scorecardresearch

Tamil news today : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்

Tamil Nadu News, Tamil News , Petrol price Today – 26-04- 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil news today : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும்

காவல்துறையில் இருந்தபோது கர்நாடகாவில் சில பகுதிகளில் அண்ணாமலை பணியாற்றியதாகவும், தேர்தல் பணியில் உள்ள காவல்துறையினர் அவருக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்பு என கடிதம். தேர்தல் ஆணையத்தில் கர்நாடக காங்கிரஸ் கட்சி கடிதம்.

ஐ.பி.எல் இன்று

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூரு,  கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Read More
Read Less
Live Updates
23:27 (IST) 26 Apr 2023
எடப்பாடி பழனிசாமி – அமித்ஷா சந்திப்பு

டெல்லியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

23:23 (IST) 26 Apr 2023
லாரி ஓட்டுநர் கல்லால் அடித்து கொலை

தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா பகுதியில் பட்டப்பகலில் லாரி ஓட்டுநர் கல்லால் அடித்து கொலை. லாரி ஓட்டுநரின் காதலியின் குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது – போலீசார் நடவடிக்கை

20:51 (IST) 26 Apr 2023
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம், ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்ட காவல் அதிகாரிகளுடன் சட்டம் – ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை

20:47 (IST) 26 Apr 2023
நாடு முழுவதும் 157 நர்சிங் கல்லூரிகளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாடு முழுவதும் ரூ.1,570 கோடி செலவில் 157 நர்சிங் கல்லூரிகளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தமிழகத்தில் 11 நர்சிங் கல்லூரிகள் அமைய உள்ளது திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட 11 இடங்களில் நர்சிங் கல்லூரிகள் அமைய உள்ளது

20:18 (IST) 26 Apr 2023
சூடானில் இருந்து இந்தியா திரும்பும் 5 தமிழர்கள்

சூடானில் இருந்து முதல் கட்டமாக 5 தமிழர்கள் இன்று நாடு திரும்புகிறார்கள் ஆபரேஷன் காவேரி மூலம் இரவு 10.30 மணிக்கு டெல்லிக்கு வருகின்றனர்

20:17 (IST) 26 Apr 2023
கோவில்பத்து விஏஓ கொலை சம்பவத்தில் வழக்கு பதிவு

தூத்துக்குடி, கோவில்பத்து விஏஓ கொலை சம்பவத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியானது குற்றவாளிகள் மீது கொலை, கொடூரமான ஆயுதங்களை பயன்படுத்துதல், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

19:39 (IST) 26 Apr 2023
மேற்கு வங்கத்தில் பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்த இளைஞரால் பரபரப்பு

மேற்குவங்கத்தில் பள்ளிக்குள் நுழைந்த ராஜு பல்லவ் என்ற நபர் துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி மாணவர்களுக்கு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது. மெர்குரி, ஆசிட் நிறைந்த குடுவைகளையும் கையில் வைத்திருந்ததால் மாணவர்கள் அச்சமடைந்த நிலையில், உள்ளூர் இளைஞர்கள் சாதுர்யமாக செயல்பட்டு மிரட்டல் விடுத்தவரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்

18:51 (IST) 26 Apr 2023
சூடான் தமிழர்களை மீட்க நடவடிக்கை – தமிழக அரசு

தமிழர்களின் விபரங்கள் கோரி சூடான் மற்றும் ஜெக்தாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தமிழர்களின் வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாக பெறப்படும் தகவல்கள் சூடான் இந்திய தூதரகத்திற்கு தெரியப்படுத்தப்படுகிறது.

18:07 (IST) 26 Apr 2023
ஆன்லைன் சூதாட்ட தடைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு முறைப்படுத்துதல் சட்டத்தை எதிர்த்து வழக்கு 69 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

17:51 (IST) 26 Apr 2023
தி.மு.க ஆட்சியில் 11 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளை நோக்கி வந்துள்ளனர் – அன்பில் மகேஷ்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்பு: “தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு 11 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளை நோக்கி வந்துள்ளனர். அதிமுக ஆட்சியின்போது 3% மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகளை நோக்கி சென்றுள்ளனர்” என்று தெரிவித்தார்.

17:49 (IST) 26 Apr 2023
5 வயது சிறுமியிடம் அத்துமீறல்; பள்ளி தாளாளர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது

விருத்தாச்சலத்தில் பள்ளி சிறுமியிடம் அத்துமீறிய பள்ளி தாளாளர் பக்கிரிசாமி மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. கடலூர் மத்திய சிறையில் இருக்கும் பக்கிரிசாமியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

17:20 (IST) 26 Apr 2023
மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மே 9-ல் உண்ணாவிரதம் – பி.ஆர். பாண்டியன்

தமிழ்நாடு காவிரி அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மே 9-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். டெல்டாவில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிட்டதற்கான அறிவிப்பாணையை வெளியிடக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளார்.

17:17 (IST) 26 Apr 2023
ராகிங் 9 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து செய்யார் அரசு கல்லூரி முதல்வர் நடவடிக்கை

ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்த வீடியோ – 9 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து செய்யார் அரசு கலைக்கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

17:13 (IST) 26 Apr 2023
சூடானில் இருந்து முதற்கட்டமாக அழைத்து வரப்படும் 360 இந்தியர்கள்

சூடானில் சிக்கித் தவித்த இந்தியர்களில் முதற்கட்டமாக 360 பேர் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்படுகின்றனர. சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு புறப்பட்டனர்.

17:06 (IST) 26 Apr 2023
சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை

சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள ஆவின் பாலகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். காலாவதியான மற்றும் தேதி குறிப்பிடப்படாமல் உணவு பொருட்கள் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குளிர்பான பாட்டில்கள், பிரட் பாக்கெட்டுகள் மற்றும் 10 லிட்டர் பால் பறிமுதல் செய்யப்பட்டது.

16:13 (IST) 26 Apr 2023
ஆடியோ விவகாரம்: அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆடியோ விவகாரம் குறித்து அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். “”சமூகவலைத்தளத்தில் பரவிவரும் ஆடியோவில் உள்ள குரல் என்னுடையது இல்லை. நவீன தொழில் நுட்பத்தை மலிவான யுக்திக்காக பயன்படுத்தி இத்தகைய ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர். இதுபோன்ற கோழைத்தனமான முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது. முதலமைச்சரிடம் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன். நான் அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு வழிகாட்டியாக இருப்பவர் சபரீசன். இவர்கள் மீது களங்கம் சுமத்த இதுபோன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

15:33 (IST) 26 Apr 2023
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதல்; பாதுகாப்பு படையினர் 11 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலம், தண்டேவாடா பகுதியில் வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 11 பேர் உயிரிழப்பு; மாவோயிஸ்ட் தாக்குதல் என தகவல் வெளியாகி உள்ளது.

15:29 (IST) 26 Apr 2023
பாலியல் தொல்லையைத் தடுக்க விரிவான கொள்கை – கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு ஐகோர்ட் உத்தரவு

பாலியல் தொல்லைகளைத் தடுக்கும் வகையில், விரிவான கொள்கையை வகுக்க கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொள்கை வகுத்த பின் அமைக்கப்படும், விசாரணை குழுவில் பெற்றோர் மாணவியர் பிரதிநிதிகளை சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

15:26 (IST) 26 Apr 2023
மோடியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சிக்கு நடிகர் அமீர் கான் புகழாரம்

பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி இந்திய மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் 100வது எபிசோட் தொடர்பான விழாவில் பாலிவுட் நடிகர் அமீர் கான் புகாழாரம் சூட்டியுள்ளார்.

15:16 (IST) 26 Apr 2023
ஆபரேஷன் காவேரிக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க தயார்; மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு அழைத்து வரும் ஆபரேஷன் காவேரிக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க தயார் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

15:14 (IST) 26 Apr 2023
பிரபல மலையாள நடிகர் மம்முகோயா மரணம்

பிரபல மலையாள சினிமா நடிகர் மம்முகோயா மரணம் அடைந்தார். அவருக்கு வயது 76.

14:54 (IST) 26 Apr 2023
கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? ஆருடம் சொன்ன நாய்

கர்நாடகாவின் அடுத்த முதல்வர், முன்னாள் முதல்வர் குமாரசாமி தான் என அவரது போட்டோவை வாயில் கவ்வி 'பைரவா' நாய் ஆருடம் கூறியுள்ளது

14:43 (IST) 26 Apr 2023
பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு அழைத்து வரும் ஆபரேஷன் காவேரிக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க தயார் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

14:34 (IST) 26 Apr 2023
சர்வதேச நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற வழி வகை செய்யும் திருத்த விதிகளுக்கு தடை- ஐகோர்ட் உத்தரவு

சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் திருத்த விதிகளுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

14:10 (IST) 26 Apr 2023
வி.ஏ.ஓ கொலை வழக்கு; நெல்லை டிஐஜி விளக்கம்

கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 2 பேரும் கேரளாவில் தங்கி விஏஓ-வை கொலை செய்ய சதி திட்டமிட்டுள்ளனர் என நெல்லைச் சரக டிஐஜி பிரவேஷ் குமார் தெரிவித்துள்ளார்

13:57 (IST) 26 Apr 2023
ரோகித் சர்மாவிற்கு கவாஸ்கர் அறிவுரை

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தயாராக வேண்டும் என ரோகித் சர்மாவிற்கு, முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அறிவுரை வழங்கியுள்ளார்

13:35 (IST) 26 Apr 2023
சென்னையில் மாநகர பேருந்து விபத்து; 7 பயணிகள் காயம்

சென்னை ஐசிஎஃப்பில் சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோதி மாநகர பேருந்து விபத்துக்குள்ளானது. குறுக்கே வந்த ஆட்டோ மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் அடித்ததால், கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி பேருந்து விபத்துக்குள்ளானது. காயம் அடைந்த 7 பயணிகள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

13:21 (IST) 26 Apr 2023
தமிழகம், புதுச்சேரியில் வரும் 30ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் வரும் 30ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் வரும் 30ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

12:55 (IST) 26 Apr 2023
இ.பி.எஸ் டெல்லி பயணம்

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின் முதன்முறையாக டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்கிறார்

இன்றிரவு 8 மணிக்கு நேரம் ஒதுக்கீடு- தமிழக சட்டம் ஒழுங்கு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச திட்டம்

12:45 (IST) 26 Apr 2023
கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு நீதிமன்றம் உத்தரவு

பாலியல் தொல்லைகளை தடுக்கும் வகையில் விரிவான கொள்கையை வகுக்க வேண்டும்.

கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

12:36 (IST) 26 Apr 2023
வி.ஏ.ஓ கொலை வழக்கு – முக்கிய நபர் கைது

தூத்துக்குடி வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸை கொன்றதாக கூறப்படும் மாரிமுத்து கைது

தலைமறைவாக இருந்த மாரிமுத்துவை கைது செய்தது 4 தனிப்படை போலீஸ்

12:15 (IST) 26 Apr 2023
ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஸ்டாலின் ஆய்வு

ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் திட்ட பணிகள் குறித்து கேட்டறிந்தார் முதல்வர்

12:14 (IST) 26 Apr 2023
லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்ட விவகாரம்

கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்ட விவகாரம்

விஏஓ லூர்து உயிருக்கு முன்பே அச்சுறுத்தல் இருந்ததாக கிராம நிர்வாக சங்க பொருளாளரிடம், மறவன்மடம் விஏஓ பிரேமலதா பேசும் ஆடியோ வெளியீடு

12:13 (IST) 26 Apr 2023
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு எதிராக வழக்கு

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஆன்லைன் விளையாட்டு தடைச் சட்டத்துக்கு எதிராக விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு. மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிந்ததால் வழக்கு நாளை பட்டியலிடப்படும் என உயர் நீதிமன்றம் அறிவிப்பு,

11:48 (IST) 26 Apr 2023
கடத்தப்பட்ட பச்சிளங்குழந்தை 12 மணி நேரத்தில் மீட்பு

திருப்பூரில் கடத்தப்பட்ட பச்சிளங்குழந்தை 12 மணி நேரத்தில் மீட்பு

கள்ளக்குறிச்சி அருகே குழந்தையை மீட்டது தனிப்படை – குழந்தையை கடத்திய உமா என்ற பெண் கைது

11:14 (IST) 26 Apr 2023
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதி வெளியாகிறது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.

http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in-ல் பொதுத்தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் – தேர்வுத்துறை அறிவிப்பு

10:50 (IST) 26 Apr 2023
பரனூர் தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

செங்கல்பட்டு, பரனூர் தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு . தொழு நோய் மையத்தில் இருப்பவர்களின் நிறைகுறைகளை கேட்டறிந்தார்

10:28 (IST) 26 Apr 2023
தாயகம் திரும்பும் இந்தியர்கள்

சூடானில் இருந்து 250 இந்தியர்களுடன் விமானப்படை விமானம் புறப்பட்டது .

10:27 (IST) 26 Apr 2023
தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 96 உயர்வு ஒரு கிராம் தங்கம் ரூ. 5,642க்கும், சவரன் ரூ. 45,136க்கும் விற்பனை

08:54 (IST) 26 Apr 2023
நாளை இரவு டெல்லி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

நாளை இரவு டெல்லி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் . நாளை மறுநாள் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்கிறார்.

08:13 (IST) 26 Apr 2023
குற்றவாளியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து மாவட்ட எஸ்.பி உத்தரவு

தூத்துக்குடி, கோவில்பத்து விஏஓ வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் . குற்றவாளியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவு

08:12 (IST) 26 Apr 2023
2 நாட்கள் கள ஆய்வுக்காக இன்று விழுப்புரம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து கள ஆய்வு. 2 நாட்கள் கள ஆய்வுக்காக இன்று விழுப்புரம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின் . மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 மாவட்டங்களை சேர்ந்த அரசு அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார்.

Web Title: Tamil news today live cm stalin vizhupuram vao killed thoothukudi