பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நீர் நிலவரம்
3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2475 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 823 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 500 மில்லியன் கன அடியாக உள்ளது.
பொன்னியின் செல்வம் பார்ட் 2: இன்று இசை வெளியீடு
பொன்னியின் செல்வம் படத்தின் பாகம் 2 இசை மற்றும் டிரெயிலர் இன்று வெளியாகிறது. நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்துகொள்கிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு எதிரான கருத்துக்களை வாபஸ் பெறுமாறு 300க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கிரண் ரிஜிஜூவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஓய்வுபெற்ற சில நீதிபதிகள் “இந்தியா-விரோத கும்பலின்” ஒரு பகுதியாக இருப்பதாகவும், எதிர்க்கட்சியின் பாத்திரத்தை வகிக்க நீதித்துறையை கட்டாயப்படுத்துவதாகவும் மார்ச் 18-ம் தேதி கூறினார்.
தயிர் பாக்கெட்டுக்ளில் தஹி என்ற இந்தி வார்த்தையைப் பயன்படுத்துமாறு FSSAI அறிவுறுத்திய நிலையில், முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
எங்கள் தாய்மொழியைத் தள்ளி வைக்கச் சொல்லும் FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். குழந்தையைக் கிள்ளிவிட்டு சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் வேண்டாம். தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
யு.பி.ஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் என்ற தகவலுக்கு தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆன்லைன் பண சேமிப்பு வேலட்களில், 2 ஆயிரம் ரூபாய்க்கும் மேலான பரிவர்த்தனைகளுக்கு மட்டும் 1.1 சதவீதம் வரை கட்டணம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய நபர்களை துரிதமாக மீட்கும் நபர்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது மாநில அரசின் சார்பிலும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அதிமுக உறுப்பினர்களை பார்த்து, அண்ணே பேருந்து தெர்மாகோலில் செய்ய முடியாது” என கிண்டலாக பேசினார். இதைக் கேட்ட மு.க. ஸ்டாலின் சிரித்தார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன.
சி-ஓட்டர் கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் 115 இடங்களும், பாஜக 80 இடங்களும், மதசார்பற்ற ஜனதா தளம் 25 இடங்களும் மற்ற கட்சிகள் 2 இடங்களும் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஆதார் அட்டையை பயன்படுத்தி ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வராமலேயே ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப்பதிவு தொடர்பான 42 சேவைகளை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (SETC) பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு, 6வது பயணம் முதல் 50% கட்டணச் சலுகை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
ஆவின் நிர்வாகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்கில் கூட்டுறவு சங்கங்களில் பணியாளர்களை தேர்ந்தெடுக்க ஆள்சேர்ப்பு வாரியம் அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
சென்னை குரோம்பேட்டையில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக பல்லாவரம் சார் பதிவாளர் கைது
பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை
மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி ஆயிரம் புத்தகங்களை வழங்கி உள்ளார் * அதனை மதுரை மத்திய சிறைத்துறை துணைத் தலைவர் பழனி மற்றும் சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் பெற்றுக்கொண்டனர்.
இரவு நேர சோதனையில் இலக்கு எதுவும் நிர்ணயிக்கவில்லை. குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை கண்டறிய நவீன கருவி வழங்கப்படுகிறது. இயந்திரத்தில் தவறு இருந்தால் புதிய இயந்திரம் மாற்றப்படும் என டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்
1970 முதல் 2004 ஆம் ஆண்டு வரையிலான வாடகை பாக்கி ரூ.730.87 கோடியை ஒரு மாதத்தில் தமிழக அரசுக்கு செலுத்த வேண்டும் என சென்னை ரேஸ் கிளப்க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
காவல் ஆய்வாளர் தாக்கல் செய்த ஆவணத்தைப் பார்த்ததாகவும், இனி போன்ற செயல் எதுவும் நடைபெறாது என்றும், ரவுடி சஞ்சய் ராஜாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
ஜி.எஸ்.டியை ஆதரித்தது நமது பெரிய தவறு. இந்த வதி மாநிலங்களுக்கு நன்மை பயக்கும் என நினைத்தோம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்
நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கிப்புலி முதல்முறையாக இந்தியாவில் குட்டிகளை ஈன்றெடுத்துள்ளது. சியாயா என்ற சிவிங்கி புலி 4 குட்டிகளை ஈன்றுள்ளது
தப்பியோடிய இளம் சிறார்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவர். இளம் சிறார்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்
நெல்லையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக கூறப்பட்ட விவகாரத்தில், தான் காவல்துறையால் தாக்கப்படவில்லை என்றும், கீழே விழுந்ததிலேயே தனது பற்கள் உடைந்ததாகவும் பாதிக்கப்பட்ட சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.
என்றைக்காவது ஒருநாள் மறையப் போகிறவன், என் சமாதியில் கோபாலபுரத்து விசுவாசி என எழுதினால் போதும்- பேரவையில் அமைச்சர் துரைமுருகன் உருக்கம்
ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட பின் இடைத்தேர்தல் நடத்த 6 மாத அவகாசம் உள்ளது; ராகுல் காந்திக்கான 2 ஆண்டு தண்டனையை மேல்முறையீட்டுக்காக நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
ராகுல் காந்தி தண்டனை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறோம்- வயநாடு தேர்தல் குறித்த கேள்விக்கு தேர்தல் ஆணையர் ராஜுவ் குமார் பதில்
காவிரி குண்டாறு திட்டத்தை நாங்கள் விட்டு விடவில்லை. எதிர்க்கட்சிகள் என் மீது காட்டும் மரியாதைக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்- சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தகவல்
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணாமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஏப்ரல் 3ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன், நெஞ்சு வலி காரணமாக ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். ஓரிரு நாட்களில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடு திரும்ப உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட த்தில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.
பல்வேறு நலத் திட்டங்களுக்கு நிதி வழங்காததால் மத்திய அரசைக் கண்டித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் 2 நாள் தர்ணா போராட்டத்தை தொடங்கியுள்ளார்
புனே மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. கிரிஷ் பாபட் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார்.
யுபிஐ வழியாக ரூ. 2,000க்கு மேல் பரிவர்த்தனை செய்தால் 1.1% கட்டணம் என தேசிய பரிவர்த்தனை கழகம் அறிவித்திருந்தது, இந்நிலையில், யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ள கட்டணம் வசூலிக்கப்படாது என பேடிஎம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
கேரளா, வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க 6 மாதம் வரை அவகாசம் உள்ளது
தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய 1 மாதம் அவகாசம் உள்ளது
எனவே வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க அவசரமில்லை – இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் மேலும் ஒருவர் கைது மைக்கேல் ராஜ் என்பவர் சென்னை விமான நிலையத்தில் கைது
துபாயில் இருந்து வந்த நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்
கர்நாடக சட்டமன்ற தேர்தல் மே 10ம் தேதி நடைபெற உள்ளது
சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடைபெறும்
224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல்
கர்நாடகாவில் மொத்த வாக்காளர்கள் 5.21 கோடி பேர்; ஆண்கள் – 2.62 கோடி பெண்கள் – 2.5 கோடி பேர்
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு
சென்னை பெரம்பூர் அதிமுக நிர்வாகி இளங்கோவன் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
சஞ்சய் என்பவருக்கும், இளங்கோவனுக்கும் இருந்த முன்பகை காரணமாகவே கொலை- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மே 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – சபாநாயகர் செல்வம்
சென்னையில் 25 துணை மின் நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை கேள்வி – நேரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுத்ததை எதிர்த்து மேல்முறையீடு மனு
நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி அறிவிப்பு
லட்சத்தீவு மக்களவை உறுப்பினர் முகமது பைசலின் தகுதி நீக்கம் ரத்து. நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து தகுதி நீக்கத்தை ரத்து செய்தது மக்களவை செயலகம் . கொலை முயற்சி வழக்கில் குற்றவாளி என பத்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது . சிறை தண்டனையை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது
சென்னையில் மெட்ரோ, புறநகர் ரயில், மாநகர பேருந்துகளில் பயணம் செய்ய ஒரே இ-டிக்கெட் . அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரே இ-டிக்கெட் நடைமுறைக்கு வரும் – சி.யு.எம்.டி.ஏ. ஒரே பயணச்சீட்டு முறைக்கென தனி செயலி உருவாக்கப்பட உள்ளதாக தகவல்.
இந்தியாவில் ஒரே நாளில் 2,151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இந்தியாவில் 11,903 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை தரம் உயர்த்த அரசு ஆவன செய்யுமா? – வி.ஜி.ராஜேந்திரன் . திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை தரம் உயர்த்தும் திட்டம் இல்லை – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. கேள்வி நேரம் தொடங்கியது , உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அமைச்சர்கள் .
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.44,360க்கு விற்பனை . ஒரு கிராம் தங்கம் ரூ.5,545-க்கு விற்பனை
சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி பேச்சு. எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க கோரிக்கை.
கட்டணமில்லா பேருந்து மூலம் இதுவரை, 258.06 கோடி பயணங்கள்.அமைச்சர் சிவசங்கர் தகவல் .
பள்ளி மாணவர்களின் விவரம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு . மோசடி, தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு
கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான அட்டவணை இன்று காலை 11.30 மணிக்கு அறிவிப்பு. 224 தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம். தற்போதைய கர்நாடக அரசின் பதவிக்காலம் மே மாதம் 24-ம் தேதியுடன் நிறைவு ,
சென்னை, கே.கே நகரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம். உணவு டெலிவரி ஊழியரான அசோக் என்பவரை கைது செய்த தனிப்படை போலீசார். மதுபோதையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தது போலீசாரின் விசாரணையில் அம்பலம்
திமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்கக் கோரி மேல்முறையீடு . ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டை உயர்நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரிக்கிறது . தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது. இ.பி. எஸ் தரப்பு கேவியட் மனு தாக்கல்
ஆப்கானிஸ்தான், காபூல் கிழக்கு பகுதியில் காலை 5.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு
ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாளில் 2 விழுக்காடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை . நேற்று மாலை தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதிர்ச்சி தகவல். 4 லட்சம் பேர் தகுதி பெற்ற நிலையில் 1.5 லட்சம் பேர் தேர்வுக்கே வரவில்லை என்றும் தகவல்
குரூப்-4 தேர்வு சர்ச்சை தொடர்பாக டிஎன்பிஎஸ்சி இன்று அவசர ஆலோசனை . கூட்டத்திற்கு பிறகு முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்ப்பு