Advertisment

Tamil news today: ஓ.பி.எஸ். தாயார் மரணம்: முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

Tamil Nadu News, Tamil News , Petrol price Today - 24 -02 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news today: ஓ.பி.எஸ். தாயார் மரணம்: முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் ஓபிஎஸ்க்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்- ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisment

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 278-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை சந்தித்த உதயநிதி

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை இந்தியா மற்றும் இலங்கை மாற்றுத்திறன் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் சந்தித்தனர்.

முக்கிய நீர் நிலவரம்

500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 500 மில்லியன் கன அடியாக உள்ளது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2978 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 831 மில்லியன் கன அடியாக உள்ளது. 


  • 22:39 (IST) 24 Feb 2023
    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் மரணம்

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள் காலமானார். அவருக்கு வயது 96 வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது


  • 22:08 (IST) 24 Feb 2023
    குரூப் 2 - பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு

    நாளை நடைபெறும் குரூப்-2 தேர்வில் பங்கேற்கும் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ் தகுதித்தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  • 21:04 (IST) 24 Feb 2023
    சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி திங்கள் கிழமை பதவியேற்பு

    சென்னை உயர் நீதிமன்றத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கூடுதல் நீதிபதி லட்சுமி நாராயணன் திங்கள் கிழமை பதவியேற்பு. பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 58 ஆக உயர்கிறது


  • 21:03 (IST) 24 Feb 2023
    கோழியை பிடிக்க சென்று சிறுத்தை கூண்டுக்குள் சிக்கிய நபர்

    உத்தரப்பிரதேசத்தில் சிறுத்தையைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்ட இரும்புக் கூண்டுக்குள் இருந்த கோழியைப் பிடிக்கச் சென்று உள்ளே சிக்கிக்கொண்ட நபர்; தன்னை காப்பாற்றும்படி கெஞ்சும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது!


  • 20:22 (IST) 24 Feb 2023
    நாளை நடைபெறுகிறது குரூப்-2 தேர்வு

    குரூப்- 2 தேர்வுக்கான முதன்மை தேர்வு நாளை நடைபெறுகிறது முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 55,071 பேர் எழுத உள்ளனர்


  • 20:19 (IST) 24 Feb 2023
    தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல உத்தரவு

    சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் 26-ந் தேதி முதல் தாம்பரத்தின் இரு மார்கத்திலும் தேஜஸ் ரயில் நின்றுசெல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 20:17 (IST) 24 Feb 2023
    பிப்.28ல் தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட்

    11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் வரும் 28ம் தேதி வெளியாகிறது. http://dge1.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - தேர்வுத்துறை இயக்குனர்


  • 19:24 (IST) 24 Feb 2023
    யார் வேணா என்கூட விவாதிக்க வரலாம் : ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி சவால்

    இப்பதான் இந்த போராட்டமே ஆரம்பம் ஆகுது" "நான் ஒன்னும் விளையாட்டுத்தனமா பேசல.. சவால் விடுறேன், யார் வேணா என்கூட விவாதிக்க வரலாம்" என சென்னையில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.


  • 19:01 (IST) 24 Feb 2023
    ஆசிய சந்தைகள் சரிவு

    சீனாவின் ஷாங்காய் கூட்டு குறியீடு 0.62% சரிந்தது. தென் கொரியாவின் KOSPI 0.63% சரிந்தது.

    ஜப்பானின் Nikkei 225 1.29% உயர்ந்தது மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் 1.68% சரிந்தது.


  • 18:46 (IST) 24 Feb 2023
    நட்சத்திர விடுதி கூடாது.. பாகிஸ்தான் அமைச்சர்களுக்கு கடும் கட்டுப்பாடு

    பாகிஸ்தான் அமைச்சர் வெளிநாடு செல்லும்போது பிசினஸ் கிளாஸில் பயணிக்க கூடாது. வெளிநாடு நட்சத்திர விடுதிகளில் தங்க கூடாது என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.


  • 18:31 (IST) 24 Feb 2023
    திருச்சியில் ரூ.15 லட்சம் தங்கம் பறிமுதல்

    சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.15 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக, சம்பந்தப்பட் நபர்களிடம் சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.


  • 18:20 (IST) 24 Feb 2023
    சென்னை வருகிறார் தோனி

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் எதிர்கொள்கிறது.

    இந்நிலையில், மார்ச் 2ஆம் தேதி மகேந்திர சிங் தோனி சென்னை வருகிறார்.

    மார்ச் 3ஆம் தேதி அவர் வலைப் பயிற்சியில் ஈடுபடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • 18:00 (IST) 24 Feb 2023
    இமாச்சல், ஜப்பான் இடையே ஒப்பந்தம்

    சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த 2,835 கோடி ரூபாய் நிதி உதவிக்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையுடன் ஒத்துழைக்க ஹிமாச்சல பிரதேசம் திட்டமிட்டுள்ளது என மாநில அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


  • 17:47 (IST) 24 Feb 2023
    உலகின் 3ஆவது பொருளாதார நாடாக இந்தியா மாறும்.. துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர்

    இந்தியாவின் எழுச்சி தடுக்க முடியாதது, பத்தாண்டுகளில் உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாறும் என துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் கூறியுள்ளார்.


  • 17:41 (IST) 24 Feb 2023
    மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோயில் மாசி திருவிழா தேரோட்டம்

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோயில் மாசி பெருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

    இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


  • 16:55 (IST) 24 Feb 2023
    அரசுப் பேருந்தில் போதை ஆசாமி சிறுநீர் கழித்ததாகப் புகார்

    அரசுப் பேருந்தில் போதை ஆசாமி சிறுநீர் கழித்தாக புகார் எழுந்துள்ளது.

    இந்தச் சம்பவம் கர்நாடக மாநிலம் விஜயாபுராவில் நிகழ்ந்துள்ளது.

    இந்நிகழ்வில் இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. போதை ஆசாமியை சக பயணிகள் அடித்து கீழிறக்கிவிட்டுவிட்டனர் என்ற கூறப்படுகிறத


  • 16:48 (IST) 24 Feb 2023
    திருவள்ளூரில் வந்தே பாரத் ரயில் நிற்காது.. ரயில்வே தகவல்

    திருவள்ளூரில் வந்தே பாரத் ரயில் நிற்காது என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, திருவள்ளூரில் வந்தே பாரத் ரயில் நிற்கும் எனத் தகவல் பரவியது. இந்த வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.


  • 16:26 (IST) 24 Feb 2023
    கனடா நாட்டின் குடியுரிமையை விட்டுக்கொடுக்க அக்ஷய் குமார் முடிவு

    கனடா நாட்டின் குடியுரிமையை விட்டுக்கொடுக்க உள்ளதாக நடிகர் அக்‌ஷய் குமார் அறிவித்துள்ளார்.

    நடிகர் அக்ஷய் குமாரிடம் கனடா நாட்டின் குடியுரிமை இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளார்.


  • 16:19 (IST) 24 Feb 2023
    புதுச்சேரியில் இலகுரக விமானச் சேவை

    விரைவில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், 19 இருக்கைகள் கொண்ட இலகு ரக விமான சேவை புதுச்சேரியில் தொடங்கப்பட உள்ளது.

    இதன் ஆய்வுப் பணிகளுக்காக செக் குடியரசு நாட்டில் இருந்து வாங்கப்பட்ட சிறிய ரக விமானம் புதுச்சேரி வந்தடைந்தது.


  • 16:08 (IST) 24 Feb 2023
    இந்திய ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிவு

    அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிந்து 82.74 ஆக உள்ளது.

    கடந்த சில நாள்களாக இந்திய ரூபாயின் மதிப்பு ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.


  • 15:49 (IST) 24 Feb 2023
    காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள்.. மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அதிகாரம்

    காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு உறுப்பினர்களை நியமிக்க காங்கிரஸ் தலைவருக்கு அதிகாரம் வழங்க வழிநடத்தல் குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளது என கட்சியின் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.


  • 15:39 (IST) 24 Feb 2023
    நாகாலாந்து, மேகாலயாவில் தாமரை மலரும்.. பிரதமர் நரேந்திர மோடி

    வடகிழக்கு மாநிலமான நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் பாரதிய ஜனதா கட்சி அமைக்கும், அங்கு தாமரை மலரும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

    ஷில்லாங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்தார்.


