பெட்ரோல் டீசல் விலை
பெட்ரோல் விலை ரூ.102.63-க்கும், டீசல் விலை 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மார்கழி மாத பிறப்பு
இன்று மார்கழி மாத பிறப்பு என்பதால் அதிகாலையில் பஜனை சிவ, வைணவ கோயில்களில் திருப்பள்ளி எழுச்சி பூஜை. நெல்லை பெருமாள் கோயிலில் மார்கழி முதல் நாள் சிறப்பு பூஜை நடைபெற்றது.
அவதார் 2
ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ‘அவதார்-2 : தி வே ஆஃப் வாட்டர்’ வெளியானது. கோயம்பேடு ரோகிணி திரையங்கில் அவதார் – 2 சிறப்பு காட்சி – ரசிகர்கள் குவிந்தனர்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி: மக்கள் தேர்வு செய்த அரசுக்கு அதிகாரம் இல்லை; தினமும் மன உளைச்சல்தான்; ஓட்டு உங்களுக்குத்தான் போட்டோம்;ல் நீங்கள்தான் செய்ய வேண்டும் என மக்கள் கேட்கின்றனர். ஆனால், எதுவும் செய்ய முடியவில்லை. மாநில அந்தஸ்து தரக் கோரி பலமுறை கேட்டோம். கிடைக்கவில்லை. நிர்வாகத்தில் உள்ள எங்களுக்குத்தான் அதன் சிரமம் தெரியும்.” என்று கூறினார்.
தமிழக காவல்துறை நடத்திய ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0’ நடவடிக்கையில், 13,320 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 25,295 கிலோ கஞ்சா பறிமுதல்; 4023 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காசியில் கடந்த ஒரு மாத காலமாக
தமிழகத்திற்கும், வாரணாசிக்கும் இடையே
பாரம்பரிய ஒற்றுமையை வலுப்படுத்தும் விதமாக நடைபெற்று வந்த காசி தமிழ் சங்கமம் இன்றுடன் நிறைவடைந்தது.
கடந்த 2 நாள்களாக கனமழை காரணமாக கோவை குற்றாலம் மூடப்பட்டிருந்த நிலையில் நாளை (டிச.17) மீண்டும் திறக்கப்படுகிறது.
ஆன்லைன் தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுனர் ஆர்.என். ரவிக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க்-ஐ பாராட்டி உள்ளது.
போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுத்தல், வழக்குகள் குறைவு உள்ளிட்ட செயல்களுக்காக உயர் நீதிமன்றம் அஸ்ரா கார்க்-ஐ பாராட்டியுள்ளது.
பீகாரில் சாராயம் குடித்து உயிரிழந்தால் இழப்பீடு வழங்கப்பட மாட்டாது என அம்மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு, புதுவையில் அடுத்த 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெண்டர் பணிகளை இறுதி செய்ய டிச.19ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சிக்கான டெண்டர் நடைமுறைகளில் எந்த பணிகளையும் இறுதி செய்ய முடியாது.
கல்லூரியில் உள்ள மரங்களை வெட்டி குறைந்த விலைக்கு விற்றதாக புகார் வெளியான நிலையில், ராசிபுரம் கல்லூரி கலை கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கருமுட்டைகளை அதன் வங்கிகளில் இருந்து பெற வேண்டும் என சட்டம் கூறும் நிலையில் இன்னமும் வங்கிகள் அமைக்கப்படவில்லை.
இந்த நிலையில் கருமுட்டை தொடர்பாக ஆய்வறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் மகள் மதுவந்தியின் வீடு ஏலத்தில் விற்கப்பட்டது.
இந்நிலையில், வீட்டில் உள்ள ரூ.30 லட்சம் பொருள்களை மீட்டுத் தர போலீசில் மதுவந்தி புகார் அளித்துள்ளார்.
2016இல் இந்துஜா லேலாண்ட் என்ற நிறுவனத்திடம் இருந்து மதுவந்தி கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடன் மற்றும் வட்டி ரூ.1.21 கோடியை திருப்பி செலுத்தாத நிலையில் கடன் கொடுத்த நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. இதையடுத்து அவர் வீடு ஏலத்தில் விற்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் ரஜோரியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர்.
இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெ்ஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 404 ரன்கள் எடுத்த நிலையில், வங்கதேசம் 150 ரன்களில் சுருண்டது. தொடர்ந்து இந்திய அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் சேர்த்து டிக்ளேர். இதன் மூலம் 513 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 3ம் நாள் ஆட்டநேர முடிவில்விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்துள்ளது
பரமக்குடி பாஜக பிரமுகர் கொலை வழக்கில் கைதாகி விடுதலையானவர்களுக்கு ₨18 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை, அன்னூரில் தொழிற்பூங்கா அமைக்கும் விவகாரத்தில் தொழிற்பூங்காவுக்கு தரிசு நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும் என்றும் விவசாயிகள் மனமுவந்து கொடுக்க முன்வரும் நிலங்களுக்கு, திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
பகுதி நேர ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
அண்ணா பல்கலைகழகத்தின் பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வுகள் தேதி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது மாண்டோஸ் புயல் காரணமாக கடந்த 9,10 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள், வரும் 24, 31ம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த தேர்வுகள் ஜனவரி 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வரும் 20ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழ்நாடு மின் ஆளுமை முகமைக்கு துணை அங்கீகார முகமையாக கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், மாநில அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெறுவோர் அடையாள ஆவணமாக ஆதாரை அளிக்க வேண்டும் என தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது
சென்னையில் மாண்டல் புயல் காரணமாக கடந்த 9ம் தேதி பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய நாளை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வெள்ளிக்கிழமை பாட திட்டத்தை பின்பற்றி இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தபட்டுள்ளது.
சென்னை, மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக 42 மீட்டர் உயர பேனா நினைவுச்சின்னம் அமைக்க தடை கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரையிலான கடலோர பகுதிகள் ஆமைகள் இனப்பெருக்கும் செய்யும் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கட்டுமானங்கள் மேற்கொள்வதால் ஆமைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதுடன், கடல் வளமும் பாதிக்கப்படும். கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் படி, நிபுணர் குழுவை அமைத்து விதிகளுக்கு மாறாக கட்டுப்பட்டுள்ள அனைத்து கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட வேண்டும்என்றும் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடர்ந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
பகுதி நேர ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
அண்ணா பல்கலை. பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வுகள் தேதி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாண்டோஸ் புயல் காரணமாக கடந்த 9,10 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள், வரும் 24, 31ம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் மாற்றம் என்றும் தேர்வுகள் ஜனவரி 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவாக 42 மீட்டர் உயர பேனா நினைவுச்சின்னம் அமைக்க தடை கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
ஆளுமை, மருத்துவம், பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட பெரிய மாநிலங்களில் கடந்த 5 ஆண்டுகளாக தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
நரிக்குறவர்கள், குருவிக்காரரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தேன். நரிக்குறவர்கள், குருவிக்காரரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வரும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மெரினா மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பாதை பருவ மழைக்காலம் முடிந்த பின்னர் தான் திறக்கப்படும். பாதை சேதமடைந்த இடத்தில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது
தமிழ்நாட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள் – ₨115 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு 2 மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை
செங்கல்பட்டு, மதுராந்தகத்தில் அதிமுக கொடி கம்பம் விழுந்து ஒருவர் உயிரிழந்த விவகாரம் அதிமுக நிர்வாகி சரவணன் மற்றும் கிரேன் ஓட்டுநர் கோபிநாத் ஆகியோர் கைது
2023ம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெறும். மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு அட்டவணையை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை
மேட்டூர் அணையின் நீர்மட்டம் – 120 அடி, நீர்இருப்பு – 93.47 டிஎம்சி, நீர்வரத்து – 14,600 கனஅடி, நீர் வெளியேற்றம் – 14,000 கனஅடி