பெட்ரோல், டீசல் விலை
309வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
பூமி நேரம் அனுசரிப்பு
காலநிலை மாற்றம் மற்றும் ஆற்றல் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில், இந்தியா உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில், நேற்றிரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை அனைத்து மின் விளக்குகளையும் அனைத்து பூமி நேரம் கடைபிடிக்கப்பட்டது.
மகளிர் ப்ரீம்யர் லீக் கோப்பை வெல்வது யார்
இன்று நடைபெறும் மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் இறுதிப்போட்டியில், டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
சென்னையில் வழக்கறிஞர் ஜெய்கணேஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது குறித்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட்: “வழக்கறிஞர்களுக்கு எதிரான குற்றங்கள் கடுமையாகக் கையாளப்பட வேண்டும்; வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறினார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் காமராஜ் இல்ல திருமண விழாவில், அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு: அ.தி.மு.க தொண்டர்களால் நடத்தப்படும் கட்சி. அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரும். அ.தி.மு.க-வை யாராலும் அழிக்க முடியாது. அ.தி.மு.க-வில் ஒரு லட்சம் பழனிசாமிகள் உள்ளனர் என்று கூறினார்.
தருமபுரி, மொரப்பூரில் பாலினம் கண்டறியும் சோதனையில் ஈடுபட்டதாக பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். வீட்டிலேயே சட்டவிரோதமாக சோதனை செய்ததாக வந்த புகாரை அடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 4வது தங்கம் கிடைத்துள்ளது. 75 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் தங்கம் வென்றார்.
நில அளவையர் தேர்வில் ஒரே பயிற்சி மையத்திலிருந்து அடுத்தடுத்த பதிவெண் கொண்ட 700 பேர் தேர்ச்சி பெற்றது குறித்து விசாரணை நடத்தப்படும்; குரூப் 4 தெர்வில் மதிப்பெண் குறைந்தவர்கள் டைப்பிங் பிரிவில் கிடைத்த முன்னுரிமையால் தரவரிசையில் முன்னணி இடம் பிடித்துள்ளனர் என்று டி.என்.பி.எஸ்.சி விளக்கம் அளித்துள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம், பிரபல போஜ்புரி நடிகை அகன்ஷா துபே வாரணாசியில் உள்ள ஹோட்டலில், தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். நேற்று இரவு இன்ஸ்டாகிராமில் நடனமாடும் வீடியோவை பதிவிட்ட அகன்ஷா துபே இன்று மரணமடைந்துள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொச்சி அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான துருவ் மார்க் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.
கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டது.
ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் கிழே விழுந்ததில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
சுவிஸ் ஓபன் சூப்பர் சீரிஸில், 300 பேட்மிண்டன் போட்டி: இரட்டையர் பிரிவில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா. ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்ரும் சிராக் ஷெட்டி ஜோடி சீனாவின் ரென் சியாங்யு மற்றும் டான் கியாங் ஜோடியை வீழ்த்தி பட்டத்தை வென்றது.
தேனி, கும்பக்கரை அருவியில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில், 30க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளனர்.
சென்னை மெரினாவில், தனது பொறியியல் படிப்பின் உயர் கல்விக்கு கட்டணம் செலுத்த உதவுமாறு வயலின் வாசித்தபடி உதவி கேட்ட மாணவர் அஜித்தை சந்தித்து, உதவினார் திருவல்லிக்கேணி உதவி ஆணையர் பாஸ்கர். மாணவரின் செலவுக்கு ரூ.2,000 பணமும் பழுதான அவருடைய செல்போனை சரிசெய்தும் கொடுத்துள்ளார். சமூக தொண்டு நிறுவனம் மூலமாக அவரது கல்விக்கு உதவ உள்ளதாக உறுதி அளித்தார்.
காரைக்குடியிலிருந்து மட்டும் 700 பேர் தேர்வானதாக தகவல் முறைகேடு நடந்துள்ளதா என விரிவான விசாரணை நடத்த வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை
சென்னையில் ‘தமிழை தேடி இயக்கம்’ சார்பில் நடைபெற்ற நிகழ்வில், பாமக நிறுவனர் ராமதாஸ், பசு கூட அம்மா என்றுதான் அழைக்கிறது; ஆனால், நாம் மம்மி, டாடி என்று சொல்லி தமிழை அழித்து வருகிறோம் என கூறியுள்ளார்
“ராகுல் காந்தி தகுதிநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடை அணிந்து நாளை சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்க வேண்டும்”
சட்டமன்றத்தில் நாளை இரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டம். பேரவைக்கு கருப்பு உடை அணிந்து வரவும் உறுப்பினர்களுக்கு கட்சி நிர்வாகம் அறிவுறுத்தல்
முதல்வர் மு.க ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு கோவளத்தில் களைகட்டிய படகுப் போட்டி
கொடைக்கானலில் வார விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு. இயற்கை அழகினை ரசித்தும், குதிரை, படகு சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
கேரளா : கொச்சியில் கடற்படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. சோதனையின்போது கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்க முயற்சி செய்த நிலையில், ஓடு பாதைக்கு வெளியே விழுந்து நொறுங்கியது
வாரணாசியில் உள்ள விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட நடிகை அகன்ஷா துபே. தற்கொலைக்கான காரணங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களின் படகை மீட்பதற்கு புதுச்சேரி அரசு சார்பாக குழு அமைக்கப்பட உள்ளது.சட்டசபை கூட்டத் தொடர் முடிந்தவுடன் படகுகளை மீட்க இலங்கை சென்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக புதுச்சேரி சபாநாயகர் செல்வம் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் ராகுல்காந்தியின் பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்பட 100க்கும் மேற்பட்ட காங்கிரசார் கைது
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல்
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
ஆளுநர் நியமனமே அவசியமில்லாத ஒன்று – சென்னையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு இல்லாத அதிகாரம். ஆளுநருக்கு எப்படி இருக்க முடியும்?
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்க ஆளுநருக்கு என்ன உரிமை உள்ளது? சீமான் கேள்வி
ராகுல் காந்திக்கு வழங்கியிருப்பது பெரிய தண்டனை; நீதிமன்றமும் இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும்
அவசரப்பட்டு எம்.பி. பதவியை பறித்திருப்பதை பாஜக தவிர்த்திருக்கலாம் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி நிச்சயம் – மயிலாடுதுறையில் ஓபிஎஸ் பேட்டி
இந்தியாவில் உடல் உறுப்பு தானம் அதிகரித்து வருவதாக பிரதமர் மோடி பெருமிதம்
உடல் உறுப்பு தானத்தால் ஒரு நபர் 7 முதல் 8 உயிர்களை காப்பாற்ற முடியும்
உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வருபவர்கள் இறைவனுக்கு ஒப்பானவர்கள் – மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் போக்குவரத்தை மேம்படுத்த 6 வழிச்சாலை
ஆறு வழி சாலை திட்டத்திற்காக ரூ. 200.30 கோடி ஒதுக்கீடு – மத்திய போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின் கட்கரி
தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் 6 வழிச்சாலை ரூ. 200 கோடி நிதி ஒதுக்கீடு
திருப்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தையைக் கடத்திய பெண் கைது
குழந்தையை கடத்திய பெண் பாண்டியம்மாளை தனிப்படை போலீசார் கைது செய்தனர்
கடத்தப்பட்ட குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்
குழந்தை இல்லாத காரணத்தால் குழந்தையை கடத்தியதாக கைதான பெண் வாக்குமூலம்
கடத்தப்பட்ட குழந்தைக்கு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை
எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தன்னுடைய டிவிட்டர் சுயவிவர குறிப்பில் ” Dis'Qualified MP ” என மாற்றியுள்ளார் ராகுல்காந்தி
ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி. கொரோனாவில் இருந்து குணமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறிய நிலையில் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.
டெல்லி ராஜ்காட் பகுதியில் தடையை மீறி காங்கிரசார் போராட்டம் . டெல்லி போலீஸ் அனுமதி மறுத்த நிலையில் ராஜ்காட்டில் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் போராட்டம்.
டெல்லி ராஜ்காட் பகுதியில் காங்கிரஸ் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு . சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கூறி அனுமதி மறுத்த டெல்லி போலீசார் . டெல்லி ராஜ்காட் பகுதியில் 144 தடை உத்தரவு . பொதுமக்கள் கூடுவதற்கு தடை
நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், வரும் 10, 11ம் தேதிகளில் கொரோனா ஒத்திகை நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா, இன்ஃபுளூயன்சா மற்றும் நுரையீரல் பாதிப்பில் இருந்து மக்களை காக்க, மருந்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்.
ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 36 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது எல்.வி.எம்.3-எம்.3 ராக்கெட்
காஞ்சிபுரம் குருவிமலை பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு. ஏற்கனவே 9 பேர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உயிரிழப்பு.
ராகுல்காந்திக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் காங்கிரஸ் இன்று சத்தியாகிரக போராட்டம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட தலைநகரங்களில் காந்தி சிலை முன்பு அறப்போராட்டம்.
ராஜஸ்தான்; பைகனர் பகுதியில் நிலநடுக்கம் ; ரிக்டர் அளவில் 4.2ஆக பதிவு
36 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் இன்று காலை 9 மணிக்கு விண்ணில் பாய்கிறது எல்.வி.எம்3-எம்3 ராக்கெட். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைத்தில் இருந்து விண்ணில் ஏவப்படவுள்ளது. ராக்கெட்டில் உள்ள செயற்கைகோள்களின் மொத்த எடை 5.8 டன் ஆகும்.