Advertisment

Tamil News Today: செந்தில்பாலாஜி மீது வழக்குத்தொடர ஆளுநர் அனுமதி

Tamil News Live Updates-31-08-2024: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
 Senthil balaji case Enforcement Directorate to not grant bail and urge to order speedy trial Madras High Court Tamil News

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 167-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம் 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 35.37% நீர் இருப்பு உள்ளது.

செம்பரம்பாக்கம் - 35.53% ; புழல் - 73.06% ; பூண்டி - 2.72% ; சோழவரம் - 5.73% ; கண்ணன்கோட்டை - 60.4%

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Aug 31, 2024 21:38 IST
    இரவு நேர கார் பந்தயப் போட்டி விளையாட்டு துறையில் தனி இடம் பெறும்: உதயநிதி ஸ்டாலின்

    மாண்புமிகு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின், அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை பங்களிப்புடன் நடத்தப்படுகிற ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னைத் தீவுத்திடலில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தோம். அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி முறையான பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளுடன் நடைபெறுகின்ற இந்த சர்வதேச அளவிலானப் போட்டியை காண்பதற்கு ஏராளமான பொதுமக்கள்  கார் பந்தய ஆர்வலர்கள் திரண்டிருந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தோம்.

    இதில் பங்கேற்கும் கார் பந்தய வீரர்களை வாழ்த்தினோம். முன்னதாக, கார் பந்தய வீரர்கள் திறம்பட நிகழ்த்திய சாகசங்களை கண்டு மகிழ்ந்தோம். தெற்காசியாவில் முதன்முதலில் நடைபெறும் இந்த இரவு நேர கார் பந்தயப் போட்டி, உலகளவில் இந்தியாவுக்கும்.தமிழ்நாட்டுக்கும் விளையாட்டுத் துறையில் தனி இடத்தைப் பெற்றுத்தரப் போவது உறுதி என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.



  • Aug 31, 2024 19:48 IST
    தெற்காசியாவில் முதல் இரவு நேர கார் பந்தயம்: உதயநிதி தொடங்கி வைத்தார்!

    தெற்காசியாவில் முதல்முறையாக இரவு நேர பார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் தொடங்கியது. அண்ணா சாலை மன்றோ சிலை அருகே, நடைபெறும் இந்த கார்பந்தயத்தை அமைச்சர் உதயநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



  • Aug 31, 2024 19:08 IST
    கோட் டிக்கெட் விலை: மக்கள் இயக்கத்திற்கு புதிய உத்தரவு

    'GOAT' திரைப்பட டிக்கெட் விற்பனை தொடர்பாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு, தலைமை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி 'GOAT' திரைப்பட டிக்கெட்டை விஜய் மக்கள் இயக்கத்தினர் வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்யக் கூடாது என்று கூறியுள்ளனர்.



  • Aug 31, 2024 19:07 IST
    கார் பந்தய பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் திடீர் மரணம்

    ஃபார்முலா 4 கார் பந்தய பாதுகாப்பு பணியின்போது கொளத்தூர் காவல் உதவி ஆணையர் சிவக்குமார் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.



  • Aug 31, 2024 19:05 IST
    போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: கல்லூரி மாணவர்கள் கைது

    சென்னை பொத்தேரியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் சோதனை நடத்தி கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான கல்லூரி மாணவர்கள் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



  • Aug 31, 2024 19:04 IST
    சிங்கபெருமாள்கோவில் ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

     பாலம் பணி நடைபெறுவதால் சிங்கபெருமாள்கோவில் ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படடுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.



  • Aug 31, 2024 19:04 IST
    ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் தேதி மாற்றம்

    ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் தேதி அக்.1ல் இருந்து அக்.5ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Aug 31, 2024 18:23 IST
    ஃபார்முலா 4 கார் பந்தயம் - அனுமதி 

    ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடர்பாக முதற்கட்ட அனுமதியை எப்.ஐ.ஏ. வழங்கி உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இரவு 7 மணிக்கு கார் பந்தய பயிற்சி போட்டிகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     



  • Aug 31, 2024 17:52 IST
    விஜய்யின் 'கோட்' டிக்கெட் - தலைமை அதிரடி உத்தரவு

    'கோட்' திரைப்பட டிக்கெட் விற்பனை தொடர்பாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு, தலைமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 'கோட்'  திரைப்பட டிக்கெட்டை  விஜய் மக்கள் இயக்கத்தினர் வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்யக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. 



  • Aug 31, 2024 17:06 IST
    பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் 

    நெடுஞ்சாலையில் உலா வந்த காட்டு யானை பார்த்து பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.  வேன், இருசக்கர வாகனங்களை அந்த ஒற்றை காட்டு யானை சேதப்படுத்தியுள்ளது. கூடலூர் அடுத்த கோழிபாலம் பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளது. 

     



  • Aug 31, 2024 17:03 IST
    சான்றிதழ் பெறுவதற்கு 8 மணி வரை கால அவகாசம் - ஐகோர்ட் உத்தரவு 

    சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கு சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பிடம்  சான்றிதழ் பெறுவதற்கு 8 மணி வரை சென்னை உயர்நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. 8 மணிக்குள் சான்று பெறாவிட்டால் பந்தயத்தை தள்ளிவைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

    தேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பிடம் சான்றிதழ் கிடைத்த பின்பே பந்தயம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு உறுதியளித்துள்ளது. 



  • Aug 31, 2024 16:41 IST
    ஃபார்முலா 4 கார் பந்தயம் - காவல் உதவி ஆணையருக்கு திடீர் நெஞ்சுவலி

    ஃபார்முலா 4 கார் பந்தயம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல் உதவி ஆணையருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 



  • Aug 31, 2024 16:24 IST
    உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி - தீர்மானம்

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தி, தஞ்சை மத்திய மாவட்ட திமுக கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டுள்ளது. 



  • Aug 31, 2024 16:22 IST
    2 மாதங்களுக்கு தடை

    பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் குருபூஜை விழா, கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா மற்றும் ஜெயந்தி விழாக்களை முன்னிட்டு 2 மாதங்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கூறியுள்ளார். 



  • Aug 31, 2024 16:20 IST
    'மெட்ரிகுலேஷன் பெயரை நீக்க உத்தரவிட முடியாது': ஐகோர்ட் 

    தனியார் பள்ளிகளின் பெயரில் உள்ள மெட்ரிகுலேஷன் என்ற பெயரை நீக்கும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது  என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மெட்ரிகுலேஷன் என்பதை நீக்கி, தனியார் பள்ளி என பெயர் வைக்க கோரும் மனு மீது விரைந்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 



  • Aug 31, 2024 16:18 IST
    சென்னை கார் பந்தயம்: 5 மணிக்கு முறையான அறிவிப்பு

    சென்னையில் இன்று நடைபெறவுள்ள ஃபார்முலா 4 கார் பந்தயம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பந்தய நேரம் தொடர்பாக மாலை 5 மணிக்கு முறையான அறிவிப்பு வெளியாகும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 



  • Aug 31, 2024 15:48 IST
    போக்குவரத்து நெரிசல் 

    செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேம்பால பணிகள் நடைபெறுவதாலும், அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதாலும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது



  • Aug 31, 2024 15:47 IST
    சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம் 

    சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கியது. தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலை வரவேற்ற திமுக மற்றும் பாஜகவினர் மாறி மாறி கோஷம் எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

     



  • Aug 31, 2024 15:44 IST
    கார் பந்தயம் தொடங்குவதில் தாமதம்

    சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம்ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • Aug 31, 2024 14:47 IST
    மோகன்லால் பேட்டி

    ஹேமா கமிட்டியில் இருந்து என்னையும் விசாரித்தார்கள். ஒரு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் நானும் பதில் கூறி இருந்தேன். ஹேமா கமிட்டியின் அறிக்கைக்கு ஒட்டுமொத்த கேரளா சினிமாவே பதில் கூற வேண்டி உள்ளது.

    அம்மா சங்கம் மீது அவதூறு பரப்ப வேண்டாம். மலையாள திரையுலகம் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். பாலியல் புகார் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் நான் கருத்து சொல்ல இயலாது       

    - AMMA அமைப்பின் முன்னாள் தலைவரும் நடிகருமான மோகன்லால் பேட்டி



  • Aug 31, 2024 14:43 IST
    தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: மோகன்லால் பேட்டி

    ஹேமா கமிட்டி அறிக்கையை நான் வரவேற்கிறேன். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஹேமா கமிட்டி கேட்டதற்கெல்லாம் பதில் அளித்துள்ளேன்                 

    - AMMA அமைப்பின் முன்னாள் தலைவரும் நடிகருமான மோகன்லால் பேட்டி



  • Aug 31, 2024 14:07 IST
    ஃபார்முலா 4 கார் பந்தயம்: அவசர முறையீடு

    சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த FIA சான்றிதழ் பெற கால நீட்டிப்பு கோரி சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முறையீடு;
    மழையின் காரணமாக FIA சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் 4 மணி நேர கால நீடிப்பு வழங்க கோரிக்கை



  • Aug 31, 2024 13:59 IST
    வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த சங்கு வளையல்



  • Aug 31, 2024 13:44 IST
    ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையகத்தில் ஸ்டாலின்



  • Aug 31, 2024 13:43 IST
    கலிபோர்னியாவில் ஆப்பிள் நிறுவனத்தை பார்வையிட்ட ஸ்டாலின்



  • Aug 31, 2024 13:22 IST
    தேவநாதன் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல்

    நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனுக்கு சொந்தமான மயிலாப்பூர் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.



  • Aug 31, 2024 13:12 IST
    3 மார்க்கங்களில் வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடக்கம்

    சென்னை எழும்பூர் - நாகர்கோவில், மதுரை - பெங்களூரூ மற்றும் மீரட் சிட்டி - லக்னோஆகிய 3 மார்க்கங்களில் வந்தே பாரத் விரைவு ரயில் சேவைகளை காணொலி காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி



  • Aug 31, 2024 12:57 IST
    அமலாக்கத்துறை விசாரணை - ஜாபர் சேட் மேல்முறையீடு

    சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாபர் சேட் மீது அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஜாபர் சேட் மேல்முறையீடு.



  • Aug 31, 2024 12:56 IST
    இளைஞரை மீட்டு சென்ற ஆம்புலன்ஸ் விபத்து

    திருவனந்தபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த பைக் வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த பைக் கடைக்குள் புகுந்து விபத்து பலத்த காயம் அடைந்த இளைஞரை மீட்டு சென்ற ஆம்புலன்சும் விபத்தில் சிக்கியது திருவனந்தபுரம் அருகே வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த பைக் கடைக்குள் புகுந்து விபத்து.



  • Aug 31, 2024 12:54 IST
    மாணவர்களிடம் கஞ்சா பறிமுதல் - போலீசார் அறிக்கை

    500 அடுக்குமாடி வீடுகளில் சோதனை நடத்தி 19 மாணவர்களை பிடித்து விசாரிப்பதாக தகவல் கஞ்சா அரை கிலோ, கஞ்சா சாக்லேட் ஆறு , கஞ்சா ஆயில் 20 எம் எல் பறிமுதல் பாங் 5, ஸ்மோக்கிங் பாட் 1, ஹூக்கா மெஷின் 7, ஹூக்கா பவுடர் 6 கிலோ உள்ளிட்டவை பறிமுதல் கூடுதல் ஆணையர் மகேஸ்வரி தலைமையில் தாம்பரம் துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி அதிரடி நடவடிக்கை சென்னை பொத்தேரியில் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீசார் அறிக்கை.



  • Aug 31, 2024 12:41 IST
    புதுச்சேரி அரசு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் : புதுச்சேரியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி

    மத்தியில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றன; ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் வாக்கு வங்கி பாதிக்கும் என்பதால் மத்திய பாஜக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்தி வருகிறது; சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது; ஆனால் புதுச்சேரியில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமி மௌனமாக உள்ளார்; புதுச்சேரி அரசு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” - புதுச்சேரியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி



  • Aug 31, 2024 12:40 IST
    மாநில உரிமை கல்வியில் ஒன்றிய அரசு கை வைக்கிறது: அன்பில் மகேஷ்

    மாநில உரிமை கல்வியில் ஒன்றிய அரசு கை வைக்கிறது. விவாதிக்க வேண்டிய  தேசியக் கல்விக் கொள்கை விஷயத்தில் மீண்டும் மீண்டும் ஒன்றிய அரசு அழுத்தம் கொடுக்கிறது . அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கான முதல் தவணை ரூ.573 கோடியை ஒன்றிய அரசு வழங்காததால் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடிவில்லை: அன்பில் மகேஷ்  



  • Aug 31, 2024 12:17 IST
    உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் நாணயம்

    உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் நாணயம் .தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.



  • Aug 31, 2024 12:16 IST
    நடிகை ராதிகாவுக்கு நடிகை பாக்யலட்சுமி கேள்வி

    கேரவனில் ரகசிய கேமரா பொருத்தி நடிகைகளின் ஆபாச காட்சிகள் பகிர்வது தெரியவந்தவுடன், ஏன் வெளிப்படுத்தவில்லை?" "பிரபலமான ராதிகா, வேறு பெண்களுக்கு நிகழ்ந்த சம்பவமாக கருதி இதை மறைத்திருந்தால் அது சரியல்ல" - நடிகை பாக்யலட்சுமி "தங்களுக்கு கேரவன் வேண்டாம் என்று கூறும் தைரியம் பெண்களுக்கு வேண்டும்" - நடிகை பாக்யலட்சுமி தந்தி டிவிக்கு பேட்டி அளித்திருந்த நிலையில் நடிகை ராதிகாவுக்கு மலையாள நடிகை பாக்யலட்சுமி கேள்வி.



  • Aug 31, 2024 11:48 IST
    ஹேமா கமிட்டி விவகாரம் : நடிகை ராதிகாவிடம் விசாரிக்க திட்டம்

    மலையாள திரையுலக பாலியல் விவகாரத்தில் நடிகை ராதிகாவிடம் விசாரிக்க திட்டம் கேரவேனில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டதாக ராதிகா  பேட்டி அளித்திருந்த நிலையில், சிறப்பு விசாரணை குழு முடிவு நேரடியாக வாக்குமூலம் பெறவும் கேரள நடிகர்களின் பாலியல் புகார்களை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு திட்டம்.



  • Aug 31, 2024 11:25 IST
    ஆளுநருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு

    ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் திடீர் சந்திப்பு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சென்னை வந்துள்ளார் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்திப்பு நடைபெற்றது பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல்



  • Aug 31, 2024 10:49 IST
    சீமான் மீது எஸ்சி,எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு

    சீமான் மீது எஸ்சி,எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு

    குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி அவதூறு பேசியதாக வழக்கு பதிவு

    தாழ்த்தப்பட்ட ஆணையம் உத்தரவின் பேரில் வழக்கு பதிவு என காவல்துறை விளக்கம்



  • Aug 31, 2024 10:44 IST
    செப்.5 வரை பாமாயில், பருப்பு வாங்கலாம்

    செப்.5 வரை பாமாயில், பருப்பு வாங்கலாம். ஆகஸ்ட் மாதத்திற்கான பருப்பு மற்றும் பாமாயில் செப்டம்பர் 5 வரை பெற்றுக் கொள்ளலாம். உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் அறிவிப்பு 



  • Aug 31, 2024 10:17 IST
    சொல்வதை செய்தால் தான் நிதி என்பது விதியா? : அன்பில் மகேஷ்

    சொல்வதை செய்தால் தான் நிதி என்பது விதியா?

    மாநில உரிமையான கல்வியில் மத்திய அரசு கை வைத்துள்ளது

    மத்திய அரசு சொல்வதை செய்தால் தான் நிதி வழங்க வேண்டும் என எந்த விதியும் இல்லை . கொள்கை சார்ந்த விவாதத்தை வைத்துக்கொண்டு கல்வி நிதியில் கை வைக்க வேண்டாம் - அமைச்சர் அன்பில் மகேஷ்



  • Aug 31, 2024 09:58 IST
    காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

    வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

    மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.

    மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூருக்கு இடையே கலிங்கப்பட்டணம் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கக் கூடும்.

    தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.



  • Aug 31, 2024 09:33 IST
    மேலும் 2 மாணவர்கள் உடல் மீட்பு

     மாமல்லபுரத்தில் மேலும் 2 மாணவர்கள் உடல் மீட்பு.

    சென்னை தனியார் கல்லூரி மாணவர்கள் 19 பேர் 7 பைக்குகளில் நேற்று மாமல்லபுரம் சுற்றுலா சென்றிருந்தனர்.

    கடலில் குளித்தபோது அலையில் சிக்கியதில் 3 மாணவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

    மாமல்லபுரம் கடற்கரையில் நேற்று ஒரு மாணவர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் 2 மாணவர்கள் உடல் மீட்பு



  • Aug 31, 2024 08:49 IST
    ஆப்பிள், கூகுள் அலுவலகங்களை பார்வையிட்ட ஸ்டாலின்

    ஆப்பிள், கூகுள் அலுவலகங்களை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்

    அமெரிக்காவில் ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் அலுவலகங்களை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின். எக்ஸ் தளத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின் 



  • Aug 31, 2024 08:41 IST
    ஃபார்முலா-4 கார் பந்தயம் இன்று தொடக்கம்

    தெற்காசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் ஃபார்முலா-4 இரவு நேர கார் பந்தயம் இன்று தொடக்கம்

    மூன்றரை கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சர்க்யூட்டில் நடைபெறும் பந்தயத்திற்காக சிறப்பான ஏற்பாடு



  • Aug 31, 2024 08:40 IST
    தமிழகத்தில் 2 புதிய வந்தே பாரத் ரயில்கள்

    வந்தே பாரத் - பிரதமர் இன்று துவக்கி வைப்பு. தமிழகத்தில் சென்னை - நாகர்கோவில், மதுரை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை. பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்



  • Aug 31, 2024 08:38 IST
    கஞ்சா பறிமுதல்: 30 மாணவர்கள் கைது

    செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் பெருமளவில் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் 500 மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை.

    சோதனையில், போதை மாத்திரைகள், கஞ்சாவுக்கு பயன்படுத்தக்கூடிய போதை பொருட்கள், பாங்கு போதை வஸ்து உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்!

    கல்லூரியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீஸ் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment