பெட்ரோல் டீசல் விலை:
இன்று சென்னையில் பெட்ரோலின் விலை 1 லிட்டருக்கு ரூ.102.63, மேலும் டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.94.24 என்று விற்கப்படுகிறது.
விளையாட்டில் இன்று
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
நிலநடுக்கம் 9 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், வீடுகளின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ50 ஆயிரமும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது
ரமலான் நோன்புக்கான பிறை இன்று தென்படவில்லை. எனவே நாளை மறுநாள் முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதின் முகமது அயூப் அறிவித்துள்ளார்
இந்தியாவில் அதிகரித்து வரும் கோவிட் -19 பாதிப்புகளுக்கு மத்தியில், ஆய்வக கண்காணிப்பை மேம்படுத்தவும், அனைத்து கடுமையான கடுமையான சுவாச நோய் (SARI) பாதிப்புகளையும் பரிசோதிக்கவும் மற்றும் மரபணு வரிசைமுறையை அதிகரிக்கவும் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை அழைப்பு விடுத்தார், என PTI தெரிவித்துள்ளது. அறிக்கையின்படி, கோவிட்-வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் சுவாச சுகாதாரத்தை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
சேலம் அடுத்த சின்னப்பம்பட்டியில் உள்ள பட்டாசு உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில், அங்கு வேலை செய்து வந்த அமுதா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பறிக்கும் கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த 370ஆவது சட்டப்பிரிவை மீட்டெடுக்காத வரை நான் சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன். இது எனக்கு உணர்ச்சிகரமான பிரச்னை” என மாநிலத்தின் முன்னாள் முதல் அமைச்சர் மெகபூபா முஃ.ப்தி தெரிவித்துள்ளார். பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று மாலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுக்கோலில் 2.7 ஆக பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மேற்கு டெல்லியில் உணரப்பட்டன.
கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது செய்யப்பட்டதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில், “இந்துத்துவாவை விமர்சித்ததற்காக கன்னட நடிகர் சேத்தன்குமாரைக் கைதுசெய்வதா?” என அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்: “கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாட வேண்டும்; தமிழகம் முழுவதும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டுள்ளார்.
பூத் கமிட்டி உறுபினர்களை தேர்வு செய்யும் பணிகளை தொடங்க உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தொடங்க அறிவுறுத்தியுள்ளார்.
ஜூன் 3ம் தேதி நடைபெறும் தி.மு.க மாநாட்டிற்கு அகில இந்திய தலைவர்களை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தலைமையை மீறி சில வருந்தத் தக்க சில செயல்கள் நடக்கிறது. நிர்வாகிகளும் தொண்டர்களூம் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
சிறப்பாக செயல்படும் மாவட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும். செயல்படாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்று கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி பாடுபட்டவ்ர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
டெல்லியில் மீண்டும் லேசான நில அதிர்வு; ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு ஆகியுள்ளது.
கட்சியில் ஆதரவில்லாதவர்கள் போட்டியிடுவதைத் தடுக்கவே தேர்தலுக்கு தகுதி நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. கட்சி முடிவு செய்த நிபந்தனைகளை நீதிமன்றம் சட்ட விரோதம் எனக் கூற முடியாது என்று இ.பி.எஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.
ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்யும் வேலையில் சிலர் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களிடம் பணத்தைக்க் கொடுத்து ஏமாறாதீர்கள் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர் ஜான் சத்தியனை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கொலீஜியம் பரிந்துரைத்த பெயர்களை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்ததற்கு நீதிபதிகள் அதிர்ப்தி தெரிவித்துள்ளனர். ஜான் சத்தியனை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க 2022 பிப்ரவரி 16-ல் முதலில் கொலீஜியம் பரிந்துரைத்தது. 2023 ஜனவரி 17-ல் அதனை மீண்டும் வலியுறுத்தியிருந்தது.
அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது.
காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில், காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி: “10 பேர் வேலை செய்ய வேண்டிய இடத்தில் 20க்கும் மேற்பட்டோர் வேலை செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9-ஆக உயர்வு சசிகலா(44) என்பவர் சிகிச்சை பலனின்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு
காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலையின் உரிமையாளர் உட்பட 4 பேர் கைது. பட்டாசு ஆலை விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில் 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை
“52 ஆண்டு கால அதிமுகவில் 47 ஆண்டுகள், பொதுச்செயலாளர் பதவி தான் இருந்துள்ளது” “5 ஆண்டுகள் மட்டுமே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இருந்துள்ளன” பெரும்பான்மையானவர்கள் முடிவு செய்தால், அது தான் கட்சியின் விதிகள் – ஈபிஎஸ் தரப்பு வாதம்
திமுகவை எதிர்கொள்ள ஒற்றை தலைமை” “திமுகவை எதிர்கொள்ள தெளிவான, வலுவான ஒற்றைத் தலைமை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” பதவிகள் காலாவதியாகவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு வாதம்
சென்னை, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டி டிக்கெட்களை கள்ள சந்தையில் விற்ற புகாரில் 12 பேரிடம் விசாரணை – 29 டிக்கெட்டுகள் பறிமுதல்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குள் கத்தியுடன் நுழைந்த போதை நபர் பக்தர்களை மிரட்டியபடி ஓடியதால் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்பிடித்தனது. கோயிலின் நிர்வாக அலுவலகத்திற்குள் நுழைந்து கண்ணாடிகளை சேதப்படுத்தியதால் பரபரப்பு
ஓபிஎஸ் தனக்கென தனி கட்சியை நடத்தி வருகிறார். அவர் எங்களை நீக்கியுள்ளார். நிர்வாகிகளை நியமித்திருக்கிறார்” “எடப்பாடி பழனிசாமி தான் இடைக்கால பொதுச்செயலாளர் என உலகத்துக்கே தெரியும்” பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என ஈபிஎஸ் தரப்பு வாதம்
அதிமுக வழக்கு – வைத்திலிங்கம் தரப்பு வாதம்
பொறுப்புகளை வகித்த நிலையில், விளக்கம் கேட்காமல் தன்னை நீக்கியுள்ளனர்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு பொதுச்செயலாளருக்கான அதிகாரம் வழங்கப்பட்டது.
எக்காரணம் கொண்டும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாக இருக்க முடியாது.
பதவிகள் காலாவதியாகி விட்டதாகவும் ஒருவர் கூறமுடியாது – வைத்திலிங்கம் தரப்பு
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா நாளை மீண்டும் தாக்கல்
சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தடைச் சட்டம் தொடர்பாக ஆளுநர் எழுப்பிய கேள்விகள், அரசு அளித்த விளக்கங்களை பேரவையில் விளக்க திட்டம்
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணை தொடக்கம்
வைத்திலிங்கம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மணிசங்கர் வாதங்களை துவங்கினார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் இருப்பதாக வீடியோ வெளியீடு
இன்னும் 2 நாட்களில் வீடு திரும்பி விடுவேன் என வீடியோவில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு
சென்னை, மந்தைவெளியில் உள்ள சாலைக்கு டி.எம்.செளந்தரராஜன் பெயர் சூட்டப்படும் என அறிவிப்பு
மறைந்த பிண்ணனி பாடகர் டி.எம்.செளந்தரராஜனின் நூற்றாண்டு விழாவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
காஞ்சிபுரம் அடுத்த வளதோட்டம் பகுதியில் உள்ள பட்டாசு குடோன் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்வு
தனது மனைவியை மீட்டு தர கோரி கணவர் சிபிசிஐடி காவல்துறை அதிகாரிகளிடம் புகார்
மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனைவியை சேர்த்ததாக கணவர் தகவல்
நெய்வேலி அருகே உள்ள 7 கிராமங்களில் என்எல்சிக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்
கடலூர் மட்டுமின்றி சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களிலும் நிலம் கையகப்படுத்துவதால் பாதிப்பு ஏற்படும்.
என்எல்சி நிர்வாகம், நிலம் எடுப்பதை கைவிட வேண்டும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தல்
காரைக்காலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம்
நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க கோரியும், பணி நிரந்தரம் செய்ய கோரியும் போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் குடும்பத்தினருடன் கைது
தலைமையை மீறி வருந்தத்தக்க சில செயல்கள் நடப்பதாக திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பு
திமுக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்
காஞ்சிபுரம் அடுத்த வளதோட்டம் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்ததோர் எண்ணிக்கை 7-ஆக உயர்வு. மேலும் 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
காஞ்சிபுரம், குருவிமலை அருகே வளத்தோட்டம் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் வெடி விபத்து.
தீ விபத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் காயம் – மருத்துவமனையில் அனுமதி
வெடி விபத்து ஏற்பட்ட பகுதியில், தீயை அணைக்கும் பணி தீவிரம்
தென்காசி, ஆலங்குளம் அருகே உள்ள வடக்கு சிவகாமிபுரம் தேவாலய பாதிரியார் ஸ்டான்லி குமார் கைது
தேவாலயத்திற்கு வரும் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சபை மக்கள் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார்
வன்முறையால் பெண்களை மானபங்கபடுத்துதல் பிரிவின் கீழ் பாவூர்சத்திரம் போலீசார் நடவடிக்கை
ஈபிஎஸ் பொதுச்செயலாளர் இருக்கையில் அமர்வதற்காக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார், தொண்டர்கள் முடிவெடுக்கட்டும் – ஓபிஎஸ்
பெரும்பான்மை உள்ளதால் எந்த முடிவும் எடுக்க முடியும் எனக் கூறி முடிவெடுத்துள்ளனர் இந்த முடிவுகள் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் நோக்கத்துக்கு விரோதமானது – உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்
ஜூன் 23 பொதுக்குழுவில் தீர்மானங்கள் முன் வைக்கப்படாத நிலையில் இரட்டை தலைமை காலாவதியாகிவிட்டதாக எப்படி கூற முடியும்? ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாக உச்ச நீதிமன்றமும் கூறவில்லை- உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கிய தீர்மானத்துக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அந்த பதவிகளை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது.
கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச்செயலாளர் பதவியை தேர்வு செய்ய முடியும், அந்த விதியை பொதுக்குழு உறுப்பினர்கள் திருத்த முடியாது – உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்
சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த பாடத் தேர்வுகளில் 47 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தகவல்/ மொழிப்பாட தேர்வுகளைத் தொடர்ந்து முக்கிய பாடத் தேர்வுகளுக்கும் வராத மாணவர்கள்
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு . செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூரில் மழைக்கு வாய்ப்பு
உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படையானது தண்ணீர். புவி வெப்பமயமாதலில் இருந்து நம்மை காப்பது தண்ணீர் தான். நீர் இல்லை எனில் உயிர் இல்லை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு . செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூரில் மழைக்கு வாய்ப்பு
கிருஷ்ணகிரி: காதல் திருமணம் செய்த ஜெகன் வெட்டிக்கொலை; பெண்ணின் தந்தை சங்கர் உள்பட 3 பேர் மீது கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு சங்கர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், மற்ற 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
ஆதார் எண் – வாக்காளர் அடையாள அட்டை இணைப்புக்கான கால அவகாசம் அடுத்தாண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பு வரும் 31ம் தேதியுடன் கால அவகாசம் முடிய இருந்த நிலையில், மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்து சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியீடு.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்குகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
ஒருநாள் கிரிக்கெட் போட்டியை ஒட்டி சென்னை அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் வரை இலவச சிற்றுந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு .
ரூ. 294 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க அடுத்த மாதம் 8ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. சென்னை – கோவை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்
XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதி . ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை சமநிலைப்படுத்த செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இளங்கோவனுக்கு சிகிச்சை