Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஏரிகளின் நீர் நிலவரம்
புழல் ஏரிக்கு 303 கன அடியாக இருந்த நீர்வரத்து 351 கன அடியாக அதிகரித்துள்ளது. சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து வந்து 15 கன அடியாக உள்ளது. இதுபோல கண்ணன்கோட்டை ஏரியின் நீர் இருப்பு 486 மில்லியன் கன அடியாக உள்ளது.
பாஜகவை வீழ்த்துவது கடினம் : ராகுல்
எதிர்கட்சிகள் ஒன்றாக இணைந்து செயல்பட்டால்கூட பாஜகவை வெற்றிபெறுவது கடினம். இதுதான் இன்றைய நிலவரம் என்பதை நான் புரிந்துகொண்டேன். எதிர்கட்சிகளை ஒன்றாக இணைக்க வேண்டும்
ஆந்திரா, குண்டூரில் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற விழாவில், கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது
கடந்த 29ஆம் தேதி நெல்லூரில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்ட கட்சி நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலால் 8 பேர் பலியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது
டிசம்பரில் ஜிஎஸ்டி மூலம் ரூ.1,49,507 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து முதன்முறையாக ரூ5.55க்கு விற்பனையாகிறது. வட மாநிலங்களில் குளிர் நிலவுவதன் காரணமாக நுகர்வு அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது
புத்தாண்டு விடுமுறை முடிந்து சென்னை நோக்கி படையெடுக்கும் மக்களால், மதுராந்தகம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை, மெரினா கடற்கரையில் புத்தாண்டையொட்டி குடும்பம் குடும்பமாக படையெடுத்து வரும் மக்கள் குவிந்து வரும் மக்களால் காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது
ஈரோடு மாவட்டம் பொன்னிகொட்டாய் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்த 3 குடிசை வீடுகள் தீயை அணைக்கும் பணியில் அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். விபத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது
சென்னை, டிபிஐ வளாகத்தில் நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 6 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக முடிவெடுக்க குழு அமைத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி என ஆசிரியர்கள் இயக்கம் தெரிவித்துள்ளது
புத்தாண்டு கொண்டாடத்தை ஒட்டி பழவேற்காடு கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடலில் குளித்து உற்சாகம் அடைந்து வருகின்றனர். பழவேற்காடு ஏரியில் தடையை மீறி படகு சவாரி செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நொணையவாடி பகுதியில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வீரமணி(30), உத்தரவேல் (40) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
தேனி மாவட்டம் கண்டமனூர் கிராமத்தில் சாலையில் கிடந்த 3 மாத கருவால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கருவை மீட்ட போலீசார், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் கருவை சாலையில் வீசி சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது
தேனி மாவட்டத்தில் உள்ள குப்பணாசாரிபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 7 அடி நீள சாரைப்பாம்பு உள்ளே புகுந்தது.
இந்தப் பாம்பை தீயணைப்புத் துறையினர் லாவகமாக பிடித்தனர்.
பாலியல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஹரியானா விளையாட்டுத் துறை அமைச்சர் பதவியை சந்தீப் சிங் ராஜினாமா செய்தார்.
சந்தீப் சிங் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ஆவார்.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது.
மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால், போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சொமேட்டோ தலைமை செயல் அதிகாரி தீபேந்தர் கோயல் தானே டெலிவரி பாய் ஆக மாறி களத்தில் இறங்கி ஆர்டர்களை டெலிவரி செய்தார்.
புத்தாண்டை ஒட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவில் அதிகளவு பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.
இதனால், சிறுவர்களுடன் காத்திருக்க முடியாமல் நெரிசல் மிகுதியால் பலர் திரும்பிச் செல்கின்றனர்
இதற்கிடையில், மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சீனாவில் மருத்துவக் கல்வி பயின்று வந்த புதுக்கோட்டை இளைஞர் ஷேக் அப்துல்லா உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்.
ஷேக் அப்துல்லா உடலை தமிழ்நாடு கொண்டுவர மத்திய-மாநில அரசுகள் உதவ வேண்டும் என அவரின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசியில் ரூ.350 கோடி வரை காலண்டர்கள் விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் பட்டாசு, காலண்டர், தீப்பெட்டி உள்ளிட்ட தொழில்களில் சிவகாசி கொடிகட்டி பறக்கிறது.
சௌதி அரேபியாவின் மெக்கா நகருக்கு சென்று விட்டு ஞாயிற்றுக்கிழமை (ஜன.1) அதிகாலை கல்ஃப் ஏர்வேஸ் பயணிகள் விமானத்தில் பக்ரைனில் இருந்து சென்னைக்கு ராஜா முகமது (66) என்பவர் வந்துகொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதில் அவர் விமானத்திலே உயிரிழந்தார்.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “புதியதொரு விடியலில் புலர்ந்தது புத்தாண்டு!
உடன்பிறப்புகள் – பொதுமக்கள் – நண்பர்கள் என காலை முதல் அன்பொழுக வாழ்த்துகளைப் பகிரும் நல்லுள்ளங்கள்!
வாழ்த்து பெறுகிறேன்! வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் அனைத்து வளங்களும் மகிழ்ச்சியும் வாழ்வில் பொங்க” எனத் தெரிவித்துள்ளார்.
கோவை ஈசா யோகா மையத்திற்கு டிசம்பர் 18ஆம் தேதி வந்து மாயமான பெண் சுபஸ்ரீ செம்மேடு அருகே கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
ரயில்வே வாரிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக அனில் குமார் லஹோடி என்பவர் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர்.
சென்னையில், வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ. 25.50 அதிகரித்து ரூ. 1,917 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
புத்தாண்டின் முதல்நாளில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு வணிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிமீறலில் ஈடுபட்டதாக 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக 360 வாகனங்களும், இதர விதிமீறல்களில் ஈடுபட்டதாக 572 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் தகவலை பெருநகர போக்குவரத்து காவல்துறை
தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, மராட்டிய மாநிலம் நாக்பூரில் 108ஆவது இந்திய அறிவியல் மாநாட்டை வரும் ஜன.3ம் தேதி காணொலி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
நாக்பூரில் ஜன.3ஆம் தேதி தொடங்கும் இந்த மாநாடு ஜன.7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
கிஷான் விகாஸ் பத்ரா உள்ளிட்ட அஞ்சல் சேமிப்பு திட்டங்களின் வட்டியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.
புதிய வட்டி திட்டங்கள் ஜன.1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் தலைவன் தமிழ்நாட்டிற்குள் புகுந்துவிட்டதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஜனவரி 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நடிகர் ரவி கிருஷ்ணா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 7ஜி ரெயின்போ காலனி.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து செல்வ ராகவனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் அறிவித்துள்ளார்.
இந்தப் படத்திலும் ரவி கிருஷ்ணாவே நாயகனாக நடிக்கிறார்.
ஹரியானாவில் மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங் மீது பெண் பயிற்சியாளர் அளித்த புகாரில், பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சந்தீப் சிங் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்துள்ளார். இவர் மீதான பாாலியல் வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தார். அவரை காண ஏராளமான தொண்டர்கள், ரசிகர்கள் குவிந்திருந்தனர்
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி. வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குளிக்க அனுமதி வழங்கி வனத்துறை உத்தரவு
திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பிரவீன் குமார் அபிநபு, மதுரை மாநகர காவல் ஆணையராக நரேந்திரன் நாயர் நியமனம்
காவல்துறையில் 45 உயரதிகாரிகள் பணியிட மாற்றம்; இதில் 26 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு.
புத்தாண்டை ஒட்டி தேமுதிக தலைமை அலுவலகதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்
அரசு ஊழியர்களுக்கு 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி இன்று முதல் 38% அதிகரிப்பு – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு
திருத்தணி முருகன் கோயிலில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த நடிகர் யோகி பாபு .
சென்னைக்கு திரும்ப 800 சிறப்பு பஸ்கள் இயக்கம் . 9 நாட்கள் விடுமுறை முடிந்த பொதுமக்கள் வெளியூர்களிலிருந்து சென்னை திரும்ப, இன்றும் நாளையும் சிறப்பு பஸ்கள் இயக்கம்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் 19 கிலோ எடையுள்ள வர்த்தக சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ரூ. 1,917க்கும், டெல்லியில் ரூ. 1,768க்கும், மும்பையில் ரூ. 1,721க்கும், கொல்கத்தாவில் ரூ. 1,880க்கும் விற்பனை!
புத்தாண்டின் முதல் நாளில் சூரிய உதயத்தை காண கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா சான்றிதழ் கட்டாயம்
அனைவரது வாழ்விலும் புதிய உத்வேகத்தை புத்தாண்டு வழங்கட்டும். குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து
டெல்லியில் இன்று அதிகாலை உணரப்பட்ட நில அதிர்வு . அதிகாலை 1.18-ம் மணிக்கு ரிக்டர் 3.8 ரிக்டர் அளவில் உணரப்பட்டுள்ளது.
புத்தாண்டை ஒட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள். நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்
விழுப்புரம்: கஞ்சனூர் காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர் மற்றும் கெடார் எஸ்.ஐ சுதா இருவரையும் சஸ்பெண்ட் செய்து சரக டி.ஐ.ஜி உத்தரவு. சூரப்பட்டு இளைஞர் தற்கொலை வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதால் நடவடிக்கை
ஆவின் பால் பாக்கெட்டில் புத்தாண்டு வாழ்த்து அச்சிட்டு விநொயோகம் செய்யப்பட்டுள்ளது.
வாரணாசியில் கங்கை ஆரத்தி வழிபாட்டு நிகழ்ச்சியில், புத்தாண்டை ஒட்டி திரளானோர் பங்கேற்பு.