Advertisment

Tamil News Highlights: சென்னை, புறநகரில் விடிய விடிய மழை; பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்: ஆட்சியர்கள் அறிவிப்பு

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த லைவ் பிளாக் இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rain

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ஏரிகளின் நீரிருப்பு நிலவரம்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீரிருப்பு நிலவரம். 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2388 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 99 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 305 மில்லியன் கன அடியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

  • Nov 11, 2024 21:59 IST
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: மறு ஆய்வு மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.



  • Nov 11, 2024 21:55 IST
    நவம்பர் 13-ம் தேதிக்குள் ரூ. 20 கோடியை செலுத்தாமல் ‘கங்குவா' படத்தை வெளியிடக் கூடாது - ஐகோர்ட் உத்தரவு

    நவம்பர் 13-ம் தேதிக்குள் உயர்நீதிமன்ற சொத்தாட்சியருக்கு ரூ. 20 கோடியை செலுத்தாமல் ‘கங்குவா' படத்தை வெளியிடக் கூடாது என்று ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Nov 11, 2024 20:56 IST
    தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பேச்சு: தலைமறைவான நடிகை கஸ்தூரியைப் பிடிக்க 2 தனிப்படை அமைப்பு

    தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.



  • Nov 11, 2024 20:52 IST
    மதுரா டிராவல்ஸ் லிமிடெட் தலைவர் வி.கே.டி பாலன் மரணம்

    மதுரா டிராவல்ஸ் லிமிடெட் தலைவர் வி.கே.டி பாலன் சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வி.கே.டி பாலனின் உயிர் பிரிந்தது.



  • Nov 11, 2024 20:14 IST
    பா.ஜ.க பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தத்துக்கு பிடிவாரண்ட் - கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவு

    பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தம் மீது அவருடைய மாமனார் கடந்த 2016-ல் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகததால், பா.ஜ.க பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தத்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Nov 11, 2024 19:57 IST
    மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் குழந்தை இறப்பு; மருத்துவர் பணியிடை நீக்கம் 

    மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிவரஞ்சனி என்பவருக்கு பிறந்த குழந்தை மருத்துவரின் தவறான சிகிச்சையால் இறந்ததாக குற்றம்சாட்டி குழந்தை உடலுடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் ரம்யாவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் பானுமதி உத்தரவிட்டுள்ளார்.



  • Nov 11, 2024 19:13 IST
    மணிப்பூர் ஜிரிபாமில் பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சண்டை; 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

    மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் குறைந்தது 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.



  • Nov 11, 2024 19:08 IST
    ஓவியக் கலைஞர் டிராட்ஸ்கி மருதுக்கு பதவி 

    தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன தலைவராக, பிரபல ஓவியக் கலைஞர் டிராட்ஸ்கி மருது நியமனம் செய்யப்பட்டுள்ளார். 



  • Nov 11, 2024 19:07 IST
    வெளியுறவு அமைச்சக செயலாளர் பதவிக்காலம் நீட்டிப்பு 

    இந்திய வெளியுறவு அமைச்சக செயலாளர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலத்தை 2026 ஜூலை வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.



  • Nov 11, 2024 19:05 IST
    லஞ்ச வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு

    2011ம் ஆண்டு தஞ்சாவூர் அருகே புளியந்தோப்பு வி.ஏ.ஓ. ஆக இருந்த சுந்தரம், பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.5000 லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார்கும்பகோணம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், சுந்தரத்திற்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ₹8000 அபராதம் விதித்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



  • Nov 11, 2024 19:00 IST
    குஜராத்: ஆயில் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர வெடி விபத்து 

    குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கிருந்து ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். விபத்து காரணமாக 2 கி.மீ உயரத்துக்கு கரும்புகை சூழ்ந்துள்ள நிலையில், தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.



  • Nov 11, 2024 18:59 IST
    6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

     மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர் - சதயமூர்த்தி

     சுற்றுலாத்துறை இயக்குநர் - ஷில்பா பிரபாகர் சதிஷ்

    சிறு, குறு நடுத்தர தொழில்கள் துறை செயலாளர் - அதுல் ஆனந்த்

    கால்நடை, பால்வளம், மீன்வளம், மீனவர்கள் நலத்துறை செயலாளர் - சத்யபிரதா சாஹூ

     துணை முதலமைச்சரின் துணை செயலாளர் - ஆர்த்தி

    தேசிய சுகாதார திட்ட இயக்குநர் - அருண் தம்புராஜ் ஆகிய  ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்னர். 



  • Nov 11, 2024 18:56 IST
    ஆர்.பி. உதயகுமார் தாக்கப்பட்ட சம்பவம் - 4 பேர் கைது 

    மதுரையில் நேற்றிரவு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் அக்கட்சி நிர்வாகி மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமமுக ஒன்றிய செயலாளர் பழனிசாமி, ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த குபேந்திரன், அஜய் மற்றும் பழனிசாமி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்



  • Nov 11, 2024 18:48 IST
    உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி

    நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உகுவாகக்கூடும். இது அதற்கடுத்த இரண்டு தினங்களில் மேற்கு திசையில், தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் 15-ந்தேதி வரை கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Nov 11, 2024 18:24 IST
    சென்னை வானிலை அப்டேட் 

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Nov 11, 2024 18:23 IST
    நாளை 12 மாவட்டங்களில் கனமழை 

    தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

     



  • Nov 11, 2024 18:22 IST
    4 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை

    தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Nov 11, 2024 18:18 IST
    சட்டவிரோத மது விற்பனை - மயிலாப்பூரில்  2 பேர் கைது

    சென்னை மயிலாப்பூர் பகுதியில் மாநகராட்சி கழிவறையில் வைத்து சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தீவிரமாக கண்காணித்து பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 450 மது பாட்டில்களும் கைப்பற்றப்பட்டுள்ளன



  • Nov 11, 2024 17:56 IST
    டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் வழக்கு: நாளை விசாரணை 

    டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தால் அனைத்து பணியாளர்களையும் சஸ்பெண்ட் செய்வது தொடர்பான சுற்றறிக்கைக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

    தனிப்பட்ட ஊழியர்கள் செய்யும் தவறுக்கு அனைவரையும் சஸ்பெண்ட் செய்வது சட்ட விரோதம் என டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது



  • Nov 11, 2024 17:01 IST
    நீலகிரியில் பாஸ்ட் டேக் முறை கொண்டு வரப்படும் - ஆட்சியர்

    நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்களின் இ-பாஸை கண்காணித்து, பசுமை வரியை தானாக வசூலிக்க விரைவில் நவீன கேமராக்களுடன் பாஸ்ட் டேக் முறை கொண்டு வரப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்திற்கு வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறைக் காலங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருவதால் இ-பாஸ் கண்காணிப்பு மற்றும் பசுமை வரி வசூலிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு மாவட்ட எல்லையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை அடுத்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், இ-பாஸ் நடைமுறையை நவீன தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கவும் மாவட்ட நிர்வாகம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.



  • Nov 11, 2024 16:42 IST
    வணிகவரித் துறையில் முதல் 7 மாதங்களில் ரூ.79,772 கோடி வருவாய்

    வணிகவரித் துறையில் நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் (அக்டோபர் வரை) ரூ.79,772 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் வருவாயுடன் ஒப்பிடுகையில் (அக்டோபர் வரை), கூடுதலாக ரூ.9,229 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.



  • Nov 11, 2024 16:21 IST
    தெலங்கானாவில் மாவட்ட ஆட்சியர் மீது தாக்குதல்

    தெலங்கானாவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தினர். கருத்து கேட்க சென்றபோது கிராம மக்கள் தாக்குதல் நடத்தியதால் விகாராபாத் மாவட்டம் லக்செர்லா கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது



  • Nov 11, 2024 16:02 IST
    செஸ் கிராண்ட் மாஸ்டர் சேலஞ்சர்ஸ் பிரிவில் பிரணவ் முதலிடம்

    சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர் சேலஞ்சர்ஸ் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரணவ் முதலிடம் பிடித்தார் 



  • Nov 11, 2024 15:55 IST
    சாதி மோதலை தடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

    ஜெயங்கொண்டம் அருகே பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட சாதிரீதியான மோதலை தடுக்க வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்



  • Nov 11, 2024 15:43 IST
    த.வெ.க.,வில் இணைந்த ஸ்னோலினின் தாயார்

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளம் பெண் ஸ்னோலினின் தாயார் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் த.வெ.க.,வில் இணைந்தனர்.



  • Nov 11, 2024 15:34 IST
    மீனவர் பிரச்சனை; சீமான் கருத்து

    எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என இலங்கை அதிபர் கூறியது குறித்த கேள்விக்கு, இலங்கைக்கு ஏதாவது நெருக்கடி கொடுத்தால்தானே கட்டுக்குள் வருவார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்துள்ளார்



  • Nov 11, 2024 15:13 IST
    டீசல், பெட்ரோல் ஏற்றுமதியில் லாபம் பார்க்கும் இந்தியா

    நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான இந்தியாவின் டீசல், பெட்ரோல் ஏற்றுமதி 58% அதிகரித்துள்ளது. உக்ரைன் போரையொட்டி ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம், ஜி-7 நாடுகள் தடை விதித்ததை பயன்படுத்தி, சலுகை விலையில் ரஷ்யாவின் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து சுத்திகரித்து ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியா விற்கிறது.



  • Nov 11, 2024 14:55 IST
    இலங்கை அதிபர் கருத்து: சீமான் பதில்

    ”இலங்கைக்கு ஏதாவது நெருக்கடி கொடுத்தால்தானே கட்டுக்குள் வருவார்கள் வாய் திறக்கவில்லை என்றால் அவர்கள் இஷ்டத்திற்குதான் செய்வார்கள்” என எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என இலங்கை அதிபர் கூறியது குறித்த கேள்விக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.



  • Nov 11, 2024 14:33 IST
    புதிய வாக்காளர் சேர்க்கை முகாம்!

    நவம்பர் 16,17,23,24 ஆம் தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை, திருத்தம் செய்ய விரும்புவோர் பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Nov 11, 2024 14:18 IST
    பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை - முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா்

    பாஜகவுடன் இப்போது மட்டும் அல்ல எப்போதும் கூட்டணி இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.



  • Nov 11, 2024 14:08 IST
    சிறுமி பாலியல் வழக்கு-போலீஸ் விசாரிக்கலாம்: கோர்ட்

    சென்னை அண்ணா நகரில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டாம், காவல்துறையே விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

     



  • Nov 11, 2024 13:51 IST
    டிஜிட்டல் மோசடிகளை தடுக்க விரைவில் ஆலோசனை

    டிஜிட்டல் மற்றும் AI மூலம் நடக்கும் மோசடிகளை தடுப்பது குறித்து தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில காவல் துறை தலைமை அதிகாரிகளுடன் இம்மாத இறுதியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Nov 11, 2024 13:40 IST
    புதிய கட்டுமான பணிகள் நடைபெற உள்ள இடத்தை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு

    சென்னை பிராட்வேயில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் ரூ. 822.70 கோடி மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டப்படவுள்ள இடத்தை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார்.



  • Nov 11, 2024 13:35 IST
    தேர்தல் பணிகளை கடமை உணர்வோடு ஆற்றுக - ஈபிஎஸ்

    2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளை கடமை உணர்வோடு ஆற்ற வேண்டும் என அ.தி.மு.க கள ஆய்வுக் குழுவுடன் நடந்த ஆலோசனையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.



  • Nov 11, 2024 13:20 IST
    வயநாடு தொகுதி இடைத்தேர்தல் இறுதிகட்ட பரப்புரை

    வயநாடு தொகுதி இடைத்தேர்தல் இறுதிகட்ட பரப்புரையில் ஐ லவ் வயநாடு என்ற வாசகம் அடங்கிய டி சர்ட் அணிந்து வந்து ராகுல் காந்தி பரப்புரையில் ஈடுபட்டார்.



  • Nov 11, 2024 12:57 IST
    முன் ஜாமின் கோரி நடிகை கஸ்தூரி மனுத்தாக்கல்

    நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையில் நாளை விசாரணைக்கு வருகிறது. தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் போலீசாரின் சம்மனை ஏற்க மறுத்து, நடிகை கஸ்தூரி தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.



  • Nov 11, 2024 12:23 IST
    24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

    24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட சுறாவளி சுழற்சி, இன்று காலை நிலவரப்படி அதே பகுதியில் நீடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாள்களில் மெதுவாக மேற்கு திசையில் தமிழ்நாடு அல்லது இலங்கை கரையோரம் நகரக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



  • Nov 11, 2024 12:14 IST
    தெற்கு ரயில்வேயின் புதிய அறிவிப்பு

    சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான மின்சார ரயில்கள் இன்று முதல் பார்க் டவுன் ரயில் நிலையத்தில் நிற்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



  • Nov 11, 2024 11:42 IST
    9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    இன்று தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Nov 11, 2024 11:14 IST
    20 கிலோ தங்கம் பறிமுதல் - 25 பயணிகள் கைது

    தங்கத்தை கடத்தி வந்த 25 பயணிகள், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 3 விமானங்களில் இருந்து ரூ. 15 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்ட 25 பயணிகள் கைது செய்யப்பட்டனர்.



  • Nov 11, 2024 10:47 IST
    டெல்லி கணேஷ் உடலுக்கு இந்திய விமானப்படை சார்பில் மரியாதை

    நடிகர் டெல்லி கணேஷ் உடலுக்கு இந்திய விமானப்படை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக டெல்லி கணேஷ், இந்திய விமானப்படை அதிகாரியாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.



  • Nov 11, 2024 10:36 IST
    உலக நாயகன் உள்ளிட்ட எந்த அடைமொழியும் வேண்டாம்- கமல்

    "உலக நாயகன் உள்ளிட்ட எந்த அடைமொழியும் வேண்டாம். கமல் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதும்" என கமல்ஹாசன் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். 



  • Nov 11, 2024 10:26 IST
    உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு

     உச்ச நீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ராஷ்டிரபதி பவனில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.



  • Nov 11, 2024 10:09 IST
    தங்கம் விலை சவரனுக்கு ரூ. 440 குறைவு

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 440 குறைந்து ரூ.57,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,220க்கு விற்பனை செய்யப்படுகிறது. 



  • Nov 11, 2024 09:40 IST
    காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம்  

    தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம். அடுத்த 36 மணி நேரத்தில் உருவாவக கூடும். அதற்கடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில் தமிழ்நாடு இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



  • Nov 11, 2024 09:16 IST
    வாயு கசிவு விவகாரம் - மாணவர்கள் நடத்திய நாடகமா?

    சென்னை தனியார் பள்ளியில் வாயு கசிவு விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் தான் இது போன்ற சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதாக காவல்துறை தரப்பில் தகவல் கூறப்பட்டுள்ளது. 

    மாணவர்கள் மர்ம பொருளை எடுத்து வந்து அதன் மூலம் மயக்கம் ஏற்படுவதற்கான பணிகளை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது

    விடுமுறைக்காக மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Nov 11, 2024 08:53 IST
    தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள்  திருப்பி ஒப்படைக்கப்படும்- இலங்கை அதிபர்

    இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும் - யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில்  இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க வாக்குறுதி அளித்தார். 



  • Nov 11, 2024 08:52 IST
    டெல்லி கணேஷ் உடலுக்கு இன்று இறுதி சடங்கு

    மறைந்த நடிகர் டெல்லி கணேஷுக்கு உடலுக்கு இன்று இறுதி சடங்கு, இன்று காலை 10 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர். 



  • Nov 11, 2024 08:20 IST
    வாயு கசிந்த விவகாரம் - பள்ளிக்கு இன்று விடுமுறை

    வாயு கசிவு ஏற்பட்ட விவகாரத்தில் திருவொற்றியூர் தனியார் பள்ளிக்கு இன்று விடுமுறை. இன்று பள்ளி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

    மறு உத்தரவு வரும் வரை பள்ளி திறக்கப்படாது என நிர்வாகமும் அறிவித்துள்ளது.



  • Nov 11, 2024 08:19 IST
    4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment