Advertisment

Tamil news today : தமிழ்நாட்டில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும்: உள்துறை அமைச்சர் அமித்ஷா

Tamil Nadu News, Tamil News LIVE, Petrol price Today - 29-03- 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news today : தமிழ்நாட்டில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும்: உள்துறை அமைச்சர் அமித்ஷா

பெட்ரோல்,  டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நீர் நிலவரம்

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2475 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 823 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 500 மில்லியன் கன அடியாக உள்ளது.

பொன்னியின் செல்வம் பார்ட் 2: இன்று இசை வெளியீடு

பொன்னியின் செல்வம் படத்தின் பாகம் 2 இசை மற்றும் டிரெயிலர் இன்று வெளியாகிறது. நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்துகொள்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:22 (IST) 29 Mar 2023
    ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு எதிரான கருத்துக்களை கிரண் ரிஜிஜு திரும்பப் பெற வேண்டும்; வழக்கறிஞர்கள் கோரிக்கை

    ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு எதிரான கருத்துக்களை வாபஸ் பெறுமாறு 300க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கிரண் ரிஜிஜூவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஓய்வுபெற்ற சில நீதிபதிகள் "இந்தியா-விரோத கும்பலின்" ஒரு பகுதியாக இருப்பதாகவும், எதிர்க்கட்சியின் பாத்திரத்தை வகிக்க நீதித்துறையை கட்டாயப்படுத்துவதாகவும் மார்ச் 18-ம் தேதி கூறினார்.



  • 20:29 (IST) 29 Mar 2023
    தயிர் பாக்கெட்டில் இந்தி - ஸ்டாலின் கண்டனம்

    தயிர் பாக்கெட்டுக்ளில் தஹி என்ற இந்தி வார்த்தையைப் பயன்படுத்துமாறு FSSAI அறிவுறுத்திய நிலையில், முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

    எங்கள் தாய்மொழியைத் தள்ளி வைக்கச் சொல்லும் FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். குழந்தையைக் கிள்ளிவிட்டு சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் வேண்டாம். தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.



  • 20:23 (IST) 29 Mar 2023
    யு.பி.ஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை

    யு.பி.ஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் என்ற தகவலுக்கு தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆன்லைன் பண சேமிப்பு வேலட்களில், 2 ஆயிரம் ரூபாய்க்கும் மேலான பரிவர்த்தனைகளுக்கு மட்டும் 1.1 சதவீதம் வரை கட்டணம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.



  • 19:51 (IST) 29 Mar 2023
    விபத்தில் உதவும் நபர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசு

    விபத்தில் சிக்கிய நபர்களை துரிதமாக மீட்கும் நபர்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.

    தற்போது மாநில அரசின் சார்பிலும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.



  • 19:35 (IST) 29 Mar 2023
    அ.தி.மு.க. உறுப்பினர்களை கலாய்த்த சிவசங்கர்

    போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அதிமுக உறுப்பினர்களை பார்த்து, அண்ணே பேருந்து தெர்மாகோலில் செய்ய முடியாது” என கிண்டலாக பேசினார். இதைக் கேட்ட மு.க. ஸ்டாலின் சிரித்தார்.



  • 19:16 (IST) 29 Mar 2023
    கர்நாடக சட்டமன்ற தேர்தல்.. கருத்து கணிப்புகள் வெளியீடு

    கர்நாடக சட்டமன்ற தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன.

    சி-ஓட்டர் கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் 115 இடங்களும், பாஜக 80 இடங்களும், மதசார்பற்ற ஜனதா தளம் 25 இடங்களும் மற்ற கட்சிகள் 2 இடங்களும் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.



  • 18:28 (IST) 29 Mar 2023
    இணையதளம் வழியாக ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப்பதிவு தொடர்பான 42 சேவைகள்

    ஆதார் அட்டையை பயன்படுத்தி ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வராமலேயே ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப்பதிவு தொடர்பான 42 சேவைகளை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்



  • 18:26 (IST) 29 Mar 2023
    அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிகளுக்கு கட்டணச்சலுகை

    அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (SETC) பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு, 6வது பயணம் முதல் 50% கட்டணச் சலுகை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்



  • 17:57 (IST) 29 Mar 2023
    ஆள்சேர்ப்பு வாரியம் அமைக்க உத்தரவு

    ஆவின் நிர்வாகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்கில் கூட்டுறவு சங்கங்களில் பணியாளர்களை தேர்ந்தெடுக்க ஆள்சேர்ப்பு வாரியம் அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு



  • 17:57 (IST) 29 Mar 2023
    சார் பதிவாளர் கைது

    சென்னை குரோம்பேட்டையில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக பல்லாவரம் சார் பதிவாளர் கைது

    பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை



  • 17:19 (IST) 29 Mar 2023
    சிறை நூலகத்திற்கு 1000 புத்தகங்கள் வழங்கிய விஜய் சேதுபதி

    மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி ஆயிரம் புத்தகங்களை வழங்கி உள்ளார் * அதனை மதுரை மத்திய சிறைத்துறை துணைத் தலைவர் பழனி மற்றும் சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் பெற்றுக்கொண்டனர்.



  • 16:57 (IST) 29 Mar 2023
    மது குடித்தவர்களை கண்டறிய நவீன கருவி – டி.ஜி.பி சைலேந்திரபாபு

    இரவு நேர சோதனையில் இலக்கு எதுவும் நிர்ணயிக்கவில்லை. குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை கண்டறிய நவீன கருவி வழங்கப்படுகிறது. இயந்திரத்தில் தவறு இருந்தால் புதிய இயந்திரம் மாற்றப்படும் என டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்



  • 16:35 (IST) 29 Mar 2023
    ரூ.730 கோடியை ஒரு மாதத்தில் செலுத்தவும்; சென்னை ரேஸ் கிளப்க்கு ஐகோர்ட் உத்தரவு

    1970 முதல் 2004 ஆம் ஆண்டு வரையிலான வாடகை பாக்கி ரூ.730.87 கோடியை ஒரு மாதத்தில் தமிழக அரசுக்கு செலுத்த வேண்டும் என சென்னை ரேஸ் கிளப்க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • 16:07 (IST) 29 Mar 2023
    ரவுடி சஞ்சய் ராஜாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறது - கோவை காவல் ஆணையர் விளக்கம்

    காவல் ஆய்வாளர் தாக்கல் செய்த ஆவணத்தைப் பார்த்ததாகவும், இனி போன்ற செயல் எதுவும் நடைபெறாது என்றும், ரவுடி சஞ்சய் ராஜாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.



  • 15:50 (IST) 29 Mar 2023
    ஜி.எஸ்.டியை ஆதரித்தது நமது பெரிய தவறு - மம்தா பானர்ஜி

    ஜி.எஸ்.டியை ஆதரித்தது நமது பெரிய தவறு. இந்த வதி மாநிலங்களுக்கு நன்மை பயக்கும் என நினைத்தோம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்



  • 15:34 (IST) 29 Mar 2023
    முதல்முறையாக இந்தியாவில் குட்டிகளை ஈன்றெடுத்த சிவிங்கிப்புலி

    நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கிப்புலி முதல்முறையாக இந்தியாவில் குட்டிகளை ஈன்றெடுத்துள்ளது. சியாயா என்ற சிவிங்கி புலி 4 குட்டிகளை ஈன்றுள்ளது



  • 15:14 (IST) 29 Mar 2023
    இளம் சிறார்களை பிடிக்க 3 தனிப்படைகள் - அமைச்சர் கீதாஜீவன்

    தப்பியோடிய இளம் சிறார்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவர். இளம் சிறார்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்



  • 14:59 (IST) 29 Mar 2023
    பற்களை பிடுங்கிய விவகாரம்

    நெல்லையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக கூறப்பட்ட விவகாரத்தில், தான் காவல்துறையால் தாக்கப்படவில்லை என்றும், கீழே விழுந்ததிலேயே தனது பற்கள் உடைந்ததாகவும் பாதிக்கப்பட்ட சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.



  • 14:39 (IST) 29 Mar 2023
    துரைமுருகன் உருக்கம்

    என்றைக்காவது ஒருநாள் மறையப் போகிறவன், என் சமாதியில் கோபாலபுரத்து விசுவாசி என எழுதினால் போதும்- பேரவையில் அமைச்சர் துரைமுருகன் உருக்கம்



  • 14:38 (IST) 29 Mar 2023
    தேர்தல் ஆணையர் ராஜுவ் குமார் பதில்

    ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட பின் இடைத்தேர்தல் நடத்த 6 மாத அவகாசம் உள்ளது; ராகுல் காந்திக்கான 2 ஆண்டு தண்டனையை மேல்முறையீட்டுக்காக நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

    ராகுல் காந்தி தண்டனை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறோம்- வயநாடு தேர்தல் குறித்த கேள்விக்கு தேர்தல் ஆணையர் ராஜுவ் குமார் பதில்



  • 14:26 (IST) 29 Mar 2023
    துரைமுருகன் தகவல்

    காவிரி குண்டாறு திட்டத்தை நாங்கள் விட்டு விடவில்லை. எதிர்க்கட்சிகள் என் மீது காட்டும் மரியாதைக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்- சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தகவல்



  • 14:26 (IST) 29 Mar 2023
    ஒத்திவைப்பு

    எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணாமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஏப்ரல் 3ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.



  • 13:57 (IST) 29 Mar 2023
    ஈவிகேஎஸ் இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றம்

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன், நெஞ்சு வலி காரணமாக ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். ஓரிரு நாட்களில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடு திரும்ப உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.



  • 13:17 (IST) 29 Mar 2023
    உள்ளூர் விடுமுறை

    நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட த்தில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.



  • 13:17 (IST) 29 Mar 2023
    மம்தா பானர்ஜி தர்ணா

    பல்வேறு நலத் திட்டங்களுக்கு நிதி வழங்காததால் மத்திய அரசைக் கண்டித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் 2 நாள் தர்ணா போராட்டத்தை தொடங்கியுள்ளார்



  • 13:17 (IST) 29 Mar 2023
    பாஜக எம்.பி. காலமானார்

    புனே மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. கிரிஷ் பாபட் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார்.



  • 13:16 (IST) 29 Mar 2023
    பேடிஎம் விளக்கம்

    யுபிஐ வழியாக ரூ. 2,000க்கு மேல் பரிவர்த்தனை செய்தால் 1.1% கட்டணம் என தேசிய பரிவர்த்தனை கழகம் அறிவித்திருந்தது, இந்நிலையில், யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ள கட்டணம் வசூலிக்கப்படாது என பேடிஎம் விளக்கம் அளித்துள்ளது.



  • 13:00 (IST) 29 Mar 2023
    6 மாவட்டங்களில் இன்று மழை

    தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • 13:00 (IST) 29 Mar 2023
    வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க அவசரமில்லை

    கேரளா, வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க 6 மாதம் வரை அவகாசம் உள்ளது

    தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய 1 மாதம் அவகாசம் உள்ளது

    எனவே வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க அவசரமில்லை - இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்



  • 12:52 (IST) 29 Mar 2023
    ஆருத்ரா நிதி நிறுவன மோசடி: மேலும் ஒருவர் கைது

    ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் மேலும் ஒருவர் கைது மைக்கேல் ராஜ் என்பவர் சென்னை விமான நிலையத்தில் கைது

    துபாயில் இருந்து வந்த நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்



  • 12:21 (IST) 29 Mar 2023
    மே 10-ம் தேதி கர்நாடக சட்டமன்ற தேர்தல்

    கர்நாடக சட்டமன்ற தேர்தல் மே 10ம் தேதி நடைபெற உள்ளது

    சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடைபெறும்

    224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல்

    கர்நாடகாவில் மொத்த வாக்காளர்கள் 5.21 கோடி பேர்; ஆண்கள் - 2.62 கோடி பெண்கள் - 2.5 கோடி பேர்

    இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு



  • 11:56 (IST) 29 Mar 2023
    அதிமுக நிர்வாகி கொலை - 5 பேர் கைது

    சென்னை பெரம்பூர் அதிமுக நிர்வாகி இளங்கோவன் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

    சஞ்சய் என்பவருக்கும், இளங்கோவனுக்கும் இருந்த முன்பகை காரணமாகவே கொலை- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்



  • 11:54 (IST) 29 Mar 2023
    புதுச்சேரி: பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை

    புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மே 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை

    சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - சபாநாயகர் செல்வம்



  • 11:52 (IST) 29 Mar 2023
    சென்னையில் 25 துணை மின் நிலையங்கள்

    சென்னையில் 25 துணை மின் நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    சட்டப்பேரவை கேள்வி - நேரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்



  • 11:17 (IST) 29 Mar 2023
    ஓ.பி.எஸ் மேல்முறையீடு மனு நாளை விசாரணை

    அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுத்ததை எதிர்த்து மேல்முறையீடு மனு

    நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி அறிவிப்பு



  • 11:01 (IST) 29 Mar 2023
    மக்களவை உறுப்பினர் முகமது பைசலின் தகுதி நீக்கம் ரத்து

    லட்சத்தீவு மக்களவை உறுப்பினர் முகமது பைசலின் தகுதி நீக்கம் ரத்து. நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து தகுதி நீக்கத்தை ரத்து செய்தது மக்களவை செயலகம் . கொலை முயற்சி வழக்கில் குற்றவாளி என பத்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது . சிறை தண்டனையை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது



  • 10:57 (IST) 29 Mar 2023
    அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரே இ-டிக்கெட் நடைமுறைக்கு வரும்

    சென்னையில் மெட்ரோ, புறநகர் ரயில், மாநகர பேருந்துகளில் பயணம் செய்ய ஒரே இ-டிக்கெட் . அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரே இ-டிக்கெட் நடைமுறைக்கு வரும் - சி.யு.எம்.டி.ஏ. ஒரே பயணச்சீட்டு முறைக்கென தனி செயலி உருவாக்கப்பட உள்ளதாக தகவல்.



  • 10:34 (IST) 29 Mar 2023
    2,151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    இந்தியாவில் ஒரே நாளில் 2,151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இந்தியாவில் 11,903 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.



  • 10:21 (IST) 29 Mar 2023
    சர்க்கரை ஆலையை தரம் உயர்த்தும் திட்டம் இல்லை

    திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை தரம் உயர்த்த அரசு ஆவன செய்யுமா? - வி.ஜி.ராஜேந்திரன் . திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை தரம் உயர்த்தும் திட்டம் இல்லை - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்



  • 10:21 (IST) 29 Mar 2023
    சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது

    தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. கேள்வி நேரம் தொடங்கியது , உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அமைச்சர்கள் .



  • 10:11 (IST) 29 Mar 2023
    தங்கம் விலை

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.44,360க்கு விற்பனை . ஒரு கிராம் தங்கம் ரூ.5,545-க்கு விற்பனை



  • 09:56 (IST) 29 Mar 2023
    அப்பாவுவை சந்தித்து அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி பேச்சு

    சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி பேச்சு. எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க கோரிக்கை.



  • 09:53 (IST) 29 Mar 2023
    258.06 கோடி பயணங்கள்

    கட்டணமில்லா பேருந்து மூலம் இதுவரை, 258.06 கோடி பயணங்கள்.அமைச்சர் சிவசங்கர் தகவல் .



  • 09:52 (IST) 29 Mar 2023
    மாணவர்களின் விவரம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

    பள்ளி மாணவர்களின் விவரம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு . மோசடி, தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு



  • 08:40 (IST) 29 Mar 2023
    கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான அட்டவணை இன்று காலை 11.30 மணிக்கு அறிவிப்பு

    கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான அட்டவணை இன்று காலை 11.30 மணிக்கு அறிவிப்பு. 224 தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம். தற்போதைய கர்நாடக அரசின் பதவிக்காலம் மே மாதம் 24-ம் தேதியுடன் நிறைவு ,



  • 08:33 (IST) 29 Mar 2023
    ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை: அசோக் என்பவரை கைது செய்த தனிப்படை

    சென்னை, கே.கே நகரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம். உணவு டெலிவரி ஊழியரான அசோக் என்பவரை கைது செய்த தனிப்படை போலீசார். மதுபோதையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தது போலீசாரின் விசாரணையில் அம்பலம்



  • 08:25 (IST) 29 Mar 2023
    ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டை உயர்நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரிக்கிறது

    திமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்கக் கோரி மேல்முறையீடு . ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டை உயர்நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரிக்கிறது . தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது. இ.பி. எஸ் தரப்பு கேவியட் மனு தாக்கல்



  • 08:23 (IST) 29 Mar 2023
    ஆப்கானிஸ்தான், காபூல் கிழக்கு பகுதியில் நிலநடுக்கம்

    ஆப்கானிஸ்தான், காபூல் கிழக்கு பகுதியில் காலை 5.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு



  • 08:16 (IST) 29 Mar 2023
    ஆசிரியர் தகுதித் தேர்வு: 2 விழுக்காடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை

    ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாளில் 2 விழுக்காடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை . நேற்று மாலை தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதிர்ச்சி தகவல். 4 லட்சம் பேர் தகுதி பெற்ற நிலையில் 1.5 லட்சம் பேர் தேர்வுக்கே வரவில்லை என்றும் தகவல்



  • 08:15 (IST) 29 Mar 2023
    டிஎன்பிஎஸ்சி இன்று அவசர ஆலோசனை

    குரூப்-4 தேர்வு சர்ச்சை தொடர்பாக டிஎன்பிஎஸ்சி இன்று அவசர ஆலோசனை . கூட்டத்திற்கு பிறகு முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்ப்பு



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment