என்எல்சியை கண்டித்து கடலூரில் பாமக சார்பாக முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், மாவட்டம் முழுவதும் பாதுகாப்பிற்காக 7,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூரில் 100% அரசு பேருந்துகள்100%, தனியார் பேருந்துகள் 50% இயக்கப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
நீர் நிலவரம்
புழல் ஏரியில் நீர்இருப்பு 2720 மில்லியன் கனஅடியாக உள்ளது; 159 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 20 கனஅடியாக உள்ளது; ஏரியில் நீர்இருப்பு 831 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 500 மில்லியன் கனஅடியாக உள்ளது; ஏரிக்கு நீர்வரத்து 15 கனஅடியாக உள்ளது
சிறுமி மரணம் : தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
உதகையில் அதிக சத்து மாத்திரைகள் சாப்பிட்டு சிகிச்சையில் இருந்த சிறுமி உயிரிழப்பு. மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு செல்லும் வழியில் ஜெயினபா பாத்திமா என்ற சிறுமி உயிரிழப்பு. கவனக்குறைவாக செயல்பட்டதாக தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடை நீக்கம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி பேட்டி: “இந்திய நாட்டின் தேசிய நலன் கருதி மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி வர வேண்டும் என அ.தி.மு.க முடிவு எடுத்துள்ளது” என்று கூறினார்.
2023ம் ஆண்டு ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 6,500 மெ.டன் அரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இஸ்லாமிய மக்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பேனா நினைவு சின்னம் வழங்கப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நீண்ட நாளாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகள் விரைவில் அதற்காக ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்று கூறினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: “தி.மு.க-வுக்கும் இஸ்லாமிய மக்களுக்குமான தொடர்பு என்பது இன்று, நேற்று ஏற்பட்டது அல்ல; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விளிம்பு நிலை மக்களுக்கான அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது. சமூக நீதிக் கோட்பாடுதான் நான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழாவுக்கு வரக் காரணமாக உள்ளது; பேரறிஞர் அண்ணாவையும் கலைஞரையும் இணைக்கப் பாலமாக அமைந்தது இஸ்லாம். மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் கலைஞர்; அதை அதிமுக, ஆட்சிக்கு வந்த பிறகு ரத்து செய்தார்கள்; மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் மீண்டும் விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிட்டவர் கலைஞர்” என்று பேசினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: “தி.மு.க-வுக்கும் இஸ்லாமிய மக்களுக்குமான தொடர்பு என்பது இன்று, நேற்று ஏற்பட்டது அல்ல; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விளிம்பு நிலை மக்களுக்கான அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது. சமூக நீதிக் கோட்பாடுதான் நான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழாவுக்கு வரக் காரணமாக உள்ளது; பேரறிஞர் அண்ணாவையும் கலைஞரையும் இணைக்கப் பாலமாக அமைந்தது இஸ்லாம். மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் கலைஞர்; அதை அதிமுக, ஆட்சிக்கு வந்த பிறகு ரத்து செய்தார்கள்; மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் மீண்டும் விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிட்டவர் கலைஞர்” என்று பேசினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா மாநாடு நடைபெற்று வருகிறது. அதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.
“நாடு சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளாக, பேரிடர்களை கையாள சட்டம் இல்லை” எனப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இதனை பேரிடர் அபாயக் குறைப்புக்கான தேசிய மேடை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இதற்கான சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட 6 வலையொளி (யூ-ட்யூப்) சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னரும், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக சில வலையொளி சேனல்கள் முடக்கப்பட்டன என்பது நினைவு கூரத்தக்கது.
பசு கடத்தல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) பிரமுகர் அனுப்ரதா மண்டலின் அமலாக்கத் துறை (ED) காவலை 11 நாள்கள் நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாணவர்களுக்கு பைபிள் கற்பித்து, தேவாலயத்திற்கு அழைத்துச் சென்றதாக, மாண்ட்லாவில் உள்ள பள்ளி முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தொடர்ந்து, பள்ளி விடுதி கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா, பட்ஜெட் உரையில், மத்திய அரசு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நியாயமான கோரிக்கைகளுக்கு காது கேளாததாக குற்றம் சாட்டினார்.
சிவகங்கையில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு; ஓபிஎஸ் ஆதரவாளர் அசோகன் தொடர்ந்த வழக்கில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது!
கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அடுத்த காங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெங்கடேசன் கைது; திமுக தொண்டர்கள் குறித்து இழிவாகப் பேசி சமூகவலைதளங்களில் வீடியோ பதிவு செய்த புகாரில் நடவடிக்கை!
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 23ம் தேதியும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 22ம் தேதியும் தேர்வுகள் தொடங்க உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!
ஆணவ கொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு நினைவேந்தல் மற்றும் சாதி மறுப்பு திருமணம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்/சாதி மறுப்பு திருமணம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேலும் ஆணவ கொலை தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள் பொது வெளியில் நடந்தால் தான் மக்களிடம் சென்றடையும் என்றும், கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
கோவில் அறங்காவலர்கள் தேர்வு தொடர்பாக அனைத்து கோவில்களுக்கும் ஒரே மாதிரியான விண்ணப்பங்களை இணையதளத்தில் நாளையே பதிவேற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அறங்காவலர்கள் தேர்வு தொடர்பாக 23 மாவட்டங்களில் குழுக்கள் நியமனம் செய்யப்பட்டு அறங்காவலர் பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அறிவித்துள்ளது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (11.03.2023) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளது. நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவித்திருந்த நிலையில் விடுமுறை அளித்து உத்தரவு
வணிக வரித்துறையில் 1,000 அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியீடு. வருவாயைப் பெருக்குவதற்காக வணிகவரி அலுவலர்களாகவும், துணை வணிகவரி அலுவலர்களாகவும் பதவி உயர்வு
கடலூர் மாவட்ட கிராமப்புறங்களில் இரவு நிறுத்தப்படும் அரசு பேருந்துகளை பணிமனைக்கு கொண்டுவர போக்குவரத்து கழகம் உத்தரவு. நெய்வேலி என்எல்சி நிறுவனத்தை கண்டித்து நாளை பாமக சார்பில் முழு அடைப்பு போராட்டம் அறிவித்துள்ளது.
அண்ணாமலை மீது காவல்துறை பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி பாஜகவினர் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு மற்றும் மாநில துணைத் தலைவர்கள் கரு. நாகராஜன் பங்கேற்பு
ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், 'ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து இருவர் தற்கொலை செய்தது தொடர்பாக சிபிசிஐடி அனுப்பிய நோட்டீஸ் மீது இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது.' என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விசாரணையை மார்ச் 21ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தருமபுரி, எருமியாம்பட்டியில் வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் மின்சார கம்பி உரசியதால் தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளனது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக முயன்று வருகிறார்கள்.
பார்டர் – கவாஸ்கர் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 480 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. அந்த அணியில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா – 180 ரன்களும், காமரூன் கிரீன் – 114 ரன்களும் எடுத்தனர், இந்திய அணி தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள 4 சக்கர வாகன நிறுத்தும் பகுதியில், மேம்பாடு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், மார்ச் 24ம் தேதி முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு மூடப்படுவதாகச் சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
#expressnews || ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள 4 சக்கர வாகன நிறுத்தும் பகுதியில், மேம்பாடு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், மார்ச் 24ம் தேதி முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு மூடப்படுவதாகச் சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!https://t.co/gkgoZMHWlc | #chennai | #metro pic.twitter.com/hcfUeWc19W
— Indian Express Tamil (@IeTamil) March 10, 2023
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரம் அரசு பள்ளி வளாகத்தில், சக மாணவர்கள் தாக்கியதில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் கொலை தொடர்பாக முசிறி டி.எஸ்.பி. யாஸ்மின் தலைமையிலான போலீசார் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை, நாகூர் அருகே பட்டினச்சேரியில் கச்சா எண்ணெய் குழாயில் இருந்து மீண்டும் கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. சிபிசிஎல் பம்பிங் ஸ்டேஷனில் இருந்து கச்சா எண்ணெயை பம்பிங் செய்த போது மற்றொரு குழாய் உடைந்தது.
திருவாரூர், நீடாமங்கலத்தைச் சேர்ந்த பூவனூர் ராஜ்குமார் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பூவனூர் ராஜ்குமார் முக்கிய குற்றவாளி ஆவார்
இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசுவதா?
சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்?
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் வீடியோவை இந்தியில் மொழிபெயர்த்து பிரசாந்த் கிஷோர் ட்விட்டரில் கேள்வி
மாநில கட்சிகள் குடும்ப கட்சிகளாக மாறி வருவதை நாம் பார்க்கிறோம்
காங்கிரஸின் மோசமான ஆட்சி காரணமாகவே மாநில கட்சிகள் தோன்றின
பாஜகவால் மட்டுமே தமிழகத்தில் நல்லாட்சியை வழங்க முடியும் – ஜே.பி.நட்டா
தமிழ்நாட்டில் பா.ஜ.க விரைவில் ஆட்சியை கைப்பற்றும்
பா.ஜ.கவில் வாரிசு அரசியல் இல்லை. மக்களுக்கான நேரடி ஆட்சியே பாஜக
பாஜக கட்சி அலுவலகங்கள் 24 மணி நேரமும் திறந்தே இருக்கும் எனவும் ஜே.பி.நட்டா பேச்சு
கிருஷ்ணகிரியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு
நெய்வேலி என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் சமன் செய்யும் பணியில் கடும் வாக்குவாதம்
தர்ணாவில் ஈடுபட்ட புவனகிரி அ.தி.மு.க எம்எல்ஏ அருண்மொழித்தேவன் உள்பட 50 பேர் கைது
வளையமாதேவி கிராமத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு கடும் எதிர்ப்பு
உதகையில் அதிக சத்து மாத்திரை உட்கொண்டதால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
மேலும் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 மாணவிகளுக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கவும் முதல்வர் அறிவுறுத்தல்
கிருஷ்ணகிரி, குந்தாரப்பள்ளியில் புதிதாக கட்டுப்பட்டுள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார் ஜே.பி.நட்டா
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் பங்கேற்பு
இந்தியா முழுவதும் H3N2 இன்புளூயன்சா காய்ச்சலால் 90 பேர் பாதிப்பு. H1N1 காய்ச்சலால் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல், சளி அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் குறைகளை போக்க தொடர்ந்து முயற்சி செய்வேன். காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக செல்வப்பெருந்தகை தொடர்ந்து செயல்படுவதையே விரும்புகிறேன்- எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற பிறகு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
நாளை பாமக முழுஅடைப்புப் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் இயல்பான முறையில், வழக்கமான நடைமுறைகள் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். காவல்துறை மூலம் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்- கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்
ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றிபெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்
பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அடக்கி வாசிக்கின்றார்கள்; எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், ஆளுநர்கள் வைஸ்ராய் போல் செயல்படுகிறார்கள். ஆன்லைன் ரம்மி மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியது தவறு-சிவகங்கையில் ப.சிதம்பரம் பேட்டி
ஆன்லைன் ரம்மி மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியது தவறு-சிவகங்கையில் ப.சிதம்பரம் பேட்டி
இன்ஃப்ளூயன்சா வைரஸ் பாதிப்பிற்கு இந்தியாவில் ஹரியானா மற்றும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை பிற்பகல் 2 மணிக்கு ஆஜர்படுத்த வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரில் ராணுவ வீரர் பிரபு கொலை வழக்கில், தி.மு.க. கவுன்சிலர் சின்னசாமி, அவரது மகன் புலிப்பாண்டி, தம்பி காளியப்பன் உறவினர் மாதையன் உள்பட 9 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பிணை கோரிய தி.மு.க. கவுன்சிலர் மகன் புலிப்பாண்டியின் மனு நிராகரிக்கப்பட்டது.
சென்னையில் இன்றைய காலை நிலவப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.41,520-க்கு விற்பனையாகிறது.
டெல்லி, ராஜ்கோட்டில் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ்
இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மிகச்சிறந்த நண்பர்கள்; இரு நாடுகளுக்கு இடையேயான உறவு வலுவானது . கிரிக்கெட்டில் போட்டி போட்டாலும், சிறப்பான உலகை கட்டமைக்க ஒன்றிணைந்து செயல்படுகிறோம் – இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ்
தமிழகத்தில் பெரிய அளவில் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்பதால், மக்கள் பதற்றப்பட வேண்டாம் . காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 3 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்- மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒற்றை இலக்கத்தில் இருந்து தற்போது இரட்டை இலக்கத்துக்கு பாதிப்பு அதிகரிப்ப என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் 3 பேரை காவலில் எடுத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை. சென்னை சிறையில் இருந்து 3 பேரையும் கோவை அழைத்து வந்து விசாரணை