பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஏரிகள் நிலவரம்
புழல் ஏரிக்கு 315 கன அடி நீர்வரத்து. 159 கன அடி நீர் குடிநீருக்காக திறப்பு சோழவரம் ஏரிக்கு 15 கன அடி நீர்வரத்து. நீர் இருப்பு 831 கன அடியாக உள்ளது பூண்டி அணைக்கு நீர்வரத்து 700 கன அடி, நீர் வெளியேற்றம் 100 கன அடி.
பிரதமர் தாயார் அஸ்தி கரைக்கப்பட்டது
பிரதமர் மோடியின் தாய் சமீபத்தில் மரணமடைந்தார். அவரது அஸ்தி கங்கை நதியில் கரைக்கப்பட்டது. பிரதமர் மற்றும் அவரது சகோதரர் அஸ்தியை கரைத்தனர்.
நாமக்கல்லில் வரலாறு காணாத அளவுக்கு முட்டை விலை உயர்ந்துள்ளது. முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது
டெல்லியில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 15ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக டெல்லி கல்வித்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது
திருவள்ளூர் அடுத்த பெரியபாளையம் பகுதியில் தனியார் விடுதியில் இரும்பு கேட் சரிந்து விழுந்ததில் நித்தீஷ் (10) என்ற சிறுவன் உயிரிழந்துள்ளான். சென்னை அயனாவரத்தை சேர்ந்த நித்தீஷ் குடும்பத்தினர், வேண்டுதலுக்காக பெரியபாளையம் கோயிலுக்கு வந்து விடுதியில் தங்கியிருந்த போது இந்தச் சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது
இயற்கை விவசாயி பாப்பம்மாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் சந்தித்து, தான் பெற்ற பத்மஸ்ரீ விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார்
காரைக்கால கடற்கரையில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் கடல் அலையில் சிக்கி ஒருவர் தப்பித்த நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்
வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில் இராபத்து 7 -ம் நாள் விழா நடைபெற்றது. 'திருக்கைத்தல சேவை' நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில் இராபத்து 7 -ம் நாள் விழா நடைபெற்றது. 'திருக்கைத்தல சேவை' நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
ரஜினிகாந்த் நடித்துவரும் புதிய படமான ஜெயிலர் படத்தில் நடிகர் மோகன் லால் இணைந்துள்ளார். இது தொடர்பான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ஜெயிலர் படத்தில் ஏற்கனவே கன்னட நடிகர் ஷிவ்ராஜ் குமார் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில், வட மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக சில மாநிலங்களில் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “ரோகித் சர்மா சிறந்த கிரிக்கெட் வீரர். ஆனால் அவரது உடல் தகுதி குறித்து எப்போதும் ஒரு கேள்விக்குறி இருந்துவருகிறது.
மேலும் ரோகித் சர்மா, விராத் கோலி எப்போதும் அணியை காப்பாற்றுவார்கள் என எண்ண வேண்டாம். உலக கோப்பையை அணி வெல்ல வீரர்கள் தங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ள திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை ஒன்று உலா வந்தது.
இது அப்பகுதி மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறுத்தை காட்டுப் பகுதியில் உலாவுவதை அப்பகுதியே சென்ற வாகன ஓட்டிகள் படம் பிடித்துள்ளனர்.
நெய்வேலி நிலம் காக்கும் பாமக என ஹேஸ்டேக் பயன்படுத்தி அன்புமணி ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில், “கடலூர் மாவட்டத்திற்கு பெருமளவு பாதிப்புகளை ஏற்படுத்திய #nlc இந்தியா நிறுவனம் இனியும் செயல்படத் தேவையில்லை. கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் உடனடியாக வெளியேற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பான காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவி வருகின்றன.
“மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த பெண்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
ஆண்களுக்கு இதில் போதிய விழிப்புணர்வு இல்லை” என பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக மாம்பலம் பிரதான சாலையில், நாளை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு நிறைவடைந்து விட்டதாக அதிகாரிகள், விழா கமிட்டியினர் அறிவித்த பின்பும் காளைகள் அவிழ்த்து விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை சேர்ந்த ராஜ்குமார் காளைக்கும், திருநல்லூரை சேர்ந்த யோகேஸ்வரன் என்ற வீரருக்கும் முதல் பரிசாக பைக் வழங்கப்பட்டது
ப்ளூ டிக்கிற்கு இனி மாதம் ரூ.660 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், கட்டணம் செலுத்தியவர்களுக்கு நீண்ட நேர வீடியோ மற்றும் ஆடியோக்களை பதிவிடும் வசதி உண்டு என்றும் டுவிட்டர் சிஇஓ எலான் மஸ்க் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தலைநகர் டெல்லியில் விசா காலம் முடிந்து தங்கியிருந்த 3 நைஜீரிய நாட்டவர்களை டெல்லி போலீசார் கைது செய்ய சென்ற போது, அந்த 3 போலீசாரையும் 100க்கும் மேற்பட்ட நைஜீரியர்கள் சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். இதனால் அப்பகுதியே ஒரே களேபரமாக காட்சியளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு 5ம் சுற்று நிறைவில் பெண் காவலர் உள்பட 52 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதுவரை 380 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.
டெல்லியில் 3 டெல்லி போலீசாரை 100க்கும் மேற்பட்ட நைஜீரிய நாட்டவர் சுற்றி வளைத்து தாக்கிய பயங்கரம் நடந்துள்ளது. விசா காலம் முடிந்து தங்கியிருந்த 3 பேரை கைது செய்ய சென்ற போது இந்த களேபரம் நடந்துள்ளது.
என்.எல்.சி நிர்வாகத்தைக் கண்டித்து மேற்கொண்ட 2-வது நாள் நடைபயணத்தில் பா.ம.க தலைவர் அன்புமனீ ராமதாஸ் பேச்சு: “என்.எல்.சி நிர்வாகம் மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது. கடலூருக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே என்.எல்.சி தேவையில்லை. கட்சி, ஜாதி, மதம், இனம் பார்க்காமல் ஒன்றிணைவோம்; என்.எல்.சி-யை வெளியேற்றுவோம்” என்று கூறினார்.
பா.ஜ.க தேசியக் குழு உறுப்பினர்: “தமிழ்நாடு என்பதை தமிழகம் என்றும் அழைக்கலாம். அது தவறில்லை. எப்படி அழைத்தாலும் தமிழ்நாடு இந்தியவின் அங்கம்தான்; மும்பையில் பிறந்தாலும் நான் தமிழச்சிதான்.” என்று கூறினார்.
சத்தீஸ்கரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா: பிரதமர் மோடி செல்லும் அனைத்து வெளிநாடுகளிலும் இந்தியில்தான் பேசுகிறார். இது காங்கிரஸ் ஆட்சியில் நடந்தது இல்லை. 2023-ல் மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என்றால், வர உள்ள மாநில தேர்தல்களில் பா.ஜ.க வெற்றி பெற வேண்டும்” என்று கூறினார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: “தமிழ்நாடு என்ற பெயர் குறித்து ஆளுநர் பேசுவது ஏற்புடையதல்ல” என்று தெரிவித்துள்ளார்.
ஆதார் இருக்கும் போது மக்கள் ஐடி திட்டம் தேவையா? – தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்
அனைத்து சலுகைகளும் பெற ஆதார் எண் இருக்கும் போது மக்கள் ஐடி திட்டம் தேவையா? ஒவ்வொரு மாநிலமும் தனி அடையாள எண் வழங்க முன்வந்தால் நாட்டில் குழப்பம் ஏற்படாதா? வெளி மாநில தொழிலாளர்களை கணக்கெடுத்த பிறகு மக்கள் ஐடி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் – தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்
புதுக்கோட்டை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் காளைகள் பரிசு பெற்றன. வீரர்களின் பிடியில் சிக்காமல் வெற்றி பெற்ற வெள்ளை கொம்பனுக்கு சைக்கிள், கரும்பு கொம்பனுக்கு கட்டில் பரிசு வழங்கப்பட்டது.
தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு – 32 பேர் காயம் 3ம் சுற்று நிறைவில் பெண் காவலர் உள்பட 32 பேருக்கு காயம்
ஈரோடு: சித்தோடு அருகே நசியனூரில் ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
தொழில் போட்டியால் பெட்ரோல் குண்டு வீச்சு – ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்.
சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை
வட இந்தியாவில் தொடரும் குளிர் மற்றும் அடர்ந்த மூடுபனி காரணமாக ரயில் உட்கட்டமைப்பு பராமரிப்பு பணிகள் பாதிப்பு.
இன்று 244 ரயில்கள் முழுமையாக ரத்து, 83 ரயில்கள் பகுதிநேர ரத்து – ரயில்வே துறை
தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியில் சலசலப்பு.
அனுமதியின்றி காளைகளுடன் சிலர் உள்ளே நுழைய முயன்றதால் போலீசார் தடியடி நடத்தி கலைப்பு.
காளையர்களுக்கு டோக்கன் கொடுக்கும் இடத்திலும் அனுமதியின்றி குவிந்ததால் தடியடி
பொள்ளாச்சி மகாலிங்கம் நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. விழாவில் மகாலிங்கம் நூற்றாண்டு விழா மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
கோவை – பல்லடம் இணைப்பு சாலைக்கு பொள்ளாச்சி மகாலிங்கம் பெயர் சூட்டப்படும் என அறிவிப்பு
இமாச்சலப் பிரதேசம்: சிம்லாவில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் வீரபத்ரசிங் மகன் விக்ரமாதித்ய சிங் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு – 20 பேர் காயம் தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு – இரண்டாம் சுற்று நிறைவில் இதுவரை 20 பேருக்கு காயம்.
வெளிநாடுகளில் இருந்து சீc தளர்த்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக 3 ஆண்டுகளாக அமலில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகள் தனிமைப்படுத்தப்படுவது விலக்கிக் கொள்ளப்பட்டது!
சட்டப்பேரவையில் உரையாற்ற ஆர்.என்.ரவி தகுதியானவர் இல்லை. தொடர்ந்து சர்ச்சைக்கு வழிவகுக்கும் நோக்கில் பேசு வருகிறார். ஒரு ஆளுநர் என்ன செய்ய வேண்டும் அதை செய்யாமல். ஆர்.எஸ்.எஸ் பணிகளை செய்கிறார் என்று விசிக தலைவர் திருமாவளவன் தூத்துக்குடியில் பேசியுள்ளார்.
கோயம்பேடு சந்தையை மேம்படுத்த ஏற்கனவே ரூ. 20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளத. ஆய்வு அறிக்கை பெறப்பட்டு மேற்கொண்டு மேம்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும். மார்கெட்டில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, தொழிலாளர்கள் தங்குமிடம் ஆகியவற்றை மேம்படுத்த திட்டம். பண்டிகை கால சிறப்பு சந்தையின் போது இடைத்தரகர்கள் இடையூறு செய்வதை கட்டுப்படுத்துவோம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
“ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள்” ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், சிறுதானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் சக்கரபாணி
தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு தொடங்கியது ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தொடங்கியது . அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர் ஜல்லிக்கட்டு போட்டியில் 425 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு .
சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் குவியும் சுற்றுலா பயணிகள். சபரிமலையில் மகர விளக்கு பூஜை நெருங்குவதால் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பு சூரிய உதயத்தை செல்போனில் படம்பிடித்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அதிகளவு கூட்டம் காணப்படுவதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு .
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறார்களின் மருத்துவ உதவிக்காக நடத்தப்படும் சென்னை மாரத்தானை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்!
சென்னை, திஅடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் சென்னையில் இருந்து சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தர்கள் வேன் கவிழ்ந்து விபத்து; 18க்கு மேற்பட்டோர் காயமடைந்து திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதி