Tamil News Highlights: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல் நலக்குறைவால் காலமானார்

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 17-07- 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 17-07- 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News Highlights: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல் நலக்குறைவால் காலமானார்

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

விம்பிள்டன் டென்னிஸ் - அல்கராஸ் சாம்பியன்

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் - ஸ்பெயின் நாட்டு வீரர் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன். ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிசை வீழ்த்தி அபாரம். முதல் முறையாக விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம்.

நீர் நிலவரம்

3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், நீர்இருப்பு 2,242 மில்லியன் கனஅடியாக உள்ளது.  1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில், நீர்இருப்பு 95 மில்லியன் கனஅடியாக உள்ளது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 379 மில்லியன் கனஅடியாக உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment
Advertisements

  • 23:07 (IST) 17 Jul 2023
    விழுப்புரத்தில் சோதனை நிறைவு

    விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. காலை 7 மணியளவில் தொடங்கிய அமலாக்கத் துறையினரின் சோதனை தற்போது நிறைவு பெற்றுள்ளது


  • 22:29 (IST) 17 Jul 2023
    அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் பொன்முடியின் ஆடிட்டர்கள் வருகை

    நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் பொன்முடியின் ஆடிட்டர்கள் வந்து, சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர்


  • 22:01 (IST) 17 Jul 2023
    ரெய்டுக்கு எல்லாம் பயந்தவர்கள் நாங்கள் கிடையாது - அமைச்சர் உதயநிதி

    பல்வேறு சோதனைகளைப் பார்த்த இயக்கம்தான் திராவிட இயக்கம். உங்களுடைய ED, IT, CBI சோதனைகளுக்கெல்லாம் நாங்கள் பயந்தவர்கள் கிடையாது என திருப்பத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்


  • 21:16 (IST) 17 Jul 2023
    ஜல்லிக்கட்டு அனுமதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பீட்டா மனு

    ஜல்லிக்கட்டு அனுமதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரிக்கை விடுத்துள்ளது


  • 20:59 (IST) 17 Jul 2023
    பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் தொடக்கம்

    பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இதில் 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்றுள்ளன.


  • 20:10 (IST) 17 Jul 2023
    அமைச்சர் பொன்முடியை விசாரணைக்காக அழைத்துச் செல்கிறது அமலாக்கத்துறை

    13 மணிநேர சோதனைக்கு பின் அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்கிறது


  • 19:57 (IST) 17 Jul 2023
    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.89 லட்சம்

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மற்றும் 10 உபகோயில்களின் உண்டியல் காணிக்கையாக ரூ.89 லட்சம் வந்துள்ளது


  • 19:12 (IST) 17 Jul 2023
    சென்னை உட்பட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

    சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது


  • 18:56 (IST) 17 Jul 2023
    ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்ற 'ஹுக்கும்' பாடல் வெளியீடு

    ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்ற 'ஹுக்கும்' பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அனிருத் இசையில் 'காவாலா' ஹிட்டானதை அடுத்து 'ஹுக்கும்' பாடல் வெளியிடப்பட்டுள்ளது. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'ஜெயிலர்' ஆகஸ்ட் 10ல் வெளியாகிறது


  • 18:53 (IST) 17 Jul 2023
    ஆளுனர் ஆர்.என். ரவி சாமி தரிசனம்

    ஆளுனர் ஆர்.என். ரவி மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவருடன் பிரதமரின் பொருளாதார ஆலோசகர் பிபேக் டெப்ராய் உடனிருந்தார்.


  • 18:34 (IST) 17 Jul 2023
    வேங்கைவயல்: 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த உத்தரவு

    வேங்கைவயல் விவகாரத்தில் 4சிறுவர்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. டிஎன்ஏ பரிசோதனை நடத்த இரத்த மாதிரிகளை அளிக்க சிறுவர்களின் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். மேலும், பரிசோதனை தேதியை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் குழு முடிவெடுக்கவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


  • 18:30 (IST) 17 Jul 2023
    எஸ்.ஜி சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமின்

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் தாக்கப்பட்டதாக போலியான செய்தியை பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கியது உயர் நீதிமன்றம்

    இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் வகையில் அவதூறு பரப்பியதாக சிதம்பரம் போலீசார், சூர்யா மீது வழக்குப்பதிவு செய்தனர்

    மறு உத்தரவு வரும் வரை, காலை மற்றும் மாலை சிதம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு முன் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


  • 18:22 (IST) 17 Jul 2023
    வந்தே பாரத் ரயிலில் தீ

    மத்தியப் பிரதேச மாநிலம் குர்வை கேதோரா ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை தீப்பிடித்து எரிந்தது.

    போபாலில் இருந்து டெல்லி செல்லும் வந்தே பாரத் விரைவு ரயிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த ரயில் போபாலில் இருந்து அதிகாலை 5.40 மணிக்கு புறப்பட்டது.

    குர்வை கேதோரா ரயில் நிலையத்திற்கு வந்தே பாரத் ரயில் வந்தபோது ஒரு பெட்டியில் உள்ள பேட்டரி கோளாறு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.


  • 18:19 (IST) 17 Jul 2023
    நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து.

    மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த அதிகாரிகள், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    ஆட்சியர் அலுவலகத்தின் 3வது தளத்தில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவன அலுவலகத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


  • 18:10 (IST) 17 Jul 2023
    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மறுபிரதி சான்று கோரி விண்ணப்பிக்கலாம்: தேர்வு வாரியம்

    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மறுபிரதி சான்று கோரி விண்ணப்பிக்கலாம் என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

    2012, 2013, 2017, 2019-ல் ஆசிரியர் தகுதி தேர்வர்கள் இ-சேவை மூலம் இன்று முதல் விண்ணபிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.


  • 17:57 (IST) 17 Jul 2023
    அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம்

    சட்டவிரோதத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, இதய பாதிப்பு காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

    இந்த நிலையில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.


  • 17:51 (IST) 17 Jul 2023
    பொன்முடி வீட்டில் சோதனை: கே.எஸ் அழகிரி கண்டனம்

    தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அலுவலகங்களில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க. தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி எக்கு கோட்டை போல் உறுதியாக இருக்கிறது.

    அமலாக்கத்துறையின் மூலம் எத்தகைய சோதனைகள், கைதுகள், சொத்துகளை முடக்கினாலும் அதற்கெல்லாம் எவரும் அஞ்சப் போவதில்லை. கைதுகளும், சோதனைகளும் நடக்க நடக்க பா.ஜ.க.வினுடைய தோல்வி உறுதி செய்யப்பட்டு வருகிறது. பா.ஜ.க. ஆட்சியின் சவப்பெட்டிக்கு மக்கள் ஆணி அடிப்பதற்கு முன்பாக அந்த பணியை அமலாக்கத்துறையே செய்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.


  • 17:50 (IST) 17 Jul 2023
    பொன்முடி வீட்டில் சோதனை: கே.எஸ் அழகிரி கண்டனம்

    தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அலுவலகங்களில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க. தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி எக்கு கோட்டை போல் உறுதியாக இருக்கிறது.

    அமலாக்கத்துறையின் மூலம் எத்தகைய சோதனைகள், கைதுகள், சொத்துகளை முடக்கினாலும் அதற்கெல்லாம் எவரும் அஞ்சப் போவதில்லை. கைதுகளும், சோதனைகளும் நடக்க நடக்க பா.ஜ.க.வினுடைய தோல்வி உறுதி செய்யப்பட்டு வருகிறது. பா.ஜ.க. ஆட்சியின் சவப்பெட்டிக்கு மக்கள் ஆணி அடிப்பதற்கு முன்பாக அந்த பணியை அமலாக்கத்துறையே செய்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.


  • 17:38 (IST) 17 Jul 2023
    கார் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலி!

    மத்தியப் பிரதேசத்தில் இன்று காலை அதி பயங்கர சாலை விபத்து நடந்தது. சாகர் மாவட்டத்தின் சனோதா காவல் நிலையப் பகுதியில் கார் மீது வேகமாக வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.


  • 17:30 (IST) 17 Jul 2023
    ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா மூன்றாவது இடம்

    24ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஜூலை 12ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    கடைசி நாளான நேற்று இந்தியா மேலும் 8 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை வென்றது. பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவை சேர்ந்த பாருல் சவுத்ரி 15 நிமிடம் 52.35 வினாடிகளில் 2-வதாக வந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

    28 வயதான பாருல் சவுத்ரி இந்த பிரிவில் தேசிய சாதனையாக 15 நிமிடம் 10.35 வினாடிகளில் இலக்கை கடந்திருக்கிறார். மேலும் இது அவருக்கு இந்த நடப்பாண்டு தொடரில் இரண்டாவது பதக்கம் ஆகும்.


  • 17:17 (IST) 17 Jul 2023
    நீராவி என்ஜின் வடிவில் சுற்றுலா ரெயில்

    தெற்கு ரயில்வேயின், திருச்சி பொன் மலை, பெரம்பூர் கேரேஜ், ஆவடி பணி மனை இணைந்து, நீராவி ரெயில் என்ஜின் வடிவில், மின்சாரத்தில் இயங்கும் சுற்றுலா ரெயிலை வடிவமைத்துள்ளனர்.

    இந்த ரெயிலை மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலை யத்தில், சமீபத்தில் பார்வையிட்டார்.

    இந்த சுற்றுலா ரெயிலில் 3 சொகுசு ஏ. சி. பெட்டி, ஒரு பேன்டரி ஏ. சி. பெட்டியும் இருக்கும். சொகுசு இருக்கைகள், சுற்றுலா இடங்களை காணும் வகையில் கண்ணாடி மேற்கூரை ஆகியவையும் இருக்கும்.

    நீராவி புகை வெளியேறுவது போல், ஹாரன் ஒலித்தபடி, ஓடும் இந்த சுற்றுலா ரெயில், பயணியரிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ரெயிலின் சோதனை ஒட்டம் சென்னை - புதுவை இடையே நடந்தது.


  • 17:03 (IST) 17 Jul 2023
    ராமஜெயம் கொலை வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

    ராமஜெயம் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வு குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை திருப்தி அளிக்கிறது. நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன் என மனுதாரர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


  • 17:01 (IST) 17 Jul 2023
    காவேரி மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்

    காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அங்கிருந்து புழல் சிறைக்கு அவர் மாற்றப்படுகிறார்.


  • 16:58 (IST) 17 Jul 2023
    பா.ஜ.க மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமின்

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் தாக்கப்பட்டதாக போலியான செய்தியை பதிவிட்ட வழக்கில், பா.ஜ.க மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கியது.

    இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் வகையில் அவதூறு பரப்பியதாக சிதம்பரம் போலீசார், சூர்யா மீது வழக்குப்பதிவு செய்தனர். மறு உத்தரவு வரும் வரை, காலை மற்றும் மாலை சிதம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு முன் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளது.


  • 16:56 (IST) 17 Jul 2023
    இ.டி. ரெய்டு: அமைச்சர் பொன்முடி வீட்டில் ரூ.70 லட்சம் பறிமுதல்?

    அமைச்சர் பொன்முடி வீடு, அலுவலகம் கல்லூரிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், பொன்முடியின் வீட்டில் இருந்து ரூ. 70 லட்சத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது. ரூ. 10 லட்சம் மதிப்புள்ள அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளின் கரன்சிகள் உள்பட ரூ. 70 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


  • 16:52 (IST) 17 Jul 2023
    என்னதான் நடக்குது நடக்கட்டுமே... இ.டி. வந்தால் வரட்டுமே - துரைமுருகன்

    அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கூறிய துரைமுருகன், என்னதான் நடக்குது நடக்கட்டுமே... இ.டி. வந்தால் வரட்டுமே என்று பாட்டு பாடி கருத்து தெரிவித்தார்.


  • 16:52 (IST) 17 Jul 2023
    என்னதான் நடக்குது நடக்கட்டுமே... இ.டி. வந்தால் வரட்டுமே - துரைமுருகன்

    அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கூறிய துரைமுருகன், என்னதான் நடக்குது நடக்கட்டுமே... இ.டி. வந்தால் வரட்டுமே என்று பாட்டு பாடி கருத்து தெரிவித்தார்.


  • 16:20 (IST) 17 Jul 2023
    பொன்முடி வீட்டுக்கு வங்கி அதிகாரிகள் வருகை; அமலாக்கத்துறை விசாரணை

    அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை இயக்குனரக அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டுக்கு வங்கி அதிகாரிகள் வந்துள்ளனர். பணப் பரிவர்த்தனை குறித்து வங்கி அதிகாரிகளை அழைத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது.


  • 15:56 (IST) 17 Jul 2023
    விழுப்புரத்தில் அமலாக்கத்துறை - தி.மு.க-வினர் இடையே வாக்குவாதம்

    விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, 3 பைகளை அமலாக்கத்துறையினர் வீட்டிற்குள் எடுத்துச் சென்றதற்கு தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அந்த 3 பைகளையும் காண்பிக்கக் கோரி அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு வெளியே தி.மு.க தொண்டர்கள் அமலாக்கத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


  • 15:52 (IST) 17 Jul 2023
    எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூரு வந்த சோனியா, ராகுல்; சித்தராமையா வரவேற்பு

    எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பெங்களூரு வந்தடைந்த காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வரவேற்றார்.


  • 15:09 (IST) 17 Jul 2023
    பொன்முடி வீட்டில் ரெய்டு; கர்நாடகா சென்ற ஸ்டாலின் பரபரப்பு ட்வீட்

    அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்துகொள்ள பெங்களூரு சென்ற ஸ்டாலின் பரபரப்பு ட்வீட் செய்துள்ளார். அதில், “நமஸ்கார் கர்நாடகா!

    பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற மதசார்பற்ற ஜனநாயக சக்திகளின் கூட்டத்திற்கு பிறகு இப்போது அழகிய நகரமான பெங்களூருவில் கூடியிருக்கிறோம்.

    தற்போதைய முக்கியமான தருணத்தில் பாஜக-வின் ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க் வேண்டியது அவசியம்...

    பாஜகவின் பிற்போக்கு அரசியலை மக்கள் நிராகரித்ததற்கு சமீபத்திய கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவு ஒரு உதாரணம்... இதை தேசிய அளவில் பிரதிபலிக்க வேண்டும்...

    ஒன்றாக நின்று ஜனநாயகத்தை பாதுகாப்போம் நமது தேசத்திற்கு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.


  • 14:49 (IST) 17 Jul 2023
    எஸ்.பி. சிவக்குமாருக்கு மெமோ!

    சேலம் மாவட்ட எஸ்.பி. சிவக்குமாருக்கு, மேற்கு மண்டல டி.ஐ.ஜி ராஜேஸ்வரிகாவல் துணை ஆணையர் பெயரை குறிப்பிட்டு அவதூறு கருத்து பதிவிட்டிருந்த நிலையில் அவருக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது.


  • 14:48 (IST) 17 Jul 2023
    ஒன்றுபடுவது அவசியம் - ஸ்டாலின் டிவிட்டர் பதிவு

    "பாஜகவின் ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டியது அவசியம். பாஜகவின் பிற்போக்கு அரசியலை மக்கள் நிராகரித்ததற்கு சமீபத்திய கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவு ஒரு உதாரணம். பாஜகவிற்கு எதிராக ஒன்றுபடுவது அவசியம்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


  • 14:41 (IST) 17 Jul 2023
    'பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும்' - தமிழக மின்வாரியம் உத்தரவு

    தமிழகம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என மின்வாரிய பொறியாளர்களுக்கு, - மின்வாரிய தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    நுகர்வோரின் வசதிக்காகவும், உரிய வருவாயை ஈட்டவும் பழுதடைந்த மீட்டர்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும். சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருச்சி, நாகை ஆகிய 5 மாவட்டங்களில் 10,000க்கும் அதிகமான மீட்டர்கள் பழுது. மாநிலம் முழுவதும் உள்ள பழுதடைந்த மீட்டர்களை மாற்றிய பின், அதுகுறித்த விவரங்களை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


  • 14:32 (IST) 17 Jul 2023
    '100 அடி உயர கொடிக் கம்பம்': அமைச்சர் உதயநிதி ட்வீட்!

    கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, 100 அடி உயர கொடிக் கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். "உயர பறக்கும் கருப்பு - சிவப்பு கொடியை போல முத்தமிழறிஞரின் சாதனைகளை உயர்த்தி பிடித்து மக்களிடம் கொண்டு சேர்த்திடுவோம்" என அமைச்சர் உதயநிதி ட்வீட் செய்துள்ளார்.


  • 14:10 (IST) 17 Jul 2023
    சந்திரயான் 3 விண்கலம்: 2வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றி!

    சந்திரயான் 3 விண்கலத்தை 2வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றிகரமாக நிறைவு பெற்றதாகவும், விண்கலம் சீராக இயங்குவதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    விண்கலத்தின் அடுத்தக்கட்ட சுற்றுப்பாதையை உயர்த்தும் பணியை நாளை மதியம் 2 மணி முதல் 3 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சந்திரயான் 3 விண்கலம் தற்போது 41,603 கிமீ x 226 கி.மீ. சுற்றுப்பாதையில் உள்ளது.


  • 14:03 (IST) 17 Jul 2023
    அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை: போலி சாவி மூலம் திறக்கப்படும் பீரோக்கள்!

    விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறையினரின் சோதனை 6 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்துள்ளது. இந்நிலையில், பீரோவின் சாவி இல்லாததால் நீண்ட நேரம் காத்திருந்த அதிகாரிகள், பின் போலி சாவி தயாரிக்கும் நபரை வரவழைத்து போலி சாவி மூலம் பீரோவை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    'ஒரு லாக்கரை மட்டும் திறக்க முடியவில்லை' என போலி சாவி தயாரிக்கும் தொழிலாளி தனபால் கூறியுள்ளார்.


  • 13:52 (IST) 17 Jul 2023
    'லால் சலாம்': புதிய போஸ்டர் வெளியீடு!

    நடிகர் விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு, 'லால் சலாம்' படத்தில் அவரின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்து படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தது.


  • 13:51 (IST) 17 Jul 2023
    நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    நாகப்பட்டிணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 3வது தளத்தில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த அதிகாரிகள், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    லேப்டாப், கணினி, பழுதான ஆதார் கருவி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம் ஆகியுள்ளன. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.


  • 13:43 (IST) 17 Jul 2023
    ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளர் கைது!

    திருச்சியில் மசாஜ் சென்டர் வழக்கை சாதகமாக முடித்து தர ரூ.3000 லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக எழுந்த புகாரில், உரிமையாளர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை சாதகமாக முடிக்க திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் ரமா ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். முன்பணமாக ரூ.3 ஆயிரம் பெற்ற போது, லஞ்ச ஒழிப்புத்துறை மறைந்து இருந்து பிடித்தனர்.


  • 13:27 (IST) 17 Jul 2023
    அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை: 'பர்கர்' வருகை

    சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், அதிகாரிகள் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்த நிலையில் ரூ.175 மதிப்புள்ள 15 பர்கர்கள் வந்துள்ளன.

    அமைச்சர் பொன்முடி வீட்டில் 6 மணி நேரமாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவது குறிப்பித்தக்கது.


  • 12:55 (IST) 17 Jul 2023
    அமலாக்கத்துறை சோதனை- கெஜ்ரிவால் கண்டனம்

    அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

    அமலாக்கத்துறை மூலம் இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டை உங்களால் பயமுறுத்தவோ, கட்டுப்படுத்தவோ முடியாது - அரவிந்த் கெஜ்ரிவால்


  • 12:44 (IST) 17 Jul 2023
    பெங்களூரு சென்றடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

    எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பெங்களூரு சென்றடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

    பெங்களூரு விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை வரவேற்ற கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்


  • 12:43 (IST) 17 Jul 2023
    குட்கா முறைகேடு வழக்கு - அனுமதி கடிதம் கிடைக்கவில்லை

    தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருட்கள் விற்கபட்டதாக வழக்கு

    குட்கா முறைகேடு வழக்கில் விசாரணைக்கு அனுமதி மற்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் தொடர்பாக அனுமதி கடிதம் கிடைக்கவில்லை

    சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் 11வது முறையாக சிபிஐ தகவல்


  • 12:15 (IST) 17 Jul 2023
    இ.டி வழக்குகளில் இதுவரை குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதா? - ஆர்.எஸ்.பாரதி

    அமைச்சர் பொன்முடியை சந்திக்க எங்களை அனுமதிக்கவில்லை

    அமலாக்கத்துறை வழக்குகளில் இதுவரை குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதா?

    அமலாக்கத்துறை அதிகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது - ஆர்.எஸ்.பாரதி


  • 12:14 (IST) 17 Jul 2023
    எதிர்கட்சிகள் கூட்டத்தை இருட்டடிப்பு செய்யும் வகையில் சோதனை

    ஒரு வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பின் திடீரென சோதனை மேற்கொள்வது கண்டனத்திற்குரியது.

    இந்த சோதனைகள் பா.ஜ.க மீது மேலும் வெறுப்பை ஏற்படுத்தும்.

    எதிர்கட்சிகள் கூட்டத்தை இருட்டடிப்பு செய்யும் வகையில் சோதனை.

    அமலாக்கத்துறை பா.ஜ.கவின் இளைஞர் அணி போல செயல்படுகிறது - கே.பாலகிருஷ்ணன்


  • 12:13 (IST) 17 Jul 2023
    பொன்முடி வீட்டில் சோதனை- மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்

    அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்

    பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் சோதனை நடைபெறுகிறது

    பிரதமர் மோடியின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றுபட்டுள்ளனர் - மல்லிகார்ஜூன கார்கே

    இதுபோன்ற சோதனைகளால் எதிர்க்கட்சிகளை தடுமாற வைக்க முடியாது - மல்லிகார்ஜூன கார்கே


  • 11:54 (IST) 17 Jul 2023
    சோதனை பற்றி திமுகவுக்கு கவலை இல்லை

    அமலாக்கத்துறை சோதனை பற்றி திமுகவுக்கு கவலை இல்லை

    எந்த சவாலையும் சந்திக்க திமுக தயாராக உள்ளது.

    தன் மீதான வழக்குகளை அமைச்சர் பொன்முடி சட்டப்படி சந்திப்பார்

    இதற்கெல்லாம் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் - முதல்வர்


  • 11:53 (IST) 17 Jul 2023
    பொன்முடியின் வீட்டிற்கு தடயவியல் நிபுணர்கள் வருகை

    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டிற்கு தடயவியல் நிபுணர்கள் வருகை

    அமலாக்கத்துறை அழைத்ததன் பேரில் தடயவியல் நிபுணர்கள் வருகை

    டிஜிட்டல் முறையில் உள்ள ஆவணங்களை கண்டறியும் வகையில், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு

    அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் 4 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை


  • 11:40 (IST) 17 Jul 2023
    விழுப்புரத்தில் பொன்முடியின் மேலும் ஒரு வீட்டில் சோதனை

    சண்முகபுரத்தில் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் காலையில் இருந்து சோதனை நடைபெற்று வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு வீட்டில் சோதனை

    அமைச்சர் பொன்முடியின் வீட்டின் அருகே அவரது குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த மற்றொரு வீட்டின் கதவை திறந்து அதிகாரிகள் சோதனை

    அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் 4 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்று வருகிறது

    விழுப்புரம் விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியிலும் அதிகாரிகள் சோதனை


  • 11:32 (IST) 17 Jul 2023
    எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் நோக்கத்தை திசைதிருப்பவே சோதனை- ஸ்டாலின்

    ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமைச்சர் பொன்முடி மீது போடப்பட்ட பொய் வழக்குதான் இந்த வழக்கு

    எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் நோக்கத்தை திசைதிருப்பவே அமலாக்கத்துறை சோதனை

    ஆளுநருடன் தற்போது அமலாக்கத்துறையும் இணைந்துள்ளதால், வருகின்ற தேர்தல் எங்களுக்கு சுலபமாக இருக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


  • 11:30 (IST) 17 Jul 2023
    எதிர்க்கட்சிகள் கூட்டம் பா.ஜ.கவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது

    பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

    எதிர்க்கட்சிகள் கூட்டம் பா.ஜ.கவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

    வட மாநிலங்களில் செய்தது போல, தமிழ்நாட்டிலும் அமலாக்கத்துறை மூலம் பா.ஜ.க அதன் நடவடிக்கையை தொடங்கியுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


  • 11:26 (IST) 17 Jul 2023
    பெங்களூரு புறப்பட்டார் ஸ்டாலின்

    |எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் பெங்களூரு புறப்பட்டார்

    அமைச்சர் பொன்முடி வீடுகளில் சோதனை நடைபெறும் நிலையில், பெங்களூரு புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்

    பெங்களூருவில் இன்றும், நாளையும் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது


  • 10:51 (IST) 17 Jul 2023
    சென்னை, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் 3 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை சோதனை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 7 இடங்களில் சோதனை காலை 7 மணி முதல் அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை சென்னை சைதாப்பேட்டை, விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடுகளில் சோதனை விழுப்புரம் விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்திலும் அதிகாரிகள் சோதனை துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டு வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள்

    சென்னை, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் 3 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை சோதனை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 7 இடங்களில் சோதனை காலை 7 மணி முதல் அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை சென்னை சைதாப்பேட்டை, விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடுகளில் சோதனை விழுப்புரம் விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்திலும் அதிகாரிகள் சோதனை. துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டு வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள்


  • 10:47 (IST) 17 Jul 2023
    அமைச்சர் பொன்முடி மகன் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை

    அமைச்சர் பொன்முடியின் மகனும், எம்.பி.யுமான கௌதம சிகாமணி தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.யாக உள்ளார் கௌதம சிகாமணி வெளிநாடுகளில் முதலீடு தொடர்பாக கௌதம சிகாமணியின் ரூ.8.6 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஏற்கனவே முடக்கியது அமலாக்கத்துறை


  • 09:40 (IST) 17 Jul 2023
    சரத்பவார் பங்கேற்கவில்லை என தகவல்

    பெங்களூரில் இன்று நடைபெறும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் பங்கேற்கவில்லை என தகவல்


  • 08:41 (IST) 17 Jul 2023
    11 ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை

    11 ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை. செம்மண் குவாரி தொடர்பாக, 2012ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.


  • 08:28 (IST) 17 Jul 2023
    டெல்லி : இன்றும் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை

    டெல்லியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்றும் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது பள்ளிக்கல்வித்துறை


  • 08:22 (IST) 17 Jul 2023
    முதல்வர் ஸ்டாலின் இன்று பெங்களூரு பயணம்

    முதல்வர் ஸ்டாலின் இன்று பெங்களூரு பயணம், 24 எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு பெங்களூருவில் இன்று தொடங்குகிறது எதிர்க்கட்சிகளின் 2-ஆவது ஆலோசனைக் கூட்டம்


  • 08:21 (IST) 17 Jul 2023
    தக்காளி விலை இன்று

    சென்னை, கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று கிலோவுக்கு ரூ. 10 உயர்ந்துள்ளது நேற்று ரூ.110க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.120க்கு விற்பனையாகிறது


  • 08:20 (IST) 17 Jul 2023
    அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை. அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 9 இடங்களில் சோதனை


Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: