து வந்தது. 14 வயது சிறுவனை கொடூரமாக குரங்குகள் தாக்கிய நிலையில், காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து 16 வெள்ளை மந்தி குரங்குகளை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்துள்ளனர்
ஓடும் ரயிலில் தாக்குதல் நடத்தினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். ரயிலில் தாக்குதல் நடத்திய மகிமைதாஸ் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பணியாற்றி வருபவர் என ரயிலில் நடந்த தாக்குதல் தொடர்பாக ஏ.டி.ஜி.பி வனிதா செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில், காவல் நிலைய கண்ணாடியை உடைத்த இலங்கை இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மண்டபம் முகாமில் இருந்து வெளியே வந்த நிலையில், குடும்பத்தினரோடு சேர்த்து வைக்க கோரி அவர் இவ்வாறு செய்துள்ளார். காவல் நிலைய கண்ணாடியை உடைத்து தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்தாக போலீசார் தெரிவித்துள்ளனர்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது
தஞ்சையில், உபயதுல்லா குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்
கடந்த 19ம் தேதி முன்னாள் அமைச்சர் உபயதுல்லா உடல்நலக்குறைவால் காலமானார்
சாதி பாகுபாட்டை தடை செய்த முதல் அமெரிக்க நகரம் சியாட்டில்?
சியாட்டில் நகர சபையில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை தடை செய்யும் அவசர சட்டத்துக்கான தீர்மானத்தை அங்குள்ள அதிகாரியான கஷமா சாவந்த் முன்வைத்துள்ளார். இன்று நடக்கும் கூட்டத்தில் இதற்கு வாக்களிக்கப்பட்டால், சாதி அடிப்படையிலான பாகுபாட்டை தடை செய்த முதல் அமெரிக்க நகரமாக சியாட்டில் மாறும்.
கிருஷ்ணகிரி ராணுவ வீரர் கொலையை கண்டித்து பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம்
சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்பு
இந்தியாவுக்கு எதிரான அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஆஸி. வீரர் டேவிட் வார்னர் விலகல்
டெல்லி போட்டியில் இந்திய வீரர் சிராஜ் வீசிய பந்து வார்னர் ஹெல்மெட் மீது அதிவேகத்தில் பட்டது.
இதனால் இரண்டாவது இன்னிங்சில் வார்னர் களம் இறங்கவில்லை
பரிசுப் பொருட்கள் தொடர்பாக நேற்று 2 இடங்களில் 2 வழக்குகள் பதிவு
ஈரோட்டில் வரும் 25-ம் தேதி மாலை 5 மணிக்குள் வெளி ஆட்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் – தேர்தல் அலுவலர் சிவக்குமார்
ஈரோடு கிழக்கு தொகுதியில் பரிசுப் பொருட்கள் கொடுத்ததாக நேற்று 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு அறைக்கு வந்த 455 புகார்களில் இதுவரை 43 வழக்குகள் பதிவு – தேர்தல் அலுவலர் சிவக்குமா
டிஜிட்டல் இந்தியா திட்டம் மக்களின் வாழ்க்கையையும், வர்த்தகத்தையும் எளிதாக்கியுள்ளது.
தொழில்நுட்பமும் ஃபிண்டெக்கும் இன்று உலகை இணைத்து வருகிறது.
கொரோனா காலத்தில் இந்தியாவின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு உதவிகரமாகவும் இருந்தது – பிரதமர் மோடி
இந்தியா, சிங்கப்பூருக்கு இடையேயான எல்லைதாண்டிய இணைப்புச் சேவைகள் தொடர்பான நிகழ்ச்சி
இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறை, சிங்கப்பூரின் பேநவ் ஆகியவற்றை இணைக்கும் நிகழ்ச்சி
நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனு தாக்கல்
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க கோரி தமிழ்நாடு அரசு மனு
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளிக்கும்படி காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் நடமாடும் தடய அறிவியல் துறையினர் சோதனை
பாலியல் குற்றச்சாட்டு மற்றும் பலர் மாயமானதாக புகார் எழுந்த நிலையில் ஆசிரமம் மூடப்பட்டது
புகாரின் அடிப்படையில் தடய அறிவியல் துறையினர் மற்றும் சிபிசிஐடி போலீசாரும் விசாரணை
மார்ச் 5, 6-ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு
மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி மண்டலங்களில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்கிறார்
விவசாயிகள், சுய உதவி குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு பிரதிநிதிகளை சந்தித்து கருத்துக்களை கேட்க உள்ளார்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – காவல்துறையினர் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது
ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் தபால் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது
58 காவல் துறையினர் தபால் வாக்குப்பதிவு செய்ய உள்ளனர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மார்ச் 1ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகிய தலைவர்கள் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
தமிழின் உயர்வை நானிலமும் நவிலச் செய்வோம்!” “தாய்மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம் – உயிரஉயிர் கொடுத்து உயிர் காத்த இனம், நம் தமிழினம்!” “தொன்மையும், காலத்துக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனும் ஒருங்கே பெற்ற நம் தாய்மொழியாம் தமிழைக் காப்போம்!” . சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்
சென்னை விமான நிலையத்தில், ஏ-சி.டி.எம். என்ற புதிய மென்பொருள் இன்று முதல் அறிமுகம் விமானங்கள் புறப்படுவதில் ஏற்படும் காலதாமதங்களை தவிர்க்க அறிமுகம்
பஞ்சாப், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை ரவுடிகளையும், அவர்களது சிண்டிகேட்டையும் பிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரம்
இந்திய பெருங்கடலில் அதி பயங்கர வெப்ப மண்டல சூறாவளிக்காற்று. மொரிஷியஸ் தீவு நோக்கி செல்வதாக சர்வதேச விண்வெளி மையம் தகவல்
முதலமைச்சர் ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று திருவாரூர் செல்கிறார். திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார் திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார் .