பெட்ரோல், டீசல் விலை: 124ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 40.45% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 41.21; புழல் - 81.27%; பூண்டி - 3.93%; சோழவரம் - 12.02%; கண்ணன்கோட்டை - 63%
கனமழை காரணமாக நீலகிரியில் 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை காரணமாக நீலகிரியில் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
நீலகிரி மாவட்டத்தில் இன்று மிகக் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Jul 19, 2024 21:29 ISTடி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம் நீட்டிப்பு
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 20) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், நாளை இரவு வரை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் காரணங்களால் இணைய வழியாக கட்டணம் செலுத்துவதில் சிக்கல் இருந்ததால், அவகாசம் வழங்கி டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
-
Jul 19, 2024 21:22 ISTஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; தேடப்பட்டு வந்த பா.ஜ.க முன்னாள் நிர்வாகி அஞ்சலை கைது
பகுஜன் சமாஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பா.ஜ.க முன்னள் நிர்வாகி அஞ்சலை கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஞ்சலை தேடப்படுகிறார் என்ற செய்தி வெளியான பிறகு, அஞ்சலை பா.ஜ.க-வில் இருந்து நீக்கப்பட்டார்.
-
Jul 19, 2024 20:32 ISTமுல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது - துணை கண்காணிப்புக் குழு ஆய்வறிக்கை
முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது; நீர் மட்டத்திர்கு ஏற்ப அணையின் கசிவு நீர் நிமிடத்திற்கு 81.875 லிட்டர் துல்லியமாக உள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் உள்ள 13 மதகுகளில் 2, 4, 5 ஆகிய மதகுகளை இயக்கி சரிபார்க்கப்பட்டது. ஜூலை 31 வரை 137 அடி வரை நீரை தேக்கலாம் என்று ஆணையை ஆய்வு செய்த துணை கண்காணிப்புக் குழு முதன்மைக் குழுவிடம் அரிக்கை அளித்துள்ளது.
-
Jul 19, 2024 19:41 ISTமைக்ரோசாப்ட் குளறுபடியால், வங்கி சேவையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை - ரிசர்வ் வங்கி விளக்கம்
மைக்ரோசாப்ட் குளறுபடியால், வங்கி சேவையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. 10 வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களில் மட்டும் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வங்கிகள் CrowdStrike-ஐ பயன்படுத்துவதில்லை, சிறிய வங்கிகள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். மைக்ரோசாப்ட் குளறுபடி குறித்து மதிப்பாய்வு செய்து வருகிறோம். செயல்பாட்டில் பின்னடைவு ஏற்பட்டால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
-
Jul 19, 2024 19:20 IST26 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
சென்னை உட்பட 26 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Jul 19, 2024 18:59 ISTநாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்; அ.தி.மு.க 2-ம் கட்ட ஆலோசனை கூட்டம் தேதிகள் அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த அதிமுக 2ஆம் கட்ட ஆலோசனை கூட்டம் வரும் 24 முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி காலை, மாலை என இரு வேளைகளில் தொகுதி வாரியாக ஆலோசனை நடத்துகிறார். 24ஆம் தேதி தேனி, ஆரணி, 25ஆம் தேதி தென்காசி, ஈரோடு தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை, ஆகஸ்ட் 1ஆம் தேதி வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். முதற்கட்ட ஆலோசனை கூட்டம் கடந்த 10ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவடைந்தது.
-
Jul 19, 2024 18:41 ISTகன்னியாகுமரி பொறியாளர் அலுவலகத்தில் ரூ.5.34 லட்சம் பறிமுதல்
கன்னியாகுமரி உண்ணாமலைக்கடை பொறியாளர் அலுவலகத்தில் ரூ.5.34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்ற இளநிலை பொறியாளரை மாறு வேடத்தில் சென்று கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
-
Jul 19, 2024 18:26 ISTமைக்ரோசாப்ட் குளறுபடி: வங்கதேச விமான நிலையத்தில் 106 தமிழக மாணவர்கள் தவிப்பு
மைக்ரோசாப்ட் குளறுபடி காரணமாக வங்கதேசம் டாக்கா விமான நிலையத்தில் 106 தமிழக மாணவர்கள் தவித்து வருகின்றனர். வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு போராட்டம் காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிலேட் நகரில் படிக்கும், 106 தமிழக மாணவர்கள் சென்னை வர முடிவு செய்திருந்தனர். 56 மாணவர்கள் டாக்காவில் இருந்து நேரடியாக சென்னைக்கும், 50 மாணவர்கள் கொல்கத்தா வழியாக சென்னைக்கு வரவும் முடிவு செய்தனர். மைக்ரோசாப்ட் குளறுபடி காரணமாக, விமான சேவை பாதிக்கப்பட்டதால் 106 மாணவர்களும் டாக்கா விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். வங்கதேச நாட்டில் போராட்டம் நடப்பதால், விமான நிலையத்திலேயே தங்கி உள்ளனர்
-
Jul 19, 2024 18:22 IST410 ஆசிரியர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பணி வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
2014-17 ஆண்டுகளில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிப் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பணி வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது
-
Jul 19, 2024 17:37 ISTமைக்ரோசாப்ட் குளறுபடி: நாடு முழுவதும் 192 இண்டிகோ விமானங்கள் ரத்து
மைக்ரோசாப்ட் குளறுபடி காரணமாக நாடு முழுவதும் 192 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான முன்பதிவு மற்றும் பணத்தை திரும்ப வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ள நிலையில், பிரச்சினையை தீர்க்க மைக்ரோசாப்ட் உடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
Jul 19, 2024 16:31 ISTஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம்: சுற்றுலா பயணிகளுக்கு தடை
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடும் நிலையில், சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் தடையை மீறி ஆற்றில் குளிப்பதால், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
Jul 19, 2024 16:26 ISTவெளியீட்டை உறுதி செய்த தங்கலான்
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'தங்கலான்' திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வருகிற
-
Jul 19, 2024 16:25 ISTபைக் - ஸ்கூட்டி நேருக்கு நேர் மோதல்: 3 பேர் பரிதாப மரணம்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் கீழக்குறிச்சியில் பைக்கும், ஸ்கூட்டியும் நேருக்கு நேர் மோதியதில் மோனிஷ் (9), ராதிகா (30), விக்னேஷ் (18) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ராதிகா தனது மகன் மோனிஷை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று கொண்டிருக்க, எதிரே விக்னேஷ் என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
Jul 19, 2024 15:30 ISTMyV3 Ads ஜாமின் மனு தள்ளுபடி!
MyV3 Ads செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சக்தி ஆனந்தனுக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக கூறி ஜாமின் மனு தள்ளுபடி சிறப்பு நீதிமன்றம் செய்தது.
-
Jul 19, 2024 14:43 ISTஅமுதா ஐ.ஏ.எஸ்.க்கு கூடுதல் பொறுப்பு
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ்-க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
முதல்வரின் முகவரி திட்டம், மக்களுடன் முதல்வர் மற்றும் மக்கள் குறை தீர்க்கும் திட்டங்களுக்கான சிறப்பு அதிகாரியாக நியமித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
Jul 19, 2024 14:42 ISTகூடலூர்: ஜவுளி, செருப்புக் கடைகளில் பயங்கர தீ விபத்து
கூடலூரில் செயல்பட்டு வரும் ஜவுளி, செருப்புக் கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொட்டும் மழையிலும் தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது.
கடைகளில் பணிபுரிபவர்கள் வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
-
Jul 19, 2024 14:20 ISTகுஜராத் அணியின் பங்குகளை வாங்க அதானியுடன் பேச்சுவார்த்தை
குஜராத் டைட்டன்ஸ் அணியின், பெரும்பான்மையான பங்குகளை விற்பது தொடர்பாக, அதானி மற்றும் டொராண்ட் குழுமங்களுடன், அணியின் உரிமையாளரான சிவிசி நிறுவனம் பேச்சுவார்த்தை நடந்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு 5625 கோடிக்கு வாங்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணியின் தற்போதைய மதிப்பு ரூ12000 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
-
Jul 19, 2024 13:55 ISTமைக்ரோசாப்ட் சேவையில் கோளாறு: வங்கி, விமானம், ரயில் சேவை பாதிப்பு
சைபர் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான CrowdStrike அப்டேட் ஆல் ஏற்பட்ட மாறுதலால் மைக்ரோசாப்ட் சேவையில் கோளாறு உலகம் முழுவதும் வங்கி, விமானம், ரயில் சேவைகளில் கடும் பாதிப்பு
-
Jul 19, 2024 13:26 IST'மாற்று சான்றிதழ் கேட்டு வற்புறுத்த கூடாது' - பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
"ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேர்க்கை கோரும் மாணவர்களிடம் மாற்று சான்றிதழை வற்புறுத்த கூடாது" என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டுளள்து.
-
Jul 19, 2024 13:05 ISTதேனாம்பேட்டை அம்மா உணவகத்தில் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வுசென்னை தேனாம்பேட்டை அம்மா உணவகத்தில் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு உணவின் தரம் மற்றும் பொருட்களின் இருப்பு, சேவை குறித்து கேட்டறிந்தார்
-
Jul 19, 2024 13:03 ISTமேட்டூர் அணைக்கு நீர் வரத்து 44,963 கன அடியாக உயர்வு.
மேட்டூர் அணைக்கு இன்று பகல் 12 மணி நிலவரப்படி நீர் வரத்து விநாடிக்கு 44,963 கன அடியாக உயர்வு.
குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 1000 கன அடி நீர் வெளியேற்றம். நீர் இருப்பு 21.819 டி.எம்.சி. ஆக உள்ளது
-
Jul 19, 2024 13:02 IST₹21 கோடி செலவில் அம்மா உணவகங்களை மேம்படுத்திட ஸ்டாலின் உத்தரவு
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை ₹21 கோடி செலவில் மேம்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
Jul 19, 2024 12:56 ISTஅமெரிக்காவுக்கான இந்திய தூதர் நியமனம்
அமெரிக்காவுக்கான இந்திய தூதராக வினய் மோகன் குவாத்ராவை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு
-
Jul 19, 2024 12:33 ISTஅமராவதி அணை நிரம்பியது
உடுமலைப்பேட்டை, அமராவதி அணையின் முழு கொள்ளளவான 90 அடியை எட்டியது.
அணைக்கு நீர்வரத்து 7,000 கனஅடியாக உள்ளது. அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது
-
Jul 19, 2024 12:02 ISTநீலகிரியில் தொடர் மழையால் போக்குவரத்து பாதிப்பு
நீலகிரியில் தொடர் கனமழை காரணமாக கூடலூர் வழியாக கேரளா, கர்நாடகாவுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சூட்டிங் மட்டம் பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு;
மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் -
Jul 19, 2024 11:35 ISTபுதிய கிரிமினல் சட்டங்கள்: மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
புதிய கிரிமினல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய புதிய கிரிமினல் சட்டங்களுக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கில், 4 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைப்பு
- சென்னை உயர் நீதிமன்றம்
-
Jul 19, 2024 11:35 ISTமத்திய அரசைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
ராமேஸ்வரம்: இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்வதும், இலங்கை அரசின் வசமுள்ள படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து மீனவர் சங்கம் மற்றும் திமுக, காங்கிரஸ் தோழமைக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.
-
Jul 19, 2024 11:34 ISTபுதுக்கோட்டை ஆட்சியராக மு.அருணா இன்று பொறுப்பேற்பு
புதுக்கோட்டை மாவட்டத்தின் 45-வது ஆட்சியராக மு.அருணா, இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்
-
Jul 19, 2024 10:48 ISTசென்னையில் சாலைப் பணிகள் - மாநகராட்சி டெண்டர்
சென்னையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும், புதிய சாலைகள் அமைக்கவும் ரூ.282 கோடி மதிப்பில் டெண்டர்
சாலைப்பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது சென்னை மாநகராட்சி நிர்வாகம்
ஆகஸ்ட் 7ல் டெண்டர் திறக்கப்பட்டு, பணி ஆணைகள் வழங்கிய பின் ஒவ்வொரு பகுதியாக சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும் என தகவல்
15 மண்டலங்களிலும் சேதமடைந்த சாலைகள், புதிதாக அமைக்க வேண்டிய சாலைகள் என 2,118 சாலைகளில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன
தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ.282 கோடி ஒதுக்கீடு
-
Jul 19, 2024 10:43 ISTஸ்ரீவாணி தரிசன டிக்கெட் எண்ணிக்கை குறைப்பு
திருப்பதியில் சாதாரண பக்தர்களின் நலன் கருதி ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் எண்ணிக்கை குறைப்பு - திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிரடி முடிவு
-
Jul 19, 2024 10:43 ISTதங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,875க்கும், ஒரு சவரன் ரூ.55,000க்கும் விற்பனை
-
Jul 19, 2024 10:14 ISTதேர்வில் ஆள்மாறாட்டம்: ம.பி இளைஞர் கைது
மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மத்திய பிரதேச இளைஞர் கைது
ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை மையத்தில் வீரர்களுக்கான தேர்வில் ஆள்மாறாட்டம்
எழுத்துத் தேர்வில் கலந்துகொண்டவரும், உடல் தகுதி தேர்வில் பங்கேற்றவரும் வெவ்வேறு நபர்கள் என்பது பயோமெட்ரிக் மூலம் உறுதி
உடல் தகுதி தேர்வில் கலந்துகொள்ள வந்த கரண்சிங் ரத்தோரை ஆவடி டேங்க் ஃபேக்டரி காவல் நிலையத்தில் ஒப்படைத்த சி.ஆர்.பி.எஃப். அதிகாரிகள்
சென்னை திருவொற்றியூரில் தங்கியுள்ள கரண் சிங் ரத்தோர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என விசாரணையில் தகவல்
2023ல் நடத்த எழுத்துத்தேர்வை தொடர்ந்து நேற்று நடந்த உடல்தகுதி தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றது விசாரணையில் அம்பலம்
-
Jul 19, 2024 09:49 ISTஃபாஸ்டேக் கார்டு- இரு மடங்கு சுங்கக் கட்டணம்
வாகனங்களின் முகப்பு கண்ணாடியில் FASTAG கார்டு ஒட்டாவிட்டால், இரு மடங்கு சுங்கக் கட்டணம் - தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி.
-
Jul 19, 2024 09:48 ISTபுதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தி.மு.க வழக்கு
மாற்றி அமைக்கப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனுத்தாக்கல்
நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், செந்தில்குமார் அமர்வு முன்பு இன்று விசாரணை
அமலுக்கு வந்துள்ள சட்டங்கள் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் - மனுவில் கோரிக்கை
-
Jul 19, 2024 09:37 ISTவலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது, அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை (ஜூலை 20) ஒடிசாவில் கரையைக் கடக்க வாய்ப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம்
-
Jul 19, 2024 09:20 ISTடிஎன்பிஎஸ்சி குரூப்2, 2ஏ தேர்வு
டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2ஏ தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இன்றுடன் (ஜூலை19) முடிவடைகிறது. இன்றிரவு 11.59 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 14ம் தேதி நடைபெறுகிறது .
-
Jul 19, 2024 09:09 ISTஒரு வாரத்தில் கட்சிக் கொடி அறிமுகம்: புஸ்ஸி ஆனந்த்
"ஒரு வாரத்தில் கட்சிக் கொடி அறிமுகம் செய்யப்படும்..." தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல்.
-
Jul 19, 2024 08:28 IST3 பேர் கொலை சம்பவம்- திடுக்கிடும் வாக்குமூலம்
கடலூரில் 10 வயது சிறுவன் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொன்று எரிக்கப்பட்ட சம்பவம். தாய் தற்கொலைக்கு சுதன்குமார் காரணம் என்பதால் குடும்பத்துடன் கொலை செய்ததாக கைதான சங்கர் ஆனந்த் வாக்குமூலம்
தமிழகத்தை உலுக்கிய கொலை சம்பவத்தில் சங்கர் ஆனந்த், சாகுல் ஹமீது ஆகிய இருவரை கைது செய்த போலீசார். தந்தையை இழந்து வாழ்ந்த சங்கர் ஆனந்தின் தாய், கடந்த ஜனவரி மாதம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்
தனது தாயின் தற்கொலைக்கு சுதன் குமார் தான் காரணம் என கைதான சங்கர் ஆனந்த் தகவல்
சம்பவத்தன்று சுதன்குமாரின் தாய் கமலேஸ்வரி தன்னை அனாதை என்று திட்டியதால் மேலும் ஆத்திரம் அடைந்ததாக சங்கர் ஆனந்த் வாக்குமூலம்
-
Jul 19, 2024 07:44 ISTவங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது
அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
-
Jul 19, 2024 07:44 ISTஒகேனக்கல்: நீர்வரத்து 45,000 கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 45,000 கனஅடியாக அதிகரிப்பு. நேற்று மாலை வினாடிக்கு 35,200 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 45,000 கன அடியாக உயர்ந்துள்ளது
தொடர்ந்து அதிகரிக்கும் நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க 4வது நாளாக தடை விதிப்பு
அருவி மற்றும் மாற்றுப் பகுதியில் குளிக்கவும் தடை விதித்துள்ளது மாவட்ட நிர்வாகம்
ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 45,000 கனஅடியாக அதிகரிப்பு பரிசல் இயக்க தடை நீடிப்பு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.