முன்னாள் மத்திய அமைச்சரும் ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவருமான சரத் யாதவ் காலமானார்.
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ஒரு லிட்டருக்கு (பெட்ரோல்- 102.63 ரூபாய்க்கும், டீசல்- 94.24 ரூபாய்க்கும்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஏரிகளின் நீரிப்பு
புழல் ஏரியின் நீரிருப்பு 3026 மில்லியன் கன அடியாக உள்ளது. ;கண்ணன்கோட்டை ஏரியின் நீரிருப்பு 481 மில்லியன் கன அடியாக உள்ளது. சோழவரம் ஏரியின் நீரிருப்பு 831 மில்லியன் கன அடியாக உள்ளது.
சிறப்பு காட்சிகள்: அனுமதி
வாரிசு, துணிவு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12, 13, 18 தேதிகளில் வாரிசு, துணிவு திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு.
தமிழ்நாட்டின் மரபுகளை மீறாமல், மக்களுக்கு ஏற்ற வகையில் பணியாற்றுமாறு ஆளுனருக்கு அறிவுறுத்த வேண்டும் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு கூடுதல் சிறப்பு ரயில் கோவை – திண்டுக்கல், தாம்பரம் – நாகர்கோவில், தாம்பரம் – கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து பெரும்பாலான மக்கள் சொந்த ஊருக்கு திரும்பி வரும் நிலையில், சென்னை புறநகர், பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கலைத்திருவிழாவில் முதல் 20 இடங்களை பெறும் மாணவர்களை வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்ல உள்ளோம்” என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவது, தலைப்பாகை அணிவிப்பது, குடை பிடிப்பது செய்ய கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொங்கல் விழாவில் அரசு சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. பொங்கல் விழாவில் எடப்பாடி பழனிசாமி ஓ. பன்னீர்செல்வம், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் தேசிய இளைஞர் தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரை: “இந்தியாவின் வளர்ச்சி அடுத்த 25 ஆண்டுகள் இளைஞர்களின் கையில் தான் உள்ளது. வளர்ச்சியில் உலக நாடுகளின் வரிசையில் இந்தியா 3வது இடத்திற்கு வர வேண்டும் என்பதே இலக்கு” என்று கூரினார்.
ஆளுநர் விவகாரம் குறித்து குடியரசுத் தலைவரிடம் தி.மு.க குழு கடிதம் அளித்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.
கிழக்குப் பகுதியில் சீனத் துருப்புக்கள் நிலைநிறுத்தப்படுவதில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால, இந்தியா தனது வீரர்களை போதுமான அளவில் நிலைநிறுத்தியுள்ளதாகவும் ராணுவ தளபதி பாண்டே கூறினார்.
சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்ஏசி) நிலைமை உறுதியாக உள்ளது. ஆனால், கணிக்க முடியாததாக உள்ளது என்று இராணுவத் தளபதி மனோஜ் பாண்டே வியாழக்கிழமை தெரிவித்தார், எல்லையில் உள்கட்டமைப்பு மேம்பாட்டை இந்தியா துரிதப்படுத்தியுள்ளது. எந்தவொரு நிகழ்வையும் சமாளிக்க போதுமான துருப்புக்கள் மற்றும் தளவாடங்களை நிலைநிறுத்தியுள்ளது என்று கூறினார்.
மதுரை, அகர்தலா, இம்பால், போபால், சூரத் ஆகிய 5 விமான நிலையங்களில் 24 மணி நேர சேவைக்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை அனுமதி அளித்துள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், 24 மணி நேர சேவையை தொடங்க, பணியாளர்களை நியமிக்க விமான போக்குவரத்துத்துறை பரிந்துரை செய்துள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டி: “ரசிகர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படணும். இது வெறும் சினிமாதான். உயிரை விடற அளவுக்கு இதுல அவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை; சந்தோசமா படத்தை பார்த்துவிட்டு பத்திரமாக வீட்டுக்கு போனாலே போதும். உயிரே போகிற அளவுக்கான கொண்டாட்டம் தேவையில்லை என்பது என் கருத்து” என்று கூறினார்.
2வது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு 216 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை அணி. முதலில் ஆடிய இலங்கை 39.4 ஓவர்களில் 215 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது
ஜனவரி 17ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோயம்பேடு காய்கறி வணிக வளாகம் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது
கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களின் சொத்துக்கள், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன, என போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேரவையில் உரையாற்றி வருகிறார்
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க உள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது
தோள்பட்டையில் ஏற்பட்ட வலியால், இலங்கைக்கு எதிரான இன்றைய ஒருநாள் ஆட்டத்தில் சாஹல் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நாட்டு வெடிமருந்து தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் தந்தை உயிரிழந்த நிலையில், மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
BIS தரக் குறியீடு இல்லாமல் பொம்மைகளை விற்பனை செய்ததாக அமேசான், ஃப்ளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது
மூத்த பத்திரிக்கையாளர் துரை பாரதி மரணத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல் தெரிவித்துள்ளது
மலேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவகுமார் வரதராஜன் மலேசிய விளையாட்டு துறையின் கட்டமைப்பை நேரில் பார்வையிட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்கு பின்பாக பள்ளிகள், கோயில்களுக்கு அருகில் இருந்த 84 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டத்தில் ஹாங்கில் சிறிய அளவிலும் சர்பலில் பெரிய அளவிலும் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. எந்தவித உயிர்சேதமும், பொருள் சேதமும் இல்லை என கந்தர்பால் மாவட்ட நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை, நாளை மறுநாள் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அனைத்து சமூகத்தினரும் இணைந்து நடத்த கோரிய வழக்கில், அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவுக்கு வந்தது. தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி, அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு
1.17 லட்சம் பணியாளர்களுக்கு மொத்தம் ரூ.7.10 கோடி சாதனை ஊக்கத்தொகை – தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் சனாதன கொள்கையை திணிக்க ஆளுநர் முயற்சிக்கிறார் – ஜனாதிபதியை சந்தித்த பின் டி.ஆர்.பாலு பேட்டி
குடியரசுத் தலைவரை சந்தித்ததால் அமித்ஷாவை சந்திப்பதற்கான அவசியம் இல்லை. திமுக குழு ஊறுப்பினர்கள் எடுத்துரைத்த விஷயங்களை குடியரசுத் தலைவர் கவனமாக கேட்டறிந்தார்
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த அரசினர் தீர்மானம் சட்டபேரவையில்
ஒரு மனதாக நிறைவேற்றம்
ஆளுநர் விவகாரம் – டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் திமுக குழு சந்திப்பு நிறைவு.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோர் குடியரசு தலைவரை சந்தித்தனர்
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றிய வலியுறுத்திய தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு
2000 ஆண்டுகளுக்கு முன்பே கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள்.
“சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு திமுக ஆதரவு”
அமைச்சர் தங்கம்தென்னரசு பேச்சு
ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்திற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று ஆதரவு. பணி நிரந்தரம் செய்யக் கோரி கொரோனா காலத்தில் பணி செய்த ஒப்பந்த செவிலியர்கள்12-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உடன் தி.மு.க குழு உறுப்பினர்கள் சந்திப்பு
அரசியல் சாசனத்தை மீறி தமிழக ஆளுநர் செயல்படுவதாக புகார்
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உரிய அறிவுரைகள் வழங்க வலியுறுத்தல்
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனை .
உச்சநீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தகவல்
சேது சமுத்திர திட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில் அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் ஸ்டாலின்.
சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றினால் 50 ஆயிரம் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பது தமிழக வளர்ச்சிக்கு முட்டுக்கட்மை போடுவதாக எண்ணுகிறது. – முதல்வர் ஸ்டாலின்
எந்த நாட்டிற்கு சென்றாலும் உழைப்பால் தன்னை மட்டுமின்றி நாட்டையும் உயர்த்துபவர்கள் தமிழர்கள். உலக நாடுகளில் பல நிலைகளில் தவிர்க்க முடியாத சக்தியாக தமிழர்கள் விளக்குகின்றனர் என்று அயலக தமிழர்களுக்கு புதிய நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
நியாய வலைக்கடைகளில் வழங்கக்கூடிய பொருட்களை பாக்கெட் மூலமாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்தாலோசித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் அமைச்சர் சக்கரபாணி
முதலமைச்சர் கோப்பைக்கான மாநில, மாவட்ட அளவிலான போட்டிகள் ஜூன் மாதத்துக்குள் நடத்தப்படும். திருப்பூரில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பாதையை விரைந்து சீரமைத்து தர, சென்னை மாநகராட்சிக்கு மக்கள் கோரிக்கை.
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல ஏதுவாக இன்று முதல் சிறப்பு பேருந்து சென்னையிலிருந்து கூடுதலாக 4,449 சிறப்பு பேருந்துகளும், மற்ற முக்கிய நகரங்களில் இருந்து 6,183 சிறப்பு பேருந்துகளும் இயக்கம் . சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை இன்று விலக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்