பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
பட்டாசு ஆலை வெடிவிபத்து – நிவாரணம் அறிவிப்பு
கடலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்,
கும்பகோணம் மகாமகம் குளத்தில் இன்று தீர்த்தவாரி
மாசிமக விழாவையொட்டி, கும்பகோணம் மகாமகம் குளத்தில் இன்று தீர்த்தவாரி. மூன்று கோயில்களில் நேற்று கோலாகலமாக தேரோட்டம் நடைபெற்றது.
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்திருப்பது வரவேற்கத் தக்கது என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் தோள்சீலை போராட்டத்தின் 200-ம் ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இடைக்காலத்தில் ஏற்பட்ட பண்பாட்டு படையெடுப்புகளால் தமிழினத்தின் பண்பாடு சிதைக்கப்பட்டுவிட்டது; மதம், ஆதி, சாஸ்திர, சம்பிரதாய, புராணங்களின் பெயரால் ஆணுக்கு பெண் அடிமையென ஆக்கிவிட்டார்கள்; சூத்திரங்களையும் பெண்களையும் இழிவான பிறவிகளாக ஆக்கியது மனு” என்று பேசினார்.
நாகர்கோவிலில் நடைபெற்ற தோள்சீலை போராட்டத்தின் 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில், வி.சி.க தலைவர் திருமாவளவன் பேச்சு: “அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாற்றை தமிழ்நாடு அரசுப் பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, சென்னை துறைமுகம் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய நடிகை சங்கீதா “பெண் குழந்தைகளுக்கு தைரியத்தை கற்றுக் கொடுங்கள். ஆண் பிள்ளைகளுக்கு, பெண்களை மதிக்கச் சொல்லி கற்றுக் கொடுங்கள்” என்று பேசினார்.
காரைக்கால் – இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கும்.
இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் காலதாமதம் ஏற்படுவதால் தாமதம் என புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் 10ஆம் தேதி தமிழ்நாடு வரகிறார்.
தொடர்ந்து, கிருஷ்ணகிரியில் புதிய மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார்.
மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்-ஐ தேர்வு செய்துள்ளது.
எங்கள் மீதான நிதி முறைகேடு குற்றச்சாட்டு தவறானது மற்றும் ஆதாரமற்றது என சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.
திரிபுரா பாஜக சட்டமன்றக் கூட்டம் இன்று கூடியது. அப்போது, மாணிக் சாஹா 2வது முறையாக முதல்வராக பதவியேற்க சட்டமன்ற உறுப்பினர்கள் கோரினர்.
தொடர்ந்து அவர் 2ஆவது முறையாக பதவியேற்க உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை, போரூரில் நாம் தமிழர் மற்றும் ஆதித் தமிழர் பேரவையினர் இடையே மோதல் ஏற்பட்ட விவகாரத்தில் இரு தரப்பினர் மீதும் போரூர் போலிசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 15 பேர் மீதும், ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்த 20 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
அண்ணாமலை மீது தமிழக அரசு வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து தமிழக பாஜக சார்பில் வரும் 10ம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை, கேளம்பாக்கத்தில் நடிகை அல்போன்சாவின் சகோதரி சோபா கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 17க்கும் மேற்பட்டோரிடம் லட்சக்கணக்கில் பணமோசடி செய்ததாக புகார் வந்ததையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்
நகை கொள்ளை வழக்கு விவகாரம் துப்பு துலக்க ராஜஸ்தான் சென்ற போலீசார் மீது புகார் அளித்தது பரப்பரப்பை ஏற்படுத்தியது. மக்கள் தவறாக புரிந்து கொண்டு, போலீசார் மீது புகார் அளித்துள்ளனர். தமிழக போலீசார் அலுவல் ரீதியாகவே அங்கு சென்றதாக உரிய விளக்கம் அளித்தோம். உரிய விளக்கத்திற்கு பிறகு தமிழக போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர் என திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா தெரிவித்துள்ளார்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீண்டும் ஒலிபெருக்கி மூலம் வருகை/புறப்பாடு அறிவிப்புகள் செய்யப்படுகிறது. ’அமைதியான ரயில் நிலையம்’ என்ற திட்டத்திற்காக, ஒலி அறிவிப்புகள் நிறுத்தப்பட்ட நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே நடைபெற்ற அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் மூக்கன் என்ற முதியவர் உயிரிழந்துள்ளார். மஞ்சுவிரட்டில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்
சென்னையிலிருந்து மலேசியாவின் பினாங்கிற்கு நேரடி விமானப் போக்குவரத்திற்கான சாத்தியக்கூறுகளை ஆராய விமான நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளேன் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த பிப்.11ம் தேதி பிரதமர் மற்றும் அமைச்சர் சிந்தியாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அளித்த நிலையில் இந்த பதில் கடிதம் வந்துள்ளது
கர்நாடகா, குல்பர்கா மாவட்டத்தில் அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாமல் திணறியது. ஹெலிப்பேடை முறைப்படி அமைக்காததால் சிரமம் ஏற்பட்டதாக விமானி தெரிவித்துள்ளார். நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு ஹெலிகாப்டரை பாதுகாப்பாக விமானி தரை இறக்கினார்
காஞ்சிபுரம் : திருமுடிவாக்கம் அருகே மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதில், 21 வீடுகளில் இருந்த அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தது. மேலும் 2 சிலிண்டர்கள் வெடித்தத்தில், 5-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனம் தீயில் எரிந்து சேதம். அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர்
என்எல்சி நிறுவனத்திற்காக புதியதாக நிலம் கையகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை. என்எல்சி நிறுவனத்திற்காக 25,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்போவதாக வரும் தகவல் உண்மை அல்ல”
“3,000 பேருக்கு என்எல்சி நிறுவனம் புதிய வேலை வாய்ப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நிலம் மற்றும் வீடுகளை இழந்தவர்களுக்கு, தற்போது கூடுதல் இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது” – எம்ஆர்கே பன்னீர் செல்வம்
தமிழக பாஜகவில் பாஜக ஐடி விங் மாநில செயலாளர் திலீப் கண்ணன் தனது பதவியில் இருந்து விலகினார். ஏறகனவே ஐடிவிங் தலைவர் சி.டி நிர்மல்குமார் ராஜினாமாசெய்துள்ள நிலையில், தற்போது மேலும் ஒருவர் விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கர்நாடகாவில், காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல். மண்டியா மாவட்ட காங். கட்சி தலைவர் கங்காதர் காரின் மீது முட்டை வீச்சு. பாஜகவை சேர்ந்த நாராயண கவுடா காங்கிரஸில் இணைய உள்ளதாக வெளியான தகவல் எதிரொலி. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே முட்டை வீசியதால் பரபரப்பு
வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு காணொலிகள் பரப்பியதாக பீகார் மாநிலத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டை அதிர வைத்த போலி டாக்டர் பட்டம் வழங்கிய வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் ஹரிஷ் மற்றும் அவரது நண்பர் மகாராஜன் ஆவார்கள். இருவரும் ஆம்பூரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்களை பொருத்தவரை ஆட்சியர்கள் தான் அரசு, அவர்களின் தேவைகளை நீங்கள் தான் பூர்த்தி செய்ய வேண்டும். மக்கள் அளிக்கும் மனு வெறும் காகிதம் அல்ல; அது ஒரு மனிதரின் வாழ்க்கை – மதுரையில் ஆட்சித்தலைவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு வரும் 20ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து, கலால் கொள்கை ஊழல் விவகாரம் தொடர்பான வழக்கில் ரூஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் தனியார் பேருந்து குறித்த சிந்தனையே கூடாது, அனைத்து அரசு பேருந்துகளையும் இலவசமாக்க வேண்டும் – தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பீகார் மாநில மக்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தி பரவிய நிலையில், பீகார் மாநில லோக் ஜன சக்தி தலைவர் சிராக் பஸ்வான் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 8, 9,10 ஆம் தேதிகளில், தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு தேவை இருக்கும்; அதற்கேற்ப புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்க வேண்டும். சமுதாயத்தில் பின்தங்கிய மக்களின் தேவைகளை அறிந்து கடமையாற்ற வேண்டும் – மதுரையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரை
சென்னை போரூரில் நாம் தமிழர்- ஆதித் தமிழர் பேரவையினர் இடையே மோதல்
நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது கற்கள் வீச்சு, கண்ணாடி உடைப்பு அருந்ததியினர் குறித்து சீமான் தவறாக பேசியதாக கண்டனம் தெரிவித்த ஆதித் தமிழர் பேரவை
சென்னை மாநகராட்சி தனியார் பேருந்து இயக்கம் தொடர்பான சாதக, பாதகங்கள் ஆய்வு செய்யப்படும். சாதக, பாதகங்கள் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து ஆலோசனை நடத்தி 3 மாதத்தில் உரிய முடிவு எடுக்கப்படும். அரசு பேருந்துகள் தனியார் மயமாக்கப்படாது.
சென்னை மாநகராட்சி தனியார் பேருந்து இயக்கம் குறித்து தவறான செய்தி பரவுகிறது. உலக வங்கி டெண்டர் அடிப்படையில் அரசுக்கு ஆலோசனை வழங்க அறிக்கை கொடுக்க வேண்டும். தனியார் பேருந்து இயக்கப்பட்டாலும் அரசு பணியார்கள் யாரும் நிறுத்தப்பட மாட்டார்கள். தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்கவே திட்டம் -போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை காண இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி. சிலைக்கு ரசாயன கலவை பூசம் பணி நிறைவு பெற்றதால் 7 மாதங்களுக்கு பிறகு பயணிகள் செல்ல அனுமதி.
சிவகங்கை, கண்ணன்கொட்டையில் தாய், மகள் இரட்டை கொலை வழக்கில் 3 பேர் கைது
குற்றவாளிகளான சுரேஷ், ரமேஷ் குமார், விஜயகுமார் ஆகியோர் கைது
மாசி மக பெருவிழாவையொட்டி கும்பகோணம் சக்கரபாணி கோவில் தேரோட்டம்
சுதர்சன வள்ளி, விஜயவல்லி தாயார்களுடன் முக்கிய வீதிகளில் பவனி வரும் சக்கரபாணி
தமிழ்நாட்டில் பணியாற்றும் அனைத்து வெளி மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். பீகாரிலிருந்து தமிழகம் வந்த குழுவிடம் தெரிவித்த வடமாநில தொழிலாளர்கள்.
எந்த வேறுபாடுமின்றி அனைத்து மாநில தொழிலாளர்கள் காக்கும் அரசு.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வெளி மாநில தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணி தீவிரம்.
திருச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் செய்தியாளர் சந்திப்பு
சென்னையில் அனுமதியின்றி எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுகூட்டம் நடத்தியதாக புகார்
அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு
அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது காவல்துறை
நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட பைப் லைனில் கச்சா எண்ணெய் கொண்டு செல்ல தடை.
மாவட்ட நிர்வாகத்தின் மறு உத்தரவு வரும் வரை எண்ணெய் கொண்டு செல்லக் கூடாது என உத்தரவு.
கச்சா எண்ணெய் கசிவு நிறுத்தப்பட்டுள்ளதால், மீனவர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை.
பட்டினச்சேரி பகுதியில் ஆய்வு செய்த பிறகு மாவட்ட ஆட்சியர் அருண் உத்தரவாதம்
எண்ணெய் கசிவால் கடலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து வல்லுநர் குழு ஆய்வு செய்யும்- ஆட்சியர்
அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் வரும் 10ம் தேதி ஆலோசனை
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை
9ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது
எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறு வீடியோ ஒளிபரப்பியதாக, அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் 10 பேர் மீது போலீசார் வழக்கு.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: நாராயணபுரம் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில், பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ்.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான, நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு ஆன்லைனில் தொடங்கியது.
பாலியல் வழக்கு, திருமணம் நின்ற நிலையில் போரூர் ஏரியில் குதித்து நிஷாந்த் தற்கொலை; தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து ரூ. 68 லட்சம் மோசடி செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி மாவட்ட ஆட்சியர்களுடன், 5 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள், வளர்ச்சிப்பணிகள் குறித்து மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா தேரோட்டம். தேரோட்டத்தை காண திருச்செந்தூரில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் .அரோஹரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
நாகர்கோவிலில் இன்று, தோள் சீலை போராட்டத்தின் 200வது ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம். தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் இருவரும் இணைந்து பங்கேற்கின்றனர்
கடலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்களான சேகர்(55), கோசலா(50) ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது
நெல்லையில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து. 2 இளைஞர்கள் உயிரிழப்பு