நாட்டிலேயே முதன்முதலாக அனைத்து அரசு உயர்கல்வி நிறுவனங்களிலும் படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய் மற்றும் மகப்பேறு விடுமுறையை கட்டாயமாக்கி கேரள அரசு அறிவித்துள்ளது. பல்கலைக்கழக விதிகளின் கீழ் 75 சதவீத வருகைக்கு பதிலாக 73 சதவீத வருகையுடன் மாணவிகள் தங்கள் செமஸ்டர் தேர்வில் பங்கேற்கலாம். மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணவிகளும் 60 நாட்கள் வரை பேறுகால விடுப்பு பெறலாம் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
பட்டாசு ஆலைகளுக்கு எச்சரிக்கை
சட்டத்துக்கு புறம்பாக பட்டாசு ஆலைகளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹாக்கி போட்டி
ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை – வேல்ஸ் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்திய அணி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
இந்திய மல்யுத்த வீராங்கனைகள் முன்வைத்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங்கிற்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு 7 பேர் கொண்ட குழுவை அமைத்தது.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக, சென்னையில் நாளை காலை 8 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க – பா.ஜ.க இடையே நாளை மாலை 5 மணிக்கு பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள கிராமங்களில் வேட்டை நாய்களை வைத்து முயல் வேட்டையாடியதாக 3 பேருக்கு தலா ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து, வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு: “ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய இயற்றப்பட்ட அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், அதனை சட்டமாக நிறைவேற்றும் மசோதவுக்கு ஒப்புதல் தர மறுக்கிறார். சூதாட்ட நிறுவன முதலாளிகளுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளித்துக்கொண்டிருக்கிறார். இந்த ஆளுநர் மட்டுமல்ல, எந்த ஆளுநரும் நமக்கு வேண்டாம் என்ற ஒரு முடிவுக்கு நாம் விரைவில் தள்ளப்படுவோம்” என்று கூறியுள்ளார்.
ஜனவரி 13ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 10.417 பில்லியன் டாலர் அதிகரித்து 572 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் 18 காசுகள் உயர்ந்து 81.18 ஆக நிறைவடைந்தது.
பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது, தீவிரவாதம் எங்கிருந்து வருகிறது என்பதை உலகம் புரிந்துகொண்டுள்ளது என பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி நட்டா கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போனில் இருந்து, டெல்லிக்கு, 277 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த, ஏர் இந்தியா ட்ரீம் லைனர் விமானம் இன்று மாலை சென்னையில் அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் திடீரென எரிபொருள் குறைவாக இருந்ததால் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மதுரையை சேர்ந்த வர்ணிகா என்ற பெண் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலர் ஏர்வாடியை சேர்ந்த மதபோதகர் சாமுவேல் என்பவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், “திருமணம் செய்யாமல் இருவரும் 10 ஆண்டுகள் கணவன்-மனைவி போல் வாழ்ந்தோம். தற்போது, சாமுவேல் சென்னையை சேர்ந்த பிளசி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள 34 திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். வாரிசு, துணிவு திரைப்படங்களின் நள்ளிரவு காட்சிகளை அனுமதியின்றி வெளியிட்டதாக புகார் எழுந்த நிலையில், நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
சாதி, மதத்தின் பெயரால் நடைபெறும் வன்கொடுமைகளை முன்னெச்சரிக்கையாகத் தடுப்பதற்கு ஏதுவாக கண்காணிக்கும் உளவுப்பிரிவு ஒன்றை உருவாக்கிட வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 31 அல்லது ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவை வீழ்த்துவதே இலக்கு என பாஜக துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் கூறினார்.
மேலும் திமுகவை வீழ்த்ததான் தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றார்.
2023-24 பட்ஜெட் குறித்த இரகசியத்தை பாகிஸ்தானுக்கு வழங்கியதாக நிதி அமைச்சக ஊழியர் சுமித் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் வரவு செலவு திட்ட பட்ஜெட் அறிக்கையை பிப்.1ஆம் தேதி தாக்கல் செய்கிறார்.
ஐபிஎல் 2023 இல் பந்திற்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை டெல்லி தேடுகிறது என்பதை பாண்டிங் உறுதிப்படுத்தினார்.
அண்மையில் டெல்லியில் நடந்த விபத்தில் ரிஷப் பந்த் படுகாயம் அடைந்தார். தற்போது அவருககு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
நடிகை அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறிய சட்டக் கல்லூரி மாணவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நடிகை அபர்ணா முரளியிடம் அவர் அநாகரீகமாக நடந்துகொண்டது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், சட்டக் கல்லூரி மாணவர் விஷ்ணு-வை ஒருவாரம் சஸ்பெண்ட் செய்து சட்டக்கல்லூரி பணியாளர் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தீ விபத்து காரணமாக ஒருவருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை. ஒரு இருசக்கர வாகனம் மட்டும் தீப்பற்றி எரிந்து சாம்பலானது.
தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி 'ஜெட்டி' பாலத்தை மக்கள் பயன்படுத்த தடை விதிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
தொண்டி கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஜெட்டி பாலத்தை புதுப்பித்துத் தர உத்தரவிடக் கோரிய வழக்கில் நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போனை, உயர் நீதிமன்ற உத்தரவின்படி விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் அவரது தாயார் ஒப்படைத்துவிட்டார்.
முன்னதாக, நீதிமன்றத்தில் செல்போனை ஒப்படைக்க வந்த நிலையில், அதனை வாங்க நீதிபதி மறுத்துவிட்டார்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் கடந்த 14ஆம் தேதி ஏற்பட்ட வெடிவிபத்தில் வடமாநிலத்தை சேர்ந்த ராம்பால், சந்தீப் குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், அவர்கள் இன்று உயிரிழந்தனர்.
ஆளுனரை ஒருமையில் பேசிய மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கோர வேண்டும் என பாஜக செயற்குழுவில் தீர்மானம் கோரப்பட்டுள்ளது.
ஆளுனர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மோதல் முற்றிய நிலையில் மு.க. ஸ்டாலின் பெயர் குறிப்பிடாமல் ஒருமையில் பேசியதுபோன்ற காட்சிகள் வெளியாகின.
கடந்த நவ.26ம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணியின் மீது சக பயணி சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ₨30 லட்சம் அபராதம் விதித்து டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. மேலும் சம்பவத்தின் போது பணியில் இருந்த விமானியின் உரிமத்தை 3 மாதத்திற்கு ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14ஆம் தேதி திருச்செந்தூரில் நடைபயணத்தை தொடங்க உள்ளதாக கடலூரில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
’காளி' பட சர்ச்சை போஸ்டர் தொடர்பான வழக்கில், இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூரில் நடைபெற்று வரும் பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14ம் தேதி திருச்செந்தூரில் நடை பயணம் மேற்கொள்ள உள்ளார்
ஈரோடு இடைத்தேர்தலில் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் அலுவலர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் வேட்பாளர் தேர்வு குறித்து முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி கருப்பண்ணன், சிவி சண்முகம், கேபி முனுசாமி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். சேலம் நெஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.
ஈரோடு இடைத்தேர்தலில் அமமுக சாதிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது, திமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். 27ம் தேதி அமமுகவின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் – சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட வலியுறுத்தி, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
ராமஜெயம் கொலை வழக்கு விவகாரம் தொடர்பாக மூன்றாம் கட்டமாக 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை வேங்கைவயலில் நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை 3 சமூகத்தைச் சேர்ந்த 45 நபர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாக சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி கூறியுள்ளார்.
ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று சாதிய பாகுபாடின்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேசிய கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
நெட்ஃபிளிக்ஸ் இணை நிறுவனர் ரீட் ஹேஸ்டிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.42,600க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,325 ஆக உள்ளது
இன்றைய அரசியல் சூழலில் அதிமுக போட்டியிடுவது தான் சரியாக இருக்கும் . இரட்டை இலை சின்ன விவகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை, நிச்சயம் இரட்டை இலையில் தான் போட்டி – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை. அதிமுக வழக்கு மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் . ஆலோசனையில் பங்கேற்க சேலம் விரைகிறார் சி.வி.சண்முகம்
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக மூன்றாம் நாள் உண்மை கண்டறியும் சோதனை தொடங்கியது . சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் அறிவியல் கூடத்தில் சாமிரவி, சிவா, ராஜ்குமார், மாரிமுத்து ஆகிய 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனைநடைபெற உள்ளது
சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது
“குடியரசு தின விழாவில் பட்டியலின ஊராட்சி தலைவர்கள் கொடியேற்றுவதில் சாதி பாகுபாடு கூடாது” . 15 விதமான அறிவுரைகளை சுட்டிக்காட்டி, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்
தற்போதைய அரசியல் சூழல், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொண்டோம் – ஜி.கே.வாசன்
பாஜக மாநில செயற்குழு கூட்டம், கடலூரில் இன்று நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் குறித்து ஆலோசனை. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், கூட்டணி தர்மத்தை மதித்து முடிவெடுப்போம் – அண்ணாமலை