  • 15:18 (IST) 24 Feb 2023
    இரட்டை இலை இருந்தாலும் தி.மு.க.வை வீழ்த்த முடியாது.. டி.டி.வி. தினகரன்

    இரட்டை இலை இருந்தாலும் எடப்பாடி பழனிசாமியால் தி.மு.க.வை வீழ்த்த முடியாது. அனைரும் ஒன்றிணைந்தால் மட்டுமே அது முடியம். மேலும், எடப்பாடியின் மூலதனம் துரோகம் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கூறினார்.


  • 14:55 (IST) 24 Feb 2023
    டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 24-02-2023 முதல் 26-02-2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். 27-02-2023 முதல் 28-02-2023 வரை தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவடங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினக்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


  • 14:44 (IST) 24 Feb 2023
    பிரபல ஸபெயின் வீரர் ஓய்வு!

    பிரபல ஸபெயின் கால்பந்து வீரரான செர்ஜியோ ரமோஸ் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார். ஸ்பெயின் நாட்டுக்காக 1 உலகக் கோப்பை, 2 யூரோ கோப்பை உள்ளிட்ட பல்வேறு கோப்பைகளை வென்றுள்ளார்.


  • 14:21 (IST) 24 Feb 2023
    ஈரோடு கிழக்கு தொகுதியில் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம்!

    ஈரோடு அக்ரஹாரம் பகுதியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் அமைச்சர் நாசர் வாக்கு சேகரித்தார். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர் நாசர் பிரசாரம் செய்தார்.


  • 13:59 (IST) 24 Feb 2023
    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 688 வழக்குகள் பதிவு!

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 688 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ.64.34 லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 51.31 லட்சம் ரொக்கப்பணம், ரூ. 11.68 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.


  • 13:39 (IST) 24 Feb 2023
    ரிட் மனுவை திரும்ப பெற உச்சநீதிமன்றம் அனுமதி!

    நீட் தேர்வு சட்ட திருத்தத்துக்கு எதிரான ரிட் மனுவை திரும்ப பெற்றது தமிழக அரசு. நீட் சட்டத்திருத்தத்துக்கு எதிராக புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. ரிட் மனுவை திரும்ப பெற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


  • 13:32 (IST) 24 Feb 2023
    "தீர்ப்பை எங்கு பெற வேண்டுமோ, அங்கு சென்று பெறுவோம்" - ஓ.பி.எஸ் பேட்டி!

    சேனனியில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஓ. பன்னிர் செல்வம், "தீர்ப்பை எங்கு பெற வேண்டுமோ, அங்கு சென்று பெறுவோம். மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து நீதி கேட்போம். தீர்ப்பு வந்த பிறகு எங்கள் தொண்டர்கள் மிகப்பெரிய எழுச்சியில் உள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு பின்னடைவு இல்லை.

    கூவத்தூரில் நடந்ததை போல அதிமுகவை தற்போது கைப்பற்றுகின்றனர். நாங்கள் மக்கள் மன்றத்தில் நீதி கேட்போம். ஆணவத்தின் உச்சியில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி, அவர் ஆணவத்தை அதிமுக தொண்டர்கள் அடக்குவார்கள். மக்களை சந்திக்கும்போது பல ரகசியங்களை வெளிப்படுத்துவோம்.


  • 13:26 (IST) 24 Feb 2023
    "தீர்ப்பை எங்கு பெற வேண்டுமோ, அங்கு சென்று பெறுவோம்" - ஓ.பி.எஸ் பேட்டி!

    சேனனியில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஓ. பன்னிர் செல்வம், "தீர்ப்பை எங்கு பெற வேண்டுமோ, அங்கு சென்று பெறுவோம். மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து நீதி கேட்போம். தீர்ப்பு வந்த பிறகு எங்கள் தொண்டர்கள் மிகப்பெரிய எழுச்சியில் உள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு பின்னடைவு இல்லை.

    கூவத்தூரில் நடந்ததை போல அதிமுகவை தற்போது கைப்பற்றுகின்றனர். நாங்கள் மக்கள் மன்றத்தில் நீதி கேட்போம். ஆணவத்தின் உச்சியில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி, அவர் ஆணவத்தை அதிமுக தொண்டர்கள் அடக்குவார்கள். மக்களை சந்திக்கும்போது பல ரகசியங்களை வெளிப்படுத்துவோம்.


  • 13:16 (IST) 24 Feb 2023
    "மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம்": பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி!

    இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஓ.பி.எஸ். ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், "நீதியும், நியாயமும் எங்கள் பக்கம் உள்ளது; மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம். பொதுக்குழு செல்லும் ஆனால், அதன் தீர்மானம் பற்றி பேச மாட்டோம் என்பது, உச்ச நீதிமன்றம் பொறுப்பை தட்டிக்கழிக்கிறதோ என எண்ண வைக்கிறது" என்று கூறியுள்ளார்.


  • 13:01 (IST) 24 Feb 2023
    மிதமான மழைக்கு வாய்ப்பு

    வரும் 27, 28ம் தேதிகளில் தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


  • 12:41 (IST) 24 Feb 2023
    ஓபிஎஸ் ஆலோசனை

    அதிமுக விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார். இதில், பண்ருட்டி ராமசந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


  • 12:40 (IST) 24 Feb 2023
    மு.க.ஸ்டாலின் கடிதம்

    தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


  • 12:40 (IST) 24 Feb 2023
    மக்னா யானை

    கோவையில் பிடிபட்ட மக்னா யானைக்கு மீண்டும் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டாப்சிலிப் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது


  • 11:38 (IST) 24 Feb 2023
    நீட் தேர்வு

    நீட் தேர்வு சட்ட திருத்தத்துக்கு எதிரான ரிட் மனுவை தமிழக அரசு திரும்ப பெற்றது.


  • 11:38 (IST) 24 Feb 2023
    எஸ்.பி.வேலுமணி கேவியட் மனு

    தனது தரப்பு கருத்தைக் கேட்காமல் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உத்தரவு பிறப்பிக்க கூடாது என எஸ்.பி.வேலுமணி கேவியட் மனு அளித்துள்ளார்.


  • 11:13 (IST) 24 Feb 2023
    போராட்டம்

    சிபிஐ சார்பில் பிப்ரவரி 28ம் தேதி ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் என சென்னையில் சிபிஐ மாநிலச்செயலாளர் முத்தரசன் கூறினார்.


  • 11:13 (IST) 24 Feb 2023
    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு

    புலன் விசாரணைக்கு சிபிசிஐடி தரப்பில் அவகாசம் கோரியதால் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை நீதிமன்றம், மார்ச் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.


  • 09:56 (IST) 24 Feb 2023
    உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கிறது அதிமுக

    அதிமுக விவகாரத்தில் ஈபிஎஸ் தரப்புக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு. அங்கீகாரம் வழங்கக்கோரி தேர்தல் ஆணையத்தை நாட அதிமுக முடிவு. உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கிறது அதிமுக. இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை விரைவில் சந்திக்கிறார் சி.வி.சண்முகம்.


  • 09:52 (IST) 24 Feb 2023
    இலங்கை கடற்படையினர் மீது வழக்குப்பதிவு

    தரங்கம்பாடி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழக்குப்பதிவு. 3 பிரிவுகளில் வேதாரண்யம் கடலோர காவல் குழுமம் வழக்குப்பதிவு. கூட்டு கொள்ளை, கொலை முயற்சி, அத்துமீறல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு


  • 09:01 (IST) 24 Feb 2023
    ஜெயலலிதா உருவ படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் . சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இ.பி.எஸ் மரியாதை. ஜெயலலிதா உருவ படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை . அதிமுகவின் சட்டப்பூர்வ இடைக்கால பொதுச்செயலாளராக இ.பி.எஸ், ஜெயலலிதாவுக்கு மரியாதை


  • 08:49 (IST) 24 Feb 2023
    நாளையுடன் ஓய்கிறது இடைத்தேர்தல் பிரசாரம்

    நாளையுடன் ஓய்கிறது இடைத்தேர்தல் பிரசாரம் . அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு


  • 08:34 (IST) 24 Feb 2023
    மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம்

    ஈரோடு கிழக்கு தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கவுள்ளார்


  • 08:32 (IST) 24 Feb 2023
    இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

    இந்தோனேசியாவின் வடக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு


Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment