பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
மகளிர் பிரீமியம் டி 20
மகளிர் பிரீமியம் டி 20- குஜராத் ஜெயண்ட்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 143 ரன்கள் வித்தியாசத்தில் முப்பை இந்தியன்ஸ் அபரா வெற்றி.
நீர் நிலவரம்
புழல் ஏரியில் நீர்இருப்பு 2817 மில்லியன் கனஅடியாக உள்ளது; 159 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 20 கனஅடியாக உள்ளது; நீர்இருப்பு 831 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 500 மில்லியன் கனஅடியாக உள்ளது; நீர்வரத்து 15 கனஅடியாக உள்ளது.
தண்டையார்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு: “புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து தவறான பிரசாரங்களை யார் பரப்பினாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தில் மதுரையில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், கவனத்துடன் பணியாற்றி சட்டம் ஒழுங்கை சீராக பராமரிக்க வேண்டும்; சமூக ஊடகங்கள் மூலம் மோதலை தூண்டுவோர்; வாட்ஸ் அப் குழுக்களையும் கண்காணிக்க வேண்டும்” என்று காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், “ஆளே இல்லாத கட்சி ஆட்டம் போடுகிறது வால் ஆட்டுகிறது என்றால், அதற்கு காரணம் அதிமுகதான்.. அவர்கள் கொடுத்த இடம்தான்.” என்று பேசினார்.
அமைச்சர் மா. சுப்பிரமணியன் “எந்த கொம்பனாலும், தமிழ்நாட்டில் சிறு பதற்றத்தைக் கூட உருவாக்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும் என தென் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடனான சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்; வாட்ஸ் அப் குழுக்கள் கண்காணிக்கப்பட வேண்டும். போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடுக்கவேண்டும் என தென் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை கே.கே. நகரில் ஆன்லைன் ரம்மியில் ரூ.16 லட்சத்தை இழந்த சுரேஷ் என்பவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த கடிதத்தில், “மதிப்பு மிக்க முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு, தயவு செய்து இந்த ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள். உங்கள் காலில் மண்டியிட்டு கேட்டுக்கொள்கிறேன்; என்னைப் போல் பல பேர் குடும்பத்தை அனாதையாக விட்டு செல்கிறார்கள். இனி யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது. தயவு செய்து தடை செய்யுங்கள்.” என்று எழுதப்பட்டுள்ளது.
WPL தொடரில் பெங்களூரு அணியை வீழ்த்தி
டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. 224 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு அணி 163 ரன்களில் சுருண்டது.
கீழடியில் ரூ.18.43 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கீழடி, கொந்தகை, அகரம், மணலூரில் நடந்த அகழாய்வில் கிடைத்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன; 2 ஏக்கர் பரப்பளவில் 31,000 சதுர அடியில் செட்டிநாடு கட்டட கலையில் அமைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே திருவண்ணாமலை நோக்கி சென்ற லாரியின் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில், ஆட்டோவில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
புதுச்சேரி தவளகுப்பம் அடுத்த காட்டுப் பாளையம் அடுத்த சிவனார்புரத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பரமக்குடியில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக G.சிகாமணி, பிரபாகரன், ராஜா முகமது, கயல்விழி, உமா, அன்னலட்சுமி உள்ளிட்ட 5 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, G.சிகாமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து நீக்கி, இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டார்.
வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் மு.க. ஸ்டாலினுக்கு முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அந்தக் கோரிக்கையில், “வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோரை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கிடுக எனத் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த குன்றி வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது யானை தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து வனத் துறை அதிகாரிகள், போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்தியாவில் 324 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 2,791 ஆக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தரவு வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை ஓமன் நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
மகளிர் ப்ரீமியர் லீக்: டெல்லி கேபிடஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பவுலிங்-ஐ தேர்வு செய்தார்.
ஆன்லைன் ரம்மியில் ரூ.17 லட்சத்தை இழந்த இளைஞர் கே.கே. நகர் சுரேஷ் மெரினா கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
மதுரையில் பொதுமக்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனுக்கள் வாங்கினார்.
அப்போது, பொதுமக்களை வரிசையில் நிற்கும்படி பேசிய காவலரிடம் கோபப்படக்கூடாது என அறிவுரை வழங்கினார்.
நாகை அருகே நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டது.
இதையடுத்து சனிக்கிழமை (மார்ச் 04) அடைக்கப்பட்டது. அந்த இடத்தில் தற்போது மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ளது.
வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வலையொளியில் காணொலி பதிவிட்ட The Activist என்ற சேனலை வேதிக் சர்மா என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து அந்தச் சேனலை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப தலைவர் சி.டி. நிர்மல் குமார், அ.தி.மு.க.வில் இணைந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவர் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ட்விட்டரில், “என்னால் முடிந்த வரை பல சங்கடங்களை கடந்து கடந்த 1.5 ஆண்டுகளாக பயணித்தேன்!
உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம்! விடைபெறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ் நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளன என திருப்பூரில் பீகார் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென் தமிழகத்தில் மார்ச் 7,8ஆம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரமும் தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் திடீர் மழை பெய்தது நினைவு கூரத்தக்கது.
முன்பெல்லாம் அரசை தேடி மக்கள் வந்தார்கள், இன்று மக்களை தேடி அரசு வருகிறது. அந்தக் காலம் மாறிவிட்டது என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் – முதல்வர் ஆலோசனை 'கள ஆய்வில் முதலமைச்சர்' – தொழில், வர்த்தக சங்க பிரதிநிதிகளின் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு 5 மாவட்ட மீனவர், விவசாய, வணிகர் சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை
உங்களைத் தேடி நாங்கள் வந்துள்ளோம்; அரசைத் தேடி மக்கள் வந்த காலங்கள் மாறி அரசு மக்களைத் தேடி வருகிறது
“தமிழக அரசு மக்கள் பிரச்சினைகளில் அதிக
கவனம் செலுத்தி வருகிறது”
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் மதுரையில் தொழில், வர்த்தக சங்க பிரதிநிதிகளின் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரை
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில், கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க உதவிய சிசிடிவி காட்சி கேமராவிற்கு குறிஞ்சிப்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரசன்னா மாலை அணிவித்து மரியாதை
'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் மதுரையில் ஆய்வு மேற்கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மதுரை விமான நிலையத்தில் பிரம்மாண்ட பேனாவை பரிசளித்த திமுக தொண்டர்கள்
சென்னையில் தனியார் அமைப்பினர் பேருந்துகளை இயக்க சி.ஐ.டி.யு எதிர்ப்பு
நாளை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சி.ஐ.டி.யு போக்குவரத்து தொழிற்சங்கம் அறிவிப்பு
'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் மதுரையில் ஆய்வு மேற்கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு, தென்மாவட்ட பிரதிநிதிகளோடு ஆலோசனை
தென் மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணம்
முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்த திமுக நிர்வாகிகள்
அமைச்சர்கள் கே.என்.நேரு, மூர்த்தி, பி.டி.ஆர், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி உடனிருந்தனர்
தமிழகத்தில் வரும் 10-ம் தேதி 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்
வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு
வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் தவறான தகவலை பரப்பும் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக வழக்குப்பதிவு
தமிழகத்தில் வரும் 10ம் தேதி 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம். வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியின்
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம் . தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள் . தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருக்கிறது-ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னையில் போலி டாக்டர் பட்டம் வழங்கி பிரபலங்களை ஏமாற்றிய ஹரிஷ் உள்பட இருவரை ஆம்பூர் அருகே தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் மாநகர பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி கொடுக்க மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு. ‘Gross Cost Contract’ என்ற முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு 500 பேருந்துகளையும், 2025ம் ஆண்டு 500 பேருந்துகளையும் இத்திட்டத்தின் கீழ் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக இன்று மதுரை செல்கிறார். மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்
சென்னை, ஆவடி அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த யோகேஸ்வரன் என்பவரை வெட்டி கொலை செய்த மர்ம கும்பல் கடந்த 2016ல் யோகேஸ்வரன் செய்த கொலைக்கு பழிவாக்கும் நோக்கில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை
விருதுநகர்,காரியாபட்டி அருகே இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறுத்தம். பாதுகாப்பு குறைப்பாடு காரணமாக போட்டி நிறுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு