பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது
தாயகம் திரும்பிய இந்தியர்கள்
சூடானில் சிக்கியிருந்த 360 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். ஜெட்டாவில் இருந்து டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர், நாளை காலை தமிழகம் வர உள்ளனர் தமிழர்களின் விமான செலவுகளை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு.
அமித்ஷாவை சந்தித்த இ.பி.எஸ்
டெல்லியில், நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
இன்று புறப்படவிருந்த முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணம் ரத்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தாமதமான நிலையில் நாளை காலை டெல்லி புறப்படவுள்ளார்
சென்னையில் இருந்து டெல்லி கிளம்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனையை திறந்து வைக்க, குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்க செல்கிறார் முதலமைச்சர்
தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த கோதுமை ஒதுக்கீடு 8,132 மெட்ரிக் டன்னாக குறைப்பு” “வரும் ஆண்டுகளில் இருந்து 15,000 மெட்ரிக் டன் கோதுமையை தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்ய அனுமதி வேண்டி மத்திய அரசுக்கு கடிதம்”
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் தமிழர்களின் ஆதரவை பெற கர்நாடகா, சிவமோகா நகரில் நடைபெற் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தி கர்நாடக மாநில கீதத்தை பாட வைத்த பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா.
தமிழகத்தில் கடந்த நிதி ஆண்டை விட 2022 – 23 ம் நிதி ஆண்டில் வரி வசூல் ₨3000 கோடி அதிகம். தமிழகம், புதுச்சேரியில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 10% முதல் 15% வரை அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலத்திற்கான வருமான வரித்துறை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி தகவல்
தமிழக அரசால் மதுரையில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு, 'கலைஞர் நூற்றாண்டு நூலகம்' என பெயரிட்டு அரசாணை வெளியீடு. வரும் ஜூன் மாதம் முதல் வாசகர்களின் பயன்பாட்டுக்கு வரும் எனவும் தமிழக அரசு அறிவிப்பு
பாலியல் புகார் அளித்த பெண் எஸ்.பி உள்ளிட்ட 3 பேரிடம் மீண்டும் குறுக்கு விசாரணை நடத்தக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. குறுக்கு விசாரணைக்கு அனுமதி கோரிய முன்னாள் சிறப்பு டி.ஜி.பி-யின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
புதுவையில் அரசு அலுவலகங்களில் பணி புரியும் பெண்களுக்கு வாரத்தில் 2 மணி நேரம் வேலை நேரம் குறைப்பு; வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு பதில் 11 மணிக்கு வேலைக்கு வந்தால் போதும் என புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதை தனியார் நிறுவனங்களும் பின்பற்றுவார்கள் என ரங்கசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தென்காசியில் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு அனுமதியின்றி நடைபெற்றதாக நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதிக சத்தத்துடன் குண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது படக்குழு உரிய அனுமதி பெற்று மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழ்களை சமர்ப்பித்த நிலையில், நாளை காலை முதல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.
அமைச்சர் சக்கரபானி: “தமிழகத்துக்கு மண்ணெண்ணெய், கோதுமை ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளது. 2021-ல் 7,510 கிலோ லிட்டராக இருந்த மண்ணெண்ணெய் ஒதுக்கீடு 2,012 கிலோ லிட்டராக குறைத்துள்ளது. கோதுமை, மண்ணெண்ணெய் தேவையான அளவு ஒதுக்கக்கோரி மத்திய அமைச்சரிடம் வலியுறுத்துவேன்” என்று கூறினார்.
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்காக ரூ.1,134 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் வரை உயர்மட்ட வழித்தடம் மெட்ரோ ரயில் நிலைய பணிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
திருச்சி, செந்தண்ணீர்புரம் பகுதியில் சட்டவிரோதமாக ஒன்றாம் எண் லாட்டரி விற்பனை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் இந்த ஆண்டு உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு உரிய நேரத்தில் திறக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “4,773 கி.மீ தூரத்துக்கு நாங்கள் தூர்வாருகிற பணியை செய்கிறோம்; சென்ற ஆண்டு தூர்வாரும் பணியை நீர்வளத்துறை மட்டும் கவனிக்கவில்லை. மாவட்ட கலெக்டர்களின் நேரடி பார்வையிலேயே அந்த பணிகள் நடைபெற்றது. நீவளத்துறை செயலர் நித்தம்நித்தம் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மற்ற அதிகாரிகளுடன் தொடர்புகொண்டிருந்தார்கள். மாவட்டத்துக்கு ஒரு மூத்த அதிகாரி நியமிக்கப்பட்டு மேற்பார்வை செய்யப்பட்டது. கடந்த முறை யாவரும் பாராட்டும்படி செய்த அதே பாணியை இப்போதும் செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்” என்று தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், இந்த தூர்வாரும் பணிகள் எப்போது முடியும் என்று கேட்டார். அதற்கு அமைச்சர் துரைமுருகன், தூர் வாரிய பிறகு முடியும் என்று அவருக்கே உரிய பாணியில் நகைச்சுவையாகக் கூறினார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காந்திநகர் தொகுதியில் ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் குமார் போலி ஆவணங்கள் அளித்து வேட்புமனு தாக்கல் செய்ததாக பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தவறான தகவல் அளித்து வேட்புமனு தாக்கல் செய்ததாக இ.பி.எஸ் தரப்பு புகார் அளித்த நிலையில், போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சூடானில் சிக்கியிருந்த மேலும் 246 இந்தியர்கள் ஆபரேஷன் காவேரி திட்டத்தின் கீழ் மீட்கப்பட்டனர். விமானம் மூலம் மீட்கப்பட்ட 246 பேரும் மும்பை வந்தடைந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
சென்னையில், ஏப்ரல் 24-ம் தேதி தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சென்னையில் மின் வாரிய அதிகாரிகளுக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் ரூ.360 கோடி மதிப்புடைய சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தஞ்சை, பட்டுக்கோட்டை அருகே ஏரிப்புறக்கரை பகுதியில் உள்ள ஏரிகளில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதை தடுக்க உத்தரவிட கோரிய வழக்கில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடியில், மூடிய காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த போது மூச்சுத்திணறி 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
ஐ எஃப் எஸ் நிதி நிறுவன மோசடியில் முக்கிய தரகராக செயல்பட்ட மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் என்கிற இடைத்தரகர் முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் ரூ.100 கோடி வரை வசூலித்து ஐ எஃப் எஸ் நிறுவனத்தில் செலுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவரை நிதி நிறுவன மோசடி வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளித்த பிறகே இடைக்கால உத்தரவு குறித்து முடிவெடுக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்குகளுக்கு 6 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி, மே ஒன்றாம் தேதி கனமழை பெய்யும். நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தின் போது திமுக, அதிமுக, அமமுக, பாஜக கவுன்சிலர்கள் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதிமுக, பாஜக, அமமுக உறுப்பினர்கள் முறையாக பேச அனுமதிக்கவில்லை என புகார் தெரிவித்தனர். அதிமுக, அமமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்
திருச்சி நகை பட்டறை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 1 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 3 தனிப்படை அமைத்து 4 மணி நேரத்தில் கொள்ளையர்கள் பிடிக்கப்பட்டுள்ளனர் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்
சத்தீஸ்கர் தண்டேவாடாவில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 10 போலீசார் இறந்த சம்பவத்தில் காவலர்கள் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலை செல்போனில் பொது மக்கள் படம் பிடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கல்வித்துறையில் மாபெரும் மைல்கல்லான முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டத்தினை விழுப்புரம்- மருத்துவமனை வீதி நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்து, மாணவர்களுக்கு காலை உணவு பரிமாறினோம்.
இத்திட்டத்தினை செயலாக்கத்திற்குப் பிறகு மாணவர்களின் வருகை அதிகரித்திருப்பதாக ஆசிரியர்கள் கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது – உதயநிதி ஸ்டாலின் ட்விட்
மக்களுக்கான பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களில் கவனம் தேவை- ஸ்டாலின்
அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைந்து முடியுங்கள்
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரிகள் உடனான ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 9,629 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 9,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் உயிரிழப்பு
சூடானில் இருந்து இன்று 17 தமிழர்கள் உட்பட 247 இந்தியர்கள் விமானம் மூலம் மும்பை வர உள்ளனர்.
'ஆபரேஷன் காவேரி' மூலம் நேற்று 360 பேர் தாயகம் திரும்பிய நிலையில் இன்று மேலும் 274 பேர் இந்தியா வருகின்றனர்
மறைந்த எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா இல்லம் அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயர் சூட்டல்
திருமகன் ஈவெரா சாலைக்கான பெயர் பலகையை திறந்து வைத்தார் அமைச்சர் முத்துசாமி
பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தப்படி, திருமகன் ஈவெரா சாலை என பெயர் மாற்றம்
தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதுபோல் வெளியான ஆடியோ பற்றி விசாரிக்க மத்திய உள்துரை அமைச்சர் அமித்ஷாவிடம் கூறினோம். ஆடியோ உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்து முறையான விசாரணைணை நடத்த வேண்டும்- எடப்பாடி பழனிசாமி
சென்னை கே.கே.நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ரமேஷ் வெட்டி படுகொலை. காரில் வந்த இரண்டு நபர்கள் ரமேஷை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓட்டம். இன்று அதிகாலை தேநீர் கடைக்கு சென்ற போது நடந்த பயங்கர சம்பவம்
சம்பிரதாய அடிப்படையில் உள்துறை அமைச்சர், ஜே.பி. நட்டாவை சந்தித்து பேசினோம். முந்தைய நாடாளுமன்ற தேர்தலில் இருந்து தற்போது வரை அதிமுக- பாஜக கூட்டணி தொடர்கிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுக-வுக்கும் எந்த தகராறும் இல்லை. மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பின் எடப்பாடி பழனிசாமி பேட்டி
ஏப் 30, மே 1 ஆகிய 2 நாட்கள் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு . தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு -இந்திய வானிலை ஆய்வு மையம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கள ஆய்வுக்கூட்டம். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்கள், காவல் உயரதிகாரிகள், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்
நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை மாநில செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது கோவை உக்கடம் போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு. அப்பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்தும் விதமாக பேசியதாக புகார் .
சென்னையில் வரும் 30ம் தேதி சென்னை – பஞ்சாப் அணிகள் மோதும் போட்டிக்கு இன்று டிக்கெட் விற்பனை . நேரடி மற்றும் ஆன்லைன் மூலம் காலை 9.30 மணி முதல் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு .
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம். நாளை குடியரசுத் தலைவரை சந்தித்து, கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு வர அழைப்பு விடுக்கிறார்
விழுப்புரத்தில், வங்கியிலிருந்து 44 லட்ச ரூபாய் பணத்துடன் மாயமான காசாளர். ஆன்லைன் சூதால் ஏற்பட்ட கடனுக்காக, வங்கி பணத்தை எடுத்து கொடுத்து விடலாம் என திட்டம் . காசாளர் முகேஷ் வங்கியில் கட்டு கட்டாக பணத்தை எடுத்து பையில் வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு