Advertisment

Tamil Breaking News Highlights: தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு

Tamil News Updates- அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
heat

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 179-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

69% இடஒதுக்கீடுக்கு ஆபத்து: அன்புமணி

தமிழ்நாட்டில் உள்ள 69% இடஒதுக்கீடுக்கு ஆபத்து. இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் தொடர்ந்த வழக்கால் 69% இடஒதுக்கீடுக்கு ஆபத்து வந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் வழக்கை உச்ச நீதிமன்றம் கையில் எடுக்கும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

  • Sep 13, 2024 05:28 IST
    மணலியில் 400 கிலோ வாட் திறன் யூனிட்டில் தீ விபத்து; சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் பாதிப்பு

    மணலியில் 400 கிலோ வாட் திறன் கொண்ட முக்கிய யூனிட்டில் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் மின்சார விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    விபத்து நடந்த பகுதியை அகற்றி மீண்டும் மின் விநியோகம் வழங்குவதற்கான பணிகள் தொடங்கி  நடைபெற்று வருகின்றன.

    ஆர்.ஏ.புரம், மைலாப்பூர், புளியந்தோப்பு உள்ளிட்ட இடங்களுக்கு முதலில் மின் விநியோகம் சீரடையும் எனவும். மற்ற இடங்களுக்கு படிப்படியாக சீராகும் எனவும்
    ராஜேஷ் லகோனி தகவல் தெரிவித்துள்ளார்.



  • Sep 13, 2024 05:19 IST
    விமான நிலையத்தில் அவமதிப்பு - மயிலாடுதுறை எம்.பி. சுதா

    காங்கிரஸ் எம்.பி சுதா தனது எக்ஸ் பக்கத்தில், “விமான நிலைய டோல்கேட் ஊழியர்கள் அடாவடியாக நடந்துகொண்டனர்; எனது அடையாள அட்டையைப் பார்க்க மறுத்து வழிப்பறி செய்வது போல கட்டணம் கேட்டனர். செப்டம்பர் 11 அதிகாலை டெல்லியில் இருந்து சென்னை வந்தபோது 2வது முறை தொல்லைக்கு ஆளானேன்; டோல்கேட் குழுவின் மேற்பார்வையாளரும் தொலைபேசியில் அவமதிக்கும் வகையில் பேசினார்” என்று பதிவிட்டுள்ளார்.



  • Sep 12, 2024 21:30 IST
    படிப்படியாக மதுவிலக்கு: முத்துசாமிக்கு திருமாவளவன் நன்றி

    வி.சி.க தலைவர் திருமாவளவன்: “படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என அமைச்சர் முத்துசாமி அறிவித்திருப்பது நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. அமைச்சர் முத்துசாமிக்கு மனமார்ந்த நன்றி” என்று தெரிவித்துள்ளார்.



  • Sep 12, 2024 20:40 IST
    மதுரையில் மகளிர் தங்கும் விடுதியில் தீ விபத்து: 2 பேர் உயிரிழப்பு - இருவர் கைது

    மதுரையில் கட்ராபாளையத்தில் மகளிர் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், விடுதியின் உரிமையாளர் இன்பா, விடுதி காப்பாளர் புஷ்பா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.



  • Sep 12, 2024 19:46 IST
    சென்னை உட்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Sep 12, 2024 19:44 IST
    இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு; கைதான 3 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

    தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு பகுதியில் கடந்த மாதம் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது. 17 வயது சிறார் இருவர் உள்பட 6 பேர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், கவிதாசன், திவாகர், பிரவீன் ஆகிய மூவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் அளித்த பரிந்துரையின் பெயரில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.



  • Sep 12, 2024 19:39 IST
    முற்போக்கு அரசியலில் சீதாராம் யெச்சூரியின் பங்களிப்பு என்றென்றும் நினைவு கூரப்படும் - விஜய் இரங்கல்

    "முற்போக்கு அரசியலில் சீதாராம் யெச்சூரியின் பங்களிப்பு என்றென்றும் நினைவு கூரப்படும்" என்று  த.வெ.க தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.



  • Sep 12, 2024 18:54 IST
    கோவில் கோபுரம் முன்பு வணிக வளாகம்? தமிழக அரசுக்கு, ஐகோர்ட் கேள்வி

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டும் திட்டத்தை ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது



  • Sep 12, 2024 18:42 IST
    காவல்துறையின் விசாரணை முறையாக இல்லை - ஐகோர்ட் அதிருப்தி

    கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறையின் விசாரணை முறையாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது



  • Sep 12, 2024 18:26 IST
    பாடகர் மனோ மகன்கள் தலைமறைவு - திணறும் போலீசார்

    தலைமறைவாக உள்ள பாடகர் மனோவின் மகன்களை, 2 வது நாளாக போலீசார் தேடி வருகின்றனர். செல்போன் சிக்னலை வைத்து பிடிக்க முயன்ற முயற்சி தோல்வி அடைந்த நிலையில், தனிப்படை இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது



  • Sep 12, 2024 18:25 IST
    செந்தில் பாலாஜி வழக்கு - காவல் துறைக்கு ஐகோர்ட் கேள்வி

    விசாரணைக்கு அனுமதி கிடைக்கவில்லை என எத்தனை அவகாசம் கேட்பீர்கள் என செந்தில் பாலாஜி வழக்கில் காவல் துறையிடம், சென்னை சிறப்பு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது



  • Sep 12, 2024 18:06 IST
    சீதாராம் யெச்சூரி மரணம் – ஸ்டாலின் இரங்கல்

    இடதுசாரி இயக்கத்தின் தலைவரும், இந்திய அரசியலில் தலைசிறந்த ஆளுமையுமான தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவு ஆழ்ந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. சிறுவயதிலிருந்தே அச்சமற்ற தலைவராக இருந்தவர் தோழர் சீதாராம் யெச்சூரி. மாணவர் தலைவராக தைரியமாக முன் நின்று அவசரநிலைக்கு எதிராக போராடிய அவரது அர்ப்பணிப்பு முக்கியமானது.

    தொழிலாளி வர்க்கம், மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம், முற்போக்கு ஆகியவற்றிற்கான அவரது அர்ப்பணிப்பு, வருங்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஒரு சிறந்த பாதையை வடிவமைத்தது. அவருடனான கலந்துரையாடல்களை நான் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வேன்; அவரது குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.



  • Sep 12, 2024 18:05 IST
    சீதாராம் யெச்சூரி மரணம் – வைகோ இரங்கல்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரான சீதாராம் யெச்சூரி 72 உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை அடைந்தார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் போராளித் தலைவராக பணியாற்றிய இவரின் மறைவு இடதுசாரிகளுக்கும், முற்போக்குச் சிந்தனையாளர்களுக்கும் பேரிழப்பாகும். அவரது தன்னலமற்ற இயக்கப் பணிக்கு வீரவணக்கம் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்



  • Sep 12, 2024 18:03 IST
    சீதாராம் யெச்சூரி மரணம் – குடியரசு தலைவர் இரங்கல்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவு குறித்து அறிந்து வருத்தம் அடைந்தேன். முதலில் மாணவர் தலைவராகவும், பின்னர் தேசிய அரசியலிலும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் தனித்துவம் வாய்ந்த, செல்வாக்கு மிக்க குரலாக இருந்தவர். உறுதியான சித்தாந்தவாதியாக இருந்தாலும், கட்சி எல்லைகளைக் கடந்து நண்பர்களை சம்பாதித்தவர். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என சீதாராம் யெச்சூரி மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்



  • Sep 12, 2024 17:53 IST
    சீதாராம் யெச்சூரி மரணம் – ராமதாஸ் இரங்கல்

    இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். யெச்சூரியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட அனைத்து பொதுவுடைமை இயக்கத்தினருக்கும் இரங்கல் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்



  • Sep 12, 2024 17:52 IST
    சீதாராம் யெச்சூரி மரணம் – எடப்பாடி பழனிசாமி இரங்கல்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலாமானார் என்ற செய்திகேட்டு துயருற்றேன். மாணவர் பருவம் முதலே கம்யூனிச, மார்க்சிஸக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, முதலாளித்துவ கொடுமைகளை எதிர்த்து தொழிலாளர்களின் நல்வாழ்வுக்காக பாடுபட்டவர். இந்திய அரசியல் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்ற சீதாராம் யெச்சூரி அவர்கள் மறைவு நாட்டிற்கும், தொழிலாளர் வர்க்கத்திற்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்



  • Sep 12, 2024 17:43 IST
    சீதாராம் யெச்சூரி மரணம் – தே.மு.தி.க இரங்கல்

    சி.பி.எம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்



  • Sep 12, 2024 17:30 IST
    சீதாராம் யெச்சூரி மரணம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இரங்கல்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இரங்கல் தெரிவித்துள்ளது



  • Sep 12, 2024 17:22 IST
    சீதாராம் யெச்சூரி மரணம் – வி.கே.சசிகலா இரங்கல்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் திரு.சீதாராம் யெச்சூரி அவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தற்போழுது அவர் உயிரிழந்து இருக்கிறார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். சீதாராம் யெச்சூரி அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவர் சார்ந்த கட்சியின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்



  • Sep 12, 2024 17:21 IST
    சீதாராம் யெச்சூரி மரணம் – கமல்ஹாசன் இரங்கல்

    இந்திய அரசியலின் ஜாம்பவான் சீதாராம் யெச்சூரி உயிரிழந்த செய்தி வருத்தமளிக்கிறது. மாணவர் ஆர்வலரிலிருந்து ஸ்டேட்ஸ்மேன் வரையிலான அவரது பயணத்தில், அரசியலில் தனது அழியாத முத்திரையை பதித்தார். அவரது குடும்பத்தினருக்கும் எனது அனுதாபங்கள். பிரியாவிடை தோழர் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்



  • Sep 12, 2024 17:12 IST
    சீதாராம் யெச்சூரி மரணம் – டி.டி.வி தினகரன் இரங்கல்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது; அரசியல்வாதியாக, பொருளாதார நிபுணராக, எழுத்தாளராக பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்ந்த சீதாராம் யெச்சூரியை இழந்துவாடும் உறவினர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்



  • Sep 12, 2024 17:04 IST
    சீதாராம் யெச்சூரியின் உடல் தானம்

    கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கத்திற்காக மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு குடும்பத்தினர் தானமாக வழங்கியுள்ளனர் 



  • Sep 12, 2024 16:52 IST
    கூல் லிப்-ஐ ஏன் தடை செய்யக்கூடாது? ஐகோர்ட் கேள்வி

    பள்ளி, கல்லூரி மாணவர்கள் "கூல் லிப் (CoolLip)" என்னும் போதைப் பொருளுக்கு அதிகம் அடிமையாகி வருகின்றனர் கூல் லிப்-ஐ ஏன் தடை செய்யக்கூடாது? சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி பரத சக்கரவர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்



  • Sep 12, 2024 16:30 IST
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மரணம்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் ராஜ்யசபா எம்.பி.,யுமான சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 72.



  • Sep 12, 2024 15:40 IST
    மாணவர்கள் பயன்படுத்தும் போதைப்பொருள்: மத்திய மாநில அரசு பதில் அளிக்க உத்தரவு

    பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூல் லிப்எனும் போதைப் பொருளுக்கு அதிகம் அடிமையாகியுள்ளனர். இத்தகைய போதைப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுகிறது என்று வேதனை தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பரத சக்ரவர்த்தி, இத்தகைய போதைப் பொருளை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து ஏன் நாடு முழுவதும் தடை செய்யக் கூடாது? என ஒன்றிய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.



  • Sep 12, 2024 15:38 IST
    சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

    வீட்டுப் பணிக்காக சிறைக் கைதியை பயன்படுத்திய விவகாரத்தில், சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.



  • Sep 12, 2024 15:38 IST
    பரம்பொருள் அறக்கட்டளையில் மகாவிஷ்ணுவிடம் விசாரணை நிறைவு!

    அவினாசி பரம்பொருள் அறக்கட்டளையில் மூட நம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவிடம் நடந்த 5 மணி நேர விசாரணை நிறைவு பெற்றுள்ளது. அவரின் வங்கி பண பரிவர்த்தனை, நன்கொடை விபரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள அறக்கட்டளை கிளைகள், நிதி ஆதாரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து திருப்பூர் கனியாம்பூண்டி பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது!



  • Sep 12, 2024 14:24 IST
    பரம்பொருள் அறக்கட்டளையில் சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்?

    மகாவிஷ்ணுவை திருப்பூர் அழைத்து சென்று பரம்பொருள் அறக்கட்டளையில் சோதனை நடத்தி வரும் சைதாப்பேட்டை போலீசார் சோதனையில் லேப்டாப், ஹார்டு டிஸ்க் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பரம்பொருள் அறக்கட்டளையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வரும் சோதனையில் அறக்கட்டளையில் உள்ள ஒவ்வொரு அறையிலும் சென்று கோப்புகளை ஆய்வு செய்த போலீசார் குறுகிய காலத்தில் வெளிநாடுகளில் கிளைகளை பரப்பியது எப்படி என விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Sep 12, 2024 14:21 IST
    காவிரி நீர் திறப்பு விவகாரம்: கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தல்

    உச்சநீதிமன்ற தீர்ப்பு படி, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை மாதந்தோறும் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தியுள்ள நிலையில்,  அக்டோபர் மாதத்திற்கான 20 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில், தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.



  • Sep 12, 2024 14:19 IST
    தவெக மாநாடு: நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் அதிருப்தி என தகவல்!

    நிர்வாகிகள் உடனான ஆலோசனையில் விஜய் அதிருப்தி என தகவல் த.வெ.க மாநாடு வரும் 23ஆம் தேதி மாநாடு நடைபெறுவதாக இருந்த நிலையில், அக்டோபர் 15ஆம் தேதிக்கு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறை நிபந்தனைகளை செப்டம்பர் 23க்குள் நிறைவேற்றுவது கடினம் என்பதால், மாநாடு தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது.

    அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் மாநாடு ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய விஜய் அக்டோபர் மாதம் மழைக்காலம் என்பதால், மாநாடு நடத்துவதற்கு ஏதுவாக இருக்குமா என கேட்பதாகவுமு்,  தீபாவளி மாதம் என்பதால் காவல்துறை அனுமதி கிடைப்பதிலும் சிக்கல் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.



  • Sep 12, 2024 14:15 IST
    ஆந்திர வெள்ள பாதிப்பு: நிவாரணம் வழங்கிய சிம்புவுக்கு பவன் கல்யாண் நன்றி!

    ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 3 லட்சம் நன்கொடை அறிவித்த பிரபல தமிழ் நடிகர் திரு டி.ஆர்,சிலம்பரசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இக்கட்டான காலங்களில் மக்களுக்கு ஆதரவாக இருங்கள், உங்கள் ஆதரவு மாநில அரசின் நிவாரணத் திட்டங்களை வலுப்படுத்தும் என்று ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் தமிழில் பதிவிட்டுள்ளார்.



  • Sep 12, 2024 13:28 IST
    மதுரை மகளிர் விடுதி தீ விபத்து - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு 

    "விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். விதிமீறல்கள், குளறுபடிகள் எல்லா ஆட்சியிலும் நடந்துள்ளன. தமிழகம் முழுவதும் விடுதிகளில் குளறுபடிகள் உள்ளன விதிமீறல்களை களைவது குறித்து தலைமை செயலாளருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். 

    பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது. இனி இதுபோல் நடக்காமல் இருப்பதற்கு விதிகள் வகுக்கப்படும் என்று மதுரை மகளிர் விடுதி தீ விபத்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 



  • Sep 12, 2024 13:11 IST
    நடிகர் விமல் வழக்கு - முடித்துவைப்பு 

    ரூ.2 கோடி மோசடி செய்ததாக பைனான்சியர், விநியோகஸ்தருக்கு எதிராக நடிகர் விமல் அளித்த புகாரின்படி பதிந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது. பைனான்சியர் கோபி, விநியோகஸ்தர் சிங்காரவேலன், அவரது மேலாளர் விக்னேஷூக்கு எதிராக நடிகர் விமல் புகார் அளித்தார். 

    தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, விக்னேஷ்குமார் மனு அளித்தார். வழக்கு தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தப்பட்டுவிட்டது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விருகம்பாக்கம் போலீசார் விளக்கமளித்தனர். காவல்துறையின் விளக்கத்தை ஏற்று வழக்கு முடித்துவைத்துக்கப்பட்டுள்ளது. 



  • Sep 12, 2024 13:01 IST
    ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை

    மகா விஷ்ணுவை திருப்பூர் அழைத்து சென்றுள்ள சைதாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், பரம்பொருள் அறக்கட்டளையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தியுள்ளார்கள். அறக்கட்டளையில் உள்ள ஒவ்வொரு அறையிலும் சென்று கோப்புகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். 



  • Sep 12, 2024 12:33 IST
    ஆதார் கார்டு புதுப்பு - கால அவகாசம் நீட்டிப்பு: ஆதார் ஆணையம் அறிவிப்பு

    ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாளுடன் அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், டிசம்பர் 14 வரை நீட்டிக்கப்படுவதாக ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது. 



  • Sep 12, 2024 12:08 IST
    எம்.ஐ.டி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

    சென்னை குரோம்பேட்டையில் உள்ள  எம்ஐடி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. 

    எம்ஐடி கல்லூரியில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 3 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை தொடர்ந்து வருகிறது. 



  • Sep 12, 2024 12:07 IST
    மதுவிலக்கு வருமா?  - அமைச்சர் முத்துசாமி விளக்கம்

    தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம். மதுக்கடைகள் தொடர்ந்து செயல்படுவதில் முதல்வருக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை. மதுக்கடைகளை என்றாவது ஒருநாள் மூடவேண்டும் என்றே முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார். இங்குள்ள சூழலை பொறுத்து தான், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும். 

    ஒரே நாளில் உத்தரவு போட்டு மதுக்கடைகளை மூடி விடலாம். உடனடியாக மூடினால் என்ன நடக்கும் என்பதை ஆராய்ந்து தான் நடவடிக்கை எடுக்க முடியும். திமுக அரசை எதிர்த்து வி.சி.க மாநாடு நடத்தவில்லை, கொள்கை ரீதியான முடிவுக்காக நடத்துகின்றனர். வி.சி.க மாநாட்டில் அ.தி.மு.க பங்கேற்கலாம் என பொதுவான அழைப்பை தான் திருமாவளவன் விடுத்துள்ளார்" என்று மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். 



  • Sep 12, 2024 11:37 IST
    கேங்கர்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

    வடிவேலுவின் பிறந்த நாளை முன்னிட்டு, வடிவேலு - சுந்தர் சி இணைந்து நடிக்கும் கேங்கர்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. 14 வருடங்களுக்குப் பிறகு வடிவேலுவுடன் கை கோர்த்திருக்கும் சுந்தர் சி, இப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.

     



  • Sep 12, 2024 11:31 IST
     தமிழகத்தில் 42% கூடுதலாக மழை 

    தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 42% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 



  • Sep 12, 2024 11:30 IST
    போராட்டம் 

    சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை அனுப்ப வரும் பெற்றோர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து வேளச்சேரி நுழைவு வாயில் முன் பெற்றோர்கள் போராட்டம்நடத்தி வருகிறார்கள். 



  • Sep 12, 2024 11:05 IST
    17ம் தேதி ஜிப்மர் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது

    மிலாதுநபியை முன்னிட்டு வரும் 17ம் தேதி ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது என நிர்வாகம் அறிவித்துள்ளது. எனினும் அவசர பிரிவு சேவைகள் வழக்கம் போல் இயக்கும் எனவும் கூறியுள்ளது. 



  • Sep 12, 2024 10:32 IST
    மதுரை விடுதியில் ஆட்சியர் ஆய்வு

    மதுரையில் தீ விபத்து ஏற்பட்ட பெண்கள் விடுதியில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆய்வு, மகளிர் தங்கும் விடுதியில் ஃபிரிட்ஜ் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த நிலையில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

    மதுரையில் உள்ள அனைத்து விடுதிகளிலும் ஆய்வு செய்யப்படும். உரிய அனுமதியின்றி இயங்கும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்தார். 



  • Sep 12, 2024 10:28 IST
    தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைவு

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,640க்கு விற்பனை. கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,705க்கு விற்பனை செய்யப்படுகிறது



  • Sep 12, 2024 10:07 IST
    சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    தொடர் விடுமுறை சென்னையில் நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் 

    முகூர்த்தம், மிலாடி நபி, வார விடுமுறை நாட்களை முன்னிட்டு நாளை முதல் சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.



  • Sep 12, 2024 09:49 IST
    மகா விஷ்ணுவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

    போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட மகா விஷ்ணுவிடம் வெளிநாட்டு பணபரிவர்த்தனை குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை. மகா விஷ்ணுவை 3 நாள் காவலில் எடுத்துள்ள சைதாப்பேட்டை போலீசார் விடிய விடிய விசாரணை. சொற்பொழிவு மூலம் சம்பாதிக்கும் பணம் குறித்தும், வெளிநாட்டு பணபரிவர்த்தனை குறித்தும் விசாரணை நடந்ததாக தகவல். மகா விஷ்ணுவை திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை செய்கின்றனர்.மகா விஷ்ணு யூ டியூப்பில் பதிவேற்றம் செய்துள்ள அனைத்து வீடியோக்களையும் போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர். 



  • Sep 12, 2024 09:47 IST
    ரூ 500 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம்

    கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் 500 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமெரிக்காவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கேட்டர்பில்லர் நிறுவனத்தின் கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களை விரிவுபடுத்த ஒப்பந்தம் இதுவரை சான் பிரான்சிஸ்கோ, சிகாகோவில் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து. 



  • Sep 12, 2024 09:32 IST
    மதுரை விடுதியில் தீ விபத்து: 2 பெண்கள் பலி

    மதுரையில் மகளிர் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தில், விடுதியின் உரிமையாளரான இன்பா என்ற பெண் கைது.தீ விபத்து காரணமாக கரும்புகை உருவானதால் விடுதியில் இருந்த பெண்களுக்கு மூச்சு திணறல் தீ விபத்து சம்பவத்தில் பரிமளா, சரண்யா ஆகிய இரண்டு பெண்கள்  உயிரிழப்புமதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் பகுதியில் உள்ள மகளிர் விடுதியில் நிகழ்ந்த சோகம் தங்கும் விடுதியில் பிரிட்ஜ் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் ஏற்கனவே மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுத்த நிலையில் அலட்சியமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு 



  • Sep 12, 2024 08:17 IST
    மகாவிஷ்ணுவை திருப்பூர் அழைத்து சென்று விசாரணை

    சர்ச்சைச் பேச்சு விவகாரத்தில் கைதான மகாவிஷ்ணுவை விசாரணைக்காக சைதாப்பேட்டை போலீசார் திருப்பூர் அழைத்து சென்றுள்ளனர். திருப்பூரில் உள்ள பரம்பொருள் பவுண்டேசன் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்த போலீசார் அழைத்து சென்றுள்ளனர். மகாவிஷ்ணு அலுவலகத்தை சோதனையிட்ட பின், நாளை மீண்டும் சென்னை அழைத்து வரவுள்ளதாக தகவல்.3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்துள்ள நிலையில் மகாவிஷ்ணுவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.



  • Sep 12, 2024 08:14 IST
    மனோவின் மகன்களை கைது செய்ய போலீசார் தீவிரம்

    மதுபோதையில் 16 வயது சிறுவனை தாக்கிய விவகாரத்தில் சினிமா பின்னணி பாடகர் மனோவின் 2 மகன்களை கைது செய்ய காவல்துறை தீவிரம், செல்போன் சிக்னலை வைத்து தலைமறைவாக உள்ள பின்னணி பாடகர் மனோவின் மகன்களை பிடிக்க நெருக்கியதாக தகவல் பாடகர் மனோவின் மகன்கள் ரபிக் , சாகீர் இருவரையும் பிடிக்க 5 பேர் கொண்ட தனிப்படை போலீஸ் ஈசிஆர் விரைந்தனர். 

    வளசரவாக்கம் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை ஈசிஆர் விரைந்துள்ளது. செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் சிடிஆர் மூலம் கண்காணித்து தலைமறைவாக உள்ள இருவரையும் கைது செய்ய தனிப்படை தீவிரம் காட்டுகின்றனர்.  



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment