Advertisment

Tamil News Highlights: மகளிர் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை அணி- த.வெ.க தலைவர் விஜய் அறிவிப்பு

Tamil News Today Updates- 07 March 2024-இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijay chose policy from Thirukkural and Indirect attack on Dravidian parties BJP Tamil News

IE Tamil Updates

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

655-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில்  ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

 புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: விசாரணையை தொடங்கிய சிறப்புக் குழு

 சிறுமி கொலை வழக்கில் முழு விசாரணை நடத்த, ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்புக் குழு அமைத்து புதுச்சேரி அரசு நேற்று இரவு உத்தரவு வெளியிட்டது. இதையடுத்து சிறுமி கொலை வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொண்டு, விசாரணையை இன்று காலை தொடங்கியது. சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் இருக்கும் மற்ற 5 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Mar 08, 2024 01:51 IST
    போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர் மீது துப்பாக்கிச்சூடு

    நெல்லையில் போலீசாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிய கொலை குற்றவாளி பேச்சுத்துரை என்பவர் முக்கூடல் அருகே வாழைத் தோட்டத்தில் பதுங்கியிருந்த நிலையில், அவரது காலில் துப்பாக்கியால் சுட்டுபிடித்த போலீசார்



  • Mar 08, 2024 01:49 IST
    நடிகர் அஜித்திற்கு அறுவை சிகிச்சை?

    வழக்கமான உடல் பரிசோதனைக்காக சென்னை ஆயிரம் விளக்கில் தனியார் மருத்துவமனைக்கு சென்றார் நடிகர் அஜித் மூளையில் சிறிய கட்டி இருந்ததால், அதனை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் சமூக வலைதளத்தில் பரவும் தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி



  • Mar 07, 2024 21:47 IST
    மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு : மத்திய அரசு ஒப்புதல்

    மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை 4% உயர்த்தி வழங்க அமைச்சரவை ஒப்புதல். 4% அகவிலைப்படி உயர்வால் 49.18 லட்சம் ஊழியர்கள், 67.95 லட்சம் ஓய்வூதியர்கள் பயனடைவார்கள்; 1.1.2024 முன்தேதியிட்டு அகவிலைப்படி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.



  • Mar 07, 2024 20:52 IST
    த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை அணி; நிர்வாகிகள் நியமனம்

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை அணிக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    அதன்படி உறுப்பினர் சேர்க்கை அணி மாநில செயலாளராக விஜயலட்சுமி, இணை செயலாளராக யாஸ்மின், பொருளாளராக வி. சம்பத் குமார், மாநில துணைச் செயலாளர்களாக விஜய் அன்பன், எம்.எல். பிரபு உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.



  • Mar 07, 2024 20:47 IST
    முடிவுற்ற 15 திட்டப்பணிகளை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    சென்னை மாநகராட்சியின் சார்பில் ₹10.13 கோடி மதிப்பில் முடிவுற்ற 15 திட்டப்பணிகளை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ₹8.50 கோடி மதிப்பீட்டில் 11 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்



  • Mar 07, 2024 20:46 IST
    அம்பையில் போலீசாருக்கு அரிவாள் வெட்டு

    நெல்லை மாவட்டம் அம்பை அருகே அரியநாயகிபுரத்தை சேர்ந்த செந்தில் குமார் என்ற காவல் அதிகாரி கொலை குற்றவாளிகளை பிடிக்க சென்ற போது அரிவாள் வெட்டு



  • Mar 07, 2024 20:24 IST
    அ.தி.மு.க நேர்காணல்; மார்ச் 10,11 நேர்காணல்


    நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு மார்ச் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் நேர்முக தேர்வு நடைபெறுகிறது.



  • Mar 07, 2024 19:24 IST
    மக்களவைத் தேர்தல் - திமுக விருப்ப மனு தாக்கல் நிறைவு

    மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்பு மனு தாக்கல் இன்று மதியம் 6 மணியுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 2,984 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.



  • Mar 07, 2024 19:22 IST
    மனைவியை வீட்டுவேலை செய்ய சொல்வது கொடுமையாகாது - டெல்லி உயர்நீதிமன்றம்

    மனைவியை வீட்டுவேலை செய்ய சொல்வது கொடுமையாகாது என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



  • Mar 07, 2024 18:01 IST
    தமிழகத்தின் திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவி இல்லை; மு.க. ஸ்டாலின்

    தமிழகத்தின் திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவி இல்லை என மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து, “மாநில அரசை வஞ்சிக்காமல் ஒத்துழைக்கும் மத்திய அரசு வேண்டும்; காலம் கனிந்துவருகிறது. மக்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும்” என மு.க. ஸ்டாலின் கூறினார்.



  • Mar 07, 2024 16:54 IST
    புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு - நீதிபதி அனுமதியுடன் மத்திய சிறையில் அடைப்பு 

    புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைதான கருணாஸ் (19), விவேகானந்தர் (59) இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டிருந்த நிலையில், வழக்கறிஞர்கள் அவர்களை தாக்க தயாராக இருந்ததால், நேரடியாக மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர். சிறையில் வைத்து நீதிபதியிடம் அனுமதி வாங்கி முறைப்படி இருவரும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

     



  • Mar 07, 2024 16:53 IST
    சிறந்த நடிகர்; தமிழ்நாடு அரசு விருது - கெளதம் கார்த்திக் 

    வை ராஜா வை என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நடிகர் கெளதம் கார்த்திக் நன்றி தெரிவித்துள்ளார்.  



  • Mar 07, 2024 16:52 IST
    நளினி வழக்கு - நீதிபதி விலகல்

    அனைத்து நாடுகளுக்கும் செல்லும் வகையிலான பாஸ்போர்ட் பெறுவதற்கான நேர்காணலில் பங்கேற்க சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு தனது கணவர் முருகனுக்கு அனுமதி வழங்க வேண்டும் என நளினி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து நீதிபதி சுந்தர் மோகன் விலகியுள்ளார். 

    தனக்கான நேர்காணல் முடிந்துவிட்ட நிலையில், தனது கணவர் வரவில்லை என நளினி மனுவில் கூறியுள்ளார். வேறொரு நீதிபதிக்கு வழக்கு ஒதுக்கப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • Mar 07, 2024 16:51 IST
    கூடுதலாக மாசுவை வெளியிடும் பேட்டரி கார்கள்

     

    பேட்டரி கார்களில் இருந்து கூடுதலாக 1850 மடங்கு கார்பன் துகள்கள் வெளியாவதால் சுற்றுச்சூழல் மாசுபடுத்துவதாக எமிசன் அனாலிட்டிக் அமைப்பு தெரிவித்துள்ளது. பேட்டரி கார்களில் பயன்படுத்தும் Synthetic Rubber டயர்களால் அதீத மாசு வெளியாவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது 



  • Mar 07, 2024 16:48 IST
    பம்பரம் சின்னம் வழக்கு - தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

    பம்பரம் சின்னம் ஒதுக்க கோரிய மதிமுகவின் விண்ணப்பம் தொடர்பாக 2 வாரங்களில் முடிவு எடுக்க வேண்டும் என  தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    ம.தி.மு.க-வின் மனு மீது உரிய முறையில் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. 



  • Mar 07, 2024 16:18 IST
    கோயிலை பூட்டி சீல் வைத்த விவகாரம் - ஐகோர்ட் உத்தரவு 

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இரு பிரிவினரிடையே மோதலை தடுக்க கோயிலை பூட்டி சீல் வைத்த விவகாரத்தில், கோயிலை பூட்டி சீல் வைத்த வருவாய்துறை அதிகாரிகளின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒரு மனிதரின் வழிபாடு நடத்தும் உரிமையை அரசு அதிகாரிகள் தடை செய்ய முடியாது. கோயிலை பூட்டி வருவாய்த்துறை வைத்த சீலை உடனடியாக  அகற்ற வேண்டும் என வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவிட்டது. 

     



  • Mar 07, 2024 16:17 IST
    4 மணி நேரம் ஆலோசனை

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் அக்கட்சியின் தொகுதி பங்கீட்டு குழு நிர்வாகிகள் 4 மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர்  பங்கேற்றனர்



  • Mar 07, 2024 16:16 IST
    பா.ஜ.க-விடம் தேர்தல் வியூகம் - ஆர்.பி.உதயகுமார் பேச்சு 

    மதுரை வாடிப்பட்டியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், “திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டுள்ளது; விலைவாசியை உயர்த்திவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை பார்த்து ‘நீங்கள் நலமா?’ என்று கேட்டால் எப்படி நியாயமாக இருக்கும்;

    மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு தேவையான நிவாரண நிதியை பெறுவதற்கு திமுகவுக்கு தைரியம் இல்லை; மக்களுக்கு தேவையான நிதியை வழங்குவதற்கு மத்திய அரசுக்கும் மனமில்லை. 

    பா.ஜ.க-விடம் தேர்தல் வியூகம் என ஏதுவுமில்லை; மக்களை ஈர்க்கக்கூடிய விளம்பர வெளிச்சத்தில் தான் மத்திய அரசும்,  மாநில அரசும் உள்ளது. விவசாயிகளையும், பொது மக்களையும் வஞ்சித்து ஏமாற்றுகிற கண்துடைப்பு வேலைகளை தான் மாநில அரசும், மத்திய அரசும் செய்துவருகிறது. நாடாளுமன்ற தேர்தலில்  இரட்டை இலையை வெற்றி பெறச் செய்வது தான் அதிமுக தொண்டர்களின் இலக்கு” என்று அவர் தெரிவித்தார். 



  • Mar 07, 2024 15:45 IST
    துணிக்கடையில் துளையிட்டு கொள்ளை 

    தாம்பரம் அருகேயுள்ள குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் உள்ள செல்போன் கடை, துணிக்கடையில் பின்பக்கம் துளையிட்டு ரூ. 24 லட்சம் மதிப்புள்ள செல்போன் மற்றும் துணிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கடை உரிமையாளர்கள் கொடுத்த புகாரில் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 



  • Mar 07, 2024 15:45 IST
    துணிக்கடையில் துளையிட்டு கொள்ளை 

    தாம்பரம் அருகேயுள்ள குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் உள்ள செல்போன் கடை, துணிக்கடையில் பின்பக்கம் துளையிட்டு ரூ. 24 லட்சம் மதிப்புள்ள செல்போன் மற்றும் துணிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கடை உரிமையாளர்கள் கொடுத்த புகாரில் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 



  • Mar 07, 2024 15:44 IST
    கஞ்சா கடத்தல் விவகாரம்: ஐ.டி நிறுவனஊழியர்கள் கைது!

    கஞ்சா கடத்தல் விவகாரத்தில் சென்னை தரமணியில் இயங்கும் பிரபல ஐடி நிறுவனத்தின் காவலாளி மதன்குமார் உட்பட 3 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    போலீசார் நடத்திய விசாரணையில், கைதான மதன்குமார் தனது சொந்த ஊரான ஒரிசாவிற்கு சென்று விட்டு வரும்போது ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்ததாக தெரிவித்துள்ளார்



  • Mar 07, 2024 15:43 IST
     தமிழ் மாநில காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு  குழு அறிவிப்பு!

     

    நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு ஜி.கே. வாசன் தலைமையிலான  தமிழ் மாநில காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு  குழுவை அறிவித்துள்ளது. 



  • Mar 07, 2024 15:08 IST
    ஆருத்ரா, ஹிஜாவு, ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி - வெளியான அதிர்ச்சி தகவல்

     

    ஆருத்ரா, ஹிஜாவு, ஐ.எப்.எஸ் போன்ற பெரிய நிதி நிறுவன மோசடிகளுக்கு மூளையாக செயல்பட்டது ஒரே ஏஜென்டுகள் தான் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

    "ஒரு ஏஜென்ட் தனக்கு கீழ் 100 நபர்களை வைத்துக்கொண்டு, நிறுவன தொடக்கத்தில் அவர்களை இணைய வைத்து கமிஷன் பெறுகிறார். நிறுவனத்தில் லாபமடைவது போல, பலரை நம்பவைத்து, நிறுவனத்தில் இணைய வைக்கின்றனர். பொதுமக்கள் பலர் இணைந்தவுடன், அந்த ஏஜெண்ட் தனக்கு கீழ் உள்ள நபர்களை அழைத்து வேறொரு நிறுவனத்தில் இணைந்து மோசடியில் ஈடுபடுகிறார். சம்பந்தப்பட்ட நிறுவனமே தங்களது தொழிலை பெருக்க ஏஜென்டுகளுக்கு கமிஷன் கொடுத்து இது போன்ற செயலில் ஈடுபட வைகின்றனர். இதுபோன்று பொருளாதார குற்றங்களில் ஈடுபட்ட அந்த ஏஜென்டுகள் யார் என்பதை விசாரித்து வருகிறோம்" என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். 



  • Mar 07, 2024 15:00 IST
    அதிமுகவுக்கு ஆதரவு

    வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழக முன்னேற்ற காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவர் அருள்தாஸ் அறிவிப்பு



  • Mar 07, 2024 14:59 IST
    சிம்ஸ் பூங்காவில் 64-வது பழக்கண்காட்சி

    நீலகிரி: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64-வது பழக்கண்காட்சி மே.24 முதல் 26-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பு



  • Mar 07, 2024 14:34 IST
    திமுக விருப்ப மனு வழங்குவது இன்றுடன் நிறைவு

    மக்களவைத் தேர்தலுக்கான திமுக விருப்ப மனு வழங்குவது இன்றுடன் நிறைவு பெறுகிறது.

    இதுவரை சுமார் 600 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்று மாலை 6 மணியுடன் விருப்ப மனு வழங்குவது நிறைவு பெறுவதால் காலை முதலே பலரும் விருப்ப மனுக்களை வழங்கி வருகிறார்கள்.

    குறிப்பாக, கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் டி.ஆர்பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, ஆ.ராசா உள்ளிட்ட பலர் நேரடியாக வந்து மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை வழங்கினர்.



  • Mar 07, 2024 14:34 IST
    காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மகளிர் தின வாழ்த்து

    மகளிர், அவர்களின் உரிமைகளை பெறுவதோடு, பொருளாதார ரீதியாகவும் சுயசார்புகளை அடைவதன் மூலமே அவர்களின் வாழ்வு ஏற்றம் பெற முடியும்;

    இந்த லட்சியங்களை அடைவதே உலக மகளிர் தின வாழ்த்துச் செய்தியாக இருக்க முடியும்;

    மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன;

    மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கிற பெண்களுக்கு சமஉரிமை, சமவாய்ப்பு வழங்குவதோடு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை முழுமையாக பெறுகிற வகையில் நல்ல சூழலை உருவாக்க வேண்டுமென்பதே சர்வதேச மகளிர் தினத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்

    -  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மகளிர் தின முன்னிட்டு வாழ்த்து



  • Mar 07, 2024 14:34 IST
    சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    பெண்கள் உரிமை மற்றும் மேம்பாட்டை உறுதிப்படுத்தும் பல்வேறு திட்டங்களைத் தீட்டி தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது;

    சமூகத்தின் சரிபாதியான பெண்கள் அவர்களுக்குரிய அனைத்து உரிமைகளையும், நலன்களையும் முழுமையாகப் பெறும் வரை அதை நோக்கிய நமது பயணம் தொடரும் என்ற உறுதியுடன் பெண்கள் அனைவருக்கும் மகளிர் நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

    - சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் வாழ்த்து



  • Mar 07, 2024 14:08 IST
    தொகுதி பங்கீடு- பாஜக தான் முடிவெடுக்கும்

    தொகுதி பங்கீடு குறித்து முடிவெடுக்க வேண்டியது பாஜக தான் - ஜி.கே.வாசன்

    கூட்டணியின் முதன்மை கட்சி பாஜகதான், கூட்டணி குறித்தான முடிவுகளை பாஜகதான் எடுக்கும் - ஜி.கே.வாசன்



  • Mar 07, 2024 13:43 IST
    புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு

    புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் அலட்சியமாக செயல்பட்டதாக எழுந்த புகாரையடுத்து முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளர் தனசெல்வம் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் ஜெயகுருநாதன் ஆயுதப்படை பிரிவிற்கு மாற்றம்

    இவர்களுக்கு மாற்றாக முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளராக கண்ணன், உதவி காவல் ஆய்வாளராக சிவப்பிரகாசம் ஆகியோரை நியமித்து டிஜிபி ஸ்ரீநிவாஸ் உத்தரவு



  • Mar 07, 2024 13:43 IST
    முகவரி மாற்றம் - தேர்தல் ஆணையம் விளக்கம்

    வேட்புமனு தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை பொதுமக்கள் முகவரி மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்

    ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்

    வேட்பாளர்களின் அத்துமீறல்களை பொதுமக்கள் சி-விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம்

    புகார் அளிப்பவர் குறித்த விவரங்கள் ரகசியம் காக்கப்படும்

    அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான வாக்குப்பதிவு மின் இயந்திரங்கள் கைவசம் உள்ளன

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்



  • Mar 07, 2024 13:29 IST
    நீதிபதி அனிதா சுமந்த் கருத்து

    சாதிய அடிப்படையிலான வன்முறை, காட்டுமிராண்டித் தனத்துக்கு, பல்வேறு சாதி அமைப்புகளுக்கு அரசு வழங்கும் சலுகைளும் ஒரு காரணமாக அமைகிறது

    -சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த்

    சனாதன பேச்சு விவகாரத்தில், அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மீது தொடரப்பட்ட கொவாரண்டோ வழக்குகள் மீதான விசாரணையில், நீதிபதி அனிதா சுமந்த் கருத்து.



  • Mar 07, 2024 13:20 IST
    தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம்- ஜி.கே.வாசன்

    சைக்கிள் சின்னம் கிடைக்காத பட்சத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கென்று ஒதுக்கக்கூடிய தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம்

    - தமாகா தலைவர் ஜி.கே.வாசன்



  • Mar 07, 2024 13:15 IST
    இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகமாக இருக்கும்

    தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் இன்றும் நாளையும் வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியல்ஸ் அதிகமாக இருக்கும்

    சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியல்ஸ் ஒட்டி இருக்கும்

    - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Mar 07, 2024 13:15 IST
    இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகமாக இருக்கும்

    தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் இன்றும் நாளையும் வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியல்ஸ் அதிகமாக இருக்கும்

    சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியல்ஸ் ஒட்டி இருக்கும்

    - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Mar 07, 2024 13:15 IST
    13ம் தேதி வரை வறண்ட வானிலை

    இன்று முதல் வரும் 13ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்

    - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Mar 07, 2024 12:53 IST
    அஜர்பைஜான் செல்லும் அஜித்

    'விடாமுயற்சி' படப்பிடிப்பிற்காக வரும் 15-ம் தேதி அஜர்பைஜான் செல்கிறார் நடிகர் அஜித்



  • Mar 07, 2024 12:53 IST
    அதிமுக - புரட்சி பாரதம் இடையே இன்று பேச்சுவார்த்தை

    மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக - புரட்சி பாரதம் கட்சிகள் இடையே இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

    திருவள்ளூர் அல்லது விழுப்புரம் தொகுதியை ஒதுக்க வேண்டும் என புரட்சி பாரதம் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது.



  • Mar 07, 2024 12:51 IST
    மதிமுகவுக்கு 1+1 சீட் வழங்க தி.மு.க ஒப்புதல்?

    மதிமுகவுக்கு 1 மக்களவை, 1 மாநிலங்களவை தொகுதி வழங்க தி.மு.க ஒப்புதல் என தகவல். தி.மு.க ஒதுக்கும் இடங்களில் பம்பரம் அல்லது தனிச் சின்னத்தில் போட்டியிட  மதிமுக முடிவு.  



  • Mar 07, 2024 12:45 IST
    குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது.

    ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 26 முதல் 28 வரை நேர்காணல் நடைபெற உள்ளது. 



  • Mar 07, 2024 12:20 IST
    நடிகர் அஜித்திற்கு மருத்துவ பரிசோதனை

    சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித்குமார் அனுமதி.

    வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.  மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வரும் அஜித் குமார்.

    அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக விரைவில் அசர்பைஜான் செல்ல உள்ள நிலையில் மருத்துவ பரிசோதனை. இன்று ஒரு நாள் முழுவதும் மருத்துவமனையில் தங்கி உடல் பரிசோதனை மேற்கொள்ளும் அஜித் நாளை வீடு திரும்புவார் என தகவல் 



  • Mar 07, 2024 11:49 IST
    தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஸ்டாலின் ஆலோசனை

    தி.மு.க தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குழுவுடன் ஸ்டாலின் ஆலோசனை. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ, விசிக, மதிமுகவுடன்தொகுதிப் பங்கீடு இறுதியாகாத நிலையில் ஆலோசனை



  • Mar 07, 2024 11:48 IST
    மீண்டும் தமிழ்நாடு வரும் மோடி?

    பிரதமர் மோடி மார்ச் 22-ம் தேதி மீண்டும் தமிழ்நாடு வர உள்ளதாக தகவல். பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் மோடி பங்கேற் உள்ளதாக தகவல். இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உள்ள நிலையில் மீண்டும் தமிழகம் மோடி தமிழகம் வர உள்ளதாக தகவல். 3 மாதங்களில் 5-வது முறையாக தமிழகம் வரும் மோடி. 



  • Mar 07, 2024 11:24 IST
    எஸ்.பி.ஐக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு

    தேர்தல் பத்திரம் தொடர்பான தகவலை வெளியிட அவகாசம் கோரிய எஸ்.பி.ஐ வங்கிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் அவமதிப்பு வழக்கு.

    உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எஸ்.பி.ஐ வேண்டுமென்றே அவமதிப்பதாக மனுவில் குற்றச்சாட்டு.



  • Mar 07, 2024 11:18 IST
    புதுச்சேரி சிறுமியின் உடல் நல்லடக்கம்

    புதுச்சேரி சிறுமியின் உடல் நல்லடக்கம்

    பாப்பம்மாள் கோவில் மயானத்தில் சிறுமியின் உடல் நல்லடக்கம்



  • Mar 07, 2024 10:13 IST
    சிறுமியின் உடல் அடக்கம் செய்வதற்காக இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது

    புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் அடக்கம் செய்வதற்காக இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. 



  • Mar 07, 2024 10:10 IST
    தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.48,720க்கு விற்பனை .  கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ரூ.6,090க்கு விற்பனை. 



  • Mar 07, 2024 09:44 IST
    கொடைக்கானல்: 5 நாட்களில் ம‌ட்டும், 20,000 சுற்றுலாப்பயணிகள்

    கொடைக்கானல் குணா குகை சுற்றுலா தலத்திற்கு, கடந்த 5 நாட்களில் ம‌ட்டும், 20,000 சுற்றுலாப்பயணிகள் வந்து சென்றதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அங்கு, கடந்த சில மாதங்களுக்கு முன், "மஞ்சுமால் பாய்ஸ்" திரைப்படம் படம் பிடிக்கப்பட்டது. தற்போது இந்த திரைப்படம் வெளியாகி தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படம் வெளியானதை தொடர்ந்து மற்ற சுற்றுலா தலங்களுக்குள் வரும் சுற்றுலாப்பயணிகளை விட குணா குகைக்கு வ‌ரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டுள்ளது.



  • Mar 07, 2024 09:15 IST
    புதுச்சேரி சிறுமி படுகொலை - பெற்றோரை சந்தித்து டிஜிபி ஸ்ரீனிவாஸ் ஆறுதல்

    புதுச்சேரி சிறுமி படுகொலை - பெற்றோரை சந்தித்து டிஜிபி ஸ்ரீனிவாஸ் ஆறுதல் அப்பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்தும் டிஜிபி ஆய்வு புதுச்சேரி சிறுமியின் உடல் இன்று காலை 10 மணிக்கு அடக்கம் சிறுமியின் வீட்டில் இருந்து பாப்பம்மாள் கோவில் சுடுகாடு வரை இறுதி ஊர்வலம் செல்ல ஏற்பாடு



  • Mar 07, 2024 08:35 IST
    படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் இன்று காலை 10 மணிக்கு அடக்கம்

    பாப்பம்மாள் கோவில் சுடுகாட்டில் அடக்கம் செய்ய ஏற்பாடு சிறுமி உடல் இன்று அடக்கம் செய்யப்படும் நிலையில் ஏராளமான போலீசார் குவிப்பு.  9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டதால் புதுச்சேரியில் பதற்றம் உடற்கூராய்வு அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படும் என தகவல்.  சிறுமி குடும்பத்துக்கு 20 லட்சம் நிவாரணம் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு சிறுமியின் வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள உடல் புதுச்சேரியில் நாளை 8ஆம் தேதி இந்தியா கூட்டணி மற்றும் அதிமுக சார்பாக 'பந்த்'



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment