பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
சுனாமி எச்சரிக்கை
இந்தோனேசியாவில், உள்ள தனிம்பார் தீவுப் பகுதியில் நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது. இது 7.7 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விளையாட்டு
இந்தியா – இலங்கை இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெறுகிறது. பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்தாண்டு நடைபெறவுள்ள 9 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் பாஜக தேசியத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நட்டா ஆலோசனை நடத்தினார்.
அப்போது காசி சங்கமம் குறித்தும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை புளியந்தோப்பு அருகே 2018-ல் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 55 வயது முதியவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரை விசாரித்த நீதிமன்றம் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஆளுனர் ஆர்.என். ரவி பிரதமர் நரேந்திர மோடியின் கைபாவையாக செயல்படுகிறார் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயண சாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திராவிட மாடல், முத்தமிழ் அறிஞர் கலைஞர் உள்ளிட்ட வார்த்தைகளை ஆளுனர் தவிர்த்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டையில் உள்ள கிராமம் ஒன்றில் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுத்தால் ஓட்டு கிடைக்காது என திமுக அஞ்சுகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுனர் ஆர். என். ரவி விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேச திமுக பிரதிநிதிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதில் திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர். பாலு மற்றும் சட்ட அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
நேபாளத்தில் மாவோயிஸ்ட் தலைவர் புஷ்ப கமால் தஹால் ‘பிரசந்தா’ தலைமையிலான கூட்டணி அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசந்தாவுக்கு ஆதரவாக 268 பேரும், எதிராக 2 பேரும் வாக்களித்துள்ளனர்.
திருப்பத்தூர்: வாணியம்பாடி நியூ டவுன் ரயில்வே கேட் (எல்.சி 81) பராமரிப்பு பணி காரணமாக புதன்கிழமை (11.01.2023) மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை மூடப்படுகிறது.
இந்தத் தகவலை தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
எடப்பாடி பழனிசாமியின் தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில் வழக்கு விசாரணை ஜன.11 புதன்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: “பழனி முருகன் திருக்கோயிலின் குழமுழுக்கு விழாவினை தமிழில் நடத்துவது குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருவது கண்டனத்திற்குரியது; குடமுழுக்கு விழாவின் அனைத்து நிகழ்வுகளையும் அன்னை தமிழிலேயே நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
கண்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், 2020 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்ற தனக்கு பரிசு பொருளை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும் பரிசினை வழங்காத கமிட்டி தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி தலைவர் சுந்தர்ராஜனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சத்தியராஜ வெளியிட்டுள்ள வீடியோவில், “மனிதனுக்கு அழகு சிரிப்பு. சிரிப்பைவிட அழகானது புன்னகை. சமீபத்தில் ஒரு புன்னகை என்னை ரொம்ப கவர்ந்தது. அது சட்டசபையில் நமது தமிழக முதல்வர் மானமிகு மு.க. அவர்களுடைய புன்னகை. அந்த புன்னகையில், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் சுயமரியாதை சுடர்விட்டது, பேரறிஞர் அண்ணாவின் எதையும் தாங்கும் இதயம் பளீச்சிட்டது. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி கிளர்ந்தெழுந்தது. தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் வாழும் ஒரு சாதாரண குடிமகனாக அந்த புன்னகையில் பெருமையும் மகிழ்ச்சியையும் அடைகிறேன். காலைரைக்கூட தூக்கிவிடுகிறேன். Hats off நம்முடைய முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்க்கு இசையமைப்பாளர் தமன் நன்றி தெரிவித்துள்ளார். “விஜய் அண்ணா.. படத்தின் உணர்ச்சிபூர்வமான காட்சிகள் கண்ணீரை வரவழைத்து விட்டது. வாரிசு என் இதயத்திற்கு நெருக்கமான படமாக அமைந்துவிட்டது. இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி அண்ணா” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்திலும் மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என உள்நோக்கத்துடன் மொழிபெயர்த்து அழைக்கவில்லை, அரசியலுக்காக தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு என்கின்றனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்
அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பாக ஓ.பி.எஸ் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை தள்ளி வைத்தது
புதுச்சேரியில், துணிவு படத்தின் நள்ளிரவு 1 மணி சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 5 மணிக்கு திரையிட மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட முடியாத போது கட்சி நலன் கருதி தலைமைக் கழக நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடியும் என உச்ச நீதிமன்றத்தில் இ.பி.எஸ் தரப்பு தெரிவித்துள்ளது
IAS, IPS பதவிகளுக்கு அதிகாரிகள் தான் தேவை. தனி மனித சுதந்திரம் குறித்து பேசும் சமூக ஆர்வலர்கள் தேவை இல்லை. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படும்போது குடிமை பணி அதிகாரிகள் மத்திய அரசின் உத்தரவின்படியே நடக்க வேண்டும் என UPSC தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு ஆளுநர் அறிவுரை வழங்கியுள்ளார்
ஜூன் 23 பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை வேண்டுமென பொதுக்குழு உறுப்பினர்களால் விருப்பம் தெரிவிக்கப்பட்டது என இ.பி.எஸ் தரப்பு தெரிவித்துள்ளது
பொதுக்குழுவின் முடிவுகள் அடிப்படை உறுப்பினரை கட்டுப்படுத்தும். பொதுக்குழுவே கட்சியில் உட்சபட்ச அதிகாரம் பெற்றது என கட்சி விதி குறித்து இ.பி.எஸ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது
இரட்டை தலைமையில் ஏற்பட்ட குழப்பத்தால் கட்சிக்கு மீண்டும் ஒற்றை தலைமை தேவை என்ற நிலை ஏற்பட்டது என இ.பி.எஸ் தரப்பு தெரிவித்துள்ளது
பொதுக்குழுவின் முடிவுகளை ஏற்கும் நபரே அடிப்படை உறுப்பினராக இருக்க முடியும் என விதி 7 கூறுகிறது என கட்சி விதி குறித்து இ.பி.எஸ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரண்டு பதவிகளை நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம்
உண்டு. அதிமுக அடிப்படை உறுப்பினர்களின் முகமாகத்தான் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று உச்சநீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பு வாதிட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பள்ளியில் 5 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எல்.கே.ஜி. முதல் 4ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் துவங்குவது குறித்து 6 வாரங்களுக்கு பின் முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.
அ.தி.மு.க கட்சி விதிகளைத் திருத்தி ஒருங்கிணைப்பாளர்கள் பதவியை பொதுக்குழு கொண்டு வந்தது. பொதுக்குழுவுக்கு பதவியை உருவாக்கும் அதிகாரம் இருந்தால் ரத்து செய்யும் அதிகாரமும் உண்டு. ஒருங்கிணைப்பாளர்கள் பதவியைக் கொண்டுவந்தது பொதுக்குழுதான். அடிப்படை உறுப்பினர்கள் அல்ல என்று இ.பி.எஸ் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகிறது.
அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வில் தொடங்கியது.
ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை உருவாக்கிய போது என்ன வழிமுறைகள் பின்பற்றப்பட்டதோ, அதுதான் தற்போது பின்பற்றப்பட்டது. ஆனால், முன்னர் எதிர்ப்பு தெரிவிக்காத ஓ.பி.எஸ்., தற்போது ஒற்றைத்தலைமை குறித்து தொண்டர்களிடம் செல்ல வேண்டும் என கூறுகிறார் என்று இ.பி.எஸ். தரப்பி வாதிடப்பட்டது.
அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வில் தொடங்கியது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நெல்லையில் வாரிசு, துணிவு திரைப்பட கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது, பொதுமக்களை இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் எச்சரித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட 2.21 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 318.30 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கும் பணியை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னையில் கடந்தாண்டு ரூ. 12.7 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜனவரி 13ம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை வாரிசு மற்றும் துணிவு படங்களின் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி காட்சிகள் ரத்து; திரையரங்க வளாகங்களில் பேனர்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்ய தடை. விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டியதில்லை; இந்தி என்றில்லை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இரு மொழிக் கொள்கை இருந்தாலும் மூன்றாவதாக ஒரு மொழி கற்றுக் கொள்வது நல்லது தான்- UPSC தேர்வரின் கேள்விக்கு ஆளுநர் விளக்கம்
பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீதான வழக்கு
மூன்று மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்க செய்ய கால அவகாசம் .
சிபிஐக்கு கூடுதல் அவகாசம் வழங்கி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
சட்டமன்றத்தில் திமுகவின் எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரும் ஆளுநரை தாக்கி பேசக்கூடாது.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அறிவுறுத்தல்
சிரித்த முகத்துடன் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும் என்று ஆளுநர் ரவி கூறியுள்ளார். குடிமைப் பணி நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள உள்ள 80 பேருடன் ஆளுநர் ஆர்.என் ரவி கலந்துரையாடல்
கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகள் தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் கொட்டப்படுகிறதா?
தமிழ்நாடு கனிமங்கள் கேரளா செல்கின்றன. கேரள கழிவுகள் தமிழ்நாடு வருகின்றன. ஏன் இந்த நிலை? – தமிழ்நாடு அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
நடிகர் ஷாருக்கான் நடிக்கும் 'பதான்' திரைப்படத்தின் தமிழ் டிரைலரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் நடிகர் விஜய்.
முதல்முறையாக இன்னொரு நடிகரின் படத்திற்கான டிரைலரை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் விஜய்
கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகருக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆளுநரை கண்டித்து உடனடியாக எதிர்வினை ஆற்றிய முதல்வரின் நடவடிக்கை போற்றுதலுக்குரியது.
இது மத்திய – மாநில அரசுகள் இடையேயான உறவு மற்றும் தொடர்பு குறித்த முரண்பாடு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
ஆளுநரின் செயல்பாடுகளை கண்டித்து தனிநபர் தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது
தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஆளுநர் நடந்துள்ளார்
காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை பேட்டி
தமிழக சட்டமன்றத்தில் நேற்று ஆளுநருக்கு எதிராக மிரட்டல் விடுக்கும் வகையில் செயல்பட்ட சில சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக பாஜக செயலாளர் அஸ்வத்தாமன் இணைய வழியாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார்
எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் தான் உரிய முடிவு எடுக்க வேண்டும். தேர்தல் ஆணையம் அனுப்பிய அழைப்புக்கு அதிமுக சார்பில் யார் பங்கேற்பது என முடிவு செய்து அறிவிக்கப்படும. தலைமை செயலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
வரும் 12ஆம் தேதி ராஜ்பவனில் பொங்கல் விழா கொண்டாட ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு. அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்து தமிழக ஆளுநர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
சபாநாயகர் அப்பாவு தலைமையிலான தமிழக சட்டப்பேரவை கூடியது . 2023ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ஆம் நாள் கூட்டம் தொடக்கம் .
சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் : சபாநாயகர் அப்பாவு உடன் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்திப்பு. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, ஆர்.பி.உதயகுமார், செங்கோட்டையன் உள்ளிட்டோர் சந்திப்பு .
கேரளா : சபரிமலையில் வரும் 14-ஆம் தேதி மகரஜோதிக்காக குவிந்துவரும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள். கன்னிச்சாமிகள் ஆடிப் பாடி உற்சாகத்துடன் வண்ணம் பூசி, மேள தாளத்துடன் ஊர்வலமாக எரிமேலி சாஸ்தா தரிசனம்