/tamil-ie/media/media_files/uploads/2022/09/Annamalai-press-meet-1.jpg)
பெட்ரோல், டீசல்விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
2 நாள் பயணம்
பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார். காந்திநகரில் 'டெஃப் எக்ஸ்போ 2022' என்ற ராணுவ கண்காட்சியை தொடங்கி வைக்க உள்ளார் . சுமார் ரூ. 15,670 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி.
சசிகலா அறிக்கை
”ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அரசியலாக்குவதை யாரும் ஏற்க மாட்டார்கள். என் மீது பழிபோடுவதை நான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. என்மீது பழிபோடுவது ஒன்றும் புதிது இல்லை. அரசியலில் இருந்து என்னை ஓரங்கட்ட வேறு வழிகளை தேர்ந்தெடுத்து இருக்கலாம்” என்று சசிகலா அறிகையில் தெரிவித்துள்ளார்.
- 22:17 (IST) 19 Oct 2022தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சி... தி.மு.க அரசைக் கண்டித்து பா.ஜ.க ஆர்ப்பாட்டம் - அண்ணாமலை அறிவிப்பு
தாய்மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திறனற்ற திமுக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அக்டோபர் 27ஆம் தேதி
தமிழ்நாடு பா.ஜ.க-வின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் என்று மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
திமுகவின் கபட நாடகங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவோம் என்று அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
- 21:45 (IST) 19 Oct 2022காங். புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஸ்டாலின் வாழ்த்து
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- 20:34 (IST) 19 Oct 2022எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு சிறப்பு அவசர கால கடன் வரி உத்தரவாத திட்டம்; மோடிக்கு ஸ்டாலின் கடிதம்
பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், ஆடைத் துறையில் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் நிதி நெருக்கடியை போக்கிட வேண்டும். சிறப்பு அவசர கால கடன் வரி உத்தரவாத திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும். ஆயத்த ஆடை ஏற்றுமதியில் மாதந்தோறும் வளர்ச்சி விகிதம் சரிந்துள்ளது. கொரோனா, உக்ரைன் போரால் ஆடை ஏற்றுமதியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
- 20:06 (IST) 19 Oct 2022அதிமுக ஆட்சியில் அண்ணா பல்கலை-யில் ரூ.11.41 கோடி முறைகேடு - சி.ஏ.ஜி அறிக்கை
அதிமுக ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.11.41 கோடி முறைகேடு நடந்துள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கை தெரிவித்துள்ளது. 2012-16 ஆண்டில் கல்வி பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கு போடப்பட்ட 2 ஒப்பந்தங்களில் முறைகேடு. 7 லட்சம் பதிவேடுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், 20.92 லட்சம் பதிவேடுகள் என பணம் வழங்கப்பட்டுள்ளது. வேலையே செய்யாத மேட்ரிக்ஸ் இங்க் என்ற நிறுவனத்துக்கும் பணம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
- 19:40 (IST) 19 Oct 2022பிணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் - உதாரணம் காட்டிய ஐகோர்ட்
கடையநல்லூரில் இறந்த மாணவன் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் தொடர்பாக வழக்கில், மாணவர்களின் பிணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி அறிவுரை கூறியுள்ளார்.
இறந்து போன மாணவர்களின் உடலை வைத்து அரசியல் செய்வது வழக்கமாகி வருகிறது, அதற்கு
உதாரணம் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கு. இறந்த மாணவனின் உடலை நாளை காலைக்குள் பெற்றோர் வாங்கி கொள்ள வேண்டும், தவறினால் மாவட்ட நிர்வாகம் இறுதி காரியங்களை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.
- 18:52 (IST) 19 Oct 2022ராமநாதபுரம் ஆடுகள் சந்தையில் ரூ.2 கோடி விற்பனை
தீபாவளி பண்டிகை வரும் நிலையில் இராமநாதபுரம் ஆடுகள் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.
ஆடுகள் வழக்கத்துக்கு மாறாக 20 சதவீதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
- 18:42 (IST) 19 Oct 2022மெரினா புரட்சிப் போல் இந்திக்கு எதிராக போராட்டம் வெடிக்கும்.. கனிமொழி எச்சரிக்கை
மெரினா புரட்சிப் போல் இந்திக்கு எதிராக போராட்டம் வெடிக்கும் என சென்னையில் கனிமொழி தெரிவித்துள்ளார்.
- 18:29 (IST) 19 Oct 2022இந்தி எதிர்ப்பு தீர்மானம்- குடியரசுத் தலைவரை சந்திக்கும் திமுக
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும், அவரிடம் இந்தி எதிர்ப்பு தீர்மானம் தொடர்பாக பேசவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
- 18:13 (IST) 19 Oct 2022அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.
அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, தருமபுரி, திருப்பத்தூர், திருவள்ளூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.
மேலும், திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரத்திலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.
- 17:52 (IST) 19 Oct 2022காங்கிரஸ் தலைவராக அக்.26 கார்கே பதவியேற்பு
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே அக்டோபர் 26ஆம் தேதி கட்சியின் தலைவராக பதவியேற்பார் என காங்கிரஸ் எம்.பி. ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
- 17:37 (IST) 19 Oct 2022இந்தியா நியூசிலாந்து பயிற்சி ஆட்டம் ரத்து
இந்தியா நியூசிலாந்து பயிற்சி ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
- 17:25 (IST) 19 Oct 2022ரூ.500 கோடியை நெருங்கும் பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத் குமார், ஜெயராம், பிரபு, பார்த்திபன், விக்ரம் பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் ரூ.500 கோடி வசூலை நெருங்கியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் அதிகம் வசூலித்த படங்கள் பட்டியலில் கமல்ஹாசனின் விக்ரம் இரண்டாம் இடத்திலும் ரஜினிகாந்தின் 2.0 முதலிடத்திலும் உள்ளது. தற்பேது கமல்ஹாசனின் விக்ரம் வசூலை பொன்னியின் செல்வன் முறியடித்துள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா குந்தவையாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
- 17:08 (IST) 19 Oct 2022சிவசங்கர் மீதான பாலியல் வழக்கு ரத்து
சிவசங்கர் மீதான பாலியல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
- 16:59 (IST) 19 Oct 2022காங்கிரஸ் தலைவருக்கு திமுக வாழ்த்து
காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கேவிற்கு திமுக எம்.பி., பாலு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
- 16:54 (IST) 19 Oct 2022பல்கலை. வேந்தருக்கு பதிலாக அரசுக்கு அதிகாரம்: மசோதா நிறைவேற்றம்
தமிழக பல்கலைக்கழகங்களின் ஆட்சிக்குழுவில் நிதித்துறை செயலாளரை சேர்ப்பதற்கான சட்டமசோதா சட்டசபையில் நிறைவேறியது. பல்கலைக்கழக வேந்தரான ஆளுநருக்கு பதிலாக அரசுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் திருத்தப்பட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது
- 16:39 (IST) 19 Oct 2022கன்னியாகுமரி மாணவன் மரணம் - டி.எஸ்.பி. விசாரணை
கன்னியாகுமரியில் ஆசிட் கலந்த குளிர்பானம் குடித்து பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளியில் நெல்லை மண்டல டி.எஸ்.பி. சங்கர் தலைமையில் நேரில் விசாரணை நடைபெற்றது.
- 16:20 (IST) 19 Oct 2022இ.பி.எஸ்-க்கு ஆதரவாக ஜி.கே.வாசன் சாலை மறியல்
போராட்டம் நடத்தி கைதாகி உள்ள இ.பி.எஸ்-ஐ சந்திக்க வந்த த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, ராஜரத்தினம் திடலுக்கு வெளியே காத்திருந்த நிலையில், காவல்துறையினரை கண்டித்து ஜி.கே.வாசன் சாலை மறியலில் ஈடுபட்டார்.
- 15:55 (IST) 19 Oct 2022டெல்லியில் பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை
டெல்லியில் பட்டாசு வாங்கினாலோ, வெடித்தாலோ ரூ.200 அபராதம், 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். பட்டாசு தயாரித்தாலோ, விற்றாலோ ரூ.5,000 அபராதம், 3 வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த 2023 ஜனவரி 1ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
- 15:34 (IST) 19 Oct 2022இந்தியா - நியூசிலாந்து பயிற்சி போட்டி ரத்து
டி20 உலகக்கோப்பையில் மழை காரணமாக இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது
- 15:20 (IST) 19 Oct 2022எதிர்கட்சி துணைத் தலைவர் பதவி - அமைச்சர் விளக்கம்
எதிர்க்கட்சி துணைத் தலைவர் பொறுப்பு என்பது பேரவையின் விதிகளில் இல்லாத ஒன்று.பேரவை விதிகள் 2 ஓ படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி மட்டுமே விதியில் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
- 14:56 (IST) 19 Oct 2022ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றம்
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. அதன்படி, ஆன்லைன் ரம்மி விளையாடுபவர்களுக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும். ஆன்லை ரம்மி தொடர்பான விளம்பரம் செய்தால், ஓராண்டு சிறை அல்லது ரூ. 5 லட்சம் அபராதம் அல்லது 2ம் சேர்த்தும் விதிக்கப்படும்
- 14:09 (IST) 19 Oct 2022மல்லிகார்ஜுன கார்கே வெற்றி
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் 7,879 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். சசி தரூர் சுமார் 1,000 வாக்குகள் பெற்றார். 416 வாக்குகள் செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற மல்லிகார்ஜூன கார்கேவுக்கு போட்டி வேட்பாளர் சசி தரூர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- 13:50 (IST) 19 Oct 2022இபிஎஸ் உள்பட 750 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக இபிஎஸ், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் உள்பட 750 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- 13:48 (IST) 19 Oct 2022குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்படுவார்கள்.. ஸ்டாலின்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்படுவார்கள் என பேரவையில் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
- 13:34 (IST) 19 Oct 2022காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வு
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில், சசி தரூரை தோற்கடித்து மல்லிகார்ஜூன கார்கே வென்றார். இதன் மூலம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் காந்தி அல்லாத குடும்பத்தை சேர்ந்த ஒருவர் காங்கிரஸ் தலைவராக தேர்வாகியுள்ளார்.
- 13:30 (IST) 19 Oct 2022கூடுதலாக ரூ.5 லட்சம் நிவாரணம்
சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை அடிப்படையாகக்கொண்டு தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- 13:29 (IST) 19 Oct 2022தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. பேரவையில் ஸ்டாலின் உரை
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தமிழ்நாடு வரலாற்றில் மிகப்பெரிய கரும்புள்ளி. அத்துயரமான சம்பவத்தை இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது, மக்களின் மரண ஓலம் இன்றும் என் மனதை வாட்டுகிறது என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- 13:20 (IST) 19 Oct 2022கோயம்பேடு மொத்த காய்கறி கடைகளுக்கு விடுமுறை
தீபாவளி பண்டிகையை ஒட்டி வரும் 25ம் தேதி கோயம்பேடு மொத்த காய்கறி கடைகளுக்கு விடுமுறை அளித்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
- 13:20 (IST) 19 Oct 2022இபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழப்பிற்கு இபிஎஸ் தான் காரணம். ஜாலியன் வாலாபாக் படுகொலையை போல மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்டப் பேரவையில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.
- 12:40 (IST) 19 Oct 2022அன்றைய முதல்வர் ஈபிஎஸ் தான் அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும்: சிபிஎம் பாலகிருஷ்ணன்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அன்றைய முதல்வர் ஈபிஎஸ் தான் அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும் சிபிஎம் பாலகிருஷ்ணன்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை பல உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளது
அன்றைய முதல்வர் ஈபிஎஸ் தான் அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும்
உண்ணாவிரதம் என்ற பெயரில் ஈபிஎஸ் நாடகம் நடத்துகிறார்
- கே.பாலகிருஷ்ணன் (சிபிஎம் மாநில செயலாளர்)
- 12:24 (IST) 19 Oct 2022அனைவரையும் உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம் - ஸ்டாலின்
அனைவரையும் உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம். தமிழக வளர்ச்சிக்காக தினந்தோறும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
பேரவையில் விதியெண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
- 12:23 (IST) 19 Oct 2022டி20 உலகக்கோப்பை - அயர்லாந்து அணிக்கு 177 ரன்கள் இலக்கு
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து அணிக்கு 177 ரன்கள் இலக்கு. 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது ஸ்காட்லாந்து அணி
- 11:45 (IST) 19 Oct 2022திருப்பூர் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சஸ்பெண்ட்
திருப்பூர் தனியார் காப்பகத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்
குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சஸ்பெண்ட்
- 11:37 (IST) 19 Oct 2022ஈபிஎஸ் கைது - அதிமுகவினர் சாலை மறியல்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம்
நெல்லை, சேலம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சாலை மறியல்
ஈபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினரை கைது செய்ததற்கு கண்டனம்
- 11:22 (IST) 19 Oct 2022புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில், வரும் ஆண்டுகளில் புதிய கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும்
பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உறுதி
- 11:22 (IST) 19 Oct 2022மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயல் வலுப்பெற வாய்ப்பு
அடுத்த 24 மணிநேரத்தில் வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரும் 22-ம் தேதி வலுப்பெறும். தொடர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
- 10:54 (IST) 19 Oct 2022காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் இடையே போட்டி 9,500 காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களித்துள்ள நிலையில், சற்று நேரத்தில் முடிவுகள் வெளியாகும். 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராகிறார்
- 09:44 (IST) 19 Oct 2022எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் கைது
சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி அதிமுகவினர் போராட்டம் . போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை கைது செய்தது காவல்துறை. எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் கைது.
- 09:06 (IST) 19 Oct 2022தமிழ்நாடு சட்டப்பேரவை 3வது நாள் நிகழ்வு
இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது . ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கான சட்ட முன்வடிவை முன்மொழிகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் . தமிழ்ப் பல்கலைக்கழக (2ம் திருத்த) சட்ட முன்வடிவை அறிமுகம் செய்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு . 2022-2023ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம், பதிலுரை மற்றும் வாக்கெடுப்பு நடைப்பெறும்
- 09:04 (IST) 19 Oct 2022மருத்துவ கலந்தாய்வு இன்று துவங்குகிறது
மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு, நீட் மதிப்பெண் அடிப்படையில் இன்று துவங்குகிறது
- 09:03 (IST) 19 Oct 2022இந்தியா, நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்
டி20 உலகக்கோப்பை - 2வது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இன்று மோதல். இந்தியா தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
- 08:59 (IST) 19 Oct 2022அதிமுகவினர் உண்ணாவிரதம்
இபிஎஸ் தலையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் அதிமுகவினர் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் உண்ணாவிரதம் நடத்த முயற்சி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.