Advertisment

Tamil News Highlights: சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 31-08- 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
nhai

Tamil news live

மதுரை, திண்டுக்கல், திருச்சி, உளுந்தூர்பேட்டை, தூத்துக்குடி உட்பட தமிழ்நாடு முழுவதும் 28க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

Advertisment

இதனால் வாகன ஓட்டிகள் மற்றுல் லாரி உரிமையாளர்கள் கவலையடைந்து உள்ளனர்.

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

Advertisment
Advertisement

  • 21:17 (IST) 31 Aug 2023
    தமிழகத்தின் வளர்ச்சி இன்ஜின் கொங்கு மண்டலம் – அண்ணாமலை

    தமிழகத்தின் வளர்ச்சி இன்ஜின் கொங்கு மண்டலம் என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்


  • 20:50 (IST) 31 Aug 2023
    அண்ணாமலைக்கு பியூஷ் கோயல் வாழ்த்து

    தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அதில், “அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை தமிழ்நாட்டை ஊழலில் இருந்து விடுவிக்கும். சட்டம் ஒழுங்கு பிரச்னையை சீர் செய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.


  • 20:40 (IST) 31 Aug 2023
    தேனியில் புதிய அருவி

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு பெய்து வரும் மழை காரணமாக, வறண்டு கிடந்த டானாதோட்டம் மலைப்பகுதியில் புது அருவி போல் தண்ணீர் கொட்டி வருகிறது; தண்ணீர் விழுவதை ஆச்சர்யத்தோடும், மகிழ்ச்சியுடனும் மக்கள் பார்த்து செல்கின்றனர்.


  • 20:34 (IST) 31 Aug 2023
    விஜயலட்சுமி புகார்: ராமாபுரம் காவல் நிலையத்தில் விசாரணை

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு துணை ஆணையர் உமையாள் நேரடி விசாரணை நடத்தி வருகிறார்.

    இது தொடர்பான விசாரணை ராமாபுரம் காவல் நிலையத்தில் வைத்து நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.


  • 20:32 (IST) 31 Aug 2023
    மு.க. ஸ்டாலினுக்கு பிரக்ஞானந்தா நன்றி

    சர்வதேச செஸ் சாம்பியன் போட்டியில் 2ஆம் இடம் பெற்ற பிரக்ஞானந்தாவை மு.க. ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.

    அவருக்கு பிரக்ஞானந்தா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில், “நன்றி ஐயா. தங்களின் பரிசு எனது செஸ் பயணத்தில் உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.


  • 20:29 (IST) 31 Aug 2023
    மு.க. ஸ்டாலினுக்கு பிரக்ஞானந்தா நன்றி

    சர்வதேச செஸ் சாம்பியன் போட்டியில் 2ஆம் இடம் பெற்ற பிரக்ஞானந்தாவை மு.க. ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.

    அவருக்கு பிரக்ஞானந்தா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில், “நன்றி ஐயா. தங்களின் பரிசு எனது செஸ் பயணத்தில் உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.


  • 20:10 (IST) 31 Aug 2023
    சொகுசு கார் வாங்கிய ஃபகத் ஃபாசில்

    நடிகர் ஃபகத் ஃபாசில் தனது திருமண நாளை முன்னிட்டு லோன் ரோவர் டிபென்டர் 90 ரக சொகுசு கார் வாங்கியுள்ளார். இந்த மாடல் காரை கேரளத்தில் வாங்கிய முதல் நபர் இவர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.


  • 20:08 (IST) 31 Aug 2023
    சொகுசு கார் வாங்கிய ஃபகத் ஃபாசில்

    நடிகர் ஃபகத் ஃபாசில் தனது திருமண நாளை முன்னிட்டு லோன் ரோவர் டிபென்டர் 90 ரக சொகுசு கார் வாங்கியுள்ளார். இந்த மாடல் காரை கேரளத்தில் வாங்கிய முதல் நபர் இவர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.


  • 19:54 (IST) 31 Aug 2023
    லஞ்சம் வாங்கிய பத்திரப்பதிவு அலுவலர் கைது

    விருதாச்சலம் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் ₹3.50 லட்சம் லஞ்சம் வாங்கிய பத்திரப்பதிவு அலுவலர் சங்கீதா, கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    தொடர்ந்து, சங்கீதாவுக்கு உடந்தையாக இருந்த உதயகுமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.


  • 19:38 (IST) 31 Aug 2023
    நெல்லையில் மெட்ரோ ரயில்?

    திருச்சி, நெல்லை, சேலத்தில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.


  • 19:37 (IST) 31 Aug 2023
    மும்பையில் ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணி ஆலோசனைக் கூட்டம்

    மும்பையில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஐ.என்.டி.ஐ.ஏ ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

    பாட்னா மற்றும் பெங்களூருவில் 2 கூட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையில், மும்பையில் தற்போது 3வது கூட்டம் நடைபெறுகிறது. 28 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.


  • 19:36 (IST) 31 Aug 2023
    மும்பையில் ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணி ஆலோசனைக் கூட்டம்

    மும்பையில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஐ.என்.டி.ஐ.ஏ ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

    பாட்னா மற்றும் பெங்களூருவில் 2 கூட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையில், மும்பையில் தற்போது 3வது கூட்டம் நடைபெறுகிறது. 28 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.


  • 19:34 (IST) 31 Aug 2023
    காவிரி வழக்கு- முக்கிய தகவல்

    காவிரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.


  • 19:00 (IST) 31 Aug 2023
    நாகர்கோவிலில் இந்து சேனா அமைப்பினர் 3 பேர் மீது வழக்குப்பதிவு

    நாகர்கோவிலில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் விநாயகர் சதுர்திக்கு நன்கொடை கேட்டு தகராறு செய்த இந்து சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு; கைது செய்ய தேடி வருகின்றனர்.


  • 18:59 (IST) 31 Aug 2023
    சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளை நிரந்த நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை

    சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்து வரும் நீதிபதிகள் ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சௌந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.


  • 18:07 (IST) 31 Aug 2023
    அதானி குழும முறைகேடுகள் குறித்து புதிய செய்திகளை சுட்டிக்காட்டி ராகுல்காந்தி கேள்வி

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி: “அதானி குழும முறைகேடுகள் குறித்து புதியதாக வந்துள்ள செய்திகளைச் சுட்டிக்காட்டி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

    சர்வதேச பத்திரிகைகள் இன்று ஒரு முக்கிய பிரச்னையை மையப்படுத்தி எழுதியிருக்கின்றன. இந்த செய்தி இந்தியாவுக்கு வரும் முதலீடுகளைக்கூட பாதிக்கக்கூடிய ஒன்று. மோடியின் நண்பரான அதானியின் குழும ஊழல்கள் பற்றி சர்வதேச நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


  • 18:04 (IST) 31 Aug 2023
    ராஜினாமா செய்யவில்லை; வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நெல்லை மேயர் சரவணன்

    நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா செய்வதாக வெளியான தகவலுக்கு மேயர் சரவணன் மறுப்பு தெரிவித்துள்ளார். ராஜினாமா செய்வதாக, தி.மு.க தலைமைக்கு சரவணன் கடிதம் எழுதியதாக தகவல் பரவிய நிலையில் மறுப்பு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயம் சென்றது உண்மை, ஆனால் ராஜினாமா கடிதம் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், மேயர் சரவணன்/மேயரை மாற்ற வேண்டும் என தி.மு.க தலைமைக்கு 40 கவுன்சிலர்கள் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளனர்.


  • 17:31 (IST) 31 Aug 2023
    கச்சத்தீவு விவகாரத்தில் தலையிட முடியாது - ஐகோர்ட்

    கச்சத்தீவு மீட்பு விவகாரம் மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு என்பதால் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

    கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த பீட்டர் ராயன் என்பவர் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.


  • 17:29 (IST) 31 Aug 2023
    விரைவில் X சமூக வலைதளத்தில் ஆடியோ மற்றும் வீடியோ கால் அறிமுகம் - எலான் மஸ்க் அறிவிப்பு

    விரைவில் X சமூக வலைதளத்தில் ஆடியோ மற்றும் வீடியோ கால்களை ஏற்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்த போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.


  • 16:54 (IST) 31 Aug 2023
    திருச்சியில் 45 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில் அமைக்க வாய்ப்பு

    சேலம், திருச்சி, நெல்லையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்க சாத்தியக்கூறு ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு திருச்சியில் 45 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில் அமைக்க சாத்தியக்கூறுகள் இருப்பதாக மெட்ரோ அறிக்கை நெல்லைக்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையில் மெட்ரோ அமைக்க வாய்ப்பு இல்லை என தகவல்


  • 16:40 (IST) 31 Aug 2023
    கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேச்சு

    தமிழகத்திற்கு 5000 கன அடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டிருப்பது கர்நாடகாவிற்கு மிகப்பெரிய வலி" கர்நாடகாவில் தண்ணீரே இல்லை என அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேச்சு


  • 16:08 (IST) 31 Aug 2023
    ரோவரை படம்பிடித்த லேண்டரின் வீடியோ

    நிலவில் பாதுகாப்பான பாதையை தேர்ந்தெடுக்க வட்டமிட்ட பிரக்யான் ரோவர் நிலவில் வட்டமிடும் ரோவரை படம்பிடித்த லேண்டரின் வீடியோவை வெளியிட்ட இஸ்ரோ பிரக்யானை குழந்தையை போல விக்ரம் கண்காணித்து வருவதாக பதிவு


  • 15:52 (IST) 31 Aug 2023
    நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் பொது சிவில் சட்டம் தாக்கல் செய்ய வாய்ப்பு

    செப்டம்பர் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் 5 அமர்வுகள் நடைபெறும். சிறப்பு கூட்டத்தில் பொது சிவில் சட்டம் தாக்கல் செய்யப்படலாம் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அறிவிப்பு


  • 15:52 (IST) 31 Aug 2023
    தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள் மாற்றம் : தமிழக அரசு அறிவிப்பு

    தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை செப்டம்பர் 17ஆம் தேதிக்கு பதில் 18ஆம் தேதிக்கு மாற்றம் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு


  • 15:51 (IST) 31 Aug 2023
    உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    ரசாயன கலப்படம் இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே விற்பனை செய்து கரைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு


  • 15:23 (IST) 31 Aug 2023
    4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

    4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு


  • 14:57 (IST) 31 Aug 2023
    நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்

    நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் செப்டம்பர் 18 முதல் 22ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்


  • 14:25 (IST) 31 Aug 2023
    21 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

    வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்


  • 14:20 (IST) 31 Aug 2023
    இ-சலான் மோசடி- சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை

    தமிழகத்தில் இ-சலான் மோசடியை சைபர் மோசடி கும்பல் தொடங்கி உள்ளது - சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை

    போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி குறுஞ்செய்தி அனுப்பி பண மோசடி

    போக்குவரத்து விதி விதிமீறல் தொடர்பாக அபராதம் செலுத்தக்கூறி குறுஞ்செய்தி வந்தால், சரிபார்த்து பணத்தை செலுத்துமாறு அறிவுறுத்தல்


  • 13:49 (IST) 31 Aug 2023
    சைலேந்திரபாபு டி.என்.பிஎஸ்.சி தலைவராக நியமனம்?

    சைலேந்திரபாபுவை டி.என்.பிஎஸ்.சி தலைவராக நியமனம் செய்யப்பட்டதற்கான காரணங்கள் மற்றும் கவர்னர் கேட்ட விளக்கங்களை கோப்பாக தயாரித்து மீண்டும் ராஜ் பவனுக்கு தமிழக அரசு அனுப்பியது.


  • 13:42 (IST) 31 Aug 2023
    உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது காவிரி ஆணையம்;

    காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது காவிரி ஆணையம்;

    காவிரியில் இருந்து நீர் திறக்க பிறப்பிக்கப்பட்ட, உத்தரவை கர்நாடக அரசு முறையாக செயல்படுத்தியுள்ளதாக பிரமாணப்பத்திரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தகவல்


  • 13:38 (IST) 31 Aug 2023
    தனியார் தங்கும் விடுதிகளை அவற்றின் உரிமையாளர்களே அகற்ற வேண்டும்

    நீலகிரி மாவட்டம் சீகூர் யானை வழித்தடத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளை அவற்றின் உரிமையாளர்களே அகற்ற வேண்டும் என முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் அமைக்கபட்ட உச்ச நீதிமன்ற விசாரணை குழு உத்தரவு

    2018ம் ஆண்டு அமைக்கப்பட்ட இக்குழு 4 ஆண்டுகள் பொக்காபுரம், வாழைத்தோட்டம், சிங்காரா பகுதிகளில் ஆய்வு செய்து விடுதிகளின் விதிமீறல்கள் குறித்து விசாரணையும் மேற்கொண்டது


  • 13:36 (IST) 31 Aug 2023
    கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு

    விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருச்சி, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


  • 13:36 (IST) 31 Aug 2023
    நிலவில் கந்தகம் - உறுதி செய்த இஸ்ரோ!

    ரோவரில் இருக்கும் ஏபிஎக்ஸ்எஸ் என்ற கருவி நடத்திய பரிசோதனையில் நிலவில் கந்தகம் இருப்பது உறுதியானது.

    இயற்கையாக சல்பர் உள்ளதா?, எரிமலை வெடிப்பதால் ஏற்பட்டதா? என்பது குறித்து ஆய்வு நடைபெறுவதாக இஸ்ரோ தகவல்


  • 12:59 (IST) 31 Aug 2023
    சோனியா காந்தியுடன் ஒய்.எஸ்.ஷர்மிளா சந்திப்பு

    டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி தலைவர் ஷர்மிளா சந்திப்பு

    தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து சோனியா காந்தியுடன் ஒய்.எஸ் ஷர்மிளா ஆலோசனை எனத் தகவல்


  • 12:36 (IST) 31 Aug 2023
    சென்னை மாமன்ற கூட்டத்தில் 58 தீர்மானங்கள் நிறைவேற்றம்

    கதீட்ரல் சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு, மறைந்த கர்நாடக இசைக்கலைஞர் டாக்டர். எம்.பாலமுரளி கிருஷ்ணா பெயர்சூட்ட தீர்மானம்

    மாநகராட்சி சமுதாய நலக்கூடங்களில், ஓய்வுபெற்ற அலுவலர்களின் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு, 50% சலுகை வழங்க தீர்மானம்

    கொரோனா தடுப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட வாடகை வாகனங்களுக்கான நிலுவை தொகை - நிதி ஒதுக்கீடு செய்ய தீர்மானம்


  • 12:20 (IST) 31 Aug 2023
    தலைமை நீதிபதியிடம் முறையிட நீதிபதி எம்.சுந்தர் அறிவுறுத்தல்

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்ற விவகாரம்

    எந்த வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார்

    உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதி எம்.சுந்தர் அறிவுறுத்தல்


  • 12:20 (IST) 31 Aug 2023
    செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு: சுந்தர், சக்திவேல் அமர்வில் முறையீடு

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்ற விவகாரம்

    நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் செந்தில் பாலாஜி சார்பில் முறையீடு

    வழக்கு தொடர்பான விசாரணையில் இருந்து நீதிபதி ஆர். சக்திவேல் ஏற்கனவே விலகிய நிலையில், முறையீட்டை எப்படி ஏற்பது என நீதிபதி சுந்தர் கேள்வி

    மாற்று அமர்வும் இன்று இல்லை என்பதால் தான் தங்களிடம் முறையிடுகிறோம்> நிர்வாக ரீதியான உத்தரவை பிறப்பித்தால் கூட போதுமானது - என்.ஆர்.இளங்கோ


  • 12:15 (IST) 31 Aug 2023
    "ஆட்சியாளர்களுக்கு ஏற்ப விஜிலென்ஸ் பச்சோந்தியாகிறது"

    "ஆட்சியாளர்களுக்கு ஏற்ப விஜிலென்ஸ் பச்சோந்தியாகிறது" - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

    ஆட்சியாளர்களுக்கு ஏற்ப பச்சோந்தியாக மாறுகிறது லஞ்ச ஒழிப்புத்துறை. லஞ்ச ஒழிப்புத்துறை உருவாக்கப்பட்ட நோக்கம் அழிந்து பச்சோந்தியாக மாறியுள்ளது.

    எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ, அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது லஞ்ச ஒழிப்புத்துறை - முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீதான வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து


  • 11:35 (IST) 31 Aug 2023
    பாஜக பிரமுகர் கொலை - உறவினர்கள் சாலை மறியல்

    நெல்லை மாவட்டம் மூளிகுளத்தில் பாஜக பிரமுகர் ஜெகன் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம்

    குற்றவாளிகளை கைதுசெய்ய வலியுறுத்தி, முருகன் குறிச்சி சாலையில் உறவினர்கள் தொடர் போராட்டம்

    உயிரிழந்தவரின் உறவினர்களை, பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல்

    6 பேரை பிடித்து பாளையங்கோட்டை போலீசார் தீவிர விசாரணை 2002ல் நடந்த கொலை - முன்விரோதம் காரணமா? என போலீசார் விசாரணை


  • 11:34 (IST) 31 Aug 2023
    விம்கோ நகர்- விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவை சீரானது

    சென்னை விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை சீரானது

    தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தது


  • 11:33 (IST) 31 Aug 2023
    ஓ.பி.எஸ்-க்கு எதிராக தாமாக முன் வந்து நீதிமன்றம் வழக்கு

    சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விடுவிப்பை எதிர்த்து தாமாக முன் வந்து வழக்கு

    லஞ்ச ஒழிப்பு துறை, ஓபிஎஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    கடந்த 2021ம் ஆண்டு ரூ.1.77 கோடி சொத்து சேர்த்த வழக்கை திரும்பப் பெற அனுமதித்து ஓபிஎஸ் உள்ளிட்டோரை விடுவித்த சிவகங்கை நீதிமன்றத்தின் உத்தரவை மறு ஆய்வு செய்கிறது சென்னை உயர் நீதிமன்றம்

    இதேபோல வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் - நீதிமன்றம்

    குற்ற வழக்கு விசாரணை நடைமுறை கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது - நீதிமன்றம்


  • 10:45 (IST) 31 Aug 2023
    அண்ணா சாலை வழியாக விம்கோ நகர் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவை தற்காலிக நிறுத்தம்

    அண்ணா சாலை வழியாக விம்கோ நகர் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவை தற்காலிக நிறுத்தம் சென்னை விமானநிலைய வழித்தடத்தில் இரண்டு மார்க்கத்திலும் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு கூட்டம் கூட்டமாக ஆலந்தூர் மெட்ரோ ரயில்நிலைய நடைமேடையில் பயணிகள் காத்திருப்பு வடபழனி- சென்ட்ரல் இடையே 15 முதல் 20 நிமிடம் தாமதமாக இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள்


  • 10:36 (IST) 31 Aug 2023
    இந்தியா' கூட்டணியின் 3-வது கூட்டத்தில் பங்கேற்க மும்பை புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

    இந்தியா' கூட்டணியின் 3-வது கூட்டத்தில் பங்கேற்க மும்பை புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின் திமுக பொருளாளரும் எம்பியுமான டி.ஆர்.பாலுவும் உடன் செல்கிறார் மும்பையில் இன்றும் நாளையும் இரு தினங்கள் நடைபெற உள்ளது இந்தியா கூட்டணியின் கூட்டம் இந்தியா கூட்டணியின் இலட்சினை செப்டம்பர் 1ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது மக்களவை தேர்தலை எதிர்கொள்வது, தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை


  • 09:33 (IST) 31 Aug 2023
    தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு

    தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு - கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து தமிழகத்திற்கு 7,329 கனஅடி நீர் திறப்பு கே.ஆர்.எஸ் அணை முன்பு இரவு முழுவதும் கையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் விவசாய கட்சியின் சட்டமன்ற பிரதிநிதி தர்ஷன் புட்டனய்யா தலைமையில் போராட்டம்


  • 09:31 (IST) 31 Aug 2023
    இந்தியாவுக்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் உள்ளோம்

    இந்தியாவுக்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் உள்ளோம்" - முதல்வர் ஸ்டாலின் "2024ல் முடிய போகும் பாஜக ஆட்சியில், இந்தியாவை எப்படியெல்லாம் உருக்குலைத்துள்ளார்கள்?" "நாம் கட்டமைக்க விரும்பும் சமத்துவ, சகோதரத்துவ இந்தியா குறித்து பேச போகிறேன்" "தெற்கில் இருந்து வரும் இந்த குரலுக்காக காத்திருங்கள்" 'Speaking for India' என்ற தலைப்பில் ஆடியோ சீரிஸாக பேச உள்ள முதல்வர் ஸ்டாலினின் வீடியோ வெளியீடு


  • 08:17 (IST) 31 Aug 2023
    சென்னை மெட்ரோ ரயில் சேவை - புறநகர் பறக்கும் ரயில் சேவை விரைவில் இணைப்பு

    சென்னை மெட்ரோ ரயில் சேவை - புறநகர் பறக்கும் ரயில் சேவை விரைவில் இணைப்பு. ரயில் சேவை இணைப்புக்கான வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தம் ரயில்வே வாரியத்துக்கு அனுப்பி வைப்பு! சென்னை புறநகர் பறக்கும் ரயில் நிலையங்களை மறு சீரமைப்பு செய்து மெட்ரோ ரயில் நிலையங்கள் போல் மாற்ற சிஎம்டிஏ முடிவு!


  • 08:16 (IST) 31 Aug 2023
    முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு

    ஒன்றிய பாஜக அரசை வீழ்த்த இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிரம்; இன்று தொடங்க உள்ள 3வது ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு


  • 08:14 (IST) 31 Aug 2023
    ‘உங்களில் ஒருவனைத் ’தொடர்ந்து 'Speaking for India’ Podcast

    பாஜக ஆட்சி குறித்தும் பன்முகத்தன்மை கொண்ட, மதச்சார்பற்ற இந்தியாவைக் காப்பாற்றுவது குறித்தும், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் 'Speaking for India’ என்ற தலைப்பில் Podcast (குரல்பதிவுத் தொடர்) வடிவில் பேச உள்ளார்; இத்தொடர் ஆங்கிலத்திலும், இந்தியாவின் பல்வேறு மாநில மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்படும் என அறிவிப்பு


Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment