பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
பிரதமர் மோடி: 2 நாள் பயணமாக மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுரா செல்கிறார்
பிரதமர் நரேந்திர மோடி இன்றும், நாளையும் 2 நாள் பயணமாக மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுரா செல்கிறார்.நடந்த முடிந்த சட்டசபை தேர்தல்களில் பாஜக ஆதரவுடன் கூட்டணிகள் ஆட்சியை தக்கவைத்துள்ளன. இதனால் மூன்று மாநிலங்களில் நடைபெறும் பதவியேற்பு விழாக்களில் மோடி கலந்துகொள்கிறார்.
நீர் நிலவரம்
3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2778 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 831 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 500 மில்லியன் கன அடியாக உள்ளது.
ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு தொடர்பாக, சமூக வலைதளங்களில் பரவி வரும் கருத்து தவறானது என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
ஒரு வீட்டில் ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை ஒன்றாக்கவே ஆதார் – மின்சார எண் இணைக்க வலியுறுத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் கருத்துகள் தவறானது என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பரவும் கடிதம் பிரிவு அலுவலரின் தனிப்பட்ட கள ஆய்வு செயல்; அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடன் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சந்தித்தார். ஓ.பி.எஸ் தயார் மறைவுக்காக ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் கூறினார்.
நாளை முதல் மதுரை ரயில் நிலையம் வழியாக வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், நிலையங்களில் இரட்டை ரயில் பாதை பணிகளால் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது.
தேனி பெரியகுளத்தில் மறைந்த ஓ.பி.எஸ் தாயார் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய பின், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி: “பா.ஜ.க நிர்வாகிகள் உணர்ச்சி வசப்படக் கூடாது. கட்சி கொள்கை, கோட்பாடுகளை மீறி செயல்படக் கூடாது. கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு தார்மீக அடிப்படையில் தகுந்த மரியாதை வழங்கப்பட வேண்டும்” என்று கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் அ.தி.மு.க தொண்டர்கள் பா.ஜ.க-வில் இணைந்தனர். பா.ஜ.க நிர்வாகிகள் அ.தி.மு.க-வில் இணைந்த நிலையில், அ.தி.மு.க தொண்டர்கள் பா.ஜ.க-வில் இணைந்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் என்னை போன்று தாக்கப்பட்ட தலைவர் யாருமில்லை. தனித்து போட்டி குறித்து நேரம் வரும்போது அறிவிப்போம்.” என்று கூறினார்.
இந்திய உள்விவகாரங்களில் ஐரோப்பா, அமெரிக்கா நாடுகள் தலையிட வேண்டும் என ராகுல் காந்தி நினைக்கிறார்.
இந்தியர்களை அவமதிக்கிறார். இது முற்றிலும் வெட்கக் கேடான செயல் என பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சியை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பார்வையிட்டார்.
இந்தப் புகைப்பட கண்காட்சியை நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் திறந்துவைத்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
கூட்டணி கட்சி தலைவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை பாஜகவினர் வழங்க வேண்டும்; உணர்ச்சிவசத்தில், கட்சிக் கொள்கைக்கு எதிராக பாஜகவினர் செயல்பட வேண்டாம் என பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவில்பட்டியில் முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி படத்தை பாஜகவினர் சிலர் எரித்த நிலையில் அண்ணாமலை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
டெல்லி முன்னாள் துணை முதல் அமைச்சர் மணீஷ் சிசோடியா உதவியாளர் தேவேந்தர் சர்மா என்பவரிடம் சி.பி.ஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.
டெல்லி கலால் வரி வழக்கில் மணீஷ் சிசோடியா சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு மார்ச் 20ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டு உள்ளது.
மகளிர் தினத்தை முன்னிட்டு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து செய்தி ஒன்றினை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அதில், “பெண்கள் தொடாத துறைகளே இல்லை; தொட்டதில் வெல்லாத செயலே இல்லையென யாவையுமாகி நிற்கும் பெண்கள் மேலும் உயர்ந்துக்கொண்டே செல்வர். இது நவயுக நியதி. மகளிர் நாள் வாழ்த்து” எனத் தெரிவித்துள்ளார்.
வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ வெளியீடு ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் யாதவ் என்பவர் பிரபலமடைய பொய்யான வீடியோவை பரப்பியதாக மன்னிப்பு கோரியுள்ளார். போலி வீடியோ வெளியிட்டவர் மன்னிப்பு கோரும் வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
தருமபுரியில் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானைகளின் குட்டிகளை பாதுகாக்க கோரிய வழக்கில் உயிரிழந்த யானைகளின் இரு குட்டிகளை யானைகள் கூட்டத்துடன் சேர்க்க முயற்சிக்கப்படும் உயர் நீதிமன்றத்தில் தமிழக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. குட்டி யானைகளை கூட்டத்துடன் சேர்க்க வனத்துறைக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்
செங்கல்பட்டு அருகே எரிவாயுவை கொண்டு சென்ற டேங்கர் லாரியில் கசிவு சென்னை எண்ணூரில் இருந்து மதுரை நோக்கி சென்றபோது விபத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தவிர்த்த தீயணைப்பு வீரர்கள்
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
மதுரை விமான நிலையத்திலேயே இன்று அதிமுகவினர் சிலர் பாஜகவில் இணைந்தனர். நேற்று பாஜக நிர்வாகிகள் சிலர் அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது
16 இந்திய மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
கட்சியில் இருந்து யார் விலகினாலும், பாஜகவின் பலம் குறையாது. யார் விலகினாலும் வாழ்த்தி வழி அனுப்புவேன். நான் தலைவன், எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பேன். நான் எதற்கும் கவலைபட போவதில்லை, கட்சி அதிர்வுகளை சந்திக்கும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்
டெல்லி துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்த மணீஷ் சிசோடியாவின் கோரிக்கையை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஏற்றார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பரிந்துரையின் பேரில் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது
இன்ஸ்டாகிராமில் புகைப்பிடித்தவாறு பட்டா கத்தியுடன் வீடியோ வெளியிட்ட கோவையை சேர்ந்த இளம் பெண் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கொடைக்கானல் சாலையில் பாறைகள் மற்றும் மண் சரிந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சாலை பணிகள் நடைபெற்று வருவதால், தற்காலிகமாக போக்குவரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும் என பா.ஜ.க நிர்வாகிகள் தொடர்ந்து அ.தி.மு.க.,வில் இணைவது குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார்
தூத்துக்குடி அருகே விண்வெளி சார் தொழிற்பூங்கா அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க நிறுவனத்தை தேர்வு செய்ய டிட்கோ டெண்டர் கோரியது. குலசேகரப்பட்டினம் அருகே இஸ்ரோ, ராக்கெட் ஏவுகளம் அமைக்கும் திட்டத்தை கருத்தில் கொண்டு விண்வெளி சார் தொழிற்பூங்கா அமைகிறது
“அச்சமும் நாணமும் அறியாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்” என்ற பாவேந்தரின் வரிகளால் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்
சங்கரன்கோவில் புறநகர் பகுதியில் அமையவிருக்கும் புதிய காய்கறி சந்தையின் திட்ட வரை படத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என திட்டத்தை எதிர்த்த வழக்கில் சங்கரன் கோவில் நகராட்சி நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது
தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்தி – பீகார் அதிகாரிகள் குழு பேட்டி
புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்தி. சென்னையில் தலைமைச் செயலாளர் இறையன்புவை சந்தித்த பின் பீகார் குழுவை சேர்ந்த பாலமுருகன் பேட்டி. பீகார் அரசு சார்பாக தமிழ்நாடு அரசுக்கு நன்றி
பதவிக்காலம் வெற்றிகரமானதாக அமையவும், மேகாலயா மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் எனது வாழ்த்துகள்.
மேகாலயா முதல்வராக பதவியேற்ற கான்ராட் சங்மாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
நாகாலாந்து மாநில முதலமைச்சராக நெய்பியூ ரியோ 5-வது முறையாக பொறுப்பேற்பு
ஆளுநர் இல.கணேசன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்
புதுச்சேரி கடற்கரையில் விமரிசையாக நடைபெறும் மாசிமக தீர்த்தவாரி
பல்வேறு கோயில்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி அருள்பாலிப்பு
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி வழிபாடு
பீகாரில் அம்மாநில முதல்வர் நிதீஷ் குமாருடன் தி.மு.க மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு நேரில் சந்திப்பு
பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்
தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவும் வீடியோக்கள் வதந்தி என்றும் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்
தருமபுரியில் மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் பலியான விவகாரம்
உயிர் தப்பிய குட்டி யானைகளை பாதுகாக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு
விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் முறையீட்டை ஏற்று பிற்பகலில் வழக்கை விசாரிக்கிறது உயர் நீதிமன்றம்
தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு உடன் பீகார் அதிகாரிகள் குழு ஆலோசனை
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் மாவட்டங்களில் வரும் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு எவ்வித நுழைவுத் தேர்வும் நடத்தப்படாது. மாணவர் சேர்க்கை குறித்து தெளிவான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும்- பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
ஈரோடு வெற்றியை திசைதிருப்ப வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புகின்றனர்- அமைச்சர் துரைமுருகன்
பாஜக தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் திலீப் கண்ணன், OBC அணி மாநில செயலாளர் ஜோதி உள்ளிட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
பிரதமர் மோடி முன்னிலையில், மேகாலயா முதலமைச்சராக தொடர்ந்து 2வது முறையாக பதவியேற்றார் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா
தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய விவகாரம் தொடர்பாக, உத்தர பிரதேச பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவுக்கு மார்ச் 20ஆம் தேதி வரை தற்காலிக முன் ஜாமின் வழங்கி – டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோட்டில் பிரசாரத்தின் போது மகளிர் உரிமைத்தொகை, பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என முதலமைச்சர் பேசி இருந்தார். விதிமீறல் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கடிதம் எழுதியுள்ளார்.
சாதி, மதக் கலவரத்தை ஏற்படுத்த சிலர் சதி செய்து வருகின்றனர். திமுக ஆட்சியை அகற்ற சிலர் சதி செய்து வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற தலைவர்கள் ஒன்றுபட்டால்தான் பாஜக ஆட்சியை அகற்ற முடியும்– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளது. வடமாநில தொழிலாளர்களை சந்தித்து கருத்து கேட்ட பின் பீகார் மாநில அதிகாரி பாலமுருகன் பேட்டி
தமிழ்நாட்டின் வருங்காலம் இனி பாஜக தான். அண்ணாமலை தலைமை கீழ் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியமைக்கும். பாஜகவின் அமர்பிரசாத் ரெட்டி டிவிட்டர் பதிவு
நிர்மல் குமார் விஷயத்தில் கூட்டணி கட்சியாக இருந்து கொண்டு, எடப்பாடி பழனிசாமி இப்படி செய்திருக்க கூடாது என்று அமர்பிரசாத் ரெட்டி ட்வீட்
கோவையில் நடைபெற்ற கொலை சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராஜா என்பவர் கைது. விசாரணைக்காக கரட்டு மடம் பகுதிக்கு அழைத்துச் சென்ற போது, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிக்க முயற்சி. துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிக்க முயன்ற சஞ்சய் ராஜா மீது போலீசார் திருப்பி துப்பாக்கிச்சூடு. போலீசார் சுட்டதில் சஞ்சய் ராஜாவிற்கு காலில் காயம்
இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு அகதிகளாக வர முயன்ற 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்; 4 பேரும் விசாரணைக்காக தலைமன்னார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழப்பு; பாலக்கோடு வனத்துறையினர் விசாரணை விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக மின்சாரம் எடுத்து மின்வேலி அமைத்த விவசாயி முருகேசன் கைது.
புலம்பெயர் தொழிலாளர்களைத் தாக்குவதாக வீடியோ வெளியிட்ட ஜார்க்கண்டைச் சேர்ந்த மனோஜ் யாதவிடம் மறைமலைநகர் போலீசார் விசாரணை. மனோஜ் யாதவ் மீது இருபிரிவினரிடையே பகைமையை உருவாக்கும் வகையில் செயல்படுதல் உள்பட 5 பிரிவுகளில் வழக்கு;