/tamil-ie/media/media_files/uploads/2022/12/PM-Modi-mother-16722148793x2-1.jpg)
Tamil news updates
பெட்ரோல் டீசல் விலை
சென்னையில் பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றமில்லை . ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பொங்கல் சிறப்பு ரயில்கள் - இன்று முன்பதிவு துவக்கம்
ஆந்திராவில் கூட்டநெரிசலில் சிக்கி 7 பேர் பலி. ஆந்திரா, நெல்லூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 7 பேர் உயிரிழப்பு. உயிருக்கு ஆபத்தான நிலையில் 5 பேர் மருத்துவமனையில் அனுமதி.
பொதுச்செயலாளர் இபிஎஸ்
அதிமுக பொதுச்செயலாளர் என இபிஎஸ்-க்கு கடிதம். ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்படி இபிஎஸ்க்கு கடிதம். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிட்டு சட்டத்துறை ஆணையம் கடிதம்.
- 22:16 (IST) 29 Dec 2022பொங்கல் தொகுப்புக்கு கரும்பு கொள்முதல் - வழிகாட்டு நெறிமுறைகள்
பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக பன்னீர் கரும்பு மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும். கொள்முதல் செய்யப்படும் முழு கரும்பின் விலை அதிகபட்சம் ரூ.33 ஆக இருக்க வேண்டும். கொள்முதல் செய்யப்படும் கரும்பின் உயரம் சுமார் 6 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் விளையும் கரும்பினை கொள்முதல் செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதில் விவசாயிகள் தரப்பிலிருந்து எந்தவிதமான புகார்களுக்கும் இடமளிக்கக்கூடாது என வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது
- 21:23 (IST) 29 Dec 2022பொங்கல் பரிசு தொகுப்பு - நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
பொங்கல் பரிசுத் தொகுப்பு, முழுக்கரும்பு மற்றும் ரூ1,000 ரொக்கம் வழங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைத்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
- 20:37 (IST) 29 Dec 2022வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி
வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த 2 பேர், மலேசியா, சீனாவில் இருந்து வந்த தலா ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை வெளிநாட்டில் இருந்து வந்தவர்களில் 10 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது
- 20:15 (IST) 29 Dec 2022சென்னைக்கு 600 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் - போக்குவரத்துத்துறை
புத்தாண்டு, அரையாண்டு விடுமுறை முடிந்து பயணிகள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப ஏதுவாக 600 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது
- 19:49 (IST) 29 Dec 2022நாளை வெளியாகிறது 'துணிவு' அப்டேட்
அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியாகிறது. ஆச்சரியப்படுத்தும் வகையில் துணிவு உலகின் புதிய அப்டேட் என போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது
- 19:32 (IST) 29 Dec 2022பாக்சிங் டே டெஸ்ட்; இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது
- 19:26 (IST) 29 Dec 2022கொரோனா மருந்துகளின் இருப்பை உறுதி செய்ய அறிவுரை
கொரோனா மருந்துகளின் இருப்பை உறுதி செய்ய மருந்து நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது
- 19:03 (IST) 29 Dec 2022நடிகர் சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சி புகார்!
நடிகர் சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் மதுரை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோரை சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் இந்தியில் பேசக்கூறியதாக நடிகர் சித்தார்த் வளைதளப்பதிவில் குறிப்பிட்ட நிலையில், மொழி பிரச்சனையை தூண்டும் வகையில் சித்தார்த்தின் சமூக வளைதளப் பதிவு இருப்பதாக இந்து மக்கள் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
- 19:01 (IST) 29 Dec 20226 சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களுக்கு நோட்டீஸ்: சிபிசிஐடி உத்தரவு
ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்ததாக பதிவான 17 வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்ட நிலையில், ட்ரீம் 11, லூடோ, பப்ஜி உள்ளிட்ட 6 ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சிபிசிஐடி உத்தரவிட்டுள்ளது.
- 18:39 (IST) 29 Dec 2022இலங்கைக்கு தமிழக அரசு அனுப்பிய அரிசி மூட்டைகள் பதுக்கல்!
இலங்கை மக்களுக்கு தமிழக அரசு அனுப்பி அரிசி மூட்டைகள் வவுனியா பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கிராம மக்கள் கண்டுபிடித்துள்ளனர்.
- 18:19 (IST) 29 Dec 2022இ.பி.எஸ்-க்கு இந்திய சட்டத்துறை கடிதம் அனுப்பிய விவகாரம்!
இ.பி.எஸ்-க்கு இந்திய சட்டத்துறை அனுப்பிய கடிதத்தை திரும்ப பெற வேண்டும் என்றும், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கடிதத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் இந்திய சட்ட ஆணைய தலைவருக்கு ஓ.பி.எஸ். ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கடிதம் எழுதியுள்ளார்.
- 18:02 (IST) 29 Dec 2022மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்!
மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
- 17:47 (IST) 29 Dec 2022மாநில பொருளாதார ஆலோசனை குழு: மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு!
டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரன் தலைமையில் மாநில பொருளாதார ஆலோசனை குழு அமைக்கப்பட உள்ளதாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இக்குழு மாநிலத்தை 1 ட்ரில்லியன் பொருளாதாரமாக உயர்த்த ஒரு முக்கிய பங்கு வகிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
- 17:28 (IST) 29 Dec 2022முதியவரை மிரட்டி பணம் பறித்த வழக்கு: இந்து மக்கள் கட்சி துணைத்தலைவர் கைது!
சென்னை திருவல்லிக்கேணியில் கோயில் இடத்தில் வாடகைக்கு குடியிருக்கும் முதியவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில், இந்து மக்கள் கட்சி மாநகர துணைத்தலைவர் மகேஷ் (32) கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியை தற்கொலைக்கு தூண்டியது உள்பட 3 வழக்குகள் மகேஷ் மீது ஏற்கனவே நிலுவையில் உள்ளது குறிப்பித்தக்கது.
- 17:28 (IST) 29 Dec 2022தமிழ்நாட்டில் பா.ஜ.க நிராகரிக்கப்படும் கட்சியாகவே இருக்கும் - கார்த்தி சிதம்பரம்
காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்: “பா.ஜ.க தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வந்தாலும் அவர்களின் மதவாத கொள்கையை மக்கள் நிராகரித்து விடுவார்கள்; தமிழ்நாட்டில் பா.ஜ.க நிராகரிக்கப்படும் கட்சியாகவே இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
- 17:15 (IST) 29 Dec 2022வனத்துறையின் வனப்படையை நவீனப்படுத்த ரூ.52.83 கோடி ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு
வனத்துறையின் வனப்படையை நவீனப்படுத்த ரூ.52.83 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு; 3 ஆண்டுகளுக்குள் இதனை செய்து முடிக்க திட்டம்.
- 17:05 (IST) 29 Dec 2022ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம்
திருச்சி, சன்னாசிபட்டியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மருந்து பெட்டகம் வழங்கினார்.
- 16:32 (IST) 29 Dec 2022ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணி
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணியாக சென்றுள்ளனர். ஆளுநர் ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி டி.ராஜா தலைமையில் பேரணி சென்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். நல்லகண்ணு தொடங்கி வைத்த பேரணியில் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- 16:14 (IST) 29 Dec 2022இந்தியா வரும் பயணிகளுக்கு கட்டாய சோதனை
சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயம் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை செய்யப்படும். வரும் ஜனவரி 1ம் தேதி முதல் கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.
சோதனை அறிக்கைகளை 'ஏர் சுவிதா' தளத்தில் பதிவேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணத்திற்கு 72 மணி நேரம் முன்பாக சோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். பயணத்திற்கு 72 மணி நேரம் முன்பாக சோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும் - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.
- 16:12 (IST) 29 Dec 2022இந்தியா வரும் பயணிகளுக்கு கட்டாய சோதனை
சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயம் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை செய்யப்படும். வரும் ஜனவரி 1ம் தேதி முதல் கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.
- 15:42 (IST) 29 Dec 2022UGC-NET தேர்வு அறிவிப்பு வெளியீடு
இந்திய பல்கலைக்கழகங்களில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோஷிப் மற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கான தேசிய தகுதித் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி முதல் மார்ச் 10-ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தகுதி உள்ளவர்கள் டிசம்பர் 29 முதல் ஜனவரி 17, 2023 மாலை 5 மணி வரை ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
- 15:38 (IST) 29 Dec 2022மோடியின் தாயார் ஹீராபென் உடல்நிலையில் முன்னேற்றம் - குஜராத் அரசு தகவல்
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வாய்வழி உணவு உட்கொள்கிறார் என்றும் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் செய்ய படுவார் என்றும் குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
- 15:13 (IST) 29 Dec 2022நீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலப்பு; குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் மெய்யநாதன் உறுதி
புதுக்கோட்டை, இறையூரில் நீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வழக்குகளை திரும்பப் பெறும் எண்ணமில்லை என்றும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
- 14:56 (IST) 29 Dec 2022மரணமில்லா புத்தாண்டு என்பதே நோக்கம்; சென்னையில் பாதுகாப்பு பணியில் 16,000 போலீஸ்
புத்தாண்டு தினத்தில் சென்னையில் 16,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். புத்தாண்டு தினத்தில் பைக் ரேஸில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்
- 14:32 (IST) 29 Dec 2022தமிழைவிட சமஸ்கிருதத்திற்கு 22 மடங்கு அதிகம் நிதி ஒதுக்கீடு; பா.ஜ.க அரசு மீது கே.எஸ். அழகிரி விமர்சனம்
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி: தமிழுக்கு மோடி அரசு அதிக நிதியுதவி செய்திருப்பதாக தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் சொல்கிறார். ஆனால், தமிழைவிட சமஸ்கிருதத்திற்கு 22 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டாட்சித் தத்துவம் என்ற அடிப்படையே பா.ஜ.க-வுக்கு இல்லை என்று விமர்சனம் செய்துள்ளார்.
- 14:04 (IST) 29 Dec 2022புத்தாண்டு கொண்டாட்டம்: இரவு 7 மணியிலிருந்து சென்னை காமராஜர் சாலையில் அனுமதி இல்லை
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டி: புத்தாண்டு பிறக்கு நாளில் இரவு நேரத்திலும் கண்காணிக்கக் கூடிய டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ள முடிவு; உயிரிழப்பு இல்லாத புத்தாண்டு கொண்டாட்டத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இரவு 7 மணியிலிருந்து சென்னை காமராஜர் சாலையில் அனுமதி இல்லை என்று கூறினார்.
- 14:01 (IST) 29 Dec 2022புத்தாண்டு கொண்டாட்டத்தில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டால் சீல் - சென்னை போலீஸ் கமிஷனர்
புத்தாண்டு கொண்டாட்டத்தில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டால், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சீல் வைக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.
- 13:58 (IST) 29 Dec 2022புத்தாண்டு கொண்டாட்டம்: சொகுசு விடுதிகளுக்கு கட்டுப்பாடு - காவல்துறை
புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக சொகுசு விடுதிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் 80% பேர்
மட்டுமே அனுமதிக்க வேண்டும்
இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்கள் கூடாது - சொகுசு விடுதிகளுக்கு போலீசார் கட்டுப்பாடு விதிப்பு
- 13:52 (IST) 29 Dec 2022ஆசிரியர்கள் போராட்டம்: அரசு பேச்சுவார்த்தை தோல்வி
ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் எனக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் டி.பி.ஐ வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே அரசு ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளருடன் ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
- 13:49 (IST) 29 Dec 2022புதுக்கோட்டை கலெக்டர், எஸ்.பி.க்கு ஆதி திராவிடர் பழங்குடியினர் ஆணையம் பாராட்டு
புதுக்கோட்டையில் நடைபெற்ற தீண்டாமை வன்கொடுமைகள் மீது துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, எஸ்.பி வந்திதா பாண்டேவிற்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பாராட்டு. இந்த சம்பவங்கள் குறித்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் தாமே முன் வந்து விசாரிக்க முடிவு செய்துள்ளது.
- 13:42 (IST) 29 Dec 2022வணிக வளாகமாக மாறும் அடையாறு பஸ் டிப்போ?
சென்னை அடையாறு பஸ் டிப்போவை 9 மாடிகள் கொண்ட வணிக வளாகமாக மாற்ற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ரூ. 993 கோடி செலவில், 2023 ஏப்ரல் மாதம் பணிகளைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தரைத்தளம் மற்றும் முதல் மாடி பேருந்து நிறுத்துமிடமாகவும், மீதமுள்ள தளங்களில் வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள், உள் அரங்க விளையாட்டுகள், கூட்ட அரங்கம் ஆகியவையும் அமைகின்றன. 2026 மார்ச்சில் பணிகளை முடிக்க திட்டம்.
மாதவரம் - சிப்காட் வழித்தடத்தில் அடையாறு மெட்ரோ ரயில் நிலையம் டிப்போவில் இருந்து 800 மீட்டர் தொலைவில் அமைகிறது.
- 13:36 (IST) 29 Dec 2022வங்கிக்கடன் மோசடி வழக்கு: சந்தா கோச்சார், தீபக் கோச்சார், வீயோகான் வேணுகோபால் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு
வங்கிக்கடன் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முன்னாள் சி.இ.ஓ. சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் மற்றும் வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் ஆகிய 3 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 13:33 (IST) 29 Dec 2022ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை களைய போராட்டம்; அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி
சென்னை டிபிஐ வளாகத்தில் 3 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு விடுத்தது. இதையடுத்து, நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு பேச்சுவார்த்தை நடத்த ஆசிரியர்கள் வந்தனர்.
- 12:41 (IST) 29 Dec 2022கொரோனா
சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை விமான நிலையம் வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- 12:37 (IST) 29 Dec 2022திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி
தமிழ்நாட்டில் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்பட உள்ளன. திருச்சியில் சர்வதேச தரத்தில் ஒலிம்பிக் அகாடமி அமைய உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
- 12:37 (IST) 29 Dec 2022ரூ. 655 கோடியில், திட்ட பணிகள்
திருச்சியில் ரூ. 655 கோடியில் 5,639 புதிய திட்ட பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- 12:05 (IST) 29 Dec 2022பாதுகாப்பில் குளறுபடி இல்லை
ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் எவ்வித பாதுகாப்பு குறைபாடும் இல்லை என காங்கிரஸ் குற்றச்சாட்டிற்கு துணை ராணுவப் படையான சிஆர்பிஎஃப் மறுப்பு தெரிவித்துள்ளது
- 11:35 (IST) 29 Dec 2022முற்றுகை போராட்டம்
ஆளுநர் ரவியை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது; இதில் மூத்த தலைவர் நல்லகண்ணு பங்கேற்றுள்ளார்.
- 11:14 (IST) 29 Dec 2022கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கூடலூரில் சிபிசிஐடி போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது. 2017ல் கொலை, கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கூடலூர் வழியாக கேரளாவுக்கு தப்பிச் சென்ற நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
- 11:13 (IST) 29 Dec 2022கேரளாவில் என்.ஐ.ஏ சோதனை
கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த பல தலைவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை நடத்தினர். 56 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
- 10:29 (IST) 29 Dec 20222021ம் ஆண்டில் 1.5 லட்சம் பேர் உயிரிழப்பு
2021ஆம் ஆண்டில் இந்தியாவில் சாலை விபத்துக்களால் 1.53 லட்சம் பேர் உயிரிழப்பு - மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம்
- 10:28 (IST) 29 Dec 2022திருச்சி வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்
திருச்சி வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின் . அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க திருச்சி வந்தார் முதல்வர் ஸ்டாலின். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் திமுகவினர் உற்சாக வரவேற்பு
- 09:51 (IST) 29 Dec 2022போபால் எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர்மீது வழக்குபதிவு
போபால் எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் மீது, இரு பிரிவுகளிடையே மோதல் தூண்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின்கீழ் கர்நாடக காவல்துறை வழக்குப்பதிவு
- 09:32 (IST) 29 Dec 2022மயிலாடுதுறை மீனவர்கள் 4 பேர் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மயிலாடுதுறையை சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது நாகை, கோடியக்கரையில் இருந்து கடந்த 27ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற நிலையில் கைது.
- 09:10 (IST) 29 Dec 2022ஒருவர் பாதிக்கப்பட்டால், 16 பேருக்கு பரவக்கூடும்
இந்தியாவில் அடுத்த 40 நாட்களுக்குள் BF.7 வைரஸ் பரவல் வேகமெடுக்கும். ஒருவர் பாதிக்கப்பட்டால், 16 பேருக்கு பரவக்கூடும் - மத்திய சுகாதாரத்துறை
- 08:38 (IST) 29 Dec 2022ஒருவர் பாதிக்கப்பட்டால், 16 பேருக்கு பரவக்கூடும்
இந்தியாவில் அடுத்த 40 நாட்களுக்குள் BF.7 வைரஸ் பரவல் வேகமெடுக்கும் . ஒருவர் பாதிக்கப்பட்டால், 16 பேருக்கு பரவக்கூடும் - மத்திய சுகாதாரத்துறை
- 08:38 (IST) 29 Dec 2022முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி பயணம்
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள், மணிமேகலை விருதுகள், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார் .
- 08:37 (IST) 29 Dec 2022பொங்கல் சிறப்பு ரயில்கள் - இன்று முன்பதிவு துவக்கம் .
பொங்கல் சிறப்பு ரயில்கள் - இன்று முன்பதிவு துவக்கம் . பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில்களுக்கு இன்று காலை 8 மணி முதல் முன்பதிவு தொடக்கம் - தென்னக ரயில்வே
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.