பெட்ரோல். டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 260-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
நீர் நிலவரம்
புழல் ஏரியில் நீர்இருப்பு 3174 மில்லியன் கனஅடியாக உள்ளது; 159 கனஅடி நீர் வெளியேற்றம் . சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 20 கனஅடியாக உள்ளது; நீர்இருப்பு 831 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை ஏரிக்கு நீர்வரத்து 55 கனஅடியாக உள்ளது; நீர்இருப்பு 472 மில்லியன் கனஅடியாக உள்ளது.
பாசிசத்திற்கு எதிரான நடவடுக்கை
மோடி குறித்த பி.பி.சி ஆவணப்படத்தைப் பார்ப்பது பாசிசத்திற்கு எதிரான நடவடிக்கையாக கருதுகிறேன் என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
வாட்ஸப் மூலம் தகவல் அனுப்பினால் உடனே உணவு டெலிவரி செய்யும் புதிய வசதியை IRCTC அறிமுகம் செய்துள்ளது. +91 – 8750001323 என்ற எண்ணிக்கு PNR எண்ணை குறிப்பிட்டு வாட்ஸபில் தகவல் அனுப்பினால் ரயிலில் இருக்குமிடத்தில் உணவு டெலிவரி செய்யப்படும்
கர்நாடகாவில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையை திறந்து வைத்து, இலகுரக ஹெலிகாப்டரை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 2,200ஐ தாண்டியது. பிப்ரவரி 13ம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளும் மூடப்படுவதாக் துருக்கி அரசு அறிவித்துள்ளது
அ.தி.மு.க வேட்பாளருக்கான A,B படிவங்களில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திடலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்மகன் உசேனை அங்கீகரித்து ஈரோடு தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
தமிழ்நாட்டில் 22% ஈரப்பதம் உள்ள நெல் பயிர்களை கொள்முதல் செய்வது தொடர்பாக மத்திய அரசு குழுவை அனுப்பியுள்ளது. பிரதமர் மோடிக்கு நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில் ஆய்வு செய்ய மத்திய குழு தமிழ்நாடு வருகிறது
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான நலத்திட்ட உதவிகள், மேம்பாட்டு பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும். மயான வசதி மற்றும் மயான வழிப்பாதை அமைக்கும் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும். குடியிருப்பு, ஓய்வூதியம் கோரி வழங்கப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்
தாங்கள் பெற்ற நிபுணத்துவத்திற்கு ஏற்ப மருத்துவமனைகளில் நியமிக்க கோரி 19 மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்ந்த 19 மருத்துவர்களும் பிப்ரவரி 10க்குள் பணியில் சேர வேண்டும். மேற்படிப்பு மாணவர்களுக்காக மாநில அரசு அதிக செலவு செய்கிறது, அதற்கு பிரதிபலனாக மருத்துவர்கள் இந்த சமுதாயத்திற்கு சேவையாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது
துருக்கியில் நடந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 1500 பேர் உயிரிழந்துள்ளனர்.
5500க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் மக்களை காப்பாற்ற நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.
துருக்கியில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டுவருகிறது. இன்று நிகழ்ந்த நிலநடுக்கங்களில் 1300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக் கோலில் 6 ஆக பதிவாகி உள்ளது.
யூனியன் பட்ஜெட் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் கவனித்துக்கொள்கிறது என கர்நாடகாவில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
அதானி குழுமத்தின் மீதான ஊழல் புகார்களை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்கக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் இந்திய இளைஞர் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.
காங்கிரஸ் கட்சி அதானி குழுமத்துக்கு எதிராக விசாரணை கோரி நாடு முழுக்க போராட்டம் நடத்தியது.
2017-2022ல் 30 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு சென்றுள்ளனர் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதானி குழுமத்தில் முதலீடு செய்த எல்.ஐ.சி. நிறுவனம் முன்பும், கடன் வழங்கிய ஸ்டேட் வங்கி முன்பும், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
பங்குச் சந்தைகளில் மோசடி செய்ததாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆராய்ச்சி அறிக்கை சமர்பித்த நிலையில் அதானி பங்குகள் வரலாறு காணாத அளவு சரிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு பெற்ற தென்னரசுக்கு 2501 பேர் ஆதரவளித்துள்ளனர் என டெல்லியில் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
துருக்கி மற்றும் சிரியாவில் இன்று அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,300 ஆக அதிகரித்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். பலி எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருகிறது.
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, சிறப்புப் பயிற்சி பெற்ற மோப்ப நாய்ப் பிரிவு மற்றும் தேவையான உபகரணங்களுடன் 100 பணியாளர்களைக் கொண்டஇந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக புறப்படத் தயாராக உள்ளனர்.
அ.தி.மு.க எம்.பி. சி.வி. சண்முகம் பேட்டி: “பொதுக்குழு உறுப்பினர்களில் வாக்களிக்க உரிமை பெற்றவர்கள் 2,646 பேர். இதில் 2,501 பேர் தென்னரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 143 வாக்குகள் பதிவு செய்யப்படவில்லை. யாரும் தென்னரசுக்கு எதிராக வாக்களிக்கவில்லை. பொதுக்குழுவில் பெயரைக் கொடுக்காததனால் ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளரின் பெயர் இடம்பெறவில்லை. அனைத்து உரிமையும் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கே வழங்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
அ.தி.மு.க அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்: “நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பொதுக்குழு உறுப்பினர்களின் கடிதங்கள் பெறப்பட்டன. தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர் ஒப்புதல் கடிதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு அ.தி.மு.க வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டதற்கான, பொதுக்குழு முடிவின் ஆவணங்களை அ.தி.முக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சியின் சார்பில் வைக்கப்பட்டுள்ள சாலை மற்றும் தெருக்களுக்கான பெயர் பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டும் நபர்கள் மீது போலீசில் புகார் செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வேட்புமனு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால், இ.பி.எஸ் தரப்பு அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.
இது குறித்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், “ஓ.பி.எஸ்-க்கு நன்றியை வலியுறுத்துகிறோம். அதே நேரத்தில் அவருக்கு வேறு வழியில்லை. அ.தி.மு.க வழிநடத்தக்கூடிய தலைமையாக இ.பி.எஸ் இருக்கிறார்.” என்று தெரிவித்துள்ளார்.
வாத்தி பட நடிகை சம்யுக்தா பேட்டி: “எனது பெயர் சம்யுக்தா மட்டும்தான். மேனன் என்ற சாதி அடைமொழி போட்டுக்கொள்வதை நான் எப்போதும் விரும்புவதில்லை. தயவு செய்து என்னை மேனன் என அடையாளப்படுத்தாதீர்கள். சம்யுக்தா என்று அழைத்தால் போதுமானது என்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை (07.02.2023) காலை 11 மணிக்கு ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
மதுரை, அண்ணாநகர் தனியார் உணவக ஊழியர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துருக்கி நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது, 2,323 பேர் காயம் அடைந்தனர். 1,710 கட்டிடங்கள் சேதம் அடைந்ததாக துருக்கி துணை அதிபர் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட கூடாது என்பதற்காக ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெறப்பட்டதாகவும், இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பிரசாரம் செய்வோம் என ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளனர்.
செங்கல்பட்டில் கூர்நோக்குப் பள்ளியில் உயிரிழந்த சிறுவன் கோகுல்ஸ்ரீ தாயாருக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவியும், “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் ஒரு வீடும் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், தேர்தல் செலவின பார்வையாளராக ஐஆர்எஸ் அதிகாரி கெளதம் குமார் நியமனம் செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் இதர மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
“ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ்” என ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப. கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
மதுரை, திருப்பரங்குன்றத்தில் சிற்றுண்டி கடை ஐஸ்கிரீமில் இறந்து கிடந்த தவளை
ஐஸ்கிரீமை சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு – தீவிர சிகிச்சை
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்
துருக்கி நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 230 ஆக உயர்வு – 600 பேர் காயம்
கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி மேல் முறையீட்டு வழக்கு
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
அதானி குழும புகார் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கையை ஆய்வு செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதில் ஏற்பட்டுள்ள குளறுபடி
வீடுகளுக்கே சென்று மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மின்சார வாரியம் உரிய விளக்கமளிக்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்
துருக்கியில் பலி எண்ணிக்கை 76 ஆகவும், சிரியாவில் 111 ஆகவும் உயர்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் – இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக ஒத்திவைப்பு
புதிதாக நியமிக்கப்பட்ட 5 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்றனர்
நீதிபதிகள் பங்கஜ் மித்தல், சஞ்சய் கரோல், பி.வி. சஞ்சய் குமார், அசானுதீன் அமானதுல்லா, மனோஜ் மிஸ்ரோ ஆகியோர் பதவியேற்பு
5 நீதிபதிகளுக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஈரப்பத நெல் கொள்முதல், நிவாரணம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை தொடங்கியது
டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்த அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டது
சென்னை, தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 அதிகரித்து ரூ. 42,920க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் 5,365 ரூபாய்க்கு விற்பனை
திருவாரூரில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் பாதிப்பு, கடந்த 4 நாட்களாக பெய்த கன மழையால் பாதிப்பு – வேளாண்துறை
துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 53 பேர் உயிரிழப்பு.
ஈரப்பத நெல் கொள்முதல், நிவாரணம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை . டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை
. ஆலோசனையில் அமைச்சர்கள் சக்கரபாணி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்
தைப்பூசத்தை முன்னிட்டு டாஸ்மாக் நிறுவனத்துக்கு விடுமுறை அறிவித்த நிலையில் மது விற்பனை. தென்காசி, பாவூர்சத்திரம் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக 5 பேர் கைது – 191 மதுபாட்டில்கள் பறிமுதல்.
டெல்லி புறப்பட்டார் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன். பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்துள்ள கடிதத்துடன் புறப்பட்டார்.,
துருக்கி : நூர்தாகி அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 15 பேர் உயிரிழப்பு, பல கட்டடங்கள் சேதம்
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 5 நாள் பயணமாக ஜப்பான் சென்றார். ஜப்பானில் புற்றுநோய் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார்.
ஈரானில் ஹிஜாப் போராட்டங்களில் கைதானவர்கள் பலருக்கு பொது மன்னிப்பு. ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி அறிவிப்பு ,
மறைந்த நடிகரும், இயக்குநருமான டி.பி.கஜேந்திரனின் உடல், வடபழனியில் இன்று தகனம் செய்யப்பட உள்ளது,
அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், சிவி.சண்முகம் ஆகியோர் இன்று டெல்லி பயணம்; பொதுக்குழு உறுப்பினர்களின் கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க உள்ளனர்.
துர்க்கி நாட்டின் நுர்தாகி பகுதியில் 7.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.