Advertisment

Tamil News Today: கிளாம்பாக்கத்தில் பயணிகள் மீண்டும் போராட்டம்: போதிய அளவில் பேருந்துகள் இல்லை என குற்றச்சாட்டு

Tamil News Updates Today: லேட்டஸ்ட் அப்டேட்கள் அனைத்தையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள நமது 'இந்திய எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
kilambakkam bus terminus chennai people protest for less buses to Trichy Tamil News

இன்றைய முக்கிய செய்திகள் அனைத்தையும் 'இந்திய எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்

Tamilnadu Live News Udpate | Tamil News Live Updates: 

Advertisment

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை: 

சென்னையில் 630-வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2548 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 767 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 491 மில்லியன் கன அடியாக உள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Feb 11, 2024 00:02 IST
    கொலைவெறி தாக்குதலில் ஒருவர் பலி

    திருவள்ளூர், ஆவடி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது கொலை வெறி தாக்குதலில் ஒருவர் பலியான நிலையில், சிறுமி உட்பட 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி



  • Feb 11, 2024 00:02 IST
    மை வி3 ஆட்ஸ்" செயலி முடக்கம்

    "மை வி3 ஆட்ஸ்" நிறுவனர் சக்தி ஆனந்தன் கைது செய்யப்பட்ட நிலையில், 'மை வி3 ஆட்ஸ்' செயலி முடக்கம். சக்தி ஆனந்தனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு



  • Feb 10, 2024 20:59 IST
    மாநிலங்களவையில் 263-வது கூட்டத்தொடர் நிறைவு : தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைப்பு

    மாநிலங்களவையில் 263-வது கூட்டத்தொடர் நிறைவடைந்ததை தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடப்பு கூட்டத்தொடருக்கு பின் 68 உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறுகின்றனர்.



  • Feb 10, 2024 20:55 IST
    கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்!

    சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் விடுமுறை மற்றும் நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால் அதிக வாகனங்கள் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி செல்கின்றன. இதனால் கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர், மறைமலை நகர் என சுமார் 10 கிலோ மீட்டர்க்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி.



  • Feb 10, 2024 19:36 IST
    வெற்றி துரைசாமி மாயமான விவகாரம் : டி.என்.ஏ. பரிசோதனை எடுப்பதில் தாமதம்

    இமாச்சல் பிரதேசத்தில் பிப்.4ம் தேதி சட்லஜ் நதிக்கரையில் வெற்றி துரைசாமி பயணித்த கார் விபத்தில் சிக்கியது. இதில் வெற்றி துரைசாமி மாயமான நிலையில், விபத்து நடந்த இடத்தில் இருந்த ரத்த கறைகள், திசுக்கள் டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பப்பட்டன. வெற்றி துரைசாமியின் குடும்பத்தாரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலை 5 மணிக்கு மேல் டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடியாது என சென்னை ராயப்பேட்டை மருத்துவமனை ஊழியர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.



  • Feb 10, 2024 18:39 IST
    “ஜனநாயகத்தின் தாயாக இந்தியா உருவெடுத்துள்ளது'' : பிரதமர் மோடி

    “ஜனநாயகத்தின் தாயாக இந்தியா உருவெடுத்துள்ளது'' ஜனநாயகத்தின் தாயாக உருவெடுத்துள்ளது இந்தியா இந்தியாவில் நடத்தப்பட்ட ஜி20 மாநாட்டை கண்டு உலகநாடுகளே வியந்தது ஒவ்வொரு மாநிலமும் சிறப்பான பங்களிப்பை வழங்கியது - பிரதமர் மோடி



  • Feb 10, 2024 17:58 IST
    பழனி கோயில் பிரசாதங்களில் காலாவதி தேதி அச்சடிப்பு

    பழனி கோயிலில் பிரசாதங்களுக்கு காலாவதி தேதி அச்சிடப்பட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பஞ்சாமிர்தத்தில் குறிப்பிட்டுள்ள காலாவதி தேதியில் இருந்து மேலும் 15 நாட்களுக்கு பயன்படுத்தலாம். பிரசாத பேக்கிங் முறையை மாற்றி அமைக்க உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் என கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்



  • Feb 10, 2024 17:49 IST
    மக்கள் மீண்டும் ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன்; 17வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடரில் மோடி உரை

    17வது மக்களவை தேசத்திற்கு சேவையாற்றி பல முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது. மக்கள் மீண்டும் ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன் என 17வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடரில் பிரதமர் மோடி உரையாற்றினார். கடினமான காலக்கட்டங்களில் அவையை சிறப்பாக வழிநடத்தியுள்ளதாக சபாநாயகருக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்



  • Feb 10, 2024 17:19 IST
    ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் வழங்கவில்லை; தமிழக அரசு

    காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க புதிதாக எந்த உரிமமும் வழங்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசு உரிமம் வழங்காததால் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டப் பணிகள் துவங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் எண்ணெய், எரிவாயு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது



  • Feb 10, 2024 16:54 IST
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளை உடனே செய்யுங்கள்; இ.பி.எஸ் வலியுறுத்தல்

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளை உடனே ஏற்படுத்தி தர வேண்டும். ஏடிஎம், உணவகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. மெட்ரோ ரயில், நகர பேருந்து வசதியின்றி, தனியார் வாடகை வாகனங்களுக்கு அதிக அளவு பணம் கொடுப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர் என தமிழக அரசுக்கு, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.



  • Feb 10, 2024 16:29 IST
    ஒரே நாடு ஒரே தேர்தல்; தி.மு.க எதிர்ப்பு

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவிடம் திமுக சார்பில் எம்.பி வில்சன் எதிர்ப்பு கடிதத்தை வழங்கினார். ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு, பல்வேறு கட்சிகளிடம் கருத்துக்கேட்டது குறிப்பிடத்தக்கது



  • Feb 10, 2024 16:01 IST
    தேர்தல் தொகுதிப்பங்கீடு; தி.மு.க – வி.சி.க இடையே வரும் 12-ம் தேதி பேச்சுவார்த்தை

    மக்களவைத் தேர்தல் தொகுதிப்பங்கீடு தொடர்பாக தி.மு.க மற்றும் வி.சி.க இடையே வரும் 12ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது



  • Feb 10, 2024 15:44 IST
    பா.ஜ.க-வை விமர்சனம் செய்யாமல் அ.தி.மு.க அரசியல் செய்ய முடியாது; அமைச்சர் மனோ தங்கராஜ்

    தமிழ்நாட்டில் பா.ஜ.க-வை விமர்சனம் செய்யாமல் அ.தி.மு.க அரசியல் செய்ய முடியாது. பா.ஜ.க-வை எதிர்த்துப் பேசாமல் அரசியல் இல்லை என்பதை அ.தி.மு.க தற்போது புரிந்துள்ளது. அதனால்தான் பா.ஜ.க-வை பற்றி அ.தி.மு.க.,வினர் பேசத் துவங்கியுள்ளனர். ஆனால் கடந்த காலங்களில் அ.தி.மு.க செய்த தவறுக்குத் தண்டனை நிச்சயம் கிடைக்கும். நிச்சயமாக வரும் தேர்தலில் அ.தி.மு.க-வை மக்கள் ஆதரிக்கப் போவதில்லை என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்



  • Feb 10, 2024 15:21 IST
    MyV3 ADS நிறுவனர் உள்ளிட்டோர் கைது

    கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட MyV3 ADS நிறுவனத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிறுவனம் குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மனு அளிக்க வந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் ஆணையாளரை சந்திக்காமல் செல்ல மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்ட நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்த் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்



  • Feb 10, 2024 14:56 IST
    மீண்டும் கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகள்

    நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து இன்று இரவு முதல் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து புறப்படுகின்றன

    கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே உள்ள புக்கிங் அலுவலகங்களில் இருந்து பயணிகள் ஏறிக்கொள்ளலாம் - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்



  • Feb 10, 2024 14:56 IST
    பாஜகவுடன் கூட்டணிபேச்சுவார்த்தை - ஓபிஎஸ்

    பாஜகவுடன் பேச்சுவார்த்தை - ஓபிஎஸ்

    மோடி பிரதமராக தமிழகத்தில் மெகா கூட்டணி அமையும், கூட்டணி குறித்து பேசி முடிக்கப்பட்டு உள்ளது

    பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி 



  • Feb 10, 2024 13:53 IST
    தேர்தலுக்கு முன்பு குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்: அமித்ஷா

    மக்களவை தேர்தலுக்கு முன்பு குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்

    தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா உரை

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கான அறிவிப்பாணை மக்களவை தேர்தலுக்கு முன்பு வெளியிடப்படும் - அமித்ஷா உறுதி

    யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கான சட்டம் அல்ல, குடியுரிமை திருத்த சட்டம் - அமித்ஷா

    "ஜனசங்கம் காலம் முதலே பொது சிவில் சட்டம் பாஜகவின் கொள்கை - அது இந்திய அரசியல் சாசனத்தின் கொள்கையும் கூட"

    தற்சார்பற்ற ஒரு நாட்டில் மதத்தின் அடிப்படையில் சட்டங்கள் இருக்க முடியாது - அமித்ஷா



  • Feb 10, 2024 13:43 IST
    பெல்ஜியம் நாட்டில் இருந்து வெடிகுண்டு மிரட்டல்?

    சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம்

    வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து மின்னஞ்சல்களும் பெல்ஜியம் நாட்டு சர்வர்களில் இருந்து அனுப்பப்பட்டது விசாரணையில் அம்பலம். இண்டர்போல் மூலம் சுவிட்சர்லாந்தை சேர்ந்த இ-மெயில் நிறுவனம் இந்திய புலன் விசாரணை அமைப்புகளுக்கு விளக்கம்

    பெல்ஜியம் நாட்டு ஐபி முகவரி, சர்வர் உள்ளிட்ட விவரங்களை வைத்து அந்த நாட்டிடம் விவரங்களை கேட்க முடிவு. தமிழ்நாட்டை சேர்ந்த நபர் பெல்ஜியம் நாட்டில் இருந்து செயல்படுகிறாரா? என்ற கோணத்திலும் விசாரணை

    விபிஎன் சேவையை பயன்படுத்தி இ-மெயில் அனுப்பினாரா? என்ற கோணத்திலும் விசாரணை



  • Feb 10, 2024 13:01 IST
    நாளை டி.என்.ஏ. சோதனை முடிவுகள் வெளிவர வாய்ப்பு

    இமாச்சல் பிரதேசத்தில் விபத்தில் சிக்கி வெற்றி துரைசாமி மாயமான விவகாரம்

    நாளை டி.என்.ஏ. சோதனை முடிவுகள் வெளிவர வாய்ப்பு - கின்னூர் மாவட்ட ஆட்சியர் அமித்குமார் சர்மா தகவல்

    பிப்.4ஆம் தேதி இமாச்சல் பிரதேசத்தின் சட்லஜ் நதிக்கரையில் வெற்றி துரைசாமி பயணித்த கார் விபத்தில் சிக்கியது

    வெற்றி துரைசாமி மாயமான நிலையில், விபத்து நடந்த இடத்தில் இருந்த ரத்த கறைகள், திசுக்கள் டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பப்பட்டன



  • Feb 10, 2024 12:52 IST
    பாஜக - ஓபிஎஸ் கூட்டணி? : அண்ணாமலை விளக்கம்

    "கூட்டணி தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து"

    "நாளை சென்னை வரும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் ஆலோசனை"

    "என் மண் என் மக்கள் யாத்திரை பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார்"

    "என் மண் என் மக்கள் நடைபயணத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம்"



  • Feb 10, 2024 12:50 IST
    ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு: பலர் காயம்

    இலங்கையில் நடைபெற்ற ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பலர் காயம்

    தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, ரம்பா ஆகியோர் பங்கேற்பதாக கூறியதால் அதிகளவில் கூட்டம் கூடி நெரிசல் 



  • Feb 10, 2024 12:42 IST
    பிரதமராக மோடி மீண்டும் வரவேண்டும் என ஓ.பி.எஸ் விரும்புகிறார்

    "பிரதமராக மோடி மீண்டும் வரவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் விரும்புகிறார்" - சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி



  • Feb 10, 2024 12:04 IST
    'காப்பாற்று, காப்பாற்று'... நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் முழக்கம்

    தமிழகத்திற்கு மத்திய அரசு வெள்ள நிவாரணம் வழங்கவில்லை என தி.மு.க எம்.பி.க்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், மக்களவையில் 'காப்பாற்று, காப்பாற்று' என்றபடி தி.மு.க. எம்.பி.க்கள் தமிழில் முழக்கமிட்டனர். 'தமிழக மீனவர்களை காப்பாற்று' எனவும் கூறி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.



  • Feb 10, 2024 11:30 IST
    வெற்றி துரைசாமியை 7வது நாளாக தேடும் போலீசார் 

    இமாச்சல் பிரதேசத்தில் விபத்தில் மாயமான வெற்றி துரைசாமியை 7வது நாளாக போலீசார் தேடி வருகிறார்கள். 

    இமாச்சல் பிரதேச போலீசார் கார் விபத்து நடந்தது எப்படி என்பது தொடர்பான டெமோவை செய்து பார்க்த்தும், வெற்றி துரைசாமியை போல பொம்மையை வடிவமைத்து, நதியில் அனுப்பி டெமோ பார்த்தும் வருகிறார்கள். 

    நதியின் ஓட்டத்தில் எந்த வழியாக சென்றிருக்க கூடும் என்ற அடிப்படையில் சோதனை நடந்தது வருகிறது. 

    ஸ்கூபா டைவிங் வீரர்கள், போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர். 



  • Feb 10, 2024 11:28 IST
    சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணி - ஸ்டாலின் மோடிக்கு கடிதம் 

    சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒன்றிய அரசு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

     



  • Feb 10, 2024 11:15 IST
    அதிரடியாக உயர்ந்த மல்லிகை பூ விலை 

    திண்டுக்கல் சந்தையில் 1 கிலோ மல்லிகை பூ ரூ. 3,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. 



  • Feb 10, 2024 10:36 IST
     பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர விசாரணை 

    சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில், இதே பாணியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பழைய குற்றவாளிகளின் பட்டியலை சேகரிக்கும் பணியில் சென்னை போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

    இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இதற்கு முன் யாரேனும் கைது செய்யப்பட்டுள்ளனரா? என்று இ-மெயில் அனுப்பிய நபரை கண்டுபிடிக்கும் பணிகளை சென்னை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.



  • Feb 10, 2024 10:35 IST
    ஜே.பி.நட்டா தலைமையில் பா.ஜ.க மையக்குழு கூட்டம்

    சென்னையில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் மையக்குழு கூட்டம்  நாளை நடைபெற உளள்து. சென்னை சின்னமலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நாளை பிற்பகல் 12 மணிக்கு பா.ஜ.க மைய நிர்வாகிகள் குழு ஆலோசனை நடத்த உள்ளனர். 

    நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக ஜே.பி.நட்டா ஆலோசனை நடத்த உள்ளதாகவும், நாளை 'என் மண் என் மக்கள்' யாத்திரை பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பங்கேற்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Feb 10, 2024 10:33 IST
    கிளாம்பாக்கத்தில் பயணிகள் சாலை மறியல் விவகாரம்: போக்குவரத்து துறை விளக்கம்

    கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து திருச்சி மார்க்கத்தில் போதிய பேருந்துகள் இல்லை எனக்கூறி பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்ட விவகாரத்தில் போக்குவரத்து துறை விளக்கமளித்துள்ளது. 

    "மதுராந்தகம் அருகே ஏற்பட்ட விபத்து காரணமாக பேருந்துகள் கிளாம்பாக்கம் வந்து செல்வதில் தாமதம். பேருந்துகள் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. வழக்கமாக திருச்சிக்கு இயக்கப்படும் 105 பேருந்துகளுடன், விடுமுறை காரணமாக கூடுதலாக 60 பேருந்துகள் இயக்கப்பட்டன. போக்குவரத்து சீரான நிலையில் தற்போது பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • Feb 10, 2024 10:03 IST
    பா.ஜ.க ஒரே ஆண்டு வருமானம் ரூ. 2,364 கோடி 

    2022-23ம் நிதியாண்டில் பா.ஜ.க-வுக்கு வங்கிகளில் இருந்து வட்டியாக மட்டும் ரூ. 237 கோடி கிடைத்துள்ளது. தேர்தல் விளம்பரங்களுக்காக மட்டுமே பா.ஜ.க ஒரே ஆண்டில் சுமார் ரூ. 432 கோடி செலவு செய்துள்ளது.

    பா.ஜ.க-வின் வருமானம் ரூ. 2,364 கோடி என தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பழைய செய்தித் தாள் விற்ற லாபம் 10 மடங்கு அதிகரித்த அதே நேரத்தில் புதிய செய்தித் தாள் வாங்கிய செலவு ரூ. 6 லட்சம் குறைந்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க தாக்கல் செய்துள்ள வரவு செலவு கணக்கில் தேர்தல் செலவுகள் காட்டப்பட்டுள்ளன. 



  • Feb 10, 2024 10:00 IST
    தி.மு.க எம்.பி திருச்சி சிவா நோட்டீஸ் -  ஒத்திவைப்பு 

    தமிழ்நாட்டிற்கு புயல், வெள்ள நிவாரணம் வழங்காத விவகாரம் குறித்து விவாதிக்க மாநிலங்களவையில், தி.மு.க மாநிலங்களவை தலைவர் திருச்சி சிவா வழங்கிய நோட்டீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது



  • Feb 10, 2024 09:59 IST
    "இந்தியாவின் மொத்த கடனில் 60% மத்திய அரசுடையது" -சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு விளக்கம்

    "இந்தியாவின் மொத்த கடனில் 60% மத்திய அரசுடையது. 40% கடன் மட்டுமே அனைத்து மாநிலங்களின் மூலம் பெறப்பட்டது. 2019 -2023 கால இடைவெளியில் மாநிலங்களின் மொத்த கடனில் 1.7 - 1.75% கடன் மட்டுமே கேரளா கொண்டுள்ளது." கடன் வாங்கும் வரம்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கேரள அரசு விளக்கமளித்துள்ளது. 



  • Feb 10, 2024 08:40 IST
    அண்ணாமலையார் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்

     

    லால் சலாம் படம் வெளியானதை தொடர்ந்து, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்துள்ளார். 



  • Feb 10, 2024 08:39 IST
    கள்ளக்குறிச்சி: தை மாத அமாவாசை சக்தி ஒளி விளக்கு பூஜை

    கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுபல்லகச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ மின்னல் காளியம்மன் திருக்கோயிலில் தை மாத அமாவாசையை முன்னிட்டு சக்தி ஒளி விளக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தி வருகிறார்கள். 



  • Feb 10, 2024 08:38 IST
    கோவை கார் வெடிப்பு வழக்கு: நெல்லையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை 

    கோவை கார் வெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் பழனிபாபா அரசியல் எழுச்சி கட்சி கழகம் என்ற அமைப்பின் மாநில இளைஞரணி செயலாளராக உள்ள பக்ருதீன் (35) வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். 



  • Feb 10, 2024 08:36 IST
    மோடி, அத்வானி மீது விமர்சனம் -  பத்திரிகையாளர் கார் கண்ணாடி உடைப்பு 

    பிரதமர் மோடி மற்றும் எல்.கே.அத்வானியை விமர்சித்ததாகக் கூறி புனேவில் பத்திரிகையாளர் நிகில் வாக்லேவின் கார் கண்ணாடியை பா.ஜ.க-வினர்  உடைத்துள்ளனர்.  



  • Feb 10, 2024 08:35 IST
    தயார் நிலையில் ஜிஎஸ்எல்வி எஃப்-14

    ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட் வரும் 17ம் தேதி விண்ணில் செலுத்தப்பட தாயாராக உள்ளது. 

     



  • Feb 10, 2024 08:22 IST
    ஆந்திரா: பேருந்து - லாரி மோதல்: 7 பேர் பலி 

    ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 



  • Feb 10, 2024 08:20 IST
    'பா.ஜ.க ஆதரவில்தான் அ.தி.மு.க ஆட்சி நடந்தது': உண்மையை உடைத்த ஓ.பி.எஸ் 

    "நான்கரை ஆண்டுகள் பா.ஜ.க ஆதரவில்தான் அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றது. பா.ஜ.க உடனான கூட்டணியை உடைத்து எடப்பாடி பழனிசாமி  உச்சபட்ச துரோகம் செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமி  பொதுச்செயலாளராகி அ.தி.மு.க-வை ஐந்தாக உடைக்கிறார்" என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 



  • Feb 10, 2024 07:28 IST
    நீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம்!

    மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். மார்ச் 9ஆம் தேதி இரவு 9 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், மே 5ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் எனவும்  தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 



  • Feb 10, 2024 07:27 IST
    கோவை கார் குண்டுவெடிப்பு - தமிழகத்தில் 20 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

    கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழகம் முழுவதும் 20 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருகிறது. 

    இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். 



  • Feb 10, 2024 07:24 IST
    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

    இன்றைய முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள். 

     



Tamilnadu Live News Udpate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment