Advertisment

Tamil News Highlights: உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்பு

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த லைவ் பிளாக் இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Supreme Court photo

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீரிருப்பு நிலவரம். 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2401 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 96 மில்லியன் கன அடியாக உள்ளது.  500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 306 மில்லியன் கன அடியாக உள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

 

  • Nov 11, 2024 03:28 IST
    2026-ல் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்குமா அ.தி.மு.க? - இ.பி.எஸ் பதில் 

    2026 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க உடன் அ.தி.மு.க கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஒத்த கருத்துடைய கட்சியுடன் கூட்டணி; தேர்தல் நேரத்தில்தான் எந்த கட்சி தலைமையிலான கூட்டணியில் யார் வருவார் என்பது தெரியவரும்” என்று கூறினார்.



  • Nov 10, 2024 21:45 IST
    ஜம்மு காஷ்மீர் கிஷ்த்வாரில் தீவிரவாதிகள் உடன் துப்பாக்கிச் சண்டை; ஜே.சி.ஓ மரணம்; 3 வீரர்கள் காயம்

    ஜம்மு காஷ்மீர், கிஷ்த்வாரில் நடந்த என்கவுன்டர் குறித்து, கடந்த மூன்று நாட்களாக குந்த்வாரா மற்றும் அதை ஒட்டியுள்ள கேஷ்வான் காடுகளில் தலைமறைவான தீவிரவாதிகளைத் தேடி அழிக்கும் நடவடிக்கை நடந்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.



  • Nov 10, 2024 20:56 IST
    தமிழகத்தில் திராணியற்ற அரசாங்கம் நடக்கிறது - இ.பி.எஸ் கடும் விமர்சனம்

    எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி,  “தமிழகத்தில் திராணியற்ற அரசாங்கம் நடக்கிறது. காவிரி குண்டாறு திட்டம் உள்ளிட்டவை கிடப்பில் போடப்பட்டுள்ளன; சேலத்தில் உள்ள கால்நடை பூங்காவை இதுவரை தி.மு.க அரசு திறக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.



  • Nov 10, 2024 20:37 IST
    டெல்லி கணேஷ் மறைவு பெரும் துயரத்தை தருகிறது - கமல்ஹாசன் இரங்கல்

    மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் டெல்லி கணேஷ் மறைந்தார் என்ற செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். நகைச்சுவை நுட்பமாகக் கையாளும் அரிய குணச்சித்திர நடிகர். அவரது இடத்தை ஈடு செய்வது எளிதல்ல. அவரோடு நான் செலவிட்ட தருணங்கள் இனியவை; நினைவில் நிற்பவை” என்று தெரிவித்துள்ளார்.



  • Nov 10, 2024 20:25 IST
    ‘என்னைப் பற்றி முதல்வர் பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது’ - இ.பி.எஸ் விமர்சனம்

    எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “வேண்டுமென்றே திட்டமிட்டு என்னைப் பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது.” என்று விமர்சித்துள்ளார்.



  • Nov 10, 2024 19:30 IST
    பா.ம.க நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் காரில் வரக்கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்

    பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து 
    நிலை நிர்வாகிகள் கவனத்திற்கு!

    பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்படும் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள்,  ஆர்ப்பாட்டங்கள்  உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும் அதில்  மாவட்ட செயலாளர்கள்  உள்ளிட்ட நிர்வாகிகள் மகிழுந்துகளில் வந்து பங்கேற்கக் கூடாது. நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பும் பெண்கள் உள்ளிட்ட பாமகவினரை பேருந்து,  மூடுந்துகளில் (வேன்கள்) அழைத்துக் கொண்டு  அவர்களுடன் ஒன்றாக பயணித்து வர வேண்டும்.  இனிவரும் காலங்களில் இந்த அறிவுறுத்தலை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.



  • Nov 10, 2024 18:45 IST
    ஜார்க்கண்ட் தேர்தல் பரப்புரை: ராஞ்சியில் மோடி ரோட்ஷோ

    ஜார்க்கண்டில் முதற்கட்ட தேர்தலுக்கான பரப்புரை நாளையுடன் முடியும் நிலையில், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பிரதமர் மோடி 5 கி.மீ தூரம் வாகனப் பேரணியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.



  • Nov 10, 2024 17:51 IST
    நெல்லையில் பிரம்மாண்ட உணவு திருவிழா

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அடுத்த தெற்கு கள்ளிகுளம் அதிசய பனி மாதா ஆலயத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் பிரமாண்ட விருந்துக்காக, 700 கிலோவுக்கும் அதிகமான ஆட்டுக்கறி, ஒன்றரை டன் அரிசி, இரண்டு டன் காய்கறிகள் கொண்டு 10 சமையல் கலைஞர்களால் உணவுகள் செய்யப்பட்டன. சம்பாச் சோறுடன் ஆட்டுகறிக் குழம்பு மற்றும் குடல் பொரியல் உள்ளிட்டவற்றை பாத்திரங்களில் பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.



  • Nov 10, 2024 17:07 IST
    தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்: நீதிபதிகள் அறிவுரை

    நெல்லையில் ஆய்வு மேற்கொண்ட நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி, தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுரை கூறியுள்ளனர்.



  • Nov 10, 2024 16:14 IST
    பெண் கல்வியை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

    "ஒரு பெண் கற்கும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாய் விளங்கும் என்பதையுணர்ந்து, பெண் கல்வியை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும்!" மாணவி ஷோபனாவின் கல்வி பயணத்தை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.



  • Nov 10, 2024 15:35 IST
    கங்குவா படத்தின் டிரெய்லர் அப்டேட்

    சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் புதிய ட்ரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என படநிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 14ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகிறது



  • Nov 10, 2024 15:32 IST
    நடிகர் டெல்லி கணேஷ் மரணம்: த.வெ.க தலைவர் விஜய் இரங்கல்

    மூத்த நடிகர் திரு. டெல்லி கணேஷ் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தி, வேதனை அளிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக 400 க்கும் அதிகமான திரைப்படங்களில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்ற அவரது திடீர் மறைவு, தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என த.வெ.க தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.



  • Nov 10, 2024 14:55 IST
    திராவிட மாடல் ஆட்சியின் புகழ் வெளிச்சத்தில் புது வெளிச்சம் தேடும் புற்றீசல் காணாமல் போகும் - ஸ்டாலின்

    திராவிட மாடல் ஆட்சியின் புகழ் வெளிச்சத்தில் புது வெளிச்சம் தேடும் புற்றீசல் காணாமல் போகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்



  • Nov 10, 2024 14:52 IST
    டெல்லி கணேஷ் மறைவு - தவெக தலைவர் விஜய் இரங்கல்

    பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து, புகழ்பெற்ற அவரது திடீர் மறைவு, தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பு என நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு த.வெ.க தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்



  • Nov 10, 2024 14:51 IST
    தே.மு.தி.க.,வில் விஜய பிரபாகரனுக்கு பொறுப்பு - பிரேமலதா

    தே.மு.தி.க.,வில் விஜய பிரபாகரனுக்கு பொறுப்பு வழங்கப்பட உள்ளது; பிரபாகரன் மட்டுமன்றி மூத்த நிர்வாகிகளுக்கும் முக்கிய பதவிகளை அறிவிக்க உள்ளோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்



  • Nov 10, 2024 14:12 IST
    பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் - கடும் எச்சரிக்கை

    பள்ளிகளுக்கு வராமல் வேறு நபர்களை அமர்த்தி வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சரியான தகவல்களை தராமல் இருந்தால் தலைமை ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது



  • Nov 10, 2024 13:53 IST
    நாகை, மயிலாடுதுறையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Nov 10, 2024 13:33 IST
    டெல்லி கணேஷ் மறைவு; ரஜினிகாந்த் இரங்கல்

    என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையானதொரு மனிதர். அற்புதமான நடிகர். அவருடைய மறைவு செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்



  • Nov 10, 2024 13:15 IST
    எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மரணம்

    பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மதுரையில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார். 700 சிறுகதைகள், 300க்கும் மேற்பட்ட நாவல்களை இந்திரா சௌந்தர்ராஜன் எழுதியுள்ளார். 



