/tamil-ie/media/media_files/uploads/2023/05/MK-Stalin_Chess-2-1-1.jpeg)
CM Stalin
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய மு.க.ஸ்டாலின் இன்று தஞ்சை சென்றார்
காவிரி டெல்டா மாவட்டங்களில் நீர்வழித் தடங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய மு.க.ஸ்டாலின் இன்று தஞ்சை சென்றார். குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து ஸ்டாலின் நேரடியாக தண்ணீர் திறந்து வைக்கவுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 21:36 (IST) 08 Jun 2023ஜெகன் மோகன் ரெட்டியிடம் வாழ்த்து
சிஎஸ்கே வென்ற ஐபிஎல் கோப்பையை ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் காண்பித்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் ரூபா குருநாத் மற்றும் முன்னாள் வீரர் ராயுடு வாழ்த்து பெற்றனர்.
సీఎం క్యాంప్ కార్యాలయంలో ముఖ్యమంత్రి శ్రీ వైఎస్ జగన్ను కలిసిన చెన్నై సూపర్ కింగ్స్ మేనేజ్మెంట్, క్రికెటర్ అంబటి రాయుడు.
— CMO Andhra Pradesh (@AndhraPradeshCM) June 8, 2023
సీఎస్కే టీంను అభినందించిన ముఖ్యమంత్రి శ్రీ వైఎస్ జగన్. pic.twitter.com/bwTm32LkjB - 20:09 (IST) 08 Jun 2023புதுச்சேரிக்கு புதிய டி.ஜி.பி நியமனம்
புதுச்சேரி யூனியன் புதிய டிஜிபி ஆக ஸ்ரீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய டி.ஜி.பி. மனோஜ் குமார் லால் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
- 19:34 (IST) 08 Jun 2023பெட்ரோல், டீசல் விலை குறைகிறது?
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எணணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 19:21 (IST) 08 Jun 2023ஜெகன் மோகன் ரெட்டியிடம் வாழ்த்து
சிஎஸ்கே வென்ற ஐபிஎல் கோப்பையை ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் காண்பித்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் ரூபா குருநாத் மற்றும் முன்னாள் வீரர் ராயுடு வாழ்த்து பெற்றனர்.
సీఎం క్యాంప్ కార్యాలయంలో ముఖ్యమంత్రి శ్రీ వైఎస్ జగన్ను కలిసిన చెన్నై సూపర్ కింగ్స్ మేనేజ్మెంట్, క్రికెటర్ అంబటి రాయుడు.
— CMO Andhra Pradesh (@AndhraPradeshCM) June 8, 2023
సీఎస్కే టీంను అభినందించిన ముఖ్యమంత్రి శ్రీ వైఎస్ జగన్. pic.twitter.com/bwTm32LkjB - 19:05 (IST) 08 Jun 2023திமுக விவசாயிகளை வஞ்சிக்கிறது: அண்ணாமலை
“பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூபாய் 2183 ஆக உயர்த்தியுள்ளார்.
பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூபாய் 2183 ஆக உயர்த்தியுள்ளார்.
— K.Annamalai (@annamalai_k) June 8, 2023
ஆனால், திமுக, விவசாயிகளுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில்லை, பாசனத்திற்காக தண்ணீரும் திறப்பதில்லை என்று விவசாயிகளைத் தொடர்ச்சியாக…ஆனால், திமுக, விவசாயிகளுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில்லை, பாசனத்திற்காக தண்ணீரும் திறப்பதில்லை என்று விவசாயிகளைத் தொடர்ச்சியாக வஞ்சித்து வருகிறது” என தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- 18:47 (IST) 08 Jun 2023ராமநாபுரம்: ₹1.54 கோடி தங்கம் பறிமுதல்
இலங்கையில் இருந்து ராமநாதபுரத்துக்கு கடத்தி வரப்பட்ட ₹1.54 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
- 18:30 (IST) 08 Jun 2023சிஎஸ்கே மேட்ச் ஓன்லி: ஜோஷ்னா சின்னப்பா
சிஎஸ்கே விளையாடும் போது மட்டும் தான் கிரிக்கெட் பார்ப்பேன் என ஸ்குவாஷ் வீராஙகனை ஜோஷ்னா சின்னப்பா கூறினார்.
- 18:02 (IST) 08 Jun 2023நீலகிரி பிளாஸ்டிக் தடை; தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான மனு விசாரணையின்போது நீதிபதிகள், “நீலகிரி எல்லையில் எத்தனை சோதனைசாவடிகள் உள்ளன; எவ்வளவு பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது என்ற அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
- 17:46 (IST) 08 Jun 2023அமெரிக்காவை சேர்ந்த இண்டர் மியாமி க்ளப் அணிக்கு செல்லும் மெஸ்ஸி!
பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி அமெரிக்காவை சேர்ந்த இண்டர் மியாமி க்ளப் அணிக்கு செல்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
- 17:30 (IST) 08 Jun 2023வயநாடு தொகுதியில் விரைவில் இடைத் தேர்தல்?
வயநாட்டு மக்களவை தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துவருகிறது. ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை தொடர்ந்து வயநாடு காலியானதாக அறிவிக்கப்பட்டது.
- 17:14 (IST) 08 Jun 2023நீலகிரியில் தண்டவாளத்தில் இருந்து விலகிய மலை ரயில்
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி புறப்பட்ட மலை ரயிலில், கடைசி பெட்டி தண்டவாளத்தில் இருந்து விலகியது.
இதனால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து,
பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் பொருத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
- 16:49 (IST) 08 Jun 2023ஸ்டாலினுக்கு எதிரான மனு தள்ளுபடி
2017 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்த வழக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
- 16:48 (IST) 08 Jun 2023மேல்முறையீட்டு வழக்கு நாளை ஒத்திவைப்பு
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டது.
- 16:48 (IST) 08 Jun 2023மலை ரயில் சேவை ரத்து
குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயில், தடம் புரண்டதால், மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
- 16:35 (IST) 08 Jun 2023வைகோ சாடல்
மேகதாது அணை விவகாரத்தில், மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
- 16:21 (IST) 08 Jun 2023தெற்கு ரயில்வே அறிவிப்பு
திருவண்ணாமலை கிரிவலம் செல்பவர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் ஜூலை மாதம் முதல் டிசம்பர் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 16:08 (IST) 08 Jun 2023ஓபிஎஸ் வலியுறுத்தல்
திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள்; இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் இருள் சூழ்ந்திருக்கிறது;
தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளர்கள் வாழ வேண்டுமென்றால், தற்போது தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டினை உடனே போக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஓபிஎஸ் வலியுறுத்தல்
- 16:03 (IST) 08 Jun 2023எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியானது
புதுச்சேரி மாநில காவல்துறையில் காலியாக உள்ள 253 காவலர்கள் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல், போலீஸ் தலைமையகம் முன்பு ஒட்டபட்டுள்ளது.
- 15:26 (IST) 08 Jun 2023அதிமுக பொதுக்குழு வழக்கு
ஒன்றரை கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சியில் 2500 பேர் கொண்ட பொதுக்குழு எப்படி ஒற்றைத் தலைமை குறித்து முடிவெடுக்கலாம் என்ற வாதத்தை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வும், உச்ச நீதிமன்றமும் நிராகரித்து விட்டது- அதிமுக தரப்பு
- 15:16 (IST) 08 Jun 2023அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கு
கட்சி விதிப்படி, கட்சி விவகாரங்கள் தொடர்பாக பொதுக்குழு எடுக்கும் முடிவுகளே இறுதியானது; கட்சியின் அனைத்து முடிவுகளையும் தொண்டர்களிடம் கேட்டு எடுக்க முடியாது.
விதிகளைத் திருத்துவதற்கும், தளர்த்துவதற்கும் பொதுக்குழுவிற்கு அதிகாரம் உள்ளது; கட்சியின் உறுப்பினர் முதல் நிர்வாகிகள் வரை கட்சி விதிகளுக்குக் கட்டுப்பட்டவர்கள்; கட்சியின் விதிகளுக்கு மேலானவர்கள் யாரும் இல்லை;
கட்சி விதிகளை மீறினால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும்-
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக தரப்பு வாதம்
- 15:10 (IST) 08 Jun 2023அன்புமணி ராமதாஸ் அறிக்கை
மின்கட்டண உயர்வு என்ற பெரும் சுமையிலிருந்து வீடுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பது நிம்மதி; தொழில், வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வையும் திரும்பப் பெற வேண்டும்- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை
- 14:38 (IST) 08 Jun 2023விசாரணை தொடங்கியது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தரப்பு வழக்கின் விசாரணை உயர் நீதிமன்றத்தில் தொடங்கியது.
- 14:34 (IST) 08 Jun 2023தென்மேற்கு பருவமழை தொடங்கியது
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது, அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 14:25 (IST) 08 Jun 2023ஜூலை 2ம் தேதி கலந்தாய்வு
ஜூலை 2ம் தேதியில் இருந்து பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
- 14:00 (IST) 08 Jun 2023சென்னையைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை
கேரள மாநிலம் திருச்சூர் விடுதியில் சென்னையைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை
சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த பீட்டர் குடும்பத்தினர் தற்கொலை
விடுதி அறையில் இருந்து பீட்டர் குடும்பத்தினர் வெளியே வராததால் போலீசாருக்கு தகவல் அறை கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார், 3 பேரை சடலமாக மீட்டனர்
- 13:56 (IST) 08 Jun 2023புத்திசாலி மாணவர்கள் தமிழகத்தில் தான் உள்ளனர்
இந்தியாவிலேயே புத்திசாலி மாணவர்கள் தமிழகத்தில் தான் உள்ளனர்.
தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. மாணவர்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
22 அரசு ஐடிஐ-களில் தொழில்நுட்ப மையம் 4.0 திறப்பு விழாவில் டாட்டா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் பேச்சு
- 13:46 (IST) 08 Jun 2023ஜூலை 2ஆம் தேதி பொறியியல் கலந்தாய்வு
பொறியியல் கலந்தாய்வுக்கு 1,87,693 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 2ஆம் தேதி தொடங்குகிறது.
பொறியியல் கல்லூரிகளில் தொழிற்சாலைகளோடு தொடர்பு கொண்டு கட்டமைப்பை மாற்றியுள்ளோம்- உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
- 13:45 (IST) 08 Jun 2023கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
அரபிக்கடலில் நிலைக் கொண்டுள்ள 'பிப்பர்ஜாய்' அதிதீவிரப் புயலாக வலுவடைந்து வடக்கு நோக்கி நகரும்.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வரும் 12ஆம் தேதி வரை மழை பெய்யும்.
- 13:44 (IST) 08 Jun 2023வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை
வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை.
அனைத்து இலவச மின்சாரம் சலுகைகளும் தொடரும்.
வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும்.
வீட்டு இணைப்பு நுகர்வோருக்கு ஏற்படும் 2.18% உயர்வை தமிழக அரசு ஏற்கும் என அறிவிப்பு
2.18% உயர்வை மின் வாரியத்திற்கு தமிழக அரசு மானியமாக வழங்கும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
- 13:30 (IST) 08 Jun 2023நகை வியாபாரியிடம் ரூ.1.50 கோடி வழிப்பறி
நெல்லை, நாங்குநேரி அருகே மிளகாய் பொடி தூவி நகை வியாபாரியிடம் ரூ.1.50 கோடியை வழிப்பறி செய்த சம்பவம்
குற்றவாளிகளை கேரள மாநிலம் மூணாறில் வைத்து கைது செய்தனர் நெல்லை தனிப்படை போலீசார்
- 13:28 (IST) 08 Jun 2023நிதி நிறுவன அலுவலக கதவை உடைத்து போலீசார் சோதனை
தர்மபுரியில் மூடப்பட்டிருந்த நிதி நிறுவன அலுவலக கதவை உடைத்து போலீசார் சோதனை
பணம் கட்டி ஏமாறியவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஆய்வு
நிதி நிறுவனம் நடத்தி வந்த முக்கிய நபர்கள் இருவரை பிடித்து விசாரித்து வரும் காவல்துறை
தர்மபுரி, பூனையானூர், போச்சம்பள்ளி, ஏலகிரி பகுதியிலும் போலீசார் விசாரணை
- 13:27 (IST) 08 Jun 2023திண்டுக்கல்லில் பிறந்த இரட்டை தலை கன்று குட்டி
திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி அருகே சிசேரியன் மூலம் பிறந்த இரட்டை தலை கன்று குட்டி
ஆச்சரியத்துடன் பார்த்து வியக்கும் கிராம மக்கள்
- 13:27 (IST) 08 Jun 2023காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா தொடக்கம்
புதுச்சேரி, காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் வரும் 1ம் தேதியும், மாங்கனி இறைத்தல் திருவிழா 2ம் தேதியும் நடைபெறுகிறது
- 12:24 (IST) 08 Jun 2023ஒரே பதிவெண்ணில் 2 வாகனங்கள் - ஒப்பந்தம் ரத்து
வேலூர் ஆவினில் ஒரே பதிவெண்ணில் இரண்டு வாகனங்கள் இரு வழித்தடங்களில் இயங்கிய சம்பவம்.
இரண்டு வாகனங்களின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்து சாய்ராம் செக்யூரிட்டி ஏஜென்சிக்கு ஆவின் நிர்வாகம் நோட்டீஸ்.
இந்த விவகாரம் தொடர்பாக 12-ம் தேதிக்குள் விளக்கமளிக்க ஆவின் நிர்வாகம் நோட்டீஸ்
- 12:16 (IST) 08 Jun 2023இண்டர் மியாமி அணிக்காக விளையாட மெஸ்ஸி முடிவு
அமெரிக்காவின் இண்டர் மியாமி அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளேன்.
அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
பிரான்சின் பிஎஸ்ஜி அணியில் இருந்து விலகிய நிலையில் மெஸ்ஸி தகவல்.
சவுதி அரேபியாவின் அல் ஹிலால் கால்பந்து அணியின் ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தத்தையும் மெஸ்ஸி நிராகரித்தார்.
- 12:13 (IST) 08 Jun 2023800 ஓட்டுனர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை
தமிழக சுகாதாரத் துறையில் காலியாக இருக்கும் 800 ஓட்டுனர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 65 பேர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்
10 ஆண்டுகளுக்கு முன் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்- மனுதாரர்கள்
- 12:09 (IST) 08 Jun 2023ஸ்டான்லி, தருமபுரி மருத்துவக் கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம்
சென்னை ஸ்டான்லி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம்
பயோமெட்ரிக், சிசிடிவி கேமரா உள்ளிட்ட குறைகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து, 2 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம்
நாளை காணொலி மூலம் திருச்சி மருத்துவக் கல்லூரியில் தேசிய மருத்துவ ஆணையம் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கி உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
- 12:00 (IST) 08 Jun 2023தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கை உயர்வு.
நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் தொழிற்சாலைகள்
கடந்த ஓராண்டில் 110 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கை உயர்வு.
ஐடிஐ மாணவர்களுக்கு உலகத்தர பயிற்சி கிடைக்க வேண்டும் என்பதற்காக இத்திட்டம்.
ஒவ்வொரு ஆண்டும் 10,400 மாணவர்கள் பயிற்சி பெறுவார்கள்.
தமிழ்நாட்டில் தொழில்துறையை ஊக்குவிக்கும் விதமாக செயல்படும் டாடாவிற்கு நன்றி.
தமிழ்நாட்டில் உள்ள இளைய சக்தியை உலக நாடுகள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இத்திட்டம் - ஸ்டாலின் பேச்சு
- 11:59 (IST) 08 Jun 2023அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னிலை - ஸ்டாலின்
தமிழ்நாடு பல்வேறு தொழிற்சாலைகளை கொண்ட ஒரு மாநிலம்
அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னிலை பெற்று வருகிறது
22 அரசு ஐடிஐ-களில் தொழில்நுட்ப மையம் 4.0 திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- 11:54 (IST) 08 Jun 2023தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைவு
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைவு
ஒரு கிராம் தங்கம் ரூ. 5,565க்கும், சவரன் ரூ. 44,520க்கும் விற்பனை
- 11:18 (IST) 08 Jun 2023தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்கள் திறப்பு
சென்னையை அடுத்த ஒரகடத்தில் ரூ. 762.30 கோடி மதிப்பீட்டில் தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்கள் திறப்பு
தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
ரோபோட்டிக்ஸ், இன்டஸ்ட்ரியல் ஆட்டோ மேஷன், மேனுபேக்சரிங் போன்ற நவீன திறன் பயிற்சி
அட்வான்ஸ் மேனு பேக்சரிங், மின்சார வாகனங்களுக்கான மெக்கானிக் பயிற்சி வழங்கப்பட உள்ளது
இன்டஸ்ட்ரியல் பெயிண்டிங், அட்வான்ஸ் வெல்டிங் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது
- 10:45 (IST) 08 Jun 2023பொது வெளியில் ஐஏஎஸ் அதிகாரி முன்வைத்துள்ள புகாரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
"ககன்தீப் சிங் பேடி மீது ஈரோடு கூடுதல் ஆட்சியர் மணீஸ் நரவனே கூறியிருக்கும் புகார் அதிர்ச்சி அளிக்கிறது; உயர் அதிகாரிகள் சாதி பாகுபாடு காட்டுகிறார்கள் என்பது கவலையளிக்கும் ஒரு குற்றச்சாட்டு; பொது வெளியில் ஐஏஎஸ் அதிகாரி முன்வைத்துள்ள புகாரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; கடலூர் ஆட்சியராக ககன்தீப் சிங் பேடி இருந்த காலத்தில் எம்எல்ஏ-ஆக இருந்தேன், அவர் பாகுபாடு காட்டி பார்த்ததில்லை" - விசிக எம்.பி. ரவிக்குமார் ட்வீட்
- 10:44 (IST) 08 Jun 2023தற்போது உள்ள ரெப்போ வட்டி விகிதம் 6.5% தொடரும்
"வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; தற்போது உள்ள ரெப்போ வட்டி விகிதம் 6.5% தொடரும்; விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்றவற்றை கட்டுக்குள் வைக்க தற்போதைய நிலையே தொடரும்; சர்வதேச பொருளாதார காரணிகளை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது" - ஆர்.பி.ஐ ஆளுநர் சக்தி காந்த தாஸ்
- 09:44 (IST) 08 Jun 2023பைலட் உடல் நிலை சீராக உள்ளதாக தகவல்
ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலை இயக்குவர்களின் நிலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது கோரமண்டல் விரைவு ரயிலின் லோகோ பைலட், துணை லோகோ பைலட் உடல் நிலை சீராக உள்ளதாக தகவல்
- 09:43 (IST) 08 Jun 20234வது ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை மாற்றி அமைக்க தெற்கு ரயில்வே முடிவு
சென்னை, எழும்பூர் - கடற்கரை வரையிலான 4வது ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை மாற்றி அமைக்க தெற்கு ரயில்வே முடிவு. ஜூலை 1 முதல் 7 மாத காலத்திற்கு பறக்கும் ரயில் சேவையை பகுதியாக ரத்து செய்யவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்த நிலையில் திட்டத்தை நிறுத்திட முடிவு
- 08:33 (IST) 08 Jun 2023அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள்: ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கோடை விடுமுறை காரணாமாக தள்ளிவைக்கப்பட்ட நிலையில், ஒரு மாதத்திற்குப் பின் இன்று விசாரணை
- 08:28 (IST) 08 Jun 2023கருணாநிதி நினைவிடம் ஆகஸ்ட் 7ம் தேதி திறக்கப்படும்
"சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் ஆகஸ்ட் 7ம் தேதி திறக்கப்படும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- 08:28 (IST) 08 Jun 2023ட்ரோன்கள் பறக்க தடை
திருச்சியில் இன்றும், நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவு டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்யவுள்ள நிலையில் நடவடிக்கை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.