பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 329-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
என்னிடம் 56 கேள்விகள் கேட்கப்பட்டன : அரவிந்த் கெஜ்ரிவால்
மதுபானக் கொள்கை தொடர்பாக சுமார் 56 கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த விவகாரத்தில் எந்த மோசடிக்கும் ஆதாரம் இல்லை. சிபிஐ விசாரணைக்கு பிறகு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி.
நீர் நிலவரம்
3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2405 மில்லியன் கன அடியாக உள்ளது; 225 கன அடி நீர்வரத்து. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 804 மில்லியன் கன அடியாக உள்ளது; 10 கன அடி நீர்வரத்து. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 481 மில்லியன் கன அடியாக உள்ளது; நீர்வரத்து இல்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
தி.மு.க மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
சென்னை மயிலாப்பூரில் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி பிருந்தா கொலை வழக்கில் அமெரிக்காவில் இருந்து வந்த அவரது வாரிசுகள் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்து, நகைகளை அடையாளம் காட்டினர். இதனையடுத்து வழக்கின் விசாரணையை ஏப்ரல் 20ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்தது. இருவரையும் கொலை செய்து சூளேரிக்காட்டில் உள்ள பண்ணை வீட்டில் புதைத்ததாக கார் டிரைவர் கிருஷ்ணன், அவரது நண்பர் ரவிராய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 521 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
“நடப்பு ஐபிஎல் சீசனுடன் ஓய்வு பெறுகிறீர்களா?” என்ற செய்தியாளர் கேள்விக்கு தோனி நகைச்சுவையாக பதில் அளித்தார். ஓய்வு பற்றி முடிவு செய்ய நிறைய நேரம் இருக்கிறது. இன்னும் நிறைய ஆட்டங்கள் இருக்கின்றன. இப்போதே பேசினால் பயிற்சியாளருக்கு அழுத்தம் ஏற்படும் என்று தோனி கூறினார்.
காஞ்சிபுரம் அருகே பள்ளி குழந்தைகள் இருவர் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர். பள்ளி முடிந்து வயல்வெளியில் இருந்த தாய் தந்தையரை காண சென்ற அண்ணன், தங்கை ஏரியில் மூழ்கினர். 9 வயது சிறுவன், 8 வயது சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கர்நாடக தேர்தலுக்கான பா.ஜ.க.,வின் 3வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காங்கிரசில் இன்று இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷட்டரின், ஹீப்ளி தார்வாட் மத்திய தொகுதிக்கு மகேஷ் தெங்கின்காய் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு மகதேவபுரா தொகுதியின் தற்போதைய பா.ஜ.க எம்.எல்.ஏ அரவிந்த் லிம்பாவளி போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், அவரது மனைவி மஞ்சுளாவுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது
ஏற்காடு அருகே பள்ளி ஆசிரியர் ஹரிகரண் என்பவர் மீது பாலியல் புகார் எழுந்த நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவருக்கு ஆதரவாக பள்ளி முன்பு கூடி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தலைமை ஆசிரியர் காற்புணர்ச்சியில் நடந்து கொள்கிறார் என அவர் மீது குற்றஞ்சாட்டினர்.
குஜராத் மாநிலம் போடாட் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் யாருக்கும் பிரச்னை இல்லை. விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரு அரசு மருத்துவமனையில் உயிரிழந்த வீரப்பன் கூட்டாளி மாதையன் உடல் இன்று கோட்டைமேடு கிராமத்தில் வைத்து எரியூட்டப்பட்டது.
மாதையன் கிட்டத்தட்ட 31 ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்தார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
அப்போது, “கஞ்சா விற்பனை குறித்து தகவல் அளித்த அ.தி.மு.க. நிர்வாகி இளங்கோவன் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.
மேலும் போதைப் பொருள் நடமாட்டத்தை குறைக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
பொன்னியின் செல்வம்-2 ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், திரிஷா ஐஸ்வர்யா என் சகோதரிகள் கிடையாது என விக்ரம் பேசிய காணொலி வைரலாகிவருகிறது.
மகேந்திர சிங் தோனியின் ஒய்வு தொடர்பாக பேச்சுகள் எழுந்த நிலையில், “ஓய்வு குறித்து முடிவெடுக்க இன்னமும் நிறைய நேரங்கள் உள்ளன.
இது தொடர்பாக பேச்சுகள், பயிற்சியாளருக்கு அழுத்தத்தை கொடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் விக்னேஷ் சிவன், பிரபல கிரிக்கெட்டர் சஞ்சு சாம்சஸை தோனியுடன் ஒப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதள பதிவில், “சஞ்சு தோனியை போன்றவர் எனத் தெரிவித்துள்ளார்.
2011-12ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்டதுபோல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் பரப்புரையின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் காவல்துறை அதிகாரி பல்பீர் சிங் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அம்பாசமுத்திரத்தில் பல்பீர்சிங் விசாரணை கைதிகளின் பல்களை பிடுங்கி சித்திரவதை செய்தார் என்று புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது.
அண்டை மாநிலமான கேரளத்தில் வந்தே பாரத் ரயிலை ஏப்.25ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை-கோவை வந்தே பாரத் ரயிலை தொடங்கிவைத்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளில் பள்ளிகளில் மாணவ- மாணவியருக்கு சர்க்கரை பொங்கல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதை நேரலை கொடுக்காததாக கூறி அதிமுக உறுப்பினர்கள் பேரவையை புறக்கணித்து சென்றுள்ளனர்.
திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலைய வளாகத்தின் டீக்கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் எதிர்பாராத விதமாக எண்ணெய் சட்டியில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை ராமநாதபுரம் செல்கிறார்.
கேந்திரியா வித்யாலயா மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
தேவிபட்டினத்தில் மீன்பிடி சமூக உறுப்பினர்களுடன் கலந்துரையாடுகிறார்.
சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் நரிக்குறவர்களை அனுமதிக்காத விவகாரத்தில், எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு நீக்கப்பட்டது.
தற்போது பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவின் கீழ் வருவதாக, தகவல் பொன்னேரி வட்டாச்சியர் கொடுத்த சான்றிதழின் அடிப்படையில் எஸ்.சி.,எஸ்.டி., பிரிவை நீக்கியது காவல்துறை.
“லண்டனில் பென்னி குயிக் சிலை தற்போது திறந்த நிலையில் தான் உள்ளது” “கருப்பு துணியால் மூடி இருப்பதாக தகவல் வந்த நிலையில் அது அகற்றப்பட்டது” பேரவையில் ஈபிஎஸ் கவன ஈர்ப்புக்கு அமைச்சர் சாமிநாதன் பதில்
தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்” “வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க கூடும்” தமிழகம், புதுச்சேரியில் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்
நெல்லையில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் இன்று காலையில் 5 பேர் ஆஜரான நிலையில் தற்போது மேலும் 5 பேர் ஆஜர்
கோவையில் நேற்று நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில் நீதிமன்ற நிபந்தனைகளை மீறியதாக புகார் * கையில் தடியுடன் பயிற்சி மேற்கொண்டதாகவும், பொது கூட்டத்தில் சிலம்பு குச்சிகளுடன் பங்கேற்றதாகவும் குற்றச்சாட்டு
நீதிமன்ற உத்தரவுகளை மாவட்ட ஆட்சியர்கள் மதிப்பதில்லை” ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திலும் லஞ்சம் பெற்ற பிறகே பட்டா மாறுதலுக்கு கையெழுத்து போடப்படுகிறது – ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி நீதிபதி வேதனை
பஞ்சாப் ராணுவ பயிற்சி முகாமில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சக ராணுவ வீரர் கைது. குன்னர் தேசாய் மோகன் என்ற நபர், ஆயுதக் கிடங்கில் இருந்து INSAS துப்பாக்கியை திருடி சுட்டதாக பகீர் வாக்குமூலம். விசாரணையின் போது உண்மையை ஒப்புக்கொண்ட குன்னர் தேசாய் மோகன்
16 வருடங்களுக்கு பிறகு சென்னையில் ஆசிய ஹாக்கி போட்டி – விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
ஆகஸ்ட் 3 முதல் 12 வரை மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறும் என அறிவிப்பு
“நீதிமன்ற உத்தரவுகளை மாவட்ட ஆட்சியர்கள் மதிப்பதில்லை”
ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திலும் லஞ்சம் பெற்ற பிறகே பட்டா மாறுதலுக்கு கையெழுத்து போடப்படுகிறது – ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி நீதிபதி வேதனை
கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட திருத்த முன்வடிவு பேரவையில் நிறைவேறியது
100 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் 1,000 ரூபாயாகவும், 20 ரூபாய் முத்திரைதாள் கட்டணம் 200 ரூபாயாகவும் உயருகிறது
நிறுவன ஆவணங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணமும் மாற்றியமைக்கப்பட்டு மசோதா நிறைவேற்றம்
முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னி குயிக் சிலை குறித்து பேரவையில் ஈபிஎஸ் கவன ஈர்ப்பு
மூடப்பட்ட பென்னி குயிக் சிலையை விரைந்து திறக்க நடவடிக்கை தேவை- ஈபிஎஸ்
ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் உறுதி
கலாஷேத்ரா பாலியல் புகார் விவகாரத்தில் விசாரணை குழுவை நியமிக்க உயர்நீதிமன்றம் முடிவு
ஏப்ரல் 24ம் தேதி விளக்கமளிக்க கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வழக்கு தொடர்ந்த மாணவிகளின் அடையாளத்தை வெளியிடவும் உயர்நீதிமன்றம் தடை
சூடானில் இந்தியர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தூதரகம் அறிவுறுத்தல்
சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் வலுக்கும் நிலையில் இந்தியர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என 2வது முறையாக அறிவுறுத்தல்
வீட்டின் பால்கனி மற்றும் மொட்டை மாடி போன்றவற்றில் நிற்பதை தவிர்க்குமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
உத்தரப்பிரதேசத்தில் பிரபல ரவுடி ஆதிக் அகமது சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்
ஆதிக் அகமதுவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியீடு
ஆதிக் அகமது 9 முறை சுடப்பட்டிருப்பதாக பிரேத பரிசோதனையில் தகவல்
துபாய் தீ விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்
குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த இமாம் காசீம், முகமது ரபீக் உயிரிழப்பு
உயிரிழந்த இருவரின் உடல்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது – முதல்வர் ஸ்டாலின்
'திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி 500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சட்ட அறிக்கை அனுப்பியுள்ளார். சட்ட நடவடிக்கையை சந்திக்க தயார்- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சைகை மொழி பெயர்ப்பாளர்கள் சேவை. சென்னை, தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் சட்டமன்ற நிகழ்வுகளை செவித்திறன் குறைந்தவர்கள் அறியும் வகையில் நடவடிக்கை
கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை சிப்காட்டில் புதிய காலணி உற்பத்தி ஆலை நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், தைவான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் . சென்னை தலைமைச் செயலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து .
சென்னை, கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை. சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி சவரன் ரூ. 45,200க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ. 5,650-க்கு விற்பனை.
காங்கிரஸில் இணைந்த ஜெகதீஷ் ஷட்டர். பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷட்டர் காங்கிரஸில் இணைந்தார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் பாஜகவில் இருந்து விலகினார் .
துருக்கியின் ஆப்சின் நகரில் இன்று காலை 4.25 மணியளவில் நிலநடுக்கம். ரிக்டரில் 4.0 ஆக பதிவு
சின்ன கலைவாணர் பத்மஸ்ரீ விவேக்-கின் 2ம் ஆண்டு நினைவு நாள் இன்று
சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு வரும் அலுவலர்கள், வழக்கறிஞர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
சென்னையில் ஏப்ரல் 21ம் தேதி நடைபெறும் சென்னை – ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டிக்கு நாளை முதல் டிக்கெட் விற்பனை . ஆன்லைன் மூலமும், சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள கவுன்டர்களில் நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பு.
ஐபிஎல் – பெங்களூருவில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் சென்னை – பெங்களூரு அணிகள் மோதல்.
தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக மாநில மாநாடு நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்