  • Nov 10, 2024 13:12 IST
    டெல்லி கணேஷ் மறைவு; பிரேமலதா இரங்கல்

    கேப்டன் அவர்களுக்கு நல்ல நண்பர், கேப்டனுடன் அதிக திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என மறைந்த நடிகர் டெல்லி கணேஷ்க்கு தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா இரங்கல் தெரிவித்துள்ளார்



  • Nov 10, 2024 12:42 IST
    நடிகர் டெல்லி கணேஷ் மறைவு; ஸ்டாலின் இரங்கல்

    நடிகர் டெல்லி கணேஷ் மறைவு, தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பு. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் ஆறுதல் என நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.



  • Nov 10, 2024 12:41 IST
    எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டுகளை படித்தால், சிரிப்பு தான் வருகிறது - ஸ்டாலின்

    எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டுகளை படித்தால், சிரிப்பு தான் வருகிறது. ஆணவத்துடன் பேசுவதாலேயே எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறார் என விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்



  • Nov 10, 2024 12:09 IST
    துணை நடிகை மீனாவுக்கு 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

    சென்னையில் 5 கிராம் மெத்தபெட்டமைன் போதை பொருளுடன் கைதான துணை நடிகை மீனாவுக்கு 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • Nov 10, 2024 12:02 IST
    கரைகளை அகலப்படுத்தி சீரமைக்கும் நீர்வளத்துறை

    கனமழைக் காலங்களில் சதுப்புநிலத்திற்கு வரும் மழை நீர் சீராக வெளியேற, சதுப்புநிலமும் ஒக்கியமடுகு கால்வாயும் இணையும் இடத்தில் கரைகளை அகலப்படுத்தி சீரமைக்கும் பணிகளை நீர்வளத்துறை மேற்கொண்டு வருகிறது. 



  • Nov 10, 2024 11:30 IST
    குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும்- ஸ்டாலின்


    "பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும்"  என விருதுநகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.



  • Nov 10, 2024 10:42 IST
    விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் ஸ்டாலின்

    விருதுநகரில் ரூ.77.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் 



  • Nov 10, 2024 10:11 IST
    நடிகை கஸ்தூரி தலைமறைவு?

    தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு போலீசார் சம்மன் கொடுக்க சென்றுள்ளனர். 

    சென்னையில் உள்ள வீட்டுக்கு சென்ற போது வீடு பூட்டி இருந்துள்ளது. செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்து வைக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

    தலைமறைவானதாக கூறப்படும் கஸ்தூரியை போலீசார் தேடி வருகின்றனர்.



  • Nov 10, 2024 09:43 IST
    வடகிழக்குப் பருவமழை நவ.12ம் தேதி முதல் சூடுபிடிக்கும்- பிரதீப் ஜான்

    வடகிழக்குப் பருவமழை நவ.12ம் தேதி முதல் சூடுபிடிக்கும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு, திருவள்ளூ ர்மாவட்டங்களில் கனமழை தொடங்கும் என கூறியுள்ளார்.  



  • Nov 10, 2024 09:23 IST
    தாமதமாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி

    இன்று உருவாகும் என கணிக்கப்பட்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாமதமாக நாளை உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அடுத்த 36 மணி நேரரத்தில்  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பின் தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 



  • Nov 10, 2024 09:09 IST
    தொண்டர்கள் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்- தவெக ஆனந்த்

    "வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யை ஆட்சியில் அமர வைக்க தொண்டர்கள் 18 மாதங்கள் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்" என தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். 



  • Nov 10, 2024 08:20 IST
    வங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

    வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகிறது.  தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 



  • Nov 10, 2024 08:18 IST
    23 பேர் மீனவர்கள் கைது 

    ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை கைது செய்தது. 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. 



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment