பெட்ரோல்- டீசல் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை நிர்ணையம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 365 நாட்களாக இந்தியாவில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வரும் பெட்ரோல் டீசல் விலை இன்றும் மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோயம்பேட்டில் நள்ளிரவில் போராட்டம்
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் நீண்ட நேரமாக இயக்கப்படவில்லை என குற்றச்சாட்டு போலீசாரின் பேச்சு வார்த்தைக்குப்பின் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக ராகுல் நாத் நீடிப்பார் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக ராகுல் நாத் தொடர்ந்து நீடிப்பார் .தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
மே 28ம் தேதி நடைபெறவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியை காங்கிரஸ் கட்சி புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய நினைத்தால், பாஜகவுக்கு ஒரு ஓட்டு கூட போக விடாதீர்கள் என டெல்லி, பஞ்சாப் முதல்வர்கள் உடனான சந்திப்பில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்
இந்திய எல்லைக்குள் மீன் பிடித்தாக 5 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த விசைப்படகையும் பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல்படை, அதனை தமிழக காவல்துறையின் கடலோர பாதுகாப்பு குழுவிடம் ஒப்படைத்துள்ளது
ஜூன் மாதத்திற்கு பிறகு குண்டும் குழியுமான சாலைகளே இருக்காது என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவத் மான் சந்தித்து பேசினர். எதிர்கட்சிகளின் ஆதரவை திரட்டப் போவதாக அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்திருந்த நிலையில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது
ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்: “மல்யுத்த வீரர்களின் போராட்டமானது ஒரு மாதத்தை எட்டிவிட்டது; தேசத்தின் பெருமைக்காக விளையாடுவதற்கு பதிலாக அவர்களை தனிப்பட்ட பாதுகாப்பு பிரச்னைகளுக்காக போராட வைத்துவிட்டோம்” என்று ட்வீட் செய்துள்ளார்.
சீர்காழி சட்டநாதர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு சென்ற ஆளுநர் ரவிக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சஞ்கத்தினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
“மதுபான கூடங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் மூடப்படுகிறதா, உரிமம் பெற்றவர்களுக்கு மட்டுமே மெத்தனால் விற்கபடுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்” என்று சென்னையில், கலால்துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தினார். மாவட்ட, மாநில எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
சிட்னியில் நடைபெறும் இந்திய வம்சாவளிகளுடனான சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, “திறமையானவர்களை அதிகம் தயார் செய்வதில் இந்தியா முன்னோடி; உலக பொருளாதாரத்தில் இந்தியா ஒளிமயமான இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே மறைந்தபோது லட்சக் கணக்கான இந்தியர்கள் சோகத்தில் மூழ்கினர்.” என்று கூறினார்.
முதலீடுகளை ஈர்க்க, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 9 நாட்கள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்று தொழிலதிபர்களை சந்திக்கிறார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சிங்கப்பூர் சென்றடைந்தார்.
யு.பி.எஸ்.சி சர்வீசஸ் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி ஜீஜீ முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
மாணவி ஜீஜீ தமிழ்நாடு அளவில் முதலிடத்தையும் தேசிய அளவில் 107-வது இடத்தையும் பிடித்துள்ளார்.
வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம்!
கிருஷ்ணகிரி பொறுப்பு அமைச்சர் ஆர்.காந்தி,
திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம்;
நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சராக எஸ்.ரகுபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கிய 75 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சிபாஸ் கல்யாண் உத்தரவை தொடர்ந்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
மத்திய பிரதேசம், குனோ தேசிய பூங்காவில் நமீபிய பெண் சிறுத்தை ஈன்ற 4 குட்டிகளில் ஒரு சிறுத்தை குட்டி உயிரிழந்தது. ஏற்கனவே 3 சிறுத்தைகள் உயிரிழந்த நிலையில், தற்போது குட்டியும் உயிரிழந்தது.
2022ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. இறுதி தேர்வு முடிவுகள் வெளியானது. நாடு முழுவதும் 933 பேர் யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். யு.பி.எஸ்.சி. தேர்வில் முதல் 4 இடங்களை பெண்களே பிடித்துள்ளனர். அகில இந்திய அளவில் முதல் இடத்தை இஷிதா கிஷோர் என்பவர் பிடித்துள்ளார்.
யுபிஎஸ்சி தேர்வு 2022 முடிவுகள் தற்போது வெளியானது; இஷிதா கிஷோர் யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
பாளையங்கோட்டை வஉசி மைதானத்தின் கட்டி முடிக்கப்பட்டு எட்டே மாதங்களில் மேற்கூரை இடிந்தது குறித்து விளக்கம் ஒப்பந்ததாரருக்கு நெல்லை மாநகராட்சி ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும். கோடை வெயிலில் இருந்து மாணவர்களின் நலனை காக்க வேண்டும் – ராமதாஸ்
சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக நான்கு நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இதனால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்து உள்ளது.
தொழில் முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் மீண்டும் வெளிநாடு சுற்றுலாவா? முதல்வர் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க போகிறாரா? இல்லை முதலீடு செய்ய போகிறாரா? என மக்களுக்கு சந்தேகம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்
நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பாளையங்கோட்டை வஉசி மைதானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது, பொறியியல் வல்லுநர் குழு சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்கிறது.
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர், மீனவர்களிடம் இருந்து விசைபடகு மற்றும் 150 கிலோ மீன் பறிமுதல் செய்யப்பட்டது, மத்திய உளவுப் பிரிவு, கியூ பிரிவு மற்றும் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் மீனவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்
அதிகபட்சம் 38 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மணிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஜூன் 1 வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு
மரக்காணம் விஷச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல்
கைதான 11 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு
கடந்த 92 நாட்களாக மருத்துவமனையில் இருந்தார்
Multiple myeloma-ஆல் பாதிக்கப்பட்டார்
என்னுடைய முதல் படத்திலேயே என்னுடன் நடித்தார் – சரத் பாபு உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகை சுகாஷினி பேட்டி
தஞ்சையில் சயனைடு கலந்த மது குடித்து இருவர் உயிரிழந்த விவகாரம்
15க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளும் 5 தனிப்படை
வங்கிகளில் 2000 ரூபாய் தாள்களை மாற்ற ரிசர்வ் வங்கியால் பிரத்யேக சலான் வெளியீடு
சலானில் வாடிக்கையாளர் பெயர், முகவரி, தொலைபேசி எண் கேட்கப்பட்டுள்ளது
முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து வெளிநாடு புறப்பட்டார்
சரத்பாபு மிகவும் அருமையான மனிதர், நல்ல நண்பரை இழந்து விட்டேன் சரத்பாபுவும் நானும் இணைந்து நடித்த படங்கள் அனைத்தும் பெரிய வெற்றி சரத்பாபுவின் மறைவு மிகவும் வேதனை அளிக்கிறது – நடிகர் ரஜினிகாந்த்
முதலீட்டாளர்களை சந்தித்து உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கிறேன். புதிய முதலீடுகளை ஈர்க்க ஜப்பான், சிங்கப்பூருக்கு பயணம். சிங்கப்பூர் புறப்படுவதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி.
இன்று முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் பயணம் .விமான நிலையம் செல்வதற்கு முன்பாக அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை .
ஹைதராபாத்தில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டது நடிகர் சரத்பாபு உடல். சென்னை, தி.நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படுகிறது. இன்று பிற்பகல் சரத்பாபு உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் சரத்பாபு காலமானார் . சென்னைக்கு உடல் கொண்டு வரப்பட்டு, இன்று இறுதிச்சடங்கு நடைபெறும்
2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை இன்று முதல் வங்கிகளில் மாற்றலாம். ஒரு நாளில் அதிகபட்சமாக 20,000 ரூபாய் வரை மாற்றி கொள்ளலாம் . 2000 ரூபாய் நோட்டுக்களை இன்று முதல் செப்.30ம் தேதி வரை மாற்ற ஆர்.பி.ஐ. அவகாசம்
ரயில் சேவைகளை பெற ரூ. 2000 நோட்டுகளை பயன்படுத்தலாம